Thursday, January 19, 2012

மிஷ்கின் என்னும் ஒலக மகா டைரடக்கர்


Share/Bookmark
நண்பர்களே... இவனுக்கு வேற வேலையே இல்லயா... எப்ப பாரு எவனையாச்சும் நொள்ளை சொல்லிகிட்டே திரியிறான்னு நெனைச்சாலும் பரவால.. இத... இத சொல்லியே ஆகனும்..

போன வாரம் நண்பர் ஒருவர் ஒரு வீடியோ இணைப்பு கொடுத்து பாக்க சொன்னாரு. சரி எதோ பாசத்துல நல்ல வீடியோவா பாக்கட்டும்னு அனுப்புறாருன்னு நெனைச்சேன். பாத்த அப்புறம் தான் தெரிஞ்சிது அவருஎன் மேல எவள கொலைவெறில இருந்தா இத அனுப்பிருப்பாருன்னு. ஒருத்தனை வெறியேத்தனும்னா இந்த வீடியோவ போட்டு காட்டுனா போதும். பங்காளி சண்டைக்கு போறவிங்க இத பாத்துட்டு போனா இன்னும் நாலு பேர அதிகமா போட்டு அடிக்கலாம். 

அப்புடி என்ன வீடியோன்னு பாக்குறீங்களா.. வேற எதுவும் இல்லை.. நம்ம டைரக்டர் மிஷ்கின் போன  வருஷம் சாரு நிவேதிதாவோட ஒரு புத்தக வெளியீட்டு விழாவுல பேசிருக்காரு.. ரொம்ப நேரம்லாம் இல்ல ஒரு முப்பதே முப்பது நிமிஷம் தான். இந்த முப்பது நிமிஷத்துல சாருவ பத்தியும் அவரு எழுதுன புத்தகத்த பத்தியும் மிஞ்சி மிஞ்சி போனா ஒரு நாப்பது செகண்டு பேசிருப்பாரு.

பின்ன அரைமணி நேரம் என்ன பேசுனாருன்னு தெரியனுமா? இந்த வீடியோவ பாருங்கன்னு நா சொல்ல மாட்டேன்.. பாக்க ட்ரை பண்ணுங்க. குறிப்பு: இந்த வீடியோவ பாக்கும் போது தனியா பாக்குறது உசிதம். இத பாக்கும் போது கூட யாராவது இருந்து நீங்க கடுப்புல அவன தூக்கி போட்டு மிதிச்சிட்டீங்கன்னா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.

லிங்க்கை க்ளிக்கவும் 

http://www.dailymotion.com/video/xhenll_charu-2010-mysskin-speechvideo_creation


வீடியோவ முழுமையாக பார்க்க முடியாதவர்களுக்காக:

ஆரம்பிக்கும் போதே இவங்க சாருவும், மிஷ்கினும் வீட்டுல தண்ணி அடிச்ச கதை. அதோட சாருவோட chapter close. அதுக்கப்புறம் இவரு எப்புடி இந்த உலகதரமான படங்களை எடுத்தாருன்னு (அதாவது எங்கருந்து எடுத்தாருன்னு) ஆரம்பிச்சிட்டாரு. ஆரம்பிச்சி கொஞ்ச நேரத்துலயே அவரு போக்கே சரி இல்ல. "Actually நா தமிழ்ல புத்தகங்கள் அதிகம் படிக்கிறதில்லை... ஏன்னா நா தமிழ் மீடியத்துல படிச்சவன்" ன்னு ஒரு வரி சொன்னாரு பாருங்க... உடனே நா முடிவு பண்ணிட்டேன்... உனக்கெல்லாம் போலீஸ்காரன் பத்தாதுடா வேற வேற வேற வேற வேட்டைக்காரன் தாண்டா வேணும்னு நெனைச்சிகிட்டு இத தலைவர் கவுண்டமணி பொறுப்புல விட்டுட்டேன்.. அவரு இந்த வீடியோவ பாத்துட்டு சொன்ன கமெண்ட்ஸ் இதோ உங்களுக்காக.

மிஷ்கின்: இருபத்து மூணு நாள் படம் எடுத்த அப்புறம் தான் தெரிஞ்சிது சித்திரம் பேசுதடி புயூட்டி அண்டு த பீஸ்ட் மாதிரியே இருக்குன்னு?

கவுண்டர்:
அப்ப. நீ படம் ஆரம்பிச்சி இருபத்து மூணு நாள் கழிச்சிதான் இத யாரோ கண்டுபுடிச்சிருக்காய்ங்க்க. உடனே நீ கப்புன்னு கால்ல விழுந்துட்ட.. நல்லா சமாளிக்கிரம்மா...

மிஷ்கின்: கதிர்கிட்டயும் கத்துக்கல வின்சென்ட் செல்வாட்டயும் நா எதுவுமே கத்துக்கல யாராவது வேணா போய் சொல்லுங்க.. என்னப்பத்தி விமர்சனம் எழுதட்டும்.

