Monday, December 31, 2012

கவுண்டர் தொகுத்து வழங்கும் கடுப்பேற்றிய படங்கள்- 2012 !!!


Share/Bookmark

கவுண்டர் மெக்கானிக் ஷாப் ஸ்டூல்ல தனியா உக்காந்து பொலம்பிக்கிட்டு இருக்காரு.

"என்னடா வாழ்க்கை இது... கரண்டு இருந்தா தான நாலு பேரு மோட்டார ஓட்டுவான்... அது ரிப்பேர் ஆகும்.. அத நம்ம கிட்ட கொண்டு வருவானுக.. இப்பல்லாம் வாங்குன மோட்டாரு ஓடாம புதுசா அப்புடியே இருக்கு.. இவனுக அத எப்ப ஓட்டுறது... அது எப்ப ரிப்பேர் ஆகுறது நமக்கு எப்போ தொழில் கெடைக்கிறது.... ஒரே குஸ்டமப்பா... பேசாம தொழில மாத்தி பழைய மாதிரி பெட்ரமாக்ஸ் லைட்டே விக்க ஆரம்பிச்சிட வேண்டியதுதான்.....ஆனா ஒண்ணே ஒண்ணுடா... கரண்டு பில்லு நா கட்னதே இல்லைடா... "

அப்ப அந்த வழியா செந்தில் டவுசரோட பாட்டு பாடிகிட்டே வர்றாரு...

"மக்காயாலா மக்காயாலா .... காய காவுவா...
மக்காயாலா மக்காயாலா காய காவுவா..."

கவுண்டர் மனசுக்குள் " என்ன இந்த கருநாய ஆப்ரிக்கா காட்டேரி எதும் அடிச்சிருச்சா...  வேற வேற மொழில என்னென்னவோ பேசிட்டு வர்றான்"

செந்தில் பக்கத்துல வந்து.. "என்னண்ணே ரொம்ப பிஸியா இருக்கீங்க போல"

கவுண்டர் : அடி செருப்பால நாயே... என்ன நக்கலா... ஏண்டா நானே நாலு நாளா எந்த இளிச்ச வாயனும் சிக்கமாட்டேங்குறானேன்னு கடுப்புல இருக்கேன்... நீவேற வெந்த புண்ணுல புள்ளையார பாச்சிகிட்டு... ஆமா அங்க வரும்போது வேற பாசையில என்னவோ பண்ணிட்டு வந்தியே என்ன ராஜா?

செந்தில்: அதுவாண்ணே... அது லேட்டஸ்ட் தமிழ் பாட்டுண்ணே..

கவுண்டர் :
என்னது தமிழ்பாட்டா? எங்க ஒருக்கா பாடு

செந்தில்  : மக்கயாலா மக்காயாலா காய காவுவா

கவுண்டர் : இய்ய்ய்... ஏண்டா கும்கி வாயா..  இது தமிழ்பாட்டா... கொக்கா கோலா கேள்வி பட்டுருகேன்.. அது என்னடா மக்காயாலா...

செந்தில்  : இப்பவெல்லாம் இதுதாண்ணே தமிழ்பாட்டு...

கவுண்டர்: சரி அது எதுவா வேணாலும் இருக்கட்டும்... இன்னொருக்கா இந்த பாட்ட பாடுன மவனே அடுத்த வேளை சோறு திங்ய வாயி இருக்காது.

செந்தில்   : ஒரு யூத்து பாட்டு பாடுனா உங்களுக்கு புடிக்காதே... சரி விடுங்க... நம்ம ஊரு  கொட்டாயில மத்தியான ஆட்டம் படத்துக்கு போவலாம்னு இருக்கேன் வர்றீங்களா...

கவுண்டர் : (காத பொத்திக்கிட்டு) அய்யோ... நா ஏற்கனவே இந்தவருசம் படம் பாத்து வாங்குனதெல்லாம் போதும்பா...  நீ ஆள விடு...

