Sunday, June 10, 2012

தடையறத் தாக்க...


Share/Bookmark
"புகைபிடித்தல் புற்று நோயை உண்டாக்கும்.. புகை பிடித்தல் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்"         

"புகைபிடித்தல் புற்று நோயை உண்டாக்கும்.. புகை பிடித்தல் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்"   

 "புகைபிடித்தல் புற்று நோயை உண்டாக்கும்.. புகை பிடித்தல் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்"

ஒரு மூணு தடவ திரும்ப திரும்ப படிக்கிறதுக்கே கடுப்பா இருக்குல்ல... இந்த
படத்துல இத ஒரு அம்பது தடவ இத போடுறாய்ங்க.. புகைபிடிக்கிற காட்சிகளே படங்கள்ல இருக்க கூடாதுன்னுதான் நம்ம அரசாங்கம் புதுசு புதுசா ரூல் போடுறாங்க. ஆனா அதுலயும் எங்கல்லாம் ஓட்டை இருக்குதோ அதயெல்லாம் தேடிப்புடிச்சி அந்த மாதிரி சீன வச்சிடுறாய்ங்க. கேட்டா கதைக்கு தேவைப்படுதுன்னு ஒரு உதாரு வேற.  " உங்க படத்துல ரவுடியா வர்றவரு ஏன்யா சிகரெட் குடிக்க மாட்டேங்குறாரு? உனது கதையில் பிழை இருக்கிறது" ன்னு யாராவது அவர்ட்ட போயி சண்டை போடப்போறாங்களா என்ன...

அருண்விஜயின் இரண்டு மசாலா ஹிட்டுகளுக்கு அப்புறம் ஒரு வித்யாசமான கதை அமைப்போட வந்துருக்க ஒரு படம். தனுஷோட பொல்லாதவன் டைப் கதை மற்றும் காட்சி அமைப்புகள். வழக்கமான மொரட்டு தனமான ரவுடி கும்பல்ல மாட்டிக்கிற ஒரு அப்பாவி சூப்பர் ஹீரோவோட கதை தான் இந்த தடையற தாக்க. ஆனா முடிஞ்ச வரைக்கும் அதுல கொஞ்சம் சஸ்பென்ஸ புகுத்தி வித்யாசமா காட்ட முயற்சி பண்ணி இருக்காங்க.

மொத்தமா படத்துல குறை சொல்லக்கூடிய ஐட்டங்கள் ரொம்ப கம்மி. எல்லாரும் அவங்கவங்க வேலைய கரெக்டா பண்ணிருக்காங்க. குறிப்பா திரைக்கதை, கேமரா, ஸ்டண்ட் மற்றும் இசை. ஆஹா ஓஹோன்னு பாராட்ட முடியலண்ணாலும் அருவை ரகம் இல்லை. முதல் பாதில ஒரளவு காமெடி, காதல், ரவுடிஸம்னு நகருற கதை  ரெண்டாவது பாதில முழுசும் ஒரே சஸ்பென்ஸ் ஆக் ஷனுக்கு  மாறிடுது. முதல் பாதில இன்னும் கொஞ்சம் நகைச்சுவை காட்சிகளை சேத்துருக்கலாம்.

வில்லன்களா வர்ற ரெண்டுபேரும் கேரக்டருக்கு அப்புடியே பொருந்துறாங்க.
அவங்களோட கேரக்டர விளக்க ஒரு ஃப்ளாஷ்பேக் வச்சி தெளிவா எடுத்துருந்த இயக்குனர் அருண்விஜய் ஏன் இப்புடி ரவுடிங்க மேல கோவப்பட்டு பந்தாடுறாருன்னு ஒரு Valid reason காமிக்க மறந்துட்டாரு.
  
ப்ளஸ்:

1. Bore அடிக்காத திரைக்கதை. ஒவ்வொரு சீனும் சூப்பர்னு சொல்ல முடியலண்ணாலும் குறைகண்டுபுடிக்க முடியாத திரைக்கதை.

2. படத்துல மொத்தம் ரெண்டே ரெண்டு பாட்டுதான். அதுவும் முதல் பாதிலயே
முடிஞ்சிருது. குறிப்பா படத்தோட க்ளைமாக்ஸ் நெருங்கிகிட்டு இருக்கும் போது வழக்கமா வர்ற குத்துப்பாட்டு இல்லை. அதுவரைக்கும் சந்தோஷம்.

2. தமனோட BGM சூப்பர். ஆக் ஷன் படத்துக்கேற்ற தரமான music.

3. அருண் விஜய்க்கு எதாவது ஃப்ளாஷ்பேக் இருக்கும்னு நெனச்சேன்.
எதிர்பார்த்தமாதிரி ஃப்ளாஸ்பேக் வைக்காம இருந்தது பெரிய ட்விஸ்டா இருந்துச்சி

4.  அருண் விஜய் ஆளு செம ஃபிட்டா இருக்காரு. ஆக் ஷன் காட்சிகள்ல
பூந்து விளையாடிருக்காரு. நல்ல நடிப்பும் கூட.

5. படத்தோட second half. நல்ல விறுவிறுப்பா, சஸ்பென்ஸோட கொண்டுபோயிருக்காங்க.

