குறிப்பு: விமர்சனங்கள்ல கதைய சொல்றது எனக்கு பிடிக்காது.. இருந்தாலும் இந்த படத்துக்கு கதைய சொன்னாலும் சொல்லலன்னாலும் யாரும் பாக்க மாட்டீங்கங்குறதால கதைய பத்தி ஒரு ரெண்டு லைன் போட்டுருக்கேன்..
"இப்புடி ஒரு படம் வந்துருக்கா"ன்னு தான் பல பேர் கேப்பீங்க. இந்த படம்
எந்த தியேட்டர்ல ஓடுதுண்ணு கண்டுபுடிக்கவே ரொம்ப கஷ்டமா போச்சு.. சரி இந்த படத்தோட விமர்சனத்தை பார்க்க வேண்டுமானால் நாம் சில வருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு கூறுவது அவசியமாகிறது. (ச்சும்மா தசாவதாரம் ஸ்டைல்ல..ஹிஹி)
2006 ல "யுகா"ன்னு யார் கண்ணன் டிரைக்ட் பண்ண படம் ஒண்ணு ரிலீஸ் ஆச்சு. "யார்" ரொம்ப நல்ல திகில்படமாச்சே.. இந்த படமும் அந்த அளவுக்கு இருக்குமேன்னு படத்துக்கு கிளம்புனேன். படத்து பேர கேட்டதுமே ஒருத்தனும் கூட வரல. அப்புறம் மாப்ள ஞானசுந்தர் கிட்ட "மாப்ள யார் கண்ணன்" எடுத்த படம்டா சூப்பரா இருக்கும் வா" ன்னு கூப்புட்டதும் நம்பி அவனும் வந்தான். படம் பாத்து முடிச்சப்புறம் அவன் என்னப்பாத்து கேட்டான் பாருங்க.. "மாப்ள டேய் "யார்"கண்ணன் "யார்" கண்ணன் ன்னு சொல்லி கூப்டு வந்தியேடா.. கடைசில யார்ரா அவன் கண்ணன்.. அவன் மட்டும் கைல கெடைச்சான்னா தூக்கி போட்டு மிதிச்சிருவேன்" னான். அந்த அளவுக்கு
இருந்துச்சி அந்த படம்.
அதயெல்லாம் அடிச்சி தூக்கிருச்சி இந்த படம்.. தேவி காம்ளக்ஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு' உள்ள போனா, மொத்தமே நாங்க மூணு பேர் தான் இருந்தோம். அந்த செக்யூரிட்டி அண்ணன்கிட்ட லைட்டா பேச்சு குடுத்துகிட்டு இருந்தேன்..
"அண்ணேன்... ஷோ எதும் கேன்சல் பண்ணிர மாட்டாங்களே"
"அதெல்லாம் பண்ண மாட்டாங்கப்பா" ன்னாரு
"நீங்க தொணைக்கு உள்ள வருவீங்களாண்ணே" ன்னேன்
"இல்லப்பா எங்களுக்கு உள்ள வர allowed இல்லன்னு சிரிச்சிகிட்டே சொன்னாரு"
படம் ஆரம்பிக்கும் போது சத்தியமா தியேட்டர்ல மொத்தமே 8 பேருதான் இருந்தோம்.எனக்கு ரொம்ப வருத்தமா போச்சு.. சரி படம் நல்லாருந்துச்சின்னா நாம ரிவிய்யூ எழுதி ஒரு 10 பேரயாவது பாக்க வைக்கனும்னு நெனைச்சேன்.. ஆனா படம் பாத்தப்புறம் தான் தெரிஞ்சிது அந்த படத்துக்கு அந்த 8 பேரே அதிகம்னு. படம் முடியும் போது கிட்ட தட்ட ஒரு 30 பேரு என்ன மாதிரியே பணத்த வேஸ்ட் பண்ணிட்டாங்கனு தெரிஞ்சிது.
