Wednesday, April 10, 2013

BAADSHAH (2013) - தாறு மாறு!!!


Share/Bookmark
நம்மூர்ல இப்பல்லாம் ஒவ்வொரு படத்தையும் பட்ஜெட்ட வச்சே விளம்பரம் பண்ணுறாங்க.. ஒரு நாப்பது கோடிய தாண்டிட்டாலே பெரிய பட்ஜெட் படம் அந்த படம் இந்த படம்னு ஏத்தி விட்டு நம்மள தியேட்டருக்கு இழுத்து போயிடுறாங்க.. அங்க போயி எங்கடா கோடி கோடின்னாய்ங்க ஒண்ணயுமே காணுமேன்னு இவிங்க பட்ஜெட்டுன்னு சொன்ன கோடிகள படத்துல நாமன் பூதக்கண்ணாடி வச்சி தேட வேண்டியிருக்கு. படம் எடுக்க செலவு பண்றத விட விளம்பரம் பண்ணி நம்மள தியேட்டருக்கு இழுக்குறதுலதான் இங்க பல கோடி வீணா போயிட்டு இருக்கு. உதாரணமா ரெண்டு மாசத்துக்கு முன்னால வந்த அலெக்ஸ் பாண்டியன்... அசோக் பில்லர், வடபழனி பக்கமெல்லாம் போகவே முடியல... "அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம் ஒரசுனாலும்  தீ புடிக்கும்" ன்னு ஒவ்வொரு லேம்ப் போஸ்டுலயும் விளம்பரம்... எந்த முக்குல திரும்புனாலும் கார்த்தி வெறியோட நிக்க, அதெயெல்லாம் பாத்த நமக்கு போய் படத்த பாக்கனும்னு தான் தோணுச்சி... பாத்தப்புறம் தான தெரிஞ்சிது யாருக்கு தீ புடிச்சிதுன்னு...

இதுவரைக்குமே நம்மூர்ல ஸ்டைலிஷான படம், க்ளாஸான படம், ரிச்சான படம்னா உடனே  பில்லா1 ன்னு தான் பல பேரு சொல்லுவோம். இன்னும் சில ஷங்கர் படங்கள சொல்லலாம். இந்த பாட்ஷா படம் எப்புடி இருக்குங்குறதல்லாம் விட்டுட்டு, முதல்ல தயவு செஞ்சி இந்த படத்த ஒரு தடவ தியேட்டர்ல பாருங்க. Picture clarity ன்னா என்ன, ஸ்டைலிஷ் படம்ன்னா என்னங்குறது புரியும்... நம்மூர்காரங்க பட்ஜெட் பட்ஜெட்ன்னு சொல்லி நம்மளயெல்லாம் எப்புடி ஏமாத்திட்டு இருக்காய்ங்கன்னும் தெரியும்... இவ்வளவு க்ளாரிட்டியாவும், ரிச்சாவும், கலர்ஃபுல்லாவும்  இருக்க படம் நா இதுவரைக்கும் பாத்ததில்லை...

ஒரு ஆறேழு வருஷமாவே தெலுகுல ஆக்சன் படம்னா ஒரே ஒரு கதை தான் வச்சிருக்காய்ங்க. ஒரு நாலஞ்சி லோக்கல் ரவுடிங்க இருப்பாங்க. (ஷாயாஜி ஷிண்டே, கோட்டா சீனிவாசராவ் போன்றோர்)  அவங்க கூட ஹீரோ மொதல்ல சீரியஸா மோதிட்டு இண்டர்வல் வரும்போது இந்த நாலஞ்சி வில்லனுங்களையும்  காமெடியனுங்களாக்கி டம்மி ஆக்கி விட்டுருவாறு. இவங்களுக்கெல்லாம் பெரிய டான்...டானுக்கெல்லாம் டான் டண்டனக்கா டான் மலேஷியாலயோ, பேங்காக்லயோ, ஹாங்காங்லயோ இருப்பாரு. அவரு பேரு பாய்ன்னு தான் முடியும்... உதாரணமா அலி பாய், கிட்டு பாய் பெரும்பாலும் அந்த கேரக்டர்ல நடிக்கிறது நம்ம ப்ரகாஷ்ராஜ் தான். முதல் பாதில தலைமறைவா இருந்த அந்த பெரிய டான் இரண்டாவது பாதில வந்து ஹீரோவோட டைரக்டா மோதி கடைசில செத்துருவாரு. இதுல ஹீரோ ஏன் அந்த பெத்த டான கொல்றாருங்கறதுக்க்கு இடையில சில ஃப்ளாஷ்பேக்குகளும் வரும். வேற ஒண்ணும் இல்லை இது நம்ம போக்கிரி கதை தான்.

