Sunday, July 15, 2012

பில்லா 2 - The டண்டனக்கா DON


Share/Bookmark

குறிப்பு: அஜித்தின் தீவிற ரசிகர்கள் இந்த விமர்சனத்தை படித்துவிட்டு வெறியடைய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இது படத்தை பற்றிய விமர்சனமே தவிற அஜித்தை பற்றியது அல்ல.

விமர்சனத்துக்கு போறதுக்கு முன்னால நா உங்க எல்லாருக்கும் தலைவர் கவுண்டமணியோட ஒரு காமெடிய ஞாபகப்படுத்த ஆசைப்படுறேன். சின்னவர் படத்துல கவுண்டர் மீனவரா இருப்பாரு. ஒரு தடவ அவர் விரிக்கிற வலையில பெருசா எதோ விழுந்துட கரையில இருக்கவங்க எல்லாரும் அது பெரிய திமிங்கலம் அது இதுன்னு பில்ட் அப் குடுத்துட்டு, உண்மையிலேயே வலையில இருக்கது செந்தில் தான்னு தெரிஞ்ச அப்புறம் கவுண்டர கிண்டல் பண்ணுவாங்க.. அப்போ தலைவர் ஒரு டயலாக் சொல்லுவாரு பாருங்க..

"தண்ணிக்குள்ள இருக்கது என்னன்னு தெரியாமலேயே ஒருத்தன் அது தோலு ஒரு கோடி போகும்ங்குறா அது பல்லு ரெண்டு கோடி போகும்ங்குறான்... இன்னொருத்தன் அது எச்சி மெடிசினு... அத வித்தா பல கோடி போகும்னு சொல்றான்... இதெல்லாம் வெளங்குமாடா" ன்னு கடுப்புல சொல்லுவாரு. அதே ஃபீலிங்தான் படத்த பாத்த அப்புறம் எனக்கு. படம் எப்புடி இருக்குன்னு தெரியிறதுக்கு முன்னாலயே ஒருத்தன் இத  ஹாலிவுட் படம் மாதிரி இருக்குங்குறான். இன்னொருத்தன் மங்காத்தாவெல்லாம் சும்மா..இது அதெயெல்லாம்  தூக்கி சாப்பிட்டுருச்சிங்குறான். இன்னொருத்தன் தமிழ்ல இதுமாதிரி படமே இதுவரைக்கும் வந்ததில்லைங்குறான்.. யார்ட்ட விடுறீங்கானும் ரீலூ... வலைக்குள்ள திமிங்கலம் இருக்கும்னு எதிர்பாத்த கவுண்டருக்கு எப்புடி செந்தில்  இருந்தாரோ அதே மாதிரி நெலமை தான் படம் பயங்கரமா இருக்கும்னு நெனைச்சி போற நமக்கும்.

படம் ஸ்டைலா இருக்கு.. ரிச் லுக்கு... அது இதுன்னு கண்ட பில்ட் அப் விடுவாங்க... இன்னும் சில பேரு படம் மொக்கைன்னு நேரடியா சொல்றதுக்கு கஷ்டப்பட்டுகிட்டு நல்லா தான் இருக்குன்னு சொல்ல வாய்ப்பு இருக்கு. மக்களே ஓப்பனா சொல்லனும்னா...இது ஒரு ஹைடெக் ஸ்டைலிஷ் மொக்கைன்னு சொல்லலாம். ட்ரெயிலர்ல பாத்த வசனங்கள் நல்ல வசனங்கள் கூட படத்தோட சேர்ந்து வரும் போது காட்சிகளோட கப்பித்தனத்தால வீணா போயிருக்கு.