செந்தில் : அட அப்புடி என்ன படம்னே பாத்தீங்க... கொஞ்சம் சொன்னீங்கன்னா எனக்கும் கொஞம் டைம் பாஸாகும்.

கவுண்டர் : (செந்தில் காலர பொத்துனாப்புல புடிச்சி ) சரி வா சொல்றேன்... மவனே ஆரம்பிச்சிவிட்டு பாதில ஓடலாம்னு எதுவும் பாத்த, வாயில முன்னாடி ரெண்டு பல்லத்தவற மத்த எல்லாத்தையும் புடுங்கி
எரிஞ்சிருவேன்.

செந்தில் : சரி சொல்லுங்க...


 அஸ்தமனம்:


இந்த டைரக்டரு ஒரு நல்லவரு... இதுக்குமுன்னால ஒரு அருமையான படத்த எடுத்தவரு..  அப்புடின்னு ஒரு பன்னி சொன்னத நம்பி இந்த படத்துக்கு போனேன்... இந்த படத்த பாத்த அப்புறம் தான் தெரிஞ்சிது அந்த டைரக்டரு இதுக்கு முன்னால எப்புடி பட்ட படம் எடுத்துருப்பருன்னு. டேய் இது படமே அல்ல.. நாளைய இயக்குனர்ல போடவேண்டிய ஒரு short film.. 150 ரூவா பணத்த வாங்கிட்டு முக்கா மணி நேரத்துல படம் முடிஞ்சிருச்சின்னு அனுப்பிட்டானுகடா..  இந்த படத்தோட பேரு படத்துக்கு பொருந்துதோ இல்லையோ படம் பாக்க போறவனுகளுக்கு கரெக்டா பொருந்தும் அஸ்த்தமனம் - வக்காளி டேய்!!!!!!!
முரட்டுக்காளை:


கவுண்டர்: இந்த ஆப்பு மேல தேடிப்போய் உக்காருரதுன்னு கேள்விப்பட்டுருக்கியா? அது இது தான். ஏண்டா எடுத்த படத்த ஒரு சீனு கூட மாத்தாம எடுக்குறதுக்கு பேரு ரீமேக்காடா... நல்லா பண்றானுகப்பா ரீமேக்கு.. என்பது தொண்ணூரு வயசுல வரவேண்டிய கொழப்பமெல்லாம் எனக்கு இந்த படத்த  பாத்தப்புறம் வந்துருச்சி... நாமட்டும் போனா பரவால்ல..ஒரு நாலுபேர வேற கூட்டிப்போயிட்டேன்.. படம் பாத்துமுடிச்சப்புறம் என்ன எப்புடியெல்லாம் தூக்கி போட்டு மிதிச்சாங்க தெரியுமா? இங்ங்ங்ங்

செந்தில் : அய்யோ பாவம்

கவுண்டர்: நாயே..என்ன பீலிங்கா... வக்காளி தேவையில்லாத எடத்துல பீலிங்க் விட்ட அந்த படத்த போட்டு உன்ன உள்ள விட்டு ரூம சாத்திருவேன்முரட்டுக்காளை - அந்தக் காளைய கொல்லுங்கடா!!

SKY FALLசெந்தில்: அண்ணேன்... நீங்க இங்கிலீஸ் படம் லாம் பாப்பீங்களா?

கவுண்டர்: அட என்னடா மண்டையா இப்புடி கேட்டுபுட்ட.. எங்க தாத்தா காலத்துலருந்தே நாங்க  ஒரு இங்கிலீஸ் படம் விடாம பாத்துருவோம்... அதுவும் பாண்டு படம்னா எனக்கு அப்புடி ஒரு
பிரியம்...அக்காங்..

செந்தில்: இல்லையே.. நீங்க அண்ணிக்கு போதையில வேற படத்துக்கு போறதுக்கு பதிலா தெரியாம
இந்த படத்துக்கு பொய்ட்டதால்ல  கீழத்தெரு முணியாண்டி சொன்னான்.