மொதல்ல இந்த கதையில மகேஷ் பாபு நடிச்சி, ரவி தேஜா ஒரு ரெண்டு மூணு தடவ நடிச்சி ரீலு தேயப்போற நேரத்துல திரும்ப ஜூனியர் என்.டி.ஆர் நடிச்சிருக்காரு. அதெப்புடி  கொஞ்சம் கூட கூச்சப்படாம ஒரே கதைய திரும்பத் திரும்ப எடுக்குறாங்கன்னு தெரில. ஆனா கொஞ்சம் கூட சலிக்க வக்காத அளவுக்கு காமெடி ஆக்சன் கலந்து மசாலாவா குடுத்துருக்காரு டைரக்டர் சீனு வைட்லா.

இவர பத்தி பாக்கப்போனா, இவரோட படங்கள்ல முதல் பத்து நிமிஷம் எதோ கதை ஆரம்பிக்கிற மாதிரி இருக்கும். அதுக்கப்புறம் க்ளைமாக்ஸ் வரைக்கும் சம்பந்தமே இல்லாம வெறும் காமெடி சீனா வரும் . அப்புறம் கடைசி பத்து நிமிஷத்துல இடையில சம்பந்தம் இல்லாம நடந்த எல்லா சம்பங்களையும் ரொம்ப கஷ்டப்பட்டு எதாவது ஒரு லிங்க கொண்டு வந்து படத்த முடிப்பாரு. இவரோட கிங், நமோ வெங்கடேசா, தூக்குடு அத்தனையும் இதே ரகமான படங்களே.. அத்தனையும் சூப்பர் ஹிட். ஆனா ஒரு கண்டிசன்.. முக்காவாசி படத்த ஃபாரின்ல மட்டும் தான் எடுப்பாரு.  கதைக்கும் ஃபாரினுக்கும் சம்பந்தம் இல்லன்னாலும் எப்படியாச்சும் சம்மந்த படுத்தி கொண்டுபோயிருவாரு. தூக்குடுல சும்மா உள்ளூர்ல சுத்திட்டு இருப்பாய்ங்க... டக்குன்னு மகேஷ்பாபு"ஆப்ரேசன் இஸ்தான்பூல்"ன்னு  சொல்லுவாரு. உடனே கெளம்பிருவாய்ங்க துருக்கிக்கு. அதே மாதிரி இதுலயும் முக்கால்வாசிப்படம்
இத்தாலில தான்.

இதுலயும் சாதுபாய்ங்கற டானுக்கெல்லாம் டான பாட்ஷாங்கற புது டான் எப்படி போட்டுத்தள்ளுறாருங்கறது தான் கதை. முதல் பாதி முழுக்க காஜல் அகர்வாலோட காமெடி, காதல்ன்னு போயி பாட்ஷாவோட ஃப்ளாஷ்பேக்கோட முடியுது. இரண்டாவது பாதில பாட்ஷா ஹைதராபாத்துக்கு திரும்ப வந்து, சாதுபாயோட அள்ளக்கையான நவ்தீப்க்கு காஜல் அகர்வாலுக்கும் நடக்க இருந்த கல்யாணத்த ட்ராமா பண்ணி தடுத்து நிறுத்தி, சாதுபாயயும் போலீஸ்ல புடிச்சி தர்றாரு.