அகதியா இருக்க அஜித் எப்புடி படிப்படியா முன்னேறி ( நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஹாணர்- முன்னேறி) பெரிய டானா ஆவுறாருங்கறது தான் கதை. பெருசா ஒண்ணும் பண்ணல... ரெண்டு மூணு தடவ இந்த டெம்போ ட்ராவலர்லர்ல சில கடத்தல்கள் பண்றாரு.. எனக்கு ஒரு பெரிய டவுட்டுங்க.. முப்பது வருசத்துக்கு முன்னால தான் இந்த ஹெராயின் அபின் எல்லாத்தையும் மளிகை கடையில ஜீனி பொட்டலம் போட்டுருக்க மாதிரி transparent கவர்ல போட்டு கடத்திக்கிட்டு இருந்தாய்ங்க. 2013 லயும் நீங்க இன்னும் திருந்தலையாடா..

நீங்க மட்டும் அம்பாஸிடர்ல போயிட்டு  இருந்துட்டு இப்ப சுமோ க்வாலிஸ்னு மாறிட்டீங்க.. கோட்டு போடுறீங்க... கூலிங் க்ளாஸ் இல்லாம போனா ரெண்டு கண்ணும் அவிஞ்சிருதுங்குறீங்க... அப்புடியே காலப்போக்குல அந்த ஹெராயின் பேக் பண்ற கவர தான் மாத்துனீங்கன்னா என்னடா? இன்னும் அந்த ஜீனி மடிக்கிற ப்ளாஸ்டிக் கவர்லயே பேக் பண்றீங்க.. எல்லாரும் அத கண்ணால பாக்கும் போதே கண்டுபுடிச்சிடுறாய்ங்க. ஒரு சக்தி மசாலா, புரு காஃபி பாக்கெட் மாதிரி fancy ah எதாவது கவர்ல அத பேக் பண்ணால்ல போலீஸ் கண்பீஸ் ஆவாங்க...

அப்புறம் அஜித் கையில ஒரு துப்பாக்கிய குடுத்துட்டாய்ங்க. கண்ணுல பாக்குறவிங்கல  எல்லாம் டம்மு டம்முன்னு சுட்டுகிட்டே இருக்காரு. பாத்து நீங்க எதும் அவர் முன்னாடி போயிரபோறீங்க அவளோதான்... பொட்டுன்னு சுட்டுருவாரு. அந்த அகதி குரூப்ப பாத்துக்குற ஒரு ஊணமுற்ற ஒரு சின்ன பையன் இருப்பான். அவன்  ஓவரா பேசுறான்னு அவன பொளேர்னு ஒரு அறை விட்டு அந்த ஏரியால ரவுடியா ஃபார்ம் ஆவுறாரு. அப்புறம் அவர் கிட்ட "அநாதையா நீ" ன்னு கேட்ட ஒருத்தர கழுத்த அறுத்து கொல்றாரு. இப்புடி புள்ளப்பூச்சியல்லாம் கொன்னுட்டு கடைசில இவர ஜெயில்ல புடிச்சி போட்ட ஒரு வில்லன கொல்லாம விட்டுட்டு "எனக்கு நண்பனா இருக்கதுக்கு
எந்த தகுதியும் தேவையில்ல... ஆனா எதிரியா இருக்க தகுதி வேணும்" ன்னு பஞ்ச் டயலாக் பேசுறாரு... செம்ம காமெடி தல நீங்க...அந்த டயலாக்க கேட்டதும் "யோவ்... அந்த சின்ன பயல அடிச்சி ரவுடியானவந்தான நீயி" ன்னு மனசுக்குள்ளயே சிரிச்சிகிட்டேன். 

அப்புறம் "டேய் என் வாழ்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா"ன்னு ஒரு ஸ்கூல் பையன பாத்து பேசுறாரு.

