Wednesday, October 16, 2013

ராமையா வஸ்தாவய்யா - RAMAIYYA VASTHAVAIYYA!!!


Share/Bookmark
நம்மூர்ல ஒரு தடவ வந்த சீனு திரும்ப வந்தாலே நச்சி பிச்சி படத்த நாரா உரிச்சி தொங்க  போட்டுறாய்ங்க.. ஆனா இதுவரைக்கும் ஒரு 50 தடவ ஒரே கதையோட தெலுகுல படம்  எடுத்துகிட்டு இருக்காங்க. பாக்குற நமக்கே போர் அடிக்கிது. எடுக்குற அவிங்களுக்கு போர் அடிக்க மாட்டுது. அவனுகளும் திரும்ப திரும்ப எடுத்துகிட்டே இருக்காய்ங்க.. அதுவும் திரும்ப திரும்ப ஃப்ளாப் ஆயிட்டே இருக்கு. ஆனா அதப்பத்தி கொஞ்சம் கூட வெக்கமோ துக்கமோ துயரமோ அவிங்க படுறாப்ள தெரியல. ஒரு நல்ல கதை வந்துச்சின்னா அத்தனை ஹீரோவும் அதே கதைய ஒரு தடவ நடிச்சி ரிலீஸ் பண்ணாதான் தூக்கம் வரும்.

இந்த படம் அந்த படத்தோட காப்பிப்பா ன்னு ஒரே வார்த்தையில சொல்லிட முடியாது. ஏன்னா நா எந்த படத்த சொல்றேனோ அந்தப் படமே அதுக்கு முன்னால இன்னொரு படத்தோட காப்பியா தான் இருக்கும். அதனால இந்த படம் எந்தப் படம் மாதிரி இருக்குன்னு கொஞ்சம் பாப்போம். (அய்யய்யோ ரொம்ப ஒலருறேனே... சோத்துல வெசம் வச்சிருவாய்ங்களே)

நம்ம வல்லரசு வாசிம் காண் பெத்த பணக்கார டான். ஆரம்பத்துலயே ஒரு குரூப் அவர தூக்க ட்ரை பண்ணி மிஸ் ஆயிடுது. அது அப்டியே இருந்துட்டு போவுது. நணபர்களோல ஜாலிய சுத்திகிட்டு இருக்க தலைவர் NTR வழக்கம்போல ஒரு ரோட்டுல கொட்டுற மழையில சமந்தாவ பாத்தது ஃபீல் ஆயிடுறாப்ள. அப்புறம் இவரு போற எடத்துலயெல்லாம் அந்த புள்ளை எதேச்சையா வந்து வந்து போக (ஹீரோயின்னாலே அப்டி வந்து வந்துதான போவனும்) அந்த புள்ளை மேல செம லவ் ஆயிடுறாப்ளே.. 

அப்டியே பின்னால சுத்தி பிக் அப்பும் பண்ணிடுறாப்ளே. அப்புறம் சமந்தா அதோட அக்கா கல்யாணத்துக்கு நம்மாள அது ஊருக்கு அழைச்சிட்டு போவுது.
சமந்தாவோட அப்பாதான் நம்ம வாசிம் கான். கல்யாணம் முடிஞ்ச உடனே வாசிம்கானுக்கு திரும்ப ஒரு ஃபோன் மிரட்டல் வருது. இந்த முறை NTR வருங்கால மாமனார காப்பாத்துறதா வாக்கு குடுத்துட்டு அவர ஒரு தனியான எடத்துக்கு அழைச்சிட்டு போயி வச்சிட்டு கொலைகாரனுக்காக காத்திருக்காங்க.

அப்ப போடுறோம் ட்விஸ்ட... காப்பாத்துறேன்னு கூட்டிட்டு போயி NTR eh அவிங்க எல்லாரையும் பொள பொளன்னு பொளந்து, வாசிம் கானையும் வாயில கத்திய எறக்கிட்டு சிட்டிசன் அஜித்  மாதிரி "அத்திப்பட்டி"ன்னு சொல்லிட்டு கெளம்புறாரு. அப்போ தான் தெரியிது இவரு சமந்தாவ ப்ளான் பண்ணி கரெக்ட் பண்ணிருக்காருன்னு.

இதுக்கப்புறம் கதை நமக்கு தெரியாதா.. இன்னொரு கிராமத்துல இன்னொரு பாப்பா... ரெண்டு  ஹீரோயின் இல்லைன்னா தெலுகுல யாரும் படமே நடிக்க மாடேன்னு அடம் புடிக்கிறாய்ங்க. அது வேற யாரும் இல்ல.. நம்ம சுருதி... அந்த கிராமத்துலயும் ஃபுல் மேக்கப்போட சிட்டி கேர்ள் மாதிரி... அதத்தான் நம்மாளு ஒரிஜினலா லவ்வுறாரு. வழக்கம் போல வில்லன் குருப்பு அந்த புள்ளையும், NTR சொந்தக்காரனுங்க எல்லாரயும் போட்டு தள்ளிட பழி வாங்குறது தான் மேட்டர். ஃப்ளாஷ்பேக் அப்படியே ரவி தேஜாவோட "வீரா" படத்தின் மறு ஒளிபரப்பு. கடைசில எப்படா படம் முடியும்னு ஆயிப்போசி.

