Sunday, January 13, 2013

அலெக்ஸ் பாண்டியன் - Oh... What a Karvaad !!!


Share/Bookmark
"ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா"    "ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா"    "ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞா ங்ஞ ஞா"                                                                                  என்னடா படத்துக்கு review எழுத சொன்னா சம்பந்தமே இல்லாம எதோ போட்டுருக்கானேன்னு பாக்குறீங்க அதானே... அதாங்க  படத்தோட ரிவியூவே.. இந்த படம் பாக்க போனா  படம் முடிஞ்சி வரும் போது காதல் பரத் மாதிரி இப்புடித்தான் பைத்தியம் புடிச்சி "ங்ஞா ங்ஞா ங்ஞா" ன்னு சொல்லிகிட்டு வரனும். நேத்து இந்த படத்தோட சில விமர்சனங்கள பாத்தேன்... எல்லாரும் "காட்டு மொக்கை" " உக்கார முடியல" "மரண கடி" அப்டியெல்லாம் அப்புடி இருந்தும் ஏண்டா நாயே போனன்னு தான கேக்குறீங்க... படம்னு வந்துட்டா நா விஜய் மாதிரி.. ஒரு தடவ முடிவு பண்ணிட்டா எம் பேச்ச நானே கேக்க மாட்டேன்.

அதோட மத்தவங்க நல்லா இல்லைன்னு சொன்ன நிறைய படங்கள் எனக்கு பிடிச்ச மாதிரி இருந்துருக்கு. சுராஜூம் நம்ம பயபுள்ள தான். கண்டிப்பா ஓரளவு பாக்குற மாதிரி படம்  எடுத்துருப்பாப்ளே அப்புடின்னு நெனைச்சி படத்துக்கு போனன். படத்தோட முதல் பாதி பாத்தப்ப எனக்கு,  நா படிச்ச ரிவியூ எழுதுனவிங்க மேல எல்லாம் செம்ம கோவம்... ஏன்பா இந்த படத்துக்கு என்னப்பா கொறை... நல்லாத்தானே போவுது.. சந்தானம் இருக்காப்புல நல்லா காமெடியும் பண்ணிருக்காப்ளே.. அப்புறம் ஏன் இவிங்க இப்புடி எழுதிருக்காய்ங்கன்னு நெனச்சேன் . வச்சாய்ங்கடா செகண்ட் ஆஃப் ல ட்விஸ்டு. சுறா, புதிய கீதை, பொறி , முகமூடி  போன்ற பல படங்கள ஒண்ணா பாத்த ஒரு எஃபெக்டு.


என்னட்ட இவ்வளவு பெரிய ஓட்டைன்னு தானே பாக்குறீங்க... அது வேற ஒண்ணும் இல்லை அதான் படத்துல உள்ள லாஜிக் ஓட்டை. இந்த மசாலா படங்கள்னா லாஜிக்ல சின்ன சின்ன இண்டு இடுக்கு ஓட்டை ஒடசல் இதெல்லாம் இருக்கது தான். ஆனா இங்க ஒண்ணு இருக்கு பாருங்க. இத கேட்டா ரெண்டு வயசு புள்ளை கூட கெக்க புக்கன்னு சிரிக்க ஆரம்பிச்சிரும். வெளிநாட்டுல தடை செய்யப்பட்ட மருந்த தமிழ்நாட்டு விக்கிறதுக்கு முதலமைச்சர் கிட்ட பர்மிஷன் கேக்குறானுக. அவரு தரமாட்டேன்னு சொல்றாரு. உடனே சி.எம்மோட மகள கடத்தி வச்சிகிட்டு அந்த அக்ரிமெண்ட்ல கையெழுத்து போட சொல்றாய்ங்க.

அதுவும் மெரட்டுரவிங்க ஒரு ஃபேமஸான சாமியாரு, டாக்டரு, அப்புறம் ஒரு பிஸினஸ் மேன். ஏண்டா மங்கினிகளா ஒரு தடவ மெரட்டி கையெழுத்து வாங்கிட்டா அத திரும்ப மாத்த முடியாதா... நார பயலுகளா... அதுவும் தமிழ்நாட்டுலயே பிஸினஸ்  பண்ணுவாய்ங்களாம். எதோ சி.எம் பொண்ண கடத்தி லம்பா ஒரு அமொண்ட்ட கரெக்ட் ஹாங்காங் போயிருவோம், பேங்காக் போயிருவோம்னு சொன்னா கூட எதோ ஒத்துக்கலாம்.

