இந்த சினிமா காரங்கதான் காமெடி டைம், சீரியஸ் டைம்னு உயிரை எடுக்குராயிங்கன்னா நீயுமாடா ன்னு நீங்க கேக்குறது புரியிது. உணர்ச்சி வசத்த கட்டுப்படுத்திகிட்டு கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க. இப்ப நீங்க பாக்க போறது நா எடுக்க ட்ரை பண்ண ஒரு படத்தோட டிரெய்லரும் ஒரு பாட்டும். ஹலோ பாஸ்...நா எடுத்ததுன்னோன சுச் ஆப் பண்ணிட்டு தம் அடிக்க கெளம்பிட்டீங்க. கொஞ்சம் பாத்துட்டு போங்க
1. இது நா காலேஜ் Final year படிக்கும் போது , VVS PICTURES ( Varuththappadatha Vaalibhar Sangam) சார்புல தயாரிக்கப்பட்ட ஒரு குறும் படத்தோட டிரைலர். ஏண்டா குறும் படம்னாலே 5 நிமிஷம் தான். அதுக்கு ட்ரைலர் வேறயான்னு வெறிக்காதீங்க. படத்த முடிச்சிருந்தாதான் படத்தையே போட்டுருப்பேன்லண்ணே... நாங்க எடுத்த இந்த படத்தால ஹாஸ்டல்ல நெறையா பேர் பாதிக்கப்பட்டு
இருக்காங்க. "மச்சி... உன் ரூம்ல தான் மச்சி ட்யூப் லைட் பளிச்சின்னு எரியுது.. இந்த ரூம் தான் நம்ம படத்துக்கு கரெக்டா இருக்கும்" ன்னு சொல்லி ஒருத்தன ரூம விட்டே ரெண்டு நாள் தொரத்திட்டோம்.2. இது சுமார் ஒரு ஆறு மாசத்துக்கு முன்னால, BlackBerry Pictures சார்புல ஹரித்வார்ல எடுக்கப்பட்ட ஒரு வீடியோ. அதுல நடிச்சிருக்க கருப்பு கமலஹாசன் தான் producer. அவருக்கு வேண்டாத சில எதிரிகளால இந்த பாட்டு பாதி தான் எடுக்கு முடிஞ்சிது. என்ன இருக்கோ இல்லையோ title மட்டும் வக்கனையா போட்டுருகேன். இன்னொரு காமெடி என்னன்னா
இந்த project க்கு அய்யாவோட சம்பளம் ரூ.200/- ஹி ஹி...
பாத்தாச்சா..எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சா இருக்கனும். அது என்ன கல்ல பொறுக்கி எரியிறது.. ராஸ்கல். இனிமே ஒருத்தர் என் முன்னால நிக்க கூடாது.
Be carepull...
என்னை சொன்னேன்...
2 comments:
ரொம்ப மோசம் ஒன்னும் இல்ல... நல்ல தான் இருக்கு... கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் நல்லாவே வந்திருக்கும்... Why not u people try this seriously?
தாறுமாறு.. பின்றோம் ஜீ....
Post a Comment