முதல்பாதில காஜலுடன் சேந்து NTR சூப்பரா காமெடி பண்ணிட்டு இருந்தாலும், எப்புடா இவ்வளவு செமயா picturize பண்ணிருக்காய்ங்கங்குற பிரமிப்புலயே படம் ஓடிருது. ரிவெஞ்ச் நாகேஷ்வரராவ் கேரக்டரும் சரி, க்ரேஸி ராபர்ட்ங்குற ஆசிஷ் வித்யார்த்தி கேரக்டரும் சரி தாறு மாறு. படத்தோட ரெண்டாவது பாதிக்கு முழுக்க காமெடிய குத்தகைக்கு எடுத்துருக்கது தல ப்ரம்மானந்தம்... ரொம்ப நாளுக்கப்புறம் செம காமெடி இந்த படத்துல. இன்செப்ஷன் ஸ்டைல்ல கனவுலகத்துல இருக்கது போலான செட்டப்பு செம. இந்த கேரக்டர தூக்குடுல வர்ற ப்ரம்மானந்தம் கேரக்டரையும் அதுர்ஸ்ல வர்ற அவரோட கேரக்டரையும் கலந்துவிட்டு அடிச்ச ஒரு ஃபீல குடுத்தாலும் விழுந்து விழுந்து சிரிக்க வச்சிருக்காரு. சுகாசினி, சித்தார்த், ஷாயாஜி ஷிண்டே, நாசர்னு பல முன்னணி நட்சத்ரங்கள் இருக்காங்க... ப்ரகாஷ்ராஜ் தான் மிஸ்ஸிங்.படத்துக்கு பெரிய ப்ளஸ் cinematography. அதுக்கடுத்து நம்ம தமனோட மியூசிக். நம்மாளு நாளுக்கு நாள் improve ஆயிகிட்டே வர்றாரு. சிம்பு பாடுன "டைமன் கேர்ள்:" பாட்டு மட்டுமே சுமார் ரகம். மத்த 5 பாட்டும் செம. குறிப்பா BGM தாறுமாறு. வில்லனுக்கு வர்ற மியூசிக்கும் சரி தல NTR க்கு வர்ற மியூசிக்கும் சரி... கொடூரம்.

ஜூனியர் NTR... எப்புடி இருந்தவரு இப்ப சிம்பு மாதிரி ஆயிட்டாரு... யப்பா... செம ஸ்லிம் & ஸ்டைல்.... காஸ்ட்யூம்ஸ்லாம் சூப்பர். டான்ஸ்லலாம் இவர அடிச்சிக்க ஆளே இல்லை... ஒவ்வொரு பாட்டுலயும் தெரிக்க விட்டுருக்காரு. குறிப்ப "வெல்கம் வெல்கம்" பாட்டுல. என்ன ஒண்ணு சுத்தி சுத்தி க்ளைமாக்ஸ்ல போலீஸ் கெட் அப்புல வந்து வில்லன தொம்சம் பண்ணிட்டு ஆப்ரேசன் "பாட்ஷா" ஓவர்ன்னு சொல்லும் போது ஏம்பா போக்கிரிலருந்து இந்த சீன கூட மாத்த மாட்டீங்களாப்பான்னு தோணுது. மொத்ததுல NTR, சீனு வைட்லா, ப்ரம்மானந்தம் கூட்டணீயில ஒரு செம மாஸ் மசாலா.  முடிஞ்ச வரைக்கும் மிஸ் பண்ணாம பாருங்க.குறிப்பு:
இன்னிக்கு காலையில ஒரு நியூஸ் கேள்விப்பட்டேன்... நம்ம டாக்டர் விஜய் இந்த படத்த தமிழ்ல ரீமேக் பண்ணப்போறதா இருக்காராமா... நமக்கு கூடிய சீக்கிரம் ஒரு செம ஆக்சன் ப்ளாக் மாட்டப்போகுது... லொள்ளு சபா டீம்... Get ready folks.... 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comment:

Unknown said...

ஆமா பாஸ் இளைய தளபதி பண்ண போறதா நியூஸ் வந்துச்சு அது வதந்தியாம் நம்ம தளபதி இன்னும் பார்க்கவே இல்ல?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...