படத்துல மிக கேவலாமான ஒரு விஷயம் casting. யாரார டானா போடுறது.. எவன் எவன  எந்த ரோல்ல போடுறதுன்னே ஒரு விவஸ்த இல்லாம போச்சு... (சாரி நா அஜித்த சொல்லல) இந்த பயணம் படத்துல வாசிம் கானா நடிக்க ஒரு காமெடி ஆக்டர கூப்டு வந்து நடிக்க வைப்பாய்ங்களே.. அவன ஒரு சீரியஸான கேரக்டர்ல கோட்டு சூட்டெல்லாம் போட்டு நடிக்க வச்சிருக்காய்ங்க. அவன பாத்ததுமே தியேட்டர்ல எல்லாரும் டேய் இவன் அவண்டான்னு நக்கல் அடிக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க. அப்புறம் தூள்ல போலீஸா வர்றவரு ஒரு குட்டி டான்..செம கப்பி.  மெயின்வில்லன் Jr.NTR கிட்ட பல படங்கள்ல அடி வாங்குனவன்னாலும் தமிழுக்கு புதுசுங்கறதால ஓகே.. ஆனா ரஷ்யாகாரனா காமிச்சி அவன் பேசுற ஒவ்வொன்னுக்கும் தமிழ் ட்ரான்சிலேஷன் கீழ போடுறது செம கடுப்பு.

படத்துல எந்த கேரக்டருமே தெளிவு இல்லை. கதை எங்க நடக்குதுங்கறதுலயும் ஒரு தெளிவு இல்லை. திடீர்னு ரஷ்யாங்குறாய்ங்க.. திடீர்னு கோவாங்குறாய்ங்க... எதோ உள்ள பொய்ட்டோமேங்கறதுக்காக
கடனுக்குன்னு அவனுங்க சொல்றதயெல்லாம் பாக்க வேண்டியிருக்கும்.

அப்புறம் படத்துல ஹீரோயின்னு ஒண்ணு இருக்குங்க.. ஆனா உண்மை என்னன்னா அந்த புள்ளைய தவற படத்துல வர்ற மத்த எல்லாருமே சூப்பரா இருக்காங்க.. அது செம மொக்கையா இருக்கு... என்ன கண்றாவிக்காக அந்த கேரக்டர்னே கடைசிவரைக்கும் தெரியாம போச்சு.

அஜித் ஆளு பாக்கறதுக்கு சூப்பரா இருக்காரு. அவருக்கு கொடுக்கப்பட்ட நாலஞ்சி வசனங்கள ஒழுங்கா பேசிருகாரு.. அலட்டல் அதிகம் இல்லை
"நா தண்ணில இருக்கேன் நீ தரையில இருக்க" "அவர்களின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்.. மாமன் மச்சான் பெண் கொடுத்தோர் பெண் எடுத்தோர்..." ன்னு இதுமாதிரி எமோஷனல் டயலாக்ஸ் இல்லாம இருக்கது பெரிய ஆறுதல். திரும்ப பழைய மாதிரி புஷ்டியான ஆகாரங்கள்லாம்  சாப்டு ப்ரம்மாண்டமா ஆயிட்டாரு. தொப்பை திரும்ப முன்னாடி மாதிரியே ஆயிருச்சி..மூஞ்சும் செம்ம குண்டாயிருச்சி...  கொடுமை என்னான்ன முக்காவாசி க்ளோஸ் அப் ஷாட்.. அய்யோ அம்மே... முதல் பாதில கைலி, சட்டை, ஜீன்ன்னு சாதாரண காஸ்ட்யூம்ல அஜித் ரொம்ப நல்லா இருக்காரு. ரெண்டாவது பாதில வழக்கம்போல ரேமண்ட்ஸ் மாடல் மாதிரி யுவன் ஷங்கர் ராஜாவ மியூசிக் போட சொல்லிட்டு நடந்துகிட்டே இருக்காரு.

யுவன் பாவம்.. இவரு போட்ட சில நல்ல ட்யூன்கள கப்பித்தனமா பாட்டு எடுத்து வச்சிருக்காய்ங்க. "எதோ எதோ ஒரு மயக்கம்" பாட்ட கெடுத்து வச்சிருக்காய்ங்க... உனக்குள்ளே மிருகம்  ஆரம்பத்துல பாக்குறப்ப நல்லா இருந்தாலும் கொஞ்ச நேரத்துல எதோ ஃபோட்டோ  ஷாப்புல எடிட் பண்ண ஃபோட்டோக்கள பாக்குற ஒரு ஃபீல குடுக்குது..

