குறிப்பு: சமர் திரைப்படத்தை பார்க்க முடிவு செய்திருப்பவர்கள் இந்த பதிவை படிக்க வேண்டாம். ஒரு பெரிய பிஸினஸ்மேன். சொந்தக்காரங்கள்ளாம் இல்லாம தனியா ஒரு பங்களால இருக்காரு. திடீர்னு ஒரு நாள் அவரோட தம்பி பாக்க வர்றாரு. சும்மா வராம அண்ணனுக்கு ஒரு கிஃப்ட் கொண்டு வர்றாரு. அண்ணன்கிட்ட ஒரு voucher ah குடுத்து "அண்ணாத்த!! அண்ணாத்த!! உன் பேர்ல ஒரு கேம் புக் பண்ணிருக்கேன். உனக்கு தொணுச்சின்னா நீ அந்த அட்ரஸுக்கு போய் விளாடு.... நா வெளாண்டேன்... எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.. தயவு செஞ்சி ட்ரை பண்ணி பாரு" ன்னு சொல்லிட்டு போயிடுறாரு.
நம்மாளு கொஞ்ச நாள் கழிச்சி "சரி நம்ம தம்பி சொன்னானே... போய்த்தான் பாப்போமே" அப்புடின்னு அந்த card எடுத்துகிட்டு அந்த அட்ரஸூக்கு போறாரு. போய் பாத்தா அது ஒரு கார்ப்ரேட் கம்பெனி மாதிரி இருக்கு. Card ah குடுத்த உடனே இவருக்கு சில exam lam வச்சி எதோ டெஸ்ட் பண்ணிட்டு
:"உங்க game இன்னும் 24 hrs la ஆரம்பிச்சிடும்... உங்களுக்கு புடிக்கலன்னா நீங்க எப்போ வேணாலும் இதுலருந்து வெலகிக்கலாம்" அப்புடின்னு ரூல்ஸ் லாம் சொல்லி அனுப்பிடுறாரு. நம்மாளு அன்னிக்கு நைட்டு வீட்டுக்கு போகும் போது வீட்டுக்கு வெளிய யாரோ குப்புற விழுந்து கெடக்குற மாதிரி இருக்கு. இறங்கி போய் பாத்த ஒரு விகாரமான மூஞ்சோட ஒரு சோளக்காட்டு பொம்மை மாதிரி ஒண்ணு கெடக்குது. என்ன பண்றதுன்னு தெரியாம
அத வீட்டுக்குள்ள எடுத்துட்டு போயி வச்சிட்டு, டிவிய போடுறாரு. டிவில பாத்தா இவரோட மூஞ்சே வருது. இவரு வீட்ல என்ன என்ன பண்றாரோ அத்தனையும் டிவில வருது.
அப்போ ஆரம்பிக்கிற கன்பீசன் தான். அதுக்கப்புறம் அவரோட வாழ்க்கை மொத்தமும் கன்பீசனாயி, போற எடமெல்லாம் இவருக்கு எதிரிங்க... இவர ஆளுங்க கொலை பண்ண ட்ரை பன்றாங்க... .இவரோட பேங்க் பணத்தை எல்லாம் திருடிட்டு இவர நடுரோட்டுல அலைய விட்டுடுறாய்ங்க.. யார் பண்றாங்க எதுக்கு பண்றாங்கன்னு தெரியாம ஒரு கட்டத்துல மெண்டல் மாதிரி ஆயி இவரு ஒருத்தனை கொலை பண்ணிடுறாரு... போலீஸ்
அரஸ்ட் பண்ண வரும்போது என்ன பன்றதுன்னு தெரியாம ஒரு பெரிய அடுக்குமாடி கட்டடத்துலருந்து குதிச்சிடுறாரு. அப்புடியே கட் பண்ணி ஏன் எதற்கு எப்படின்னு ரீசன் சொன்னா அதான் "The Game " படம்.
என்னடா இவன் தெரியாம டைட்டில மாத்தி வச்சிட்டானா? சமர்னு போட்டுட்டு வேற எதோ ஒரு படத்த பத்தி சொல்லிகிட்டு இருக்கான்னு தானே பாக்குறீங்க. அட ரெண்டும் ஒண்ணுதானப்பா... 1997 ல வந்த அந்த Game படத்து கதைக்கு லைட்டா உப்பு புளி, காரம் மசாலாலாம் சேத்து, ரெண்டு ஹீரொயின கோர்த்துவிட்டா அதான் இந்த சமர்.