6 பாட்டும் செம. எப்டி இருந்த தமன் எப்டியோ ஆயிட்டாரு. BGM உம் சூப்பர். தெலுகு படத்துலயும் இளையராஜா பாட்டுங்கள background ல போட்டு ஓட்டுறதுக்கு ஆரம்பிச்சிட்டாய்ங்க. ஆனா இன்னும் ஃபைட்டுக்கு மியூசிக் மட்டும் மொக்கையா குடுத்து கடுப்பேத்துறாரு. ஃபைட்டு எல்லாம் ரத்தக் களரி. இப்போலாம் எல்லா தெலுகு படமுமே 'A' சர்டிஃபிகேட்டோட தான் ரிலீஸே ஆவுது. நல்லா இருக்க மூஞ்ச ஆப்ரேசன் பண்ணி அசிங்கப்படுத்திக்கிறதே இந்த ஹீரோயின்களூக்கு வேலையா போச்சி. அந்த வரிசையில  இப்போ சமந்தா. நல்லா அழகா இருந்த மூக்க ஆப்ரேஷன் பண்ணி இப்ப அலங்கோலமா ஆக்கி வச்சிருக்கு. சுருதி ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை. ஒரு பாட்டுல அதுக்கு ஸ்ரேஷா கோஷல்  வாய்ஸ்.. அவ்ளோ அழகான வாய்ஸ அந்த மூஞ்சிக்கு கொஞ்சம் கூட சேரல.

தலைவர் ரவி தேஜாவ வச்சி மிரப்பகாய் எடுத்தவரு தான் டைரக்டரு. நிறைய சீன் மிரபகாய்  எடுக்கப்பட்ட அதே லொக்கேசன். ப்ரம்மானந்தம் இல்லாததால காமெடியும் ரொம்ப சொல்லிக்கிற மாதிரி இல்லை. NTR ah பாட்ஷாவுல பளபளன்னு பாத்துட்டு இதுல லேசா தாடியோட பாக்க எதோ உடம்பு சரியில்லாதவரு மாதிரி இருக்கு.  பாட்டு picturization உம் சரி அதுக்கு உள்ள காஸ்டியூமும் சரி.. ரொம்ப ordinary. அதனால டான்ஸூம் அவ்வளவா எடுக்கல.

மொத்ததுல திரும்பவும் எந்த மாற்றமும் இல்லாம அதே பழைய கதை திரைக்கதை தான். படம் ரொம்ப average தான். ஆனா கடைசி கொஞ்ச நேரத்த தவற படம் போர் அடிக்காம தான் போகுது.

அப்புறம் நைட் ஷோங்கறதால மொத்தமே தியேட்டர்ல ஒரு 60 பேர் தான் இருந்துருப்பாங்க. எனக்கு ரெண்டு சீட் தள்ளி ஒரு husband & wife ஒரு சின்ன கொழந்தையோட உக்காந்துருந்தாங்க. சத்தம் தாங்கமுடியாம அந்த கொழந்தை இண்டர்வலுக்கு அப்புறம் அழ ஆரம்பிச்சிருச்சி. அப்போ அந்த அப்பா கொழந்தைய தூக்கிட்டு வெளில போனவருதான். கடைசி வரைக்கும் அந்த அம்மா மட்டும் உக்காந்து படம் பாத்துகிட்டு இருந்துச்சி. படம் முடிஞ்சி வெளில போறப்போ பாத்தா அந்த  கொழந்தைய தோள்ல போட்டுகிட்டு வெளிலயே நின்னுகிட்டே இருக்காரு...

அவர பாத்தோன என் மைண்டுல இளைய ராஜா வாய்ஸ்ல..."ஆஆஆங்ங்.... அ ஆ ஆங்க்..... ஏ தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே... மான் போல வந்தவனே யாரடிச்சாரோ...." ன்னு ஓட ஆரம்பிச்சிருச்சி. எல்லார் வீட்டுலயும் இதே கதி தானா?



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

சக்தி முருகேசன் said...

தெலுங்குனாலே காரம் உப்பு அதிகம்தானே..தெரிஞ்சிக்கிட்டே இப்படி வாருனா எப்படி..படிக்க சுவாரஸ்யமா இருக்கு..வாழ்த்துகள்...

Anonymous said...

SEMAIYA IRUKKU UNGA REVIEW..THANