Tuesday, June 28, 2011

அவன் இவன்!!!


Share/Bookmark
மொத படத்துல ஹீரோயின் மட்டை... ஹீரோ லூசேய்....
அடுத்த படத்துல ஹிரோவே மட்டை... 
அதுக்கப்புறம் ரெண்டு ஹீரோவுல  ஒருத்தரு மட்டை.. ஒருத்தரு already அரை லூசு 
 அதுக்கப்புறம் திரும்பவும் ஹீரோயின் மட்டை.... ஹீரோ  அதே மாதிரி அரை மெண்டல். 

இப்ப இன்னாடான்னு பாத்தா, ஹீரோ ஹீரோயின சாவடிச்சி நம்மளுக்கு Bore 
அடிச்சி போயிருச்சி போலருக்கு. அதுனால தான் இந்த படத்துல அதுக்காகவே ஸ்பெஷலா ஒரு ஊருகாவ  ரெடி பன்னிருக்கரு நம்ம பாலா. ஓவ்வொரு டிரக்டருக்கும் ஒவ்வொரு செண்டிமெண்ட் .. அது மாத்ரி நம்ம பாலா சாருக்கு
யாரையாச்சும் சாவடிக்கிற செண்டிமெண்ட்... இந்த தடவ நம்மளையும் சேத்து
சாவடிச்சிருக்கரு.

ஆரம்பதுலருந்து கடைசி வரைக்கும் மொக்க போட்டுட்டு கடைசில, யப்பா tempo லாம் வச்சி கடத்திருக்கோம்பா.. கொஞ்சம் பாத்து போட்டு குடுங்கன்னு சொல்ற மாதிரி, செண்டிமெண்ட் சீனெல்லாம் வச்சிருக்கேன்பா ஏதாவது பாத்து படத்த ஓட்டுங்கன்னு சொல்ற மாத்ரி இருக்கு.

நான் கடவுள் பாத்தப்பவே, இனி பாலா படம் பாகவே கூடாதுன்னு நானும் என் நண்பனும் முடிவு பண்ணுனோம்.. சரி என்னோட favorite விஷால் இருக்கறேன்னு பாத்தா, இந்த படத்துக்கு நான் கடவுள் நாலு தடவ பாக்கலாம் போலருக்கு.   

விஷால் நடிப்பு  மட்டும் ஓரளவு படத்துல  அங்கங்க தெரிஞ்சாலும்,  நல்ல சீன்னு படத்துல சல்லட போட்டு தேடுனாலும் கெடைக்காது. கேக்கும்  போதே அருவருப்ப வரவைக்கிற மாதிரி வசனங்கள் படம் முழுசும்... ஒருவேள இப்புடி 
எழுதுறது தான் காமெடி போலருக்குன்னு நெனசிகிட்டு எழுதுனாரா என்னனு தெரில. காமெடி பண்றதா   நெனசிகிட்டு, சரண் படத்துல வர்ற மாதிரி  படத்துல நடிக்கிரவைங்க தான் சிரிக்கிராயிங்க..நமக்கு சிரிப்பு வர மாட்டேன்குது.   அதுவும் ஆர்யாகூட வர்ற ஒரு பையன் படம் முழுசும் அவனே மொக்க போட்டு அவனே சிரிசிக்கிறான்... கிறுக்கு பயபுள்ள.. 

படத்துல நம்ம அழகர் மலை RK ஒரு படு பயங்கரமான வில்லனா வர்றாருப்பா  ( நவரசங்கள்ளையும்  பின்னுவாராமா). இந்த maggi  two  minutes noodles மாதிரி இவரு கடைசி ten  minutes வில்லன். 

ஒருதடவ ரெண்டு தடவன்ன பரவல.. ஒவ்வொரு தடவையும் வெள்ளை கொடிய எடுத்துட்டு வந்து நின்ன என்ன பண்றது? அது மாதிரி தான் ஒரு தடவ ரெண்டு தடவன்ன பரவல ஒவ்வொரு தடவையும் நம்மாளு ஒரே படத்த எடுத்துட்டு வந்து நிக்கிறாரு.. 

இதுல ஒரு கொடும என்னன்னா அடுத்த வருஷம் இந்த படத்தையும் நேஷனல் அவார்டுக்கு nominate பண்ணி, சிறந்த டைரக்டர் அவார்டு பாலாவுக்கு தான் குடுப்பாயிங்க .. அது  அடுத்த படத்தையும்  இதே மாத்ரி எடுத்துட்டு வந்து நிக்கும். 

ஒரே குஷ்டமப்பா....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

karthikkumar said...

//ஆரம்பதுலருந்து கடைசி வரைக்கும் மொக்க போட்டுட்டு கடைசில, யப்பா tempo லாம் வச்சி கடத்திருக்கோம்பா.. கொஞ்சம் பாத்து போட்டு குடுங்கன்னு சொல்ற மாதிரி, செண்டிமெண்ட் சீனெல்லாம் வச்சிருக்கேன்பா ஏதாவது பாத்து படத்த ஓட்டுங்கன்னு சொல்ற மாத்ரி இருக்கு.//

// two minutes noodles மாதிரி இவரு கடைசி ten minutes வில்லன். //

செம நக்கல் சிவா. உதாரணமெல்லாம் பின்றீங்க :)

முத்துசிவா said...

Thanks boss :)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...