Monday, May 7, 2012

கலெக்டர் பாலமுரளி


Share/Bookmark

அவன் சொல்லி அடிக்கிறதுல கில்லி
சொல்லாம அடிக்கிறதுல திருப்பாச்சி
சொல்லி சொல்லாம சொழட்டி அடிக்கிறதுல சிவகாசி

இப்புடியெல்லாம் பாலமுரளிய பாராட்டனும்னு ஆசை தான்.. ஆனா என்ன.. அவருக்கு பாருங்க புகழ்ச்சி சுத்தமா புடிக்காது.. பட்டுக்கோட்டைலருந்து வந்து பட்டைய கெளப்பி தமிழ்நாட்டுலயே 5 வது இடத்துல IAS பாஸ்பண்ணி எங்க ஊருக்கு மட்டும் இல்லாம அவர் படிச்ச பள்ளிக்கும் பெருமை சேத்துருக்காரு நம்ம பால முரளி (http://www.facebook.com/balamuralidevendiran).

சோழர் பரம்பரையில் ஒரு கலெக்டர்.

இந்த விஷயத்த இங்க பதிவு செய்ய இன்னொரு காரணமும் இருக்கு. நானும் இவர் படிச்ச அதே ஸ்கூல்ல தான் படிச்சேன். இவர் படிச்ச அதே க்ளாஸ்ல தான் படிச்சேன். இவர் படிச்ச அதே வருஷம் தான் படிச்சேன். இவருக்கு முன்னாடி பெஞ்ச்ல தான் உக்காந்து படிச்சேன். ஏன்னா நா கொஞ்சம் குள்ளம் அவரு  கொஞ்சம் ஒசரம். அதுனால இவர தூக்கி பின்னாடி பெஞ்ச்ல போட்டுட்டாய்ங்க. அட சனியன் என் க்ளாஸ் மேட் தாங்க.

அரசினர் மேல்நிலைப்பள்ளி நாட்டுச்சாலை... இதான் நாங்க +1 & +2 படிச்ச
ஸ்கூல்... 2001-2003. அந்த வருடம் இன்னும் எங்க ஸ்கூல்ல மறக்க முடியாத
வருடங்களா இருக்கும்ங்கறதுல சந்தேகமே இல்ல. ஏன்னா 2003 ல எங்க
பேட்ச்ல தான் எங்க ஸ்கூல்ல முதல் முறையா 4 பேர் 1100 க்கு மேல
எடுத்திருந்தாங்க... ஸ்கூல் 1st வேற யாரும் இல்லை.. நம்ம கலெக்டர்
பால முரளி தான் (1133/1200). ஸ்கூல் 2nd எடுத்த பையனும் நமக்கு ரொம்ப வேண்டப்பட்ட  பையன் தான் (1131/1200) என்னது அவன் என்ன பண்ணிட்டு இருக்கானா? அவன விடுங்க.. அவன் ஒரு வெட்டி முண்டம் வீனா
போன தண்டம்... சும்மா மொக்கை படங்களா பாத்து அதுக்கு அத விட
மொக்கையா review எழுதிகிட்டு சுத்திகிட்டு இருக்கான்.

ஸ்கூல்ல நானும் இவரும் படிப்ப பத்தி பேசிருக்கோமோ இல்லையோ
பாபா படத்த பத்திதான் அதிக நேரம் பேசிருப்போம்.. ஏன்னா இவரும் நம்ம
தலைவரோட தீவிர ரசிகர். பாபாவுக்கு "ஒருவேள கதை இப்புடி இருக்குமோ, இல்ல ஒரு வேள அப்புடி இருக்குமோ" ன்னு என்னென்னவோ கற்பனை பண்ணி வச்சிருந்தோம்... கடைசில எல்லாம் டஸ் ஆயிருச்சி... :(

ஸ்கூல்ல, டியூஷன்லனு எங்க போனாலும் முன்னாடி முன்னாடி வந்து நின்னு மூஞ்ச காட்டி தொல்லை பண்ணிட்டே இருந்தான். சரி பரிட்சை முடிஞ்சோன்ன சனியன் ஒழிஞ்சாண்டா ன்னு பாத்தா ரிசல்ட் பாக்குற ப்ரவுசிங் சென்ட்டருக்கும் வந்து "ஹை நா உன்னவிட ரெண்டு மார்க் கூட எடுத்துட்டேனே... பிம்பிளிக்க பியாபீ" ன்னு கத்திகிட்டு இருந்தான்..


சரி இவன விட்டு தூரமா எங்கயாது ஓடிப்போயிரலாம்னு காரைக்குடி அழகப்பாவுல ஒரு சீட்ட வாங்கிகிட்டு போயிட்டேன்... விதி யார விட்டுது... அங்கயும் வந்துட்டான்... எங்க கலேஜ்க்கு பக்கத்துலயே (CECRI) la ஒரு சீட்ட வாங்கிகிட்டு. அடுத்த நாலு வருஷமும் இவன் கூட தானா... செத்தாண்டா சேகரு.... எப்புடியோ நாலு வருஷமும் ஓடிருச்சி... Final year படிக்கும் போது அவங்க காலேஜ் cultural program ku invite பண்ணிருந்தாரு. நானும் என் நண்பர்களும் போய் விழாவ நல்லா சிறப்பிச்சிட்டு (அவ்வ்வ்) வந்தோம். எங்க காலேஜ் Culturals ah விட ரொம்ப enjoy பண்ணது அங்க தான்...

படிக்கும்போதே வேலை வாங்குனதும் இல்லாம சைடுலயே கேப்புல கெடா வெட்டிகிட்டு  இருந்துருக்காரு. இவன் அடிச்ச மணி CECRI ஆஞ்சனேயருக்கு கேட்டுச்சோ  இல்லையோ... கவர்மண்டுக்கு கேட்டுருச்சி... அடிச்சாம்பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரு...

உன்னால பட்டுக்கோட்டைக்கே பெருமை... நீ படிச்சதால நம்ம ஸ்கூலுக்கு பெருமை... உன்னோட படிச்ச எங்க எல்லாருக்கும் பெருமை..

கண்ணா... என்னிக்கும் அந்நியாத்துக்கு தலைவணங்காத... அட்சி தூள் பண்ணு...


நண்பர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

கோவை நேரம் said...

நண்பருக்கு வாழ்துக்கள்.அப்படியே நீங்க அவர மாதிரியே கலக்டர் இல்லனா கூட ஒரு தாசில்தார், வி ஏ ஓ கூட ஆக்கி இருக்கலாம்..

முத்துசிவா said...

ஹி ஹி... நா அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன் தல :)

திண்டுக்கல் தனபாலன் said...

கலெக்டர் பாலமுரளிக்கு வாழ்த்துக்கள் !

பாலா said...

நண்பன் மேலே செல்வதை பார்ப்பதே ஒரு தனி இன்பம். இனி உங்கள எல்லோரும் கலெக்டர் ஃபிரண்ட்டுன்னு கூப்பிடுவாங்களா?

rajamelaiyur said...

இன்று

அம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டி பகுதி - 1

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...