மைனஸ்:

1. மம்தாவ ஹீரோயினா போட்டது.. எனக்கு  பிடிக்காத சில ஹீரோயின்கள்ல மம்தாவும் ஒண்ணு. ஆனா என்ன பண்றது..எல்லா படத்துக்கும் ஹண்சிகா, அனுஷ்கா தமன்னாவ போடனும்னா ப்ரொடியூசர் எங்க போவாரு. அவன் அவன் அவனவன் சேஃப்டிய பாக்கதான செய்வான்.

2. யாவரும் நலம் படத்துல அந்த "Cook Book" சீன் பாத்துருப்பீங்க. அந்த சீனோட
கண்டெண்ட் ஒரு மாதிரியா இருந்தாலும் அந்த சீன ரொம்ப டீசண்ட்டா எடுத்துருப்பாங்க அதே மாதிரி இந்த படத்துல பட்டர்ஃப்ளைன்னு ஒண்ண வச்சி எதோ ட்ரை பண்றாய்ங்க.அத பாத்தா கடுப்பு தான் வருது. மம்தா வர்ற காட்சிகள் எல்லாமே கப்பி தனமா இருக்கு.

3. ரவுடிங்கள பத்துன கதைங்கறாதால,  படத்துலஅருண் விஜய தவற
எல்லாரும் கண்டிஷன் பெயில்ல வந்தவிங்க மாதிரியே இருக்காங்க. பாக்கவே ஒரு மாதிரி இருக்கு.

மொத்ததுல இந்த படத்த பாத்தே தீரவேண்டிய படம்னு சொல்ல முடியாது. ஆனா தாராளமா ஒரு தடவ பாக்கலாம். Low Budget படம்ங்கறதுக்காக "வழக்கு எண்" ங்கற மொக்கைகளை எல்லாம் பாத்து வெற்றிபெற வச்ச நாம இந்த படத்த பாக்குறதுல தப்பே இல்லை.



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

7 comments:

Prem S said...

//Low Budget படம்ங்கறதுக்காக "வழக்கு எண்" ங்கற மொக்கைகளை எல்லாம் பாத்து வெற்றிபெற வச்ச நாம இந்த படத்த பாக்குறதுல தப்பே இல்லை.
//வழக்கு எண்ணில் என்ன குறை கண்டீர்கள் அன்பரே

ANBUTHIL said...

இன்னும் பாக்கள ஆனா இன்னைக்கு பாத்துறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விமர்சனம் ! நன்றி !

பூலோகம் said...

வழக்கு எண் ரொம்ப நல்ல படம்தானே சிவா. நீரொட்டம் போல திரைக்கதை மற்றும் நேர்த்தியான இயக்கம். உங்கள்க்கான காமெடி இல்லை அதனால் அது மொக்கையா????

முத்துசிவா said...

@PREM.S , பூலோகம் :

//வழக்கு எண் ரொம்ப நல்ல படம்தானே சிவா. நீரொட்டம் போல திரைக்கதை மற்றும் நேர்த்தியான இயக்கம். உங்கள்க்கான காமெடி இல்லை அதனால் அது மொக்கையா????//

நண்பர்களே...

காமெடி காட்சிகள் இல்லாததனால இந்த படத்த நா மொக்கைன்னு சொல்லல. நீங்களே யோசிச்சி பாருங்க? இந்த படத்த நீங்க தியேட்டர்ல பாக்கும் போது
எத்தனை காட்சிகள மனசு விட்டு ரசிச்சீங்க? திரும்ப இந்த படத்துல நல்ல சீன்னு கேட்டா டக்குன்னு எதயாவது உங்களால சொல்ல முடியுமா? நீங்க தனியா இருக்கும் போது திரும்ப இந்த படம் உங்ககிட்ட இருந்தா பாப்பீங்களா?

மத்த கமர்ஷியல் படங்களை கிண்டல் பண்ற மாதிரி இத கிண்டல் பன்ன நமக்கு மனசு உருத்தும்.. ஏன்னா நடைமுறை வாழ்க்கைய எடுத்துருக்காரு.. இத எப்புடி கிண்டல் பண்றது.. நல்லா இல்லைன்னு சொன்னா மத்தவங்க நம்மள பத்தி என்ன நெனைப்பாங்கன்னு ஒரு ஃபீல் நமக்கு... என்ன பொறுத்த வரைக்கும் நா குடுத்த பணத்துக்கு கொஞ்சம் கூட ஒர்த் இல்லாத ஒரு படம். என் கருத்து தங்களுடன் கண்டிப்பாக ஒத்து போகாதுன்னு தெரியும். தவறிருந்தால் மன்னிக்கவும்...

பாலாஜி சக்திவேல் இந்நேரம் வேற எப்புடி எப்புடியெல்லாம் மக்கள் செத்துருக்காங்கன்னு ஆராய்ச்சி பண்ணி இன்னொரு கொடூரமான கதைய கூடிய சீக்கிரம் அடுத்த படமா எடுப்பாரு... மறக்காம அதையும் பாத்துருங்க :)

JR Benedict II said...
This comment has been removed by the author.
Ashok said...

"பார்த்தே தீர வேண்டிய படம்"னு சொல்ல முடியாதா? அடேய் கோயிந்த்சாமி.....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...