முதல் பாதி எதுவும் தெரியாம பாத்தா ஒரளவு சுவாரஸ்யமாவே போனாலும் ரெண்டாவது பாதில எங்கருந்து சுட்டாய்ங்கன்னு தெரிஞ்சதும் படத்து மேல உள்ள மரியாதை சுத்தமா போச்சு. வத்தலோ தொத்தலோ, ஓட்டையோ ஒடசலோ, ஈயமோ பித்தாளையோ, ஈயம் பூசுனதோ பூசாததோ சொந்தமா ஒரு கதைய யோசிச்சி எடுத்தா என்னப்பா... சரி ஆட்டைய போடுறீங்களே.. அதே படத்த அப்புடியே எடுத்துருந்தாலும் நல்லா இருந்துருக்கும். அதுல ஒரு ஹீரோயின சேத்து, ரெண்டு மெண்டல் வில்லன்கள சேத்து நாசமாக்கி வச்சிருக்காய்ங்க.
காதல் காட்சிகள்ல ஜவ்வு மாதிரி இழுவை.. ரொம்ப ஸ்லோ... விஷாலுக்கு இதெல்லாம் வேலைக்கு ஆகாது. முதல் பாதில வர்றா காட்சிகள்ல கண்டெண்ட் நல்லா இருந்தா கூட scenes ah crisp ah எடுக்காம இழுத்ததால எரிச்சல்தான் வருது. படத்தோட பெரிய மைனஸ் ரெண்டு வில்லன்கள்... JD சக்கரவர்த்தியும் இன்னொருத்தரும்... மெண்டல் மாதிரி சிரிச்சிகிட்டே இருக்காய்ங்க...
விஷால் முன்னாடியோட இப்ப கொஞ்சம் பாக்குற மாதிரி இருக்காரு... கொஞ்சம் கலரும் ஆயிட்டாரு போல... கருகம் காசு பணம் வந்தா காக்கா கூட கலராயிரும்னு திருவள்ளுவர் சும்மாவா சொன்னாரு.
பாடல்கள் மட்டுமே யுவன் சங்கர் ராஜா... "சம்ம சம்ம சமரண்" பாட்டும் "அழகோ அழகு" பாட்டும் சூப்பர்... உதித் பாடுன ஒரு பாட்டு சுமார். BGM வேற யாரோ... ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. சுனைனா ரெண்டு மூனு சீன் வந்தாலும் பரவால்ல... திரிசா... திரிசா... இனிமே உங்கள ஹீரோயினா பாக்க முடியல ஆத்தா.. விட்டுருங்க. திரிசா எத மாத்துனாலும் அந்த "பப்பரப்பா" நடைய மட்டும் மாத்தவே மாத்தாது போல....
இப்பல்லாம் நம்மூரு டைரக்டருங்க கதைய யோசிக்கிறதுல்ல போலருக்கு. இங்லீஷ் படங்கள்ல தேடிகிட்டு தான் இருக்காங்க...
ட்ரெயிலர் விஷால் சொல்றத பாத்துருப்பீங்க...
"வாழ்க்கை சில பேருக்கு வரம்"
"சில பேருக்கு சாபம்"
"ஆனா எனக்கு யுத்தம்..."
உனக்கு யுத்தம்... ஆனா நாங்க செத்தோம்... சமர் பாக்காதவங்க நல்ல ப்ரிண்டுக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்பீங்க. அதுக்கு பதிலா The Game (1997) படத்த download பண்ணி பாருங்க. ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி இருக்கும். இல்லை... நீங்க தப்பா புருஞ்சிண்டேள்... நாங்க சமரே தான் பாக்கனும்னு அடம் புடிச்சா, அதுவும் தப்புல்ல... ஆரம்பத்துல நல்லா தான் போகும்... போக போக கொஞ்சம் கஸ்தப் பதுவீங்க....

3 comments:
appo vishal oosi pona masal vadaiya suttutarunnu solla varringa
பாதி படம் பார்க்கும்போதே இதை நான் ஊகித்து விட்டேன். ஆனாலும் படம் கொஞ்சம் சுவாரசியமாகவே இருந்தது (நான் ஆங்கில படத்தை பார்க்காத காரணத்தால்). வில்லன்கள் என்ட்ரி ஆனதும் படம் படுத்து விட்டது.
@பாலா:
ஆமா தல... வில்லன்கள் தான் படத்துக்கு பெரிய மைனஸ்... சிரிச்சி சிரிச்சே படத்த காலி பண்ணிட்டாய்ங்க
Post a Comment