கவுண்டர்: வளர்ர புள்ளை தொழில் கத்துக்குற மொறை...டைரக்டருன்னா இப்புடித்தான் இருக்கனும்

மிஷ்கின்: நான் வளர்ந்ததே  Kurosawa படங்கள பாத்துதான்

கவுண்டர்: ஆக நீங்க தமிழ் படங்களே வாழ்க்கைல பாத்தது இல்லை... முக்குல மூணு சீட்டு ஆடுற நாயி.. இவரு  குரொசவா படம் பாத்து தான் வளர்ந்தாராம்... மக்களே நல்லா கேட்டுக்குங்க இந்த பாவத்துக்கெல்லாம் நா ஆளாகவே மாட்டேன்

மிஷ்கின்: 2000 வாட்டி செவென் சாமுராய் பாத்துட்டேன்

கவுண்டர்: போ... இன்னும் முப்பது வருசத்துக்கு அதயே பாரு... உருப்புட்டுடலாம்


மிஷ்கின்: கிகுஜிரோ என் கதை தானே...எங்க வீட்டுல எனக்கு நடந்த கதை அய்யயோ இந்த மாதிரி படம் நம்ம ஊர்ல வந்தா எப்புடி இருக்கும்னு ஆசப்பட்டேன்..அதுனால எடுத்தேன்

கவுண்டர்: அடங்வா... ஆமா கிகுஜிரோ வந்த அப்புறம் அது உன்னோட கதை.. வர்றதுக்கு முன்னால அது அந்த டிரைக்டரோட கதை. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..


மிஷ்கின்: கிகுஜிரோ டைரக்டருக்கு ட்ரிபுயூட் பண்றதுக்காக நந்தலாலா படத்துல அதுல இருந்த நாலு சீன அப்புடியே வச்சேன்.

கவுண்டர்: நாயி நாலு சீன அச்சுமாறாம அப்புடியே எடுத்துபுட்டு எப்புடி சமாளிக்குது பாத்தியா... மகனே உனக்கு ஒரு நாளைக்கு இருக்குடி....

மிஷ்கின்: படிக்காதவங்க என் படத்த  விமர்சனம் பண்ணா பரவால்ல.. படிச்சவங்கதாங்க இந்த மாதிரி  தப்பா விமர்சனம்  பண்றாங்க.. அதான் எனக்கு வருத்தமா இருக்கு

கவுண்டர்:  ஆக்காங்..படிச்சவங்கதான நீ எங்கெங்க சுட்டுருக்கன்னு கண்டுபுடிக்கிறாங்க.. அப்ப அவங்கதான் இப்புடி விமர்சனம் பண்ணுவாங்க.

மிஷ்கின்: நந்தலாலா படத்த ஹிட் ஆக்கனும்னு எல்லாம் எனக்கு ஆசை இல்லைங்க. இந்த  படத்த எடுத்து ஒரு ஷோவாவது ஓட்டனும்னு ஆசை...அது நடந்துருச்சி....

கவுண்டர்: டேய் நைட் லேம்ப் கண்ணா.. சாம் ஆண்டர்சன வச்சி படம் எடுத்தா கூட மூணு ஷோ ஓடும்டா. நீ ஒரு ஷோ ஓட்டணும்னு படம் எடுத்தேன்னு பீலா விடுறியா... படம் ஓடலங்கறதுக்காக நீ இப்புடி ப்ளேட்ட  மாத்திக்குவியாடா டப்ஸா கண்ணா.. ஆமா அது என்ன எப்ப பாத்தாலும் மதுரையில் கண் ஆப்ரேஷன் பண்ணவிங்க மாதிரி ஒரு கண்ணாடி.. நீ என்ன பொறக்கயிலயே அந்த கண்ணாடியோடதான் பொறந்தியா.. அத கழட்டவே மாட்டியா... மனசுல பெரிய கலைஞருன்னு நெனப்பு... த.. ச்சை... கழட்டுடா

 மிஷ்கின்: இப்புடி ஒரு படத்த தமிழ் மக்களுக்கு தந்ததுக்கு இந்த சமூகம் என்ன எப்படி பாக்கனும்? தோள் மேல வச்சி  தூக்கி கொண்டாட வேணாமா?

கவுண்டர்: ஆமா.. INSAT 5B ராக்கெட் செஞ்சி வானத்துல ஏவிட்டாரு...இவர கொண்டாடிட்டாலும்..

மிஷ்கின்: அஞ்சாதேல ஒரு லவ் சாங் வரும்.. அந்த சாங்க எடுத்து முடிச்ச அப்புறம் நா  "அப்பா.. படத்துல  இந்த ஒரு சீனுக்கு தாண்டா ஆடியன்ஸ் எந்திரிச்சி வெளிய போவாங்கன்னு சொன்னேன்"

கவுண்டர்: அப்ப அந்த படத்துல இந்த ஒரு சீனுதான் நீயா எடுத்தது. நண்பர்களே நா பொய் சொல்லலாம் ஆனா விக்கிபீடியா பொய் சொல்லது. தயவு செஞ்சி இத பாருங்க. இவன் எடுத்த நாலு படத்துல மூணு படம் இன்ஸ்பிரேஷன், ஆக்ஸிடெண்டல் இன்ஸ்பிரேஷன். அந்த ஒரு படம் மட்டும் ஏன் பாக்கி இருக்குன்னு பாக்குறீங்க அதான.. அது நிறைய படத்தோட கலந்து இருக்கதால எந்த படத்த போடுறதுன்னு தெரியாம விட்டு வச்சிருக்காய்ங்க.