சினிமாங்குறதுக்கு ஒரு மரியாதை இருக்கு.. அத கொஞ்சம் கூட குடுக்காத படம் இது. எதவேணும்னா சும்மா எடுக்கலாம்.. எல்லாரும் பாப்பாய்ங்குற நெனப்புல எடுத்த படம் இது. ஒண்ணரை மணி நேர படம்.. ஆனா இத எந்த விதத்துலயும் படத்தோட ப்ளஸ்ன்னு சொல்ல முடியாது. இங்லீஷ்காரன் ஒண்ணரை மணி நேரம் படம் எடுக்குறான்னா, அவன் படத்தோட மொத சீனே கதையில ஆரம்பிப்பான்..நாம படம் ஆரம்பிச்சா கதைக்குள்ள போகவே அரைமணி நேரம் ஆகும்.நமக்கு ஏன் இந்த வேலை...
"Based on a true Night mare" "பாண்டி சரோஜ் குமார் thrill" ன்னு பில்ட் அப்புக்கு
மட்டும் ஒண்ணும் கொறைச்சலே இல்ல. ஒரு அஞ்சி பேரு (வழக்கம் போல
மூணு பசங்க, ரெண்டு பொண்ணுங்க) ட்ரெக்கிங்குற பேர்ல ஒரு காட்டுக்கு போறாய்ங்க. ஒரு நைட் தங்குனப்புறம் காலைல அவங்கள கூட்டிட்டு போன guide ah யாரோ கொலை பண்ணி போட்டுருக்காங்க.. உடனே எல்லாரும் பயந்துடுராங்க.. இந்த build up ah அப்புடியே மெயின்டெய்ன் பண்ணி, யாரு கொலை பண்ணாங்குறத சஸ்பென்ஸா வச்சி கொண்டு போயிருந்தா "த்ரில்" ங்கற வார்த்தைக்கு ஒரு மரியாத இருந்துருக்கும். ஆனா அது நடக்கல.. அடுத்த சீனே சில காட்டு வாசிங்கள காமிச்சி, அவங்க மத்தவங்கள
பிடிக்கிறதோட இன்ட்டர்வல்னு போட்டாய்ங்க பாருங்க..( நாற்பது நிமிஷத்துல) "நாம சம்பாதிச்ச காசெல்லாம் இப்புடி வீணா போகுதேன்னு" அப்பதான் நான் ரொம்ப வருத்தப்பட்டேன்..
அப்புறம் புடிச்சவிங்கள்ள ரெண்டு பேர காட்டுவாசிங்க கொல்ல, மீதம் இருக்குற ஒரு பையனும் (ஹீரோ மாதிரி) ரெண்டு பொண்ணுங்களும் அந்த காட்டு வாசிங்கள மடார் மடார்னு கட்டையால அடிச்சி போட்டுட்டு தப்பிச்சி வந்துடுறாங்க...
அவ்ளோ தான் படம் முடிஞ்சிருச்சிங்க...
ஹீரோ மாதிரி காமிக்கப்பட்டிருக்கவர் பேரு தெரில... ஆனா அவரு ஸ்டாலின் படத்துல மொத ஃபைட்டுல சிரஞ்சீவிகிட்ட அடி வாங்குற ரவுடி.. அது மட்டும் தெரியும்.. இந்த ஸ்கிரிப்ட வச்சிகிட்டு இவரு எப்புடி இவளோ தைரியமா படம் எடுத்தாருன்னு எனக்கு இன்னும் யோசனையாவே இருக்கு.. அதோட இத எப்புடி இவ்ளோ தைரியமா ரிலீஸ் பண்ணாய்ங்கன்னும் தெரியல...