சக்ரி டோலட்டி...நீங்கல்லாம் நல்லா வருவீங்க தம்பி... நல்லா வருவீங்க.... இவர பத்தி வடிவேலுவோட சுனா பானா காமெடி டைப்ல சொல்லப்போனா "இவருக்கு சைக்கிள் பழகனும்னு ஆச வந்துச்சி.. அத கமல வச்சி கத்துகிட்டாரு..லோடு வச்சி ஓட்டனும்னு ஆசை வந்துச்சி.. அதுக்கு அஜித்த சைக்கிள்ல ஏத்திட்டு போயி கீழ தள்ளிவிட்டுட்டாரு. இந்த படம் பாத்த அப்புறம் தான் வெங்கட் ப்ரபு மேல ஒரு தனி அபிப்பிராயமே வந்துருக்கு.. யார்ட எதுமாறி எப்புடி வேலை வாங்கனும்னு அவருக்கு தெரிஞ்சிருக்கு. மங்காத்தாவுல கால்பங்கு கூட வராது இந்த பில்லா...

படம் முடிஞ்ச அப்புறம் யுவன் ஷங்கர் ராஜா வந்து "Give your way.... உவ்வே.. உவ்வே to the கேங்ஸ்டார்" னு பாட்டு பாட 'ஆமா இந்த மொகரைக்கு இது மட்டும் தான் கொறைச்சல்..இன்னும் ஒரு வாரம் கழிச்சி தியேட்டர்ல ஒருத்தன் இருக்கமாட்டான்.. அப்பவந்து அந்த கேங்ஸ்டர நடந்து பழக சொல்லுப்பா" ன்னு
நெனைச்சிகிட்டு வெளிய வந்தேன்.

முதல் வாரத்தில் ரசிகர்களால் ஹாலிவுட், பாலிவுட், ஸ்டைலிஷ், தல ராக்ஸ் ன்னு கண்ட மேனிக்கு ஏற்றி விடப்பட்டாலும் கடைசியாக ஆழ்வார், அசல் வரிசையில் சேரப்போகும் ஒரு படமே இந்த பில்லா 2.



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு விமர்சனம்... முடிவில் இப்படி உண்மையாய் சொல்லிட்டீங்களே...

திண்டுக்கல் தனபாலன் said...

சின்ன வேண்டுகோள் : இந்த உலவு ஒட்டுப்பட்டையை எடுத்து விடவும்.
உங்கள் தளம் திறக்க ரொம்ப நேரம் ஆகிறது.....


மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.bloggernanban.com/2012/06/remove-ulavu-vote-buttons.html) சென்று பார்க்கவும். நன்றி !

ராம்குமார் - அமுதன் said...

விழுந்து விழுந்து சிரிச்சுகிட்டு இருக்கேன் பாஸூ... செம கலாய்.. கிழி கிழி... :))


எனக்கும் படம் முடிந்த நொடி வெங்கட்பிரபு மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது :))


எனது விமர்சன பதிவுக்கு நான் வைத்த தலைப்பே ஸ்டைலிஷான மொக்கைன்னுதான்

http://www.nellainanban.com/2012/07/ii.html

Unknown said...

