Thursday, May 3, 2012

KAHAANI- கஹானி - செம படம் !!!


Share/Bookmark
இதுவரைக்கும் நா பாத்துருக்க ஹிந்தி படங்கள விரல் விட்டு எண்ணுனா நாலஞ்சி விரல் பாக்கி இருக்கும்... அது என்னன்னு தெரியல...ஹிந்தின்னா ஒரு அலர்ஜி.. அந்த பாஷை உச்சரிப்ப கேக்கும்போதே எதோ இனம் புரியாத ஒரு வெறுப்பு..  எதுனால அப்டி ஆச்சுன்னு தெரியல... போன வருஷம் PM eh கால் பன்னி "மிஸ்டர் சிவா... நம்ம நாட்டுக்காக நீங்க இத செஞ்சே ஆகனும்" னு ஹிந்தில  சொன்னப்ப "sorry PM... எனக்கு ஹிந்தி தெரியாது" ன்னு சொல்லி ஃபோன கட் பன்னவன்... "சரி இப்ப அதுக்கு என்ன பண்ணனும்ங்குற" ன்னு தானே  கேக்குறிங்க.. சும்மாதான்... எப்புடி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல... சரி மேட்டருக்கு வருவோம்..

வித்யாபாலனே ஹீரோவாகவும், ஹீரோயினாகவும் நடிச்சி வெளிவந்துருக்க படம் இந்த கஹானி...அப்ப டபுள் ஆக் ஷனான்னு கேப்பீங்களே... அட படத்துல
எல்லாமே அவங்கதான்னு சொல்ல வந்தேன்ப்பா...


இந்த படத்த பாத்து முடிச்சதும் திரும்ப ஒரு "Sixth Sense" ah பாத்தது போல
ஒரு உணர்வு.. அதே தரத்தோட, அதே மாதிரியான ஒரு சஸ்பென்ஸ் திரைக்கதை. கதை கேட்காம போய் படம் பாக்குறவங்களுக்கு படம் முடியும் போது ஒரு மிகத் தரமான படத்த பார்த்த ஒரு ஃபீல் இருக்கும்.

சரி சன் டிவி டாப் 10 சுரேஷ் குமார் மாதிரி சுருக்கமா படத்த பத்தி கொஞ்சம் சொல்றேன்...அதே slang la படிங்க

"லண்டன்லருந்து கொல்கத்தாவுக்கு ப்ராஜெக்ட்டுக்காக வந்த தன்னோட
கணவன்ட்டருந்து எந்த தகவலும் வராததுனால அவர தேடி கொல்கத்தா
வராங்க நிறைமாத கற்பிணியான வித்யா பாலன். ஆனா இங்க வந்து பாத்த
அப்புறம் அவருடைய கணவன் பேர்ல கொல்கத்தாவுக்கு யாரும்
வரலைன்னும், அந்த கம்பெனில அப்புடி ஒரு ஆளே வேலை செய்யலன்னும்
தெரிய வருது. பின்னர் போலீஸோட உதவியோட கணவன கண்டுபிடிக்க
முயற்சி பண்ணும் போது பல திடுக்கிடும் உண்மைங்க தெரிய வருது. அதயெல்லாம் தாண்டி வித்யா பாலன் கடைசில தன் கணவனோட சேர்ந்தாரா இல்லையாங்கறத சுவாரஸ்யமாவும் ரசிக்கிற மாதிரியும் சொல்லியிருக்க படம் தான் இந்த கஹானி.. "

வித்யாபாலன பாத்தாலே "அய்யோ... பதினொரு மாசமா இருக்கும் போலருக்கே" ன்னு நமக்கே தோணும். அப்டியே கர்பிணி பெண்ணாவே மாறிருக்காங்க... சில காட்சில அவங்க வேகமா நடக்கும் போது நமக்கு பயமா இருக்கு.. எதாவது ஆயிருமோன்னு.....

அருமையான ஸ்கிரிப்ட்.. தெளிவான திரைக்கதை... கடைசிவரைக்கும் போர்
அடிக்காம விறு விறுபோட எடுத்துட்டு போயிருக்காங்க...   ரொம்ப நாளுக்கப்புறம் ஒரு சூப்பர் படம் பாத்த திருப்தி.... 



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

9 comments:

HOTLINKSIN.COM திரட்டி said...

பதிவை இணைத்தால் பரிசு...
http://www.hotlinksin.com திரட்டியில் உங்கள் பதிவுகளை இணைத்து ஒவ்வொரு மாதமும் சிறப்புப் பரிசைப் பெற்றிடுங்கள். தொடர்ந்து பதிவுகளை இணைப்பவர்களில் மாதம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.

ஹாலிவுட்ரசிகன் said...

நானும் அண்மையில் தான் பார்த்தேன். க்ளைமேக்ஸ் இப்படி இருக்குமோன்னு ஒரு கெஸ் பண்ணிக் கொண்டே தான் பார்த்தேன். அப்படியே நடந்து போச்சு.

ஆனாலும் அருமையான மேக்கிங். சூப்பர் நடிப்பு. சீக்கிரம் இவங்களின் டர்ட்டி பிக்சரும் பார்க்கணும் (நடிப்புக்காக ;) )

Mohan kumar said...

Siva,

Next matter ku vaa... intha padatha tamil la remake pannuna, yaar nadikalam nu sollidu. + mudincha suthamana tamil la title um sollita production start pannidalam..

Ippadiku,
Mohan

முத்துசிவா said...

நம்ம முடிவு பண்ண வேண்டியதில்லைடா... ஏற்கனவே முடிவு பண்ணிட்டாய்ங்கன்னு நெனைக்கிறேன்.. ஸ்நேகா நடிக்கும் போலருக்கு... அது தான் கரெக்டாவும் இருக்கும்... காணாம போனவர தேடிக்கிட்டு இருக்கதால படத்துக்கு "கண்ணாமூச்சி" பேரு வைக்கலாம்... :) புருஷன வேலைக்காக வேற ஊருக்கு அனுப்பி தொலைச்சிட்டு திரும்ப தேடி போறதால "கண்ணகி" ன்னு கூட வைக்கலாம்... ஆனா ஹீரோயின மாத்த வேண்டி இருக்கும் :)

குறையொன்றுமில்லை. said...

படம் இன்னும் பாக்கலே. உங்க பதிவு படிச்சதும் பாக்கலாம் போல இருக்கு. நன்றி

Manimaran said...

ஹலோ பாஸ்... உங்க பழைய பதிவுகளையும் மறுமொழிகளையும் படிச்சுப் பாத்துட்டு சிரிச்சி சிரிச்சி வயிறே புண்ணாப்போச்சிப்பா... தொடர்ந்து எழுதுங்க...

முத்துசிவா said...

@ஹாலிவுட் ரசிகன், mohankumar, Lakshmi:

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் பற்பல

முத்துசிவா said...

@manimaran:

மிக்க நன்றி :)

முத்துசிவா said...

@Krishy:

நன்றி..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...