கவுண்டர்:  த்துப்பூ... சொல்லிட்டானா...சரி வுடே... தெரிஞ்சி போனனோ தெரியாம போனணோ... ஏண்டா போனோம்னு ஆயிருச்சிடா... படத்த பாத்துட்டு எனக்கு வந்த கடுப்புல என் பக்கத்துல உக்கார்ந்துருந்தவன் மூக்குல
உட்டேன் பாரு ஒண்ணு... பொல பொலன்னு ரத்தம் வந்துருச்சி.. நல்ல வேளை இருக்குங்கறதால அவன் என் மூஞ்ச பாக்கல...

செந்தில்: (மூஞ்ச அழுகுற மாதிரி வச்சிகிட்டு) அண்ணேன்..அந்த பக்கத்துல உக்காந்து மூக்குல குத்துவாங்குனது வேற யாருமில்லை... நாந்தாண்ணே...

கவுண்டர் : அட கவ்தம் மேனன் மண்டையா....நீ தாணா அது..SKY FALL - கடல்லயே இல்லையாம்!!!

அரவான்:


செந்தில்: அண்ணே ஒரு சந்தேகம்

கவுண்டர் : டேய் இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள சந்தேகமா சரி கேளூ

செந்தில்  :
இந்த படத்துக்கு ஏண்ணே அரவான்னு பேர் வச்சிருக்காய்ங்க.?

கவுண்டர் : கொஞ்சம் பக்கத்துல வா... (செந்தில் பக்கத்துல வந்ததும் கண்ணத்துல பொளேர்னு ஒண்ணுவிட்டு)  நாயே நானே அது தெரியாமதான் ஒரு வருசமா திரியிறேன். படத்த தான் ஒழுங்கா எடுக்க மாட்டேங் குறானுகன்னா பேராச்சும் புரியிற மாதிரி வைக்கிறானுகளான்னு பாரு... எதாவது ஒரு பழைய புத்தகத்த படிச்சிருப்பானுக.. அதுல எதாவது ஒருத்தன் பேரு அரவான்னு இருந்துருக்கும் அத அப்புடியே இங்க கொண்டு வந்து வச்சிட்டானுக... மக்களுக்கு புரியிற மாதிரி மட்டும் இவனுக பேர் வைக்கவே மாட்டனுக.அரவான் - தமிழ் சினிமாவில் ஒரு கருங்கல்!!!

தேவுடு ச்சேசின மனுசுலு:


செந்தில்: அண்ணே சந்தேகம் கேக்கலாமா...

கவுண்டர்: நீ என்ன கேக்கப்போறன்னு எனக்கு தெரியிங்... தமிழ் படம் பாக்கவே நமக்கு துப்பு இல்லை இதுல தெலுங்கு வேறயான்னு கேக்கப்போற.. அதான?

செந்தில்: ஆமண்ணே...

கவுண்டர் : என்னடா பண்றது நம்மூர்ல தான் இப்புடி கருமாந்துரமா படம் எடுக்குறாய்ங்கன்னு அந்தபக்கம் கொஞ்சம் போனேன்.. இந்த படத்துக்கு நம்மூர் படமே எவ்வளவோ தேவலாம் போலருக்கு. ஆனா ஒண்ணுடா... அங்க படம் நல்லாருக்கோ இல்லையோ... ஆனா படத்த பாத்தா ஒரே கலரு ஃபிகரு
கலரு ஃபிகருதான்.. ஃபுல் எஞ்ஜாய் மெண்ட்தேவுடு ச்சேசின மனுஷுலு

 செந்தில் : (லைட்டா உடம்ப நெளிச்சிகிட்டே) அண்ணே எனக்கு லைட்டா ஒண்ணுக்கு வருது..

கவுண்டர் : இருடி... நீ எதுக்காக ஓடுறன்னு தெரியிங்...அப்புடியே எஸ்கேப் ஆயிரலாம்னுதானே பாக்குற...
அது நடக்காது மகனே...