யாருக்கு யாரோ ஸ்டெப்னி படத்துல கூட ஒரு நேர்மை இருந்துச்சிங்க.. அவிங்க கதைன்னு ஓண்ண ரெடி பண்ணி நல்லா எடுக்க தெரியலன்னாலும் எதோ எடுத்து எல்லாரயும் சிரிக்க வச்சிருந்தாய்ங்க.. ஆனா இவிங்க வித்யாசமா பண்றதா நெனச்சிகிட்டு கடுப்ப ஏத்திருக்காய்ங்க. வக்காளி அந்த கேமரா மேனுக்கு யாரோ தப்பா சொல்லி குடுத்துருக்காய்ங்கய்யா.. எனக்கு ரொம்ப எரிச்சல குடுத்தது கேமராதான்.. கேமராவ எதாவது ஒரு இலையயோ, மரத்தோட கிளையையோ ஃபோகஸ் பண்ணி வச்சிருவாய்ங்க... பின்னாடி ஐஞ்சி பேரோட காலு மட்டும் நடக்குறது தெரியும்.. இதுல இன்னொரு கடுப்பு என்னனா அந்த அஞ்சி பேரு நடந்து போன அப்புறமும் கேமரா அதே ஆங்கிள்ல இருந்துகிட்டே இருக்கும். எல்லா சீனுமே அப்டித்தான்.. இதயெல்லாம் எடிட்டிங்க்ல தூக்கிருந்தாய்ங்கன்னா இத direct ah you tube la ஷார்ட் பிலிமா ரிலீஸ் பண்ணிருக்கலாம். பேசாம எங்க ஜாக்கி அண்ணனை
கேமரா மேனா போட்டுருந்தா பட்டைய கெளப்பிருப்பாரு..
படத்துல ஒரே ஒரு நல்ல விஷயம், சில டைமிங் காமெடிங்க உண்மையிலயே மனசு விட்டு சிரிக்க வச்சிச்சி..
இந்த படம் நல்லாருக்குன்னு சொன்னா கூட யாரும் பாக்க மாட்டீங்க.. நல்ல வேளை அந்த மாதிரி சம்பவங்கள் நடக்க வாய்ப்பே இல்ல..

6 comments:
//தலைவர் சொன்னது:
முதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..//
அண்ணே, இதை எழுதுனது யாருன்னே.
ஐயோ....பாவம் ரொம்ப நொந்திருக்கீங்க போல....நல்லவேளை, கிறுக்குபிடிச்சு தியேட்டர் இருக்கிற தெருவிலயே துணிகிழிச்சுக்கிட்டு திறியாம ரிவ்யூ எழுதற அளவுக்கு நல்லபடியா வந்து சேர்ந்தீங்களே......எல்லாம் அம்மா அப்பா செஞ்ச புண்ணியம் தான் சகோ.
@மனசாட்சி
//தலைவர் சொன்னது:
முதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..//
அண்ணே, இதை எழுதுனது யாருன்னே//
எழுதுனவர விட யாரு மக்கள் கிட்ட சேத்ததுங்கரதுதான் முக்கியம்.. ஹிஹி..
@கடம்பவன குயில்:
//ஐயோ....பாவம் ரொம்ப நொந்திருக்கீங்க போல....நல்லவேளை, கிறுக்குபிடிச்சு தியேட்டர் இருக்கிற தெருவிலயே துணிகிழிச்சுக்கிட்டு திறியாம ரிவ்யூ எழுதற அளவுக்கு நல்லபடியா வந்து சேர்ந்தீங்களே......எல்லாம் அம்மா அப்பா செஞ்ச புண்ணியம் தான் சகோ.//
அதே தான் :)
வருகைக்கு நன்றி..
(தமிழ்) நாட்ல இந்த கேமராமேனுங்க தொல்ல தாங்கலப்பா. ஆங்கிள் வைக்கறேன்னு ஒண்ணு ரெண்டு சேட்டையா செய்யறாங்க!!
ஸார் கேமராமேன சொல்லி குறையில்லை.. இந்த டைரக்டர் அப்படி ஒரு சைக். நாலு சுவத்துக்குள்ள உட்கார்ந்துட்டு.. மோட்டு வளைய பார்த்துகிட்டு.. எடிட்டிங் டேபிள்ள கதையை தேடுற குரூப்!! நல்ல லைட்டிங்கல ஷூட் பண்ணிட்டு பய புள்ள அத கருப்பாக்கி வச்சிருவான்!!
Post a Comment