Thursday, August 1, 2013

பட்டத்து யானை – ஒரு கும்கி யானைய கூப்டு இத வெரட்டுங்கப்பா!!!


Share/Bookmark

தொடர்ந்து மூணு ஹிட்டுகள குடுத்து அடுத்து ஒரு மெகா ஃப்ளாப்ப குடுத்து ரெண்டு மூணு வருஷமா காணாம போயிருந்த நம்ம பூபதி பாண்டியன் திரும்பவும் லெமூரியா கண்டத்தோட வழக்கொழிஞ்சி போன ஒரு அருமையான கதையோட  வந்துருக்காரு. பூபதி பாண்டியன் எடுத்த மலைக்கோட்டை விஷாலுக்கு ஒரு நல்ல ஹிட்டு. ஆனா அதுக்காக ரெண்டு பேரும் திரும்ப ஒண்ணா சேந்தா திரும்ப அதே படத்தையாப்பா எடுப்பீங்க.

சந்தானம் காரைக்குடியில ஒரு ரவுடிகிட்ட வம்பிழுத்து மாட்டிக்கிறதால காரைக்குடிய காலி பண்ணிட்டு திருச்சில ஹோட்டல் வச்சி பொழைக்க விஷால், ஜெகன் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட குழுவோட திருச்சிக்கு வர்றாரு. திருச்சில வந்தப்புறம் அங்குள்ள சில பயங்கர ரவுடிகளால (மார்க்கெட்டில் ஓட விட்டு கொலை செய்யும் வழக்கமான ரவுடிங்க) இவங்க 5 பேரும் சிக்கி சின்னாபின்னமாயி தப்பிக்கிறது தான் கதை.

மலைக்கோட்டையில பெரிய காமெடியன் யாரும் இல்லைன்னாலும் ஆஷிஷ் வித்யார்த்தி, மயில்சாமி, ஆர்த்தின்னு இவங்கள வச்சே படம் நல்லா கலகலப்பா போவும். ஆனா இங்க முதல் பாதி முழுக்க சந்தானத்தை மட்டும் நம்பி காமெடியில எறங்கிருகாய்ங்க. சில வசனங்களை தவற பல இடங்கள்ல சிரிப்புக்கு பதிலா கடுப்பே வருது. முதல் பாதி முழுசும் சந்தான்ம் பேச நாம கேக்க, நாம கேக்க சந்தானம் பேச.. same blood.

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில அடி விழுகலாம். ஆனா நம்ம விஷாலுக்கு அடியே வாழ்க்கையா ஆயிருச்சி.  தொடர்ந்து ஃப்ளாப்பா குடுத்துக்கிட்டு இருக்காரு. அதுவும் இந்த படத்து முதல் பாதில 5 பேர்ல கும்பல்ல நிக்கிற சைடு ஆர்டிஸ்ட் மாதிரியே ஆயிட்டாரு. மத்தவங்களுக்கு கூட வசனம் அதிகமா இருக்கு. இவருக்கு சுத்தமா இல்லை. “நானும் மதுரைக்காரன் தாண்டா” ஸ்டைல்ல வழக்கமான இண்டர்வல் ட்விஸ்ட் வச்சி திரும்ப ஃப்ளாஷ்பேக்ல செண்டிமெண்டுன்னு போட்டு அரைச்ச மாவையே அம்பதாவது தடவை அரவை.

படத்துல சந்தானம் ஒனிடா தலையன பாத்து “காடைய வளத்து யார்ரா கல்லாவுல உக்கார வச்சது?”ன்னு கேப்பாரு. ஹீரோயின் ஐஸ்வர்யாவ பாக்கும் போது எனக்கும் அதே மாதிரி ஒரு டயாலக் தான் தோணிச்சி. “பல்லிய வளத்து யார்ரா பாவாடை சட்டை போட்டுவிட்டது?”ன்னு. காத்தடிச்சா பறந்துரும் கொஞ்சம் வேகமா தள்ளுனா ஒடைஞ்சிரும். அந்த அளவு ஸ்ராங் பாடி. மூஞ்சையும் பாக்க முடியல. இதோட நிறுத்திகிட்டு அப்பா சொல்ற மாப்ளைய கல்யாணம் பண்ணிகிட்டு செட்டில் ஆயிறு ஆத்தா.


படத்துல வர்ற 5 பாட்டுமே சூப்பர். பாட்டுக்கு மீசிக்கு தமனாம்ப்பா.. ஆனா மலைக்கோட்டை மணிசர்மா ட்யூன அப்புடியே திரும்ப லிரிக்ஸ மாத்தி ரெக்கார்ட் பண்ண மாதிரி இருக்கு. BGM சபேஷ் முரளி. அவ்வளவு சிறப்பா இல்லை.

விஷால்னா ஃபைட்டு இல்லாமயா. ஒரு மூணு ஃபைட்டு இருக்கு. மூணுமே செம. வழக்கம் போல விஷால் பட க்ளைமாக்ஸ் எடுக்குற அந்த பொட்டல் காட்டுல தான் இந்த பட க்ளைமாக்ஸும்.வில்லனுங்க எல்லாம் செம மொக்கை. தடையற தாக்க பட வில்லன் ஒரு ரவுடி ரோல் பண்ணிருக்காரு. அந்தாளவது கொஞ்சம் கெத்தா இருப்பாரு. அவர பாதிலயே போட்டு தள்ளிடுராய்ங்க. இன்னொரு வில்லன் என்னன்னா எந்நேரமும் பைல்ஸ் வந்தவன் மாதிரியே மூஞ்ச வச்சிட்டு திரிஞ்சிகிட்டு இருக்கான்.

மயில்சாமிங்குற ஒரு சூப்பரான காமெடியன ஒழுங்கா யூஸ் பண்ற சில பேர்ல பூபதி பாண்டியனும் ஒருத்தர். மலைக்கோட்டையில இடிமுட்டியா ரெண்டே சீன் வந்தாலும் தெறிக்க விடுவாரு. அதே மாதிரி இந்த படத்துலயும் அவர் வர்ற ரெண்டு மூணு சீனும், இண்டர்வலுக்கு அப்புறம் ரவுடிங்க பண்ற ரெண்டு மூணு காமெடியும் மட்டுமே நல்லாருக்கு. ஜெகனையெல்லாம் சுத்தமா யூஸ் பண்ணவே இல்ல. 

பூபதி பாண்டியன் இந்த தடவ காட்டு மொக்கைய போட்டுட்டாரு… மசாலா படம் தான் பண்ணும்னா அந்த ஒரே ஒரு  கதை மட்டும் தான் இருக்கா சார். அடுத்த தடவையாது எதாது கொஞ்சம் வித்யாசமா முயற்சி பண்ணுங்க. நம்ம ஊர் காரரா வேற பொய்ட்டீங்க… அவ்வ்வ்வ்.

மொத்ததுல படம்…. ரம் பம் பம்… ஆஆஆஆ ரம்பம். 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

Prem S said...

. //“பல்லிய வளத்து யார்ரா பாவாடை சட்டை போட்டுவிட்டது?”ன்னு. .//

//செம என்ன ஒரு சிந்தனை

Unknown said...

வொய் பிளட் சேம் பிளட்

வெங்கட் நாகராஜ் said...

///“பல்லிய வளத்து யார்ரா பாவாடை சட்டை போட்டுவிட்டது?//

அட இது கூட நல்லா இருக்கே... :)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...