முகமூடி :


கவுண்டர் : நா அப்பவே சொன்னேன்... இந்த கருப்பு கண்ணாடி போட்ட நாய நம்பாதீங்க பாக்க திருடன் மாதிரியே இருக்கான்னு.. எவனாச்சும் கேட்டானுகளா...இப்ப எடுத்துருக்கான் பாருங்கையா ஒரு படம்... ஏண்டா  இங்கிலீஸ் படத்த பாத்து எடுத்தீங்களே அத ஒழுங்க எடுக்க மாட்டீங்களா... படத்துக்கு பேரு வச்சிருக்கான் பாருங்கையா முகமூடின்னு... மூஞ்ச மூடிகிட்டு கூட இந்த படத்த பாக்க முடியல... அதுகூட பரவால்லய்யா ஹீரோயின்னு ஒரு புள்ளைய போட்டுருக்கானுக... அத பாத்துட்டு வந்து என்னால நாலு நாளூ வீட்டுல சோறு திங்க முடியலய்யா...

செந்தில் : அய்யோ அப்புறம் என்னண்ணே பண்ணீங்க..

கவுண்டர் :
வேற என்ன பண்றது... கடையில் போயி புரோட்டா சாப்டு வந்தேன்...  முகமூடி - செம்ம காமெடி சார் நீங்க!!!

பில்லா 2 :


ஒரு தடவ ஒரு படத்த எடுத்து அது ஹிட்டாயிட்டா அத அப்புடியே விட மாட்டானுக.. அதுக்கு பார்ட் 1 பார்ட் 2லருந்து பார்ட் 5 வரைக்கும் எடுத்து அத நாரடிச்சிட்டு தான் மறுவேளை பாக்குறானுக..

செந்தில்: ஹாலிவுட்லயெல்லாம் அப்புடித்தானே பண்றாய்ங்க..

கவுண்டர்: அது ஹாலிவுட்லடா... பாப்பநாயக்கம் பட்டில உண்ட கட்டி வாங்கி திங்கிற நமக்கெல்லாம் எதுக்குடா இதெல்லாம்... அதுவும் ஒழுங்கா எடுத்தானுகளான்னா இல்லை... சரி சொந்தமாவாச்சும் எடுத்துருக்கலாம்னா அதுவும் இல்லை... ஒரு இங்கிலீஸ்படத்த அப்புடியே உல்டா அடிச்சிருக்கு இந்த டோலட்டி நாயி. அந்தாளே பாவம்... 4 படத்துல ஒரு படம் தான் அவருக்கு ஓடுது.. இவனுங்க என்னன்னா அவர வச்சி தான் ட்ரயல் எடுக்குறானுக...

செந்தில்: ஆமா அது என்ன இங்கிலீஸ் படம்னே...

கவுண்டர்: அதுவாடா... ஸ்கார் ஃபேஸ்

செந்தில் : யார் ஃபேஸ்ணே?

கவுண்டர் : உங்கொப்பன் பன்னிவாயன் ஃபேஸ்.. படுவா...

செந்தில் : அது எப்புடின்னே இங்க உக்காந்துட்டே எல்லா விஷயத்தயும் தெரிஞ்சி வச்சிருக்கீங்க...

கவுணட்ர் : தட் ஈஸ் ஆல் இன் ஆல் அழகுராஜா... பில்லா 2 - The டண்டனக்கா DON

தாண்டவம்:

கவுண்டர் : முன்னாடியெல்லாம் படம் எடுக்கறதுக்காக வெளியூர்க்கு போவானுக... இப்பலாம் வெளியூர்க்கு போறதுக்காவே படம் எடுக்க ஆரம்பிச்சிட்டானுக... ஊர் சுத்தி பாக்க ஆசப்பட்ட நாயி தனியா சொந்தகாசுல போவனும்... இளிச்சவாயி புரடியூசர் ஒருத்தன் கெடைச்சிட்டா போதும்... அமெரிக்கால தான்  எடுக்கனும்பானுக... லண்டன்லதான் எடுக்கனும்பானுக... சுச்சர்லாந்துல தான் எடுக்கனும்பானுக... ஏண்டா ஃபாரின்ல தான் எடுக்கனும்னு நாங்க என்னிக்காவது கேட்டுருக்கமாடா... இல்லை நம்ம ஊர்ல படம் எடுக்குறதுக்கு எடமே இல்லையா...

