Thursday, October 3, 2013

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா- குமுதா ஹேப்பி!!!


Share/Bookmark

வித்யாசமான கேரக்டர்களால குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிட்ட விஜய் சேதுபதியின் மற்றொரு அவதாரம். வழக்கமா பெரிய ஹீரோக்களோட படங்களுக்கு மட்டுமே புக்கிங் 4, 5 நாளுக்கு ஃபுல் ஆகும். ஆனா இந்த படத்துக்கும் தொடர்ந்து நாலு நாளுக்கு எல்லா ஷோவும் ஃபுல் ஆகுதுன்னா அதுக்கு மொத்த காரணமும் விஜய் சேதுபதியும் அவரோட வித்யாசமான முந்தைய படங்களுமே காரணம். மாஸ் ஹீரோக்களை போல இவரோட இண்ரோவுக்கும் சரி, பேசுற ஒவ்வொரு டயலாக்கும் சரி... தியேட்டரே விசில்ல தெறிக்குது.. நீ நடிகண்டா... ஜெயிச்சிட்டடா...

டைரக்டர் கோகுல் மொதல்ல ரவுத்திரம்னு ஒரு சீரியஸான படம் எடுத்தாரு. ஆனா மக்கள் யாருமே அத அவ்வளவு சீரியஸா எடுத்துக்கல. அதான் உடனே டக்குன்னு காமெடில குதிச்சிட்டாரு. சென்னை 28 படத்துல படவா கோபி பேசுற ஒரு டயலாக்.. "ஐஸ்வர்யா ராய் வந்து நம்ம சுமார் மூஞ்சி குமார பாத்து லவ் யூ சொல்றது எப்படி கஷ்டமோ அதே போல இந்த ஸ்கோர அடிக்கிறதும் கஷ்டம்". இதுலருந்து சுமார் மூஞ்சி குமாருங்கற பேர ஆட்டைய போட்டு, கலகலப்புல வர்ற சுகர் மாத்திரை காமெடிய லைட்டா உருவி அதயும் சேத்துகிட்டு, " குவாட்டர் கட்டிங்" பட காட்சிகளை தேவையன அளவு உள்ள தூக்கி போட்டு தயாரிக்கப்பட்டது தான் இந்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பால குமாரா.

படத்துல எந்த கேரக்டருமே ரொம்ப சீரியஸா இருக்கது. அதனால படம் பாக்குற நாமலும் சீரியஸாவோ இல்லை லாஜிக் பாத்துகிட்டோ இருக்க தேவையில்லை. ஜாலியா பொய்ட்டு கொஞ்ச நேரம் டைம் பாஸ் பண்ணிட்டு வந்துட்டே இருக்கலாம். விஜய் சேதுபது ஃபுல் ஃபார்ம்... சென்னை தமிழ்ல பட்டைய கெளப்பிருக்கரு. குமுதாங்கற எதிர்வீட்டு பொண்ணை 8வது லருந்து லவ் பண்றன்னு சொல்லி அவர் அடிக்கிற லூட்டிங்கலும் சரி, பண்ற இமசையெல்லாத்தையும் பண்ணிட்டு கடைசில "ஆனா குமுதா ஹேப்பி" ன்னு சந்தோஷப்பட்டுக்குறதும் சரி... செம லந்து.

பஞ்சாயத்து பண்ற அண்ணாச்சியா லோ சுகர் பேஷண்ட் பசுபதி... அவரோட அள்ளக்கையா ரோபோ ஷங்கர். செம ஜாலி கேரக்டர் ரெண்டு பேருக்கும். ரோபோ ஷங்கர கேரக்டர் அப்டியே வின்னர் படத்துல வடிவேலுக்கு அள்ளக்கையா ஒருத்தர் வந்து "தம்பி.. போ போ... தல டென்ஞனா இருக்கு" ன்னு சொல்றவர ஞாபகப்படுத்துது.

அதுமட்டும் இல்லாம பட்டி பாபு, பெயிண்டர் ராஜேந்திரன்னு இன்னும் ரெண்டு செம தமாஸு கேரக்டருங்க. பெயிண்டர் ராஜேந்திரனா நம்ம ஒனிடா தலையன். அவரு லவ் மூடுல தெருவுல நின்னு  விண்ணைத்தாண்டி வருவாயா "ஆரோமலே" பாட்டு பாடுறதும் அத கேட்டு தெருநாயெல்லாம் வெறிச்சி ஓடுறதும் செம லந்து.

ஒரே தெருவுல ரெண்டு குமாரு இருக்காங்க. ஒருத்தர் பேரு சுமார் மூஞ்சி குமாரு (SMK), இன்னொருத்தர் பேரு ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு.. (RSMK). செகண்ட் ஹாஃப்ல ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு விஜய் சேதுபதிக்காக "லவ் மேட்டரு.. தல ஃபீல் ஆயிட்டாப்ளே... ஒரு ஹாஃப் இருந்தா கூல் ஆயிருவாப்ளே" ன்னு  ஒருத்தன்கிட்ட சொல்லி சரக்கு கேக்குறதும், அவன் அந்த ஸ்லாங்ல இம்ப்ரஸ் ஆயி அதே டயலாக்க திரும்ப திரும்ப பேச சொல்லி கேக்குறதும் சூப்பர்.