//"இவருக்கு சைக்கிள் பழகனும்னு ஆச வந்துச்சி.. அத கமல வச்சி கத்துகிட்டாரு..லோடு வச்சி ஓட்டனும்னு ஆசை வந்துச்சி.. அதுக்கு அஜித்த சைக்கிள்ல ஏத்திட்டு போயி கீழ தள்ளிவிட்டுட்டாரு.. // and //படம் முடிஞ்ச அப்புறம் யுவன் ஷங்கர் ராஜா வந்து "Give your way.... உவ்வே.. உவ்வே to the கேங்ஸ்டார்" னு பாட்டு பாட 'ஆமா இந்த மொகரைக்கு இது மட்டும் தான் கொறைச்சல்..இன்னும் ஒரு வாரம் கழிச்சி தியேட்டர்ல ஒருத்தன் இருக்கமாட்டான்.. அப்பவந்து அந்த கேங்ஸ்டர நடந்து பழக சொல்லுப்பா // படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிச்சிகிட்டு இருக்கேன் பாஸ்... செம செம!!

Ashok said...

முப்பது வருசத்துக்கு முன்னால தான் இந்த ஹெராயின் அபின் எல்லாத்தையும் மளிகை கடையில ஜீனி பொட்டலம் போட்டுருக்க மாதிரி transparent கவர்ல போட்டு கடத்திக்கிட்டு இருந்தாய்ங்க. 2013 லயும் நீங்க இன்னும் திருந்தலையாடா//

முத்துசிவா அவர்களே படம் ஒரு பீரியட் ஃப்லிம் என்பது தெரியாமலேயே பார்த்துவிட்டு வந்திருக்கிறீர்கள். 2008ல் வந்த பில்லா1ன் prequel 2013ல் நடக்குமா? எதோ உள்நோக்கத்தோடு பொய்யுரைக்கிறீர்கள். என் கடும் கண்டனத்தை இங்கே பதிந்துகொள்கிறேன் நன்றி வணக்கம்.

Ashok said...

முப்பது வருசத்துக்கு முன்னால தான் இந்த ஹெராயின் அபின் எல்லாத்தையும் மளிகை கடையில ஜீனி பொட்டலம் போட்டுருக்க மாதிரி transparent கவர்ல போட்டு கடத்திக்கிட்டு இருந்தாய்ங்க. 2013 லயும் நீங்க இன்னும் திருந்தலையாடா//

முத்துசிவா அவர்களே படம் ஒரு பீரியட் ஃப்லிம் என்பது தெரியாமலேயே பார்த்துவிட்டு வந்திருக்கிறீர்கள். 2008ல் வந்த பில்லா1ன் prequel 2013ல் நடக்குமா? எதோ உள்நோக்கத்தோடு பொய்யுரைக்கிறீர்கள். என் கடும் கண்டனத்தை இங்கே பதிந்துகொள்கிறேன் நன்றி வணக்கம்.

Krubhakaran said...

முதல் வாரத்தில் ரசிகர்களால் ஹாலிவுட், பாலிவுட், ஸ்டைலிஷ், தல ராக்ஸ் ன்னு கண்ட மேனிக்கு ஏற்றி விடப்பட்டாலும் கடைசியாக ஆழ்வார், அசல் வரிசையில் சேரப்போகும் ஒரு படமே இந்த பில்லா 2.
Exactly. Super review.

Riyas said...

Sema review boss

Anonymous said...

review intha ottu otti irukinga oru sila idathula thara ticket rangeku kevala padutharainga kandipa ovvoru padathukum vandhu parpen matra star value oda failure padangalukkum ithe mari irukanu parkanum

Anonymous said...

andha police ah prostitution area la konnachu la?????

Anonymous said...

150 rs waste boss

Tirupurvalu said...

Unmaiyanna vimarchanam

Anonymous said...

ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹ

காப்பிகாரன் said...

மச்சி சரியான விமர்சனம் மச்சி ஆனா நீ இந்த படத்த ரொம்ப எதிர் பாரத்தில

Gkm said...

நீ மூடிகிட்டு உன் தலைவனோட படத்தை பத்தி எழுது, வள்ளி மாதிரி ஒரு அற்புதமான படத்தை உன் தலைவனை தவிர வேற யாரால எடுக்க முடியும் சொல்லு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...