Thursday, February 2, 2012

இந்திய கிரிக்கெட் அணியின் பயோடேட்டா


Share/Bookmark


குறிப்பு : இந்த பதிவு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் மரண அடி வாங்கிக் கொண்டிருக்கும் இந்திய அணியை பற்றியது மட்டுமே. மேலும் இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே.. யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.

 
பிட்ச்
இந்திய பேட்டிங்கின் போது பவுலிங் பிட்சாகவும், பவுலிங்கின் போது பேட்டிங் பிட்சாகவும் automatic காக மாறிக்கொள்ளும் culprit.
பவுலர்களின் ஃபீலிங்
டேய் மச்சி... எங்க போட்டாலும் அடிக்கிறாணுங்கடா
பேட்ஸ்மேன்களின் பீலிங்
டேய் மச்சி.. எங்க அடிச்சாலும் புடிக்கிறானுங்கடா..
300 ரன்கள்
எது இந்த 299 க்கு அப்புறம் வருமே அதுவா? பாத்து பல நாள் ஆச்சிங்க
சேவாக்
ஆஸ்திரேலிய அணி பவுலர்களை உற்சாகப்படுத்துவதற்காக முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுக்கும் படி Program செய்யப்பட்ட வீரர்.
ட்ராவிட்
ஆஸ்திரேலியா பவுலர்களை களைப்படைய வைக்கவும், கடுப்படைய வைக்கவும் உபயோகப்படுத்தப்படும் வீரர்
லக்ஷ்மண்
இந்திய அணியின் அமெரிக்க மாப்பிள்ளை
சச்சின்
எதிரனியில் புதிதாக சேர்க்கப்படும் பவுலர்களிடம் விக்கெட்டை பறிகொடுத்து அவர்களை Encourage செய்பவர்
தோணி
10 விக்கெட்டுகளும் விழுந்த பிறகு ரன் அடித்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் தனது விக்கெட்டை பத்திரமாக தக்க வைத்துக் கொள்பவர்
தோணி ரசிகர்கள்
இந்திய அணி வெற்றி பெறும் போது வெற்றிக்கு முழுக்காரணம் தோணிதான் எனவும், தோல்வியடையும் போது “மத்தவங்க வெளையாடலன்னா அவரு என்னங்க பண்ணுவாரு? எனவும் அந்நியனைப் போல் மாறி மாறி பேசுபவர்கள்


இன்னிங்ஸ் Defeat
ரசிகர்களின் நேரத்தை மிச்சப்படுத்த நமது வீரர்கள் கண்டுபிடித்திருக்கும் புதிய வழி
Series wash out
முன்னாள் உலக சாம்பியனுக்கு செய்த கவுரவம்
ஆஸ்திரேயா பன்ச்
நாங்க யானை இல்லே.. குதுரே.. ச்சும்மா டக்குன்னு எழுந்துடுவோம் (தலைவர் slang)
உலக கோப்பை
அடுத்து வரும் பல வருடங்களுக்கு பல தோல்விகள் கண்டாலும் சமாளிக்க பயன்படும் சரித்திரம்
ஒரே ஆறுதல்
நீ எத்தனை மாட்ச் ஜெயிச்சாலும் இன்னும் மூணு வருஷத்துக்கு World Champion நாங்கதாண்டியேய்..
மொத்தத்தில் இந்திய அணி
Out of form இல் இருக்கும் அணிகளையும், வீரர்களையும் form ற்கு கொண்டு வருவதற்காக நடத்தப்படும் கோச்சிங் சென்டர்


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

16 comments:

Anonymous said...

ஆகா நல்ல அட்டவணை

மெயின் டென் ...

நன்றி நண்பா

வெங்கட் said...

Super..! :)

also see.. " இந்தியன் கிரிக்கெட் டீம் Dictionary..!! "

http://gokulathilsuriyan.blogspot.in/2012/01/dictionary.html

பாலா said...

எல்லா கமெண்ட்டும் கலக்கல். குறிப்பாக லக்ஷ்மண், சச்சின் மற்றும் கடைசி கமெண்ட் டாப் கிளாஸ்.

K.s.s.Rajh said...

ஹா.ஹா.ஹா.ஹா. கலக்கல் பாஸ்

Mohamed Faaique said...

செம குத்து பாஸ்.... சூப்பரா இருக்கு...

கும்மாச்சி said...

பலே சரியான கணிப்பு.

Unknown said...

ஹாஹா Super!

முத்துசிவா said...

@wesmob

thanks nanba

முத்துசிவா said...

@வெங்கட்

thanks boss.. neenga pottrukka post thaaru maaru boss... romba neram sirichittu irunthen :)

முத்துசிவா said...

@பாலா//

நன்றி தல.. சச்சின பத்தி இதுமாதிரி எதாது போட்டாலே நீங்க குஜாலாயிருவீங்களே :)

முத்துசிவா said...

@K.s.s.Rajh

thanks boss :)

முத்துசிவா said...

@ Mohamed Faaique

ரொம்ப நன்றி பாஸ்

முத்துசிவா said...

@கும்மாச்சி,விக்கியுலகம்

நன்றி :)

சமுத்ரா said...

Super..! :)

Admin said...

இந்தப் பதிவை வலைச்சரத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன் தோழர். நேரமிருப்பின் பார்வையிடவும்.நன்றி

Admin said...

வலைச்சரம்
http://blogintamil.blogspot.com/2012/02/blog-post_12.html

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...