"ச்சீ நாயிங்களா... ஒரு ஆம்பளய இத்தனை பேரு அடிக்கிறீங்களே... உங்களுக்கு தைரியம் இருந்தா ஒத்தைக்கு ஒத்த மோதி பாருங்கடா" இதுதான் 1925லருந்து எல்லா மசாலா படங்கள்லயும் ஹீரோவ கட்டி போட்டு அடிக்கும் போது ஹீரோயின் சொல்ற டயலாக் இது
. இதக்கூட மாத்தலயேப்பா... அதுவும் அந்த டயலாக்க அனுஷ்கா சொல்றது மனச ரொம்ப கஷ்டப் படுத்திருச்சி. இந்த டயலாக்க சொல்லாம, அனுஷ்காவே கட்ட அவுத்துகிட்டு வந்து  வில்லன்கள அடிச்சி தொம்சம் பண்ணி கார்த்திய காப்பாத்துர மாதிரி காட்சி அமைச்சிருந்தா
கூட நம்மூர்ல ஏகப்பட்ட வரவேற்பு இருந்துருக்கும்.

கார்த்தி கடத்துற சி.எம் பொண்ணுதான் அனுஷ்கா... டேய் அனுஷ்காவுக்குன்னு ஒரு  மதிப்பு இருக்குடா... அது நெனைச்சா ஹீரோவே இல்லாம படம் நடிச்சி நூறு நாள் ஓட்டுற அளவுக்கு அதுக்கு கெப்பாகுட்டி இருக்குடா... அத கொண்டு வந்து நம்மூரு சைடு ஆக்டர்ஸுங்க மாதிரி டம்மி ஆக்கி வச்சிருக்கீங்களே... இதெல்லாம் உங்களுக்கு அடுக்குமா..இருங்கடா
உங்களயெல்லாம் அனுஷ்கா அவமதிப்பு வழக்குல உள்ள தள்ளுனாதான் சரிப்பட்டு வருவீங்க. சிவாஜி விவேக் ஸ்டைல்ல சொல்லனும்னா "நீ திரும்ப ஆந்த்ராவுக்கே போயிரு அனுஷ்கா.."  உணமையா சொன்னா தமிழ் சினிமால அனுஷ்காவுக்கு ஏத்த ஜோடி யாரும் இல்லைப்பா... நாகார்ஜூன் கூட நடிச்ச மட்டும் தான் அனுஷ்கா ஹீரோயின் மாதிரி இருக்கும். நம்மூர் ஆளுங்க பக்கத்துல அனுஷ்காதான் ஹீரோ மாதிரி இருக்கு. அனுஷ்காவ கார்த்தி கடத்தி காட்டுல வச்சிருக்கும் போது எதோ கடத்திட்டு வந்துட்டாங்குற மாதிரியே இல்லாம அனுஷ்கா ஹாய்யா இருக்கு. காமெடி பண்ணுது. இதுல எரிஞ்சி போன கம்பி  மத்தாப்பு மாதிரி இருக்க நம்ம மனோபாலா வேற...

ஆக்சன் படம்னா ஃபைட்டு இருக்க வேண்டியது தான். அதுக்குன்னு ஓப்பனிங்களயே பத்து நிமிஷ ஃபைட்டா... ஹீரோ வேற ஊர்ல போய் பதுங்கியிருக்காரு. அவன வில்லன் குரூப்பு தேடுது. இண்டர்வல்ல அத்தனை குரூப்பும் ஒண்ணூ சேருது.. சரி நம்மாளுக்கு ஒரு  வெயிட்டான ஃப்ளாஷ்பேக் இருக்கும்னு பாத்தா... த்தூ.. சல்பீ...

படத்துல உருப்படியான ஒரே விஷயம் சந்தானம் தான். அதுவும் பல இடத்துல வெறும்  டபுள் மீனிங் டயலாக். இந்த கேரம்போர்ட வச்சிகிட்டு இன்னும் எத்தனை நாள் அதே டபுள் மீனிங் காமெடிய பண்ணிகிட்டு இருக்கப்போறாய்ங்கன்னு தெரியல. அதுவும் சந்தானத்தோட தங்கச்சி கேரக்டர்களா வர்றதுங்க பண்ற அனியாயம் இருக்குதே... ஏண்டா இது என்ன
குடும்பமா இல்ல எதாவது பலான லாட்ஜாடா.... கருமம். என்னங்க சார் சுராஜ்... இதுவரைக்கும் நல்லா தானே  போய்கிட்டு இருந்துச்சி... ஏன் இப்புடி தரை டிக்கெட் ரேஞ்சுக்கு எறங்கிட்டீங்க. இதுல உங்களையெல்லாம் நா ஃபேவரைட் டைரக்டரா வேற வச்சிருக்கேன்.. வெளங்கிரும்.

சரிக்கமப் பதநிஸ்ஸே... கபக் கபக் கப கபக் கபக் கப ஜல்ஸே....  நம்மாளு டி.எஸ்.பீ தான் மீஸிக். ஹாரிஸ் ஜெயராஜாவது அதே அஞ்சி ட்யூன எல்லா படத்துலயும் போடுறவரு. ஆனா நம்ம DSP இருக்காரே ஒரே ட்யூன ஒரே படத்துல அஞ்சி விதமா போடுறவரு.  அவ்வளவு டேலண்டுன்ணா பாத்துக்கோங்களேன். ஆனா பாட்டால படம் கப்பியாயிருச்சின்னு சொல்ல முடியாது. ஓக்கே தான். அதவிட கொடுமை "நாலு பக்கம் காடிருக்கு" ன்னு ஒரு
பாட்ட அவரோட வெங்கல கொரல்லயே பாடிருக்காரு. வக்காளி வாய்க்குள்ள கம்பிய எடுத்து குத்திரலாம் போல இருந்துச்சி. அதோட picturization அத விட ப்ரமாதம்.

