Monday, June 20, 2011

கவுண்டர் டனார்.. கேப்டன் பனார்


Share/Bookmark
இந்த பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே... யார் மனதையும் புண் படுத்துவதற்காக அல்ல

கவுண்டர் வீட்டு வாசல்ல பைப்புல தண்ணி அடிச்சிக்கிட்டு இருக்காரு... அப்ப அங்க செந்தில் வேக வேகமா ஓடி வர்றாரு.

செந்தில்: அண்ணே... அண்ணே.. இங்க என்னனே பன்னிகிட்டு இருக்கீங்க....

கவுண்டர்:
அட ராக்கெட் ஒன்னு செஞ்ச்சேன்டா.. அத வானத்துல அனுப்புறதுக்கு நல்ல நேரம் பாத்துக்கிட்டு இருக்கேன்...

செந்தில்:
வெளையாடாதீங்கண்ணே...

கவுண்டர்: டேய் ஸ்பெக்ரம் மண்டையா.. நா கொழாயில தண்ணியடிச்சிகிட்டு இருக்கது தெரியிதல்ல. அப்புறம் என்ன நாயே கேள்வி?

செந்தில்: சரி அத விடுங்க... சீக்கிரம் கெளம்பி நம்ம பஞ்சாயத்து போர்டு டிவி
ஆஃபீஸுக்கு வாங்க..

கவுண்டர்: எதுக்குடா நாயே?

செந்தில்: இன்னிக்கு பேட்டியெடுக்கனும்னு சொல்லி ரெண்டு அரசியல் வாதிங்கள வர சொல்லிருந்தோம். ஆனா அவங்க பேர கேட்டாலே யாரும் பேட்டி எடுக்க வர மாட்டேங்குறாய்ங்க. நீங்க வந்தாதான் நாக்க புடுங்கிக்கிற மாதிரி நல்லா கேள்வி கேப்பீங்க.

கவுண்டர்: ஏண்டா நாக்க புடுங்கிற மாதிரி நா என்ன கட்டிங் ப்ளேயர் வச்சிக்கிட்டாடா கேள்வி கேக்க போறேன். ஆமா அடுத்தவன் பயந்து ஓடுற அளவுக்கு அப்புடியாருடா வரப்போறா?

செந்தில்: அத அங்க வந்து பாருங்க.

கவுண்டர்: இந்த தோணித்தலையன் லோலாயி தாங்க முடியலையே... இன்னிக்கு  தண்ணியடிக்கிறது கேன்சல்.

-----------------------------------------------------------------------------------------------------
பஞ்சாயத்து போர்டு டிவி ஆஃபீஸ்:

கவுண்டர செந்தில் உள்ள அழைச்சிகிட்டு வர்றாறு.

செந்தில்: (விஜயகாந்தையும், TR ஐயும் காமிச்சி) இவங்கதாண்ணே நா சொன்ன
அந்த ரெண்டு பேரு.

கவுண்டர்: என்னடா அரசியல் வாதிகள்ன்னு சொன்ன... இவனுங்க உக்காந்து
இருக்கனுங்க..

செந்தில்: என்னண்ணே இப்புடி கேட்டுபுட்டீங்க... இவங்க ரெண்டு பேரும் கட்சி
தலைவருங்கண்ணே....

கவுண்டர்: ரோடு போடுற தார்ல மூஞ்சி கழுவுன மாதிரி இவன், மூங்கி பொதருக்குள்ளருந்து எட்டிப்பாக்குற மாதிரி ஒரு மூஞ்ச வச்சிகிட்டு அவன்.... நல்ல கட்சி தலைவருங்கடா....இந்த மூஞ்சிகள பேட்டி எடுக்க சொன்னா எவன் வருவான். இதுகள என்ன நாக்க புடுங்கிக்கிற மாதிரி கேக்க சொல்ற நீ... ஏற்கனவே நாக்க புடுங்கி வச்சிட்டு வந்தவனுக மாதிரிதான் இருக்கானுக.

செந்தில்: அண்ணேன் சத்தம் போடாதீங்கண்ணே அவங்களுக்கு கேட்டுற போகுது. சரி வாங்க நிகழ்ச்சிய ஆரம்ம்பிப்போம்.

---------------------------------------------------------------------------------------------------------------
கவுண்டர்: மிஸ்டர் விஜயகாந்த்,...நா நேரடியா கேள்விய ஆரம்பிச்சிடுறேன்....
நீங்க இந்த எலெக்ஷன்லயும் ஜெயிச்சிருக்கீங்க...இத எப்புடி ஃபீல் பண்றீங்க?

விஜய்காந்த்: (அவருக்கே உரிய slang இல்) ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு... ரொம்ப
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. எல்லாத்துக்கும் காரணம் நா தி.மு.க வோட கூட்டணி வச்சிக்கிட்டது தான்... ஒ..... சாரி.. சாரி.... ஒளருரேன்ல... எல்லாத்துக்கும் காரணம் நான் தே.மு.தி.க வோட கூட்டணி வச்சிகிட்டது தான்....