அட்டக்கத்தி ஹீரோயின் தான் குமுதா...  செம சூப்பரா இருக்கு.. எல்லாத்துக்கும் மேல செம ரவுசு விஜய் சேதுபதி மொபைல்ல "குமுதாஆஆஆ,.... குமுதாஆஆஆ" ன்னு ஒரு ரிங்டோன் வச்சிருப்பாரு பாருங்க... இன்னும் என் காதுல அது கேட்டுக்கிட்டே இருக்கு.

என்னடா எல்லாத்தயும் சூப்பர்ங்குறான்.. தாறு மாறுங்குறான்... பட்டைய கெளப்புதுங்குறான்...  செம ரவுசுங்குறான்.. வழக்கமா இதுமாதிரில்லாம் சொல்லமாட்டானே... மண்டை எதுவும் கொழம்பிருச்சோன்னு தானே வெறிக்குறீங்க. கொஞ்சம் இருங்க... நா  மேல சொன்ன அத்தனையுமே படத்துல விஜய் சேதுபதி வர்ற ஒண்ணரை மணி நேரப் படத்த பத்தி மட்டும் தான். ஆனா இது இல்லாம மனுஷனுக்கு தலைவலி வர வக்கிற அளவுக்கு இன்னொரு அரை மணி நேரமும் இருக்கு.

அது வேற ஒண்ணும் இல்லை... அஷ்வின் ஸ்வாதியோட இன்னொரு ல்வ் ட்ராக் தான் அந்த தலைவலி வர வக்கிற அரை மணி நேரம். தேவையே இல்லாத ஒரு தனி ட்ராக்.. அதுலயும் கடுப்பாக்குற மாதிரி சீன்ஸ்.. முதல் பாதி படத்தில பெரிய ப்ரேக்க போடுறது இது தான். ஸ்வாதி சற்று டொம்மை போல கண்றாவியா இருக்கு. இது மட்டும் இல்லை ரெண்டாவது பாதில  பரோட்ட சூரி "ஓகே ஓகே"   ஜாங்கிரி புள்ளை ரெண்டு பேரும் வர்ற சீக்குவன்ஸூம் செம அருவை. சூரி கத்திய கையில வச்சிகிட்டு கத்தி கத்தி காது வலி வரவச்சிடுறாரு.

ரொம்ப எதிர்பார்த்த " நாயே நாயே" பாட்ட பேக்ரவுண்ட்ல மட்டுமே போட்டு ஏமாத்திட்டாங்க. வடை போச்சே பாட்டு ம் அதுல வர்ற ராஜூ சுந்தரம் குரூப்போட ரவுசும் தாறுமாறு. Birthday song  செம அருவை. Prayer song வலுக்கட்டாயம நுழைச்ச மாதிரி இருக்கு.

இன்னும் ரெண்டு மூணு கேரக்டரும் ஏன் படத்துல வருதுங்கறதுக்கு எந்த ரீசனும் இல்லை. என்ன இருந்தாலும் விஜய் சேதுபதிக்காக கண்டிப்பா படத்த பாக்கலாம். ஆனா  என்ன ஒரு அரைமணி நேர தலைவலிய  தாங்கி தான் ஆகனும்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

Unknown said...

டைரக்டர் கோகுல் மொதல்ல ரவுத்திரம்னு ஒரு சீரியஸான படம் எடுத்தாரு. ஆனா மக்கள் யாருமே அத அவ்வளவு சீரியஸா எடுத்துக்கல.\\\\\\\\\\

ஹாஹா சிவா எப்படி இப்படிலாம்..

என்னடா எல்லாத்தயும் சூப்பர்ங்குறான்.. தாறு மாறுங்குறான்... பட்டைய கெளப்புதுங்குறான்... செம ரவுசுங்குறான்.. வழக்கமா இதுமாதிரில்லாம் சொல்லமாட்டானே... மண்டை எதுவும் கொழம்பிருச்சோன்னு தானே வெறிக்குறீங்க. கொஞ்சம் இருங்க... நா மேல சொன்ன அத்தனையுமே படத்துல விஜய் சேதுபதி வர்ற ஒண்ணரை மணி நேரப் படத்த பத்தி மட்டும் தான். ஆனா இது இல்லாம மனுஷனுக்கு தலைவலி வர வக்கிற அளவுக்கு இன்னொரு அரை மணி நேரமும் இருக்கு./////

நெனச்சேன் என்னடா இன்னும் கொட்டாலயேன்னு

Anonymous said...

THX BROTHER

SUPER REVIEW..I ENJOYED.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...