நம்ம விஜய காந்த், அர்ஜூன் எல்லாம் ஒவ்வொரு படத்துலயும் இந்தியாவ
காப்பாத்துற மாதிரி கதையிலயே நடிக்கிற மாதிரி நம்ம கார்த்தியும் ஓவ்வொரு படத்துலயும் பொண்ணுங்கள காப்பாத்துற மாதிரி கதையில தான் நடிக்கனும்னு எதாவது உறுதி எதும் எடுத்துருக்காரு போலருக்கு. அப்புடி எதும் எடுத்துருந்தா தயவு செஞ்சி அத முடிச்சிக்க. ரீலு அந்து போச்சி. விஜய்யே இந்த மாதிரி மசாலாவெல்லாம் விட்டுட்டு வெளிய வந்துட்டாப்ளே.. நீங்க இப்பதான் அங்கயே வர்றீங்க. மிட்டலடி விழுறதுக்குள்ள எஸ்கேப் ஆயிருங்க.

நமக்கு தான் டான்ஸ் சரியா வரலியே அப்புறம் ஏன் படத்துல குத்துப்பாட்டெல்லாம்... அனுஷ்காவோட உங்களால ஆட முடியுமா? மொதல்ல நம்ம ஊர்ல உள்ள  நாலு சின்ன புள்ளைகள கூப்டு ஆட  பழகுங்க. அப்புறமா அனுஷ்காவோட ஆடலாம். நமக்கு என்ன வருமோ நம்ம பாடி எவ்வளவு தாங்குமோ அவ்வளவுதான் பண்ணனும்.


நீங்களும் ஒரு வேள படத்துக்கு பொய்ட்டா இண்டர்வல்ல என் மேல கோவம் வரும்.  என்னடா இவன் இந்த படத்த போய் நல்லா இல்லைன்னு சொல்லிட்டானேன்னு. ஆனா படம் முடிஞ்சப்புறம் (முடியிற வரைக்கும் தியேட்டர் உள்ள இருந்தா) கண்டிப்பா 'ச்ச கரெக்கிட்டா சொல்லிருக்காம்பா" ன்னு கண்டிப்பா ஃபீல் பண்ணுவீங்க. சில படங்கள்ல காமெடி நல்லாருந்துச்சின்னா படத்துல வர்ற சில மொக்கை சீன்கள அது மறைச்சிடும்.
ஆனா இந்த படத்தோட 2nd half ல வர்றா மொக்கை சீன்ஸ் 1st half la வர்ற சில நல்ல காமெடிங்களோட எஃபெக்டயே மறைச்சிடுது.

அந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்தப்பக்கம் ஒரசுனாலும் தீ பிடிக்கும்... இந்த அலெக்ஸ் பாண்டியன எந்தப்பக்கம்  ஒரசுனாலும் உங்களுக்கு வெறி தான் புடிக்கும். படம் முடிஞ்சப்புறம் வந்து "எல்லோருக்கும் வணக்கம் எல்லோருக்கும் வணக்கம்,... என்ன பாக்க வந்த எல்லோருக்கும் முதல் வணக்கம்" ன்னு கார்த்தி சிரிக்க, எதிரும் புதிரும்ல கவுண்டமணி மெண்டல் மதன்பாப் கிட்ட சொல்ற மாதிரி "டேய் மெண்டல்... இந்த சிரிப்ப நீ அப்பவே சிரிச்சிருந்தா நாங்க ஓடிப்போயிருப்போமேடா" ன்னு நெனைச்சிட்டு வயித்தெரிச்சலோட வெளிய வந்தேன்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

ராம்குமார் - அமுதன் said...

"டேய் மெண்டல்... இந்த சிரிப்ப நீ அப்பவே சிரிச்சிருந்தா நாங்க ஓடிப்போயிருப்போமேடா" - ஹா ஹா ஹா... விழுந்து புரண்டு சிரிப்பு... :))) ஆனாலும் இந்த இலக்கியப் படைப்ப நீங்க இந்தளவுக்கு காச்சு ஊத்திருக்கக் கூடாது... எனது விமர்சனம் இங்கே... www.nellainanban.com/2013/01/blog-post_13.html

rajamelaiyur said...

சொந்த செலவுல சூனியம் வச்சுகிறது என்பது இது தான் . நாங்கெல்லாம் விமர்சனம் பார்த்தே எஸ் ஆகிட்டோம் ..

மாயன் said...

ROTFL

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...