எடுக்குறதயாவது நல்லா எடுக்குறானுகளா பாரு... எப்பவும் தியேட்டர் காரங்களுக்கு நாம காசுகுடுத்து டிக்கெட் எடுப்போம்... ஆனா இந்த படம் முடிஞ்சி வரும் போது தியேட்டர் காரன் படம் பாக்க வந்த ஒவ்வொருத்தருக்கும் ஆஸ்பத்திரி செலவுக்கு நூறு ரூவா குடுத்து அனுப்புறாண்டா... தாண்டவம் - என்னது மகாத்மா காந்தி செத்துட்டாரா?

செந்தில் : அப்புறம் அண்ணேன்.. நா ரொம்ப நேரமா சொல்லுவீங்க சொல்லுவீங்கன்னு எதிர்பாக்குறேன் சொல்ல மாட்டேங்குறீங்களே...

கவுண்டர் : என்னது?

செந்தில்: இந்த மாற்றான் அப்புறம் நீ தானே என் பொன் வசந்தம் இதெல்லாம் லிஸ்ட்டுல வரவே இல்லையே...

கவுண்டர் : இந்த வருசம் நா செஞ்ச ஒரே நல்ல காரியம் இந்த ரெண்டு படத்தையும் பாக்காம விட்டது தான்...எப்பவும் எல்லாருக்கும் முன்னாடி போயி படம் பாத்து அடி வாங்கிட்டு வருவேன். இந்த ரெண்டு படத்துக்கும் எனக்கு முன்னாடி போனவங்க ரத்த களரியோட வெளிய வர்றத பாத்தே இந்த
படங்க எப்புடி இருக்கும்னு நா தெரிஞ்சிகிட்டேன்..

சரி உங்கொக்கா சாப்புட கூப்புடுறா.. நா பொய்ட்டு சாப்டு வர்றேன்... நீ கெளம்பு கடைய சாத்தனும்

செந்தில்
: (சந்தோசமாக) அண்ணேன் நீங்க சாப்டு வாங்கண்ணே நா கடைய பாத்துக்கறேன்...

கவுண்டர்: உன் வேலையெல்லாம் எனக்கு தெரியிங் மகனே... கடையில இப்ப மிச்சம் இருக்கதே நாலு ஸ்பேனரும் ரெண்டு திருப்புளியிங் தான்... அதயும் தூக்கிட்டு போயி வித்துரலாம்னு பாக்குற... அது நடக்காது மகனே... நீ கெளம்பு...

செந்தில் : (பாட்டு பாடிக்கிட்டே வெளிய போறாரு) மக்காயாலா மக்காயாலா காய காவுவா

கவுண்டர் : (ஒரு பெரிய கம்பிய எடுத்து செந்தில் மேல வீசி.... ஹைபிட்ச்ல) ஒக்கா மவனே இதுவே  கடைசியா இருக்கட்டும்.. இன்னொருக்கா இந்த பாட்ட பாடுன  கிரீஸ அள்ளி வாயில அப்பிருவேன்,...  படுவா...


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

Anonymous said...

Very good comedy post. I enjoyed it.

I like your comedy sense in all the posts. Keep it.

By
Murugan G

Unknown said...

பாஸ் உங்க கௌண்டர் ஸ்டைல் காமெடி பதிவு படிச்சு ரொம்ப நாள் ஆகுது. சூப்பர் சூப்பர் செம்மையா இருந்துச்சு

James said...

கௌண்டர் ஸ்டைல் காமெடி சூப்பர்.

என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

Anonymous said...

பட்டையை கிளப்பின காமடி பதிவு!!!!!நன்றி.

ஜெட்லி... said...

super,,,,

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...