மிஷ்கின்: மொத மொதலா தொப்புள காட்டாம ஒரு குத்துபாட்டு எடுத்துருக்கேன் சார்.

கவுண்டர்:  அடடா... இதுவல்லவா சாதனை.. உலகத்துல யாராவது பண்ணிருக்கானாய்ய இதுமாதிரி. நீ செஞ்ச இந்த சாதனைய தஞ்சாவூர் கல்வெட்டுல வெட்டி வச்சிட்டு பக்கத்துலயே நீ உக்காந்துக்க.. உனக்கு பின்னால வர்ற சந்ததிகள் அத பாத்து படிச்சி தெரிஞ்சிக்குவாங்க.


 மிஷ்கின்: நந்தலாலால ஒரு டயலாக் வரும்... நா அந்த கூலிங்க்ளாஸ வாங்கி போட்ட உடனே "அய்யோ இருட்டாயிருச்சி"ன்னு சொல்லி கண்ணாடிய கழட்டி குடுத்துருவே ன். அந்த ஒரு டயலாக்க மட்டும் நா ரெண்டு நாள் யோசிச்சேன்ங்க. அந்த கஷ்டத்த பத்தி யாராவது பேசுனாங்களா.."

கவுண்டர்: இப்ப புரியுதும்மா உன் கஷ்டம்.. இந்த ஒரு டயலாக்க சொந்தமா யோசிக்கவே உனக்கு ரெண்டு நாள்  ஆகுதுன்னா ஒரு படத்தோட முழு கதை வசனத்தையும் நீ சொந்த மா யோசிக்கனும்னா எவளோ நாள் ஆகும்.. i understand your feelings. நீ வழக்கம்போல continue பண்ணு.. பாவம்பா.. ரொம்ப கஷ்டப்படுறான்பா நீங்களும் விட்டுருங்க... ஆனா ஒண்ணு இன்னொரு தடவ எங்கயாவது நீ மைக்க புடிச்சி பேசுறத பாத்தேன் மண்டையில நாலே முடி விட்டு வெட்டுபுடிவேன்... ஓடிப்போயிரு..பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

8 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

அவரு மனசுல இருந்த கஷ்டத்தையெல்லாம் கொட்டியிருக்காருங்க. ஹீ இஸ் பாவம்!!!

கோவை நேரம் said...

ஹி..ஹி ஹி ..நல்ல வாரி இருக்கிறீங்க ...

Kumaran said...

கலக்கலான செம்ம கிண்டலான பதிவு அண்ணே..பல வரிகளில் அதுவும் குறிப்பாக "ஆமா.. INSAT 5B ராக்கெட் செஞ்சி வானத்துல ஏவிட்டாரு...இவர கொண்டாடிட்டாலும்.." தொட்டுட்டீங்க மனச..
வீடியோ லிங்கை எடுத்து வச்சிருக்கேன்..பார்த்துவிடுகிறேன்.
நன்றி.

K.s.s.Rajh said...

என்ன கொடுமை சரவணன்

Mohamed Faaique said...

மிஷ்கின் அவ்ளோ பெரிய அப்பாடக்கரா???? இன்னும் எதாவது லின்க் கிடைச்சா, உங்களுக்கு அனுப்பி வச்சுடரேன்...

முத்துசிவா said...

ஹாலிவுட் ரசிகன்:

//அவரு மனசுல இருந்த கஷ்டத்தையெல்லாம் கொட்டியிருக்காருங்க. ஹீ இஸ் பாவம்!!! //

பாஸ்.. அந்த வீடியோவ பொறுமையா உக்காந்து பாத்த என்ன பாத்தா உங்களுக்கு பாவமா தெரியலயா? :(

Padianallur Land Society said...

கலக்கல் பதிவு!!!!! குலுங்கிக் குலுங்கி சிரிச்சேன். You have justified in your post to what Mr Mysskin spoke in his video. அநியாயத்துக்கு வெற்றி தந்த மமதையை தன் மண்டையில ஏத்தியிருக்காரு. சாதனைகள் பல படைத்த எத்தனையோ இயக்குனர்கள் அமைதியாக தங்கள் வேலையைப் பார்க்கிரார்கள். குருசோவாவின் படங்களின் மூலம் கற்றுக்கொண்ட இவர் அவரின் சம காலத்தில் வாழ்ந்த தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல் தந்த நம் ஏ.பி. நாகராஜனிடம் எதையுமே கற்றுக் கொள்ள்வில்லையா? படம் எடுங்க மிஷ்கின் ஆனா எங்ககிட்ட படம் காட்டாதீங்க. பொழச்சி போங்க!!!!

Padianallur Land Society said...

நந்தலாலா கண்ணாடி டயலாக் நக்கல் வெறி(!)குட். எதிர்பார்த்தேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...