கவுண்டர்:
இப்ப தெளிவா பேசிட்டாராமா.... அய்யா நீங்க யாருகூட வேணாலும்
கூட்டணி வச்சிக்குங்கையா.. (மனதிற்குள்: இவன் ஓட்டயே, இவன் இவனுக்கு போட்டு கிட்டானா இல்ல எதிர்கட்சிக்கு போட்டானான்னு தெரியல... இவரு தலைவரு...) சரி விடுங்க... ஜெயிச்சிட்டீங்க... அடுத்ததா நாட்டுக்கு என்ன பண்ணலாம்னு இருக்கீங்க..

விஜயகாந்த்: ஊர்ல இருக்க எல்லாருக்கும் இலவசமா வேலை குடுக்கலாம்னு இருக்கேன்..

(கவுண்டர் ஒரு ஜெர்க் அடிச்சிட்டு)  என்னது இலவசமா வேலை குடுக்க போறியா..ஜெயிக்கிறதுக்கு முன்னால இலவசமா மிக்சி தர்றேன் கிரைண்டர் தர்றேன், ஆட்டுகுட்டி தர்றேன், கோழி முட்டை தர்றேன்னு சொன்னீங்க.. இப்ப என்னடா வேலை தர்றேங்குறீங்க..அந்த இலவசமா வேலை தர்றதுக்கு பதிலா, இலவசமா சம்பளத்த குடுத்துட்டீங்கன்னாநம்ம மக்கள் எல்லாம் சந்தோசப்படுவாங்க.

விஜயகாந்த்: இத பத்தி நாம அடுத்த எலெக்ஷன்ல யோசிப்போம்.. அவ்வ்

கவுண்டர்: சரி அப்புறம் வேற என்ன செய்வீங்க

விஜயகாந்த்: அப்புறம் தமில் மொளிய வளர்க்க பாடுபடுவேன்

கவுண்டர்:
அது என்னடா ஆன்னா ஊன்னா தமிழ் மொழிய வளர்க்குறேன் வளர்க்குறேன்னு ஆரம்பிச்சர்றீங்க.. தமிழ்மொழி என்ன அப்பு கமல் மாதிறியா இருக்குது. நீங்க எதும் பண்ணாம இருந்தாலே அது வளர்ந்துரும்டா...

விஜயகாந்த்: அட அதுக்கில்ல மிஸ்டர் gavunda மணி, இப்புடியெல்லாம் பண்ணாதான் என்னைய தமிழன்னு ஒத்துக்குவாய்ங்க நம்மூர்ல.. இல்லைன்னா.. " ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே hi pitch la TR குரல் கேக்குது

TR: மறத்தமினுங்க நானு.. நா ஒரு அமுக்கப்பட்ட தமிழன்.. தமிழ்தான் என் மூச்சு...தமிழ்ன் தான் என் பேச்சு... ஒரு தமிழ்னுக்க்கு இந்த தமிழ்நாட்டுல.....

கவுண்டர்:
டேய் க்ராஸ்டாக் வாயா.. நீ இருடி உன்கிட்ட அப்புறம் வர்றேன்...
 குறுக்க பேசுன கொஞ்சோண்டு தெரியிறா மூஞ்சிலயும் தார ஊத்தி கருக்கிருவேன்..சரிங்க விஜயகாந்த், இந்த் ஈழத்தமிழ்ர்களுக்காக நீங்க எதாவது செய்யலாம்னு நெனக்கிறீங்கலா?

விஜய்காந்த்:
கண்டிப்பா செய்வேன்..ஈழத்தமிழ்ர்கள காப்பத்துற போலீஸ் அதிகாரியாஒரு படத்துல நடிக்கப் போறேன். படத்தோட பேரு "ஈழநாதன்". க்ளைமாக்ஸ்ல ராஜபக்ஷேவ பேக் சாட்லயே பின்றேன் பாருங்க. அவரு அப்புடியே திருந்தி எல்லா தமிழர்கள்டயும் மன்னிப்பு கேக்குறாரு.

கவுண்டர்: ஓ.... இப்பவும் காப்பாத்துற மாதிரி படம்தான் நடிப்பீங்க... வேற எதுவும் பண்ண மாட்டீங்க... வேணும்னா ஒன்னு பண்ணலாம்.. நீ நடிக்கப்போற அந்த படத்த Sri lanka வுல ரிலீஸ் பண்ணா மிச்சமிருக்க கொஞ்ச நஞ்ச பேரும் செத்து போயிருவாங்க..அப்புறம் இந்த தொல்லையே இருக்காது...

விஜய்காந்த்: ஏய்... இலங்கைல மொத்தம் ரெண்டு கோடியே முப்பத்தஞ்சி லட்சத்தி இருபத்தி ரெண்டாயிரம் பேரு,,

கவுண்டர்:
ஒண்ணுக்கு போயிட்டு இருக்காங்களா?

விஜயகாந்த்:
ஒண்ணுக்கு இல்லீங்க....

கவுண்டர்: அப்ப ரெண்டுக்கு போறாங்களா... இவன் எது எதெல்லாம் கணக்கு எடுத்து வச்சிருக்கான் பாருங்கய்யா.... த.... ச்சை... உன்கிட்ட நோ மோர் கொஸ்டீன்ஸ்...அப்புடியே ஓடிப்போயிரு.

TR ah பாத்து "டேய் கம்பளி பூச்சி வாயா.." நீயும் இவன் கூடவே ஒடிப்போயிரு...இல்லை கரண்ட்டு ஒயர புடுங்கி வாயிக்குள்ள விட்டுருவேன்...

TR: எதுக்குங்க நா போகனும்... என்கிட்ட இன்னும் நீங்க ஒரு கேள்வி கூட கேக்கலஅப்புடியே கெளம்ப சொன்னா எப்புடி... யூ ஆர் சப்ரச்சிங், அப்ரசிங் அண்ட் டிப்ரசிங் ய தமிழன்....

கவுண்டர்:
என்னது அப்ரசிங்கா.. ஒக்கா மவனே இன்னொரு வார்த்த பேசுன இங்கயேஉனக்கு ஆப்ரேசந்தான்...

TR: கவுண்டமணி:...... ஒரு தமிழனோட வீடியோ வெளியாகி அவன் பெரியாளாகுறது உங்களூக்கு புடிக்கல...நான் பேசுன வீடியோ you tube la வந்தா என்ன போடு போடுது தெரியுமா?

 கவுண்டர்:
டேய் மூங்கி பொதரு வாயா.... வக்காளி எனக்கு வெறி வர்றதுக்குள்ள  போயிருடா....

செந்தில்:
அண்ணேன் அவர விடுங்கண்ணே... இங்க பாருங்க ஆஃபீஸூக்கு வெளிய நின்னுஒருத்தரு ரொம்ப நேரமா பொலம்பிகிட்டு இருக்காரு.. இத வந்து என்னன்னு கேளூங்கண்ணே..

கவுண்டர்: என்னடா?

Anonymous: நா என்ன எழுதிட்டேன்... எனக்கு எதுக்கு பணம் தந்தீங்க... நா என்ன
எழுதிட்ட்டேன்... எனக்கு எதுக்கு பணம் குடுத்தீங்க... நா அப்புடி என்ன எழுதிட்டேன் எனக்கு எதுக்கு பணம் குடுத்தீங்க...

கவுண்டர்: டேய் கிட்னா நாயே... நீ எழுதுனதுக்காக பணம் குடுக்கலடா.. இனிமே எதுவும்எழுதிர கூடாதுண்ணு பணம் குடுத்தது... மரியாதையா ஒடிப்போயிரு... எல்லாம் இந்தபண்ணாட பன்னிய சொல்லனும்ங்க... ஒழுங்கா தண்ணி அடிச்சிகிட்டு இருந்தவன கூப்டு வந்துஇவனுங்க கிட்ட மாட்டிவிட்டுருச்சி... ஒரே குஸ்டமப்பா....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

9 comments:

Azar said...

Suberbly written machi, anonymous touch is classic :)

Azar said...

Suberbly written machi, anonymous touch is classic :)

karthikkumar said...

கலக்கல் சிவா. உங்க பழைய போஸ்ட் எல்லாம் படிச்சிட்டு இருக்கேன்.. எல்லாமே செம ரவுசா இருக்கு :)

பாண்டியன் said...

நா என்ன எழுதிட்டேன்... எனக்கு எதுக்கு பணம் தந்தீங்க... நா என்ன
எழுதிட்ட்டேன்... எனக்கு எதுக்கு பணம் குடுத்தீங்க... நா அப்புடி என்ன எழுதிட்டேன் எனக்கு எதுக்கு பணம் குடுத்தீங்க..

why angry ?

பாலா said...

கலக்கல் நண்பரே. கவுண்டருக்கே உரிய நக்கல் வசனங்கள்.

முத்துசிவா said...

@Azar:

உங்காள பத்தி எழுதுனாலே உனக்கு ஒரே குஜால்ஸ் ஆயிருமே...:)

முத்துசிவா said...

@karthik kumar:

Thanks boss

முத்துசிவா said...

நிலா:
ஒரு விஷயத்துல அது மேல எனக்கொரு ட்வுட்டு.. அதுக்கு தான் இது.. அது தான்னனு confirm ஆயிருச்சி.. அதுக்கு ஒரு தனி post போடலாம்னு இருக்கேன்...

உங்களுக்கு ஒரு அது எதுன்னு புரிஞ்சிருக்கும்... இன்னொரு அது புரிஞ்சிருக்காது... விட்டுருங்க..:)

முத்துசிவா said...

@பாலா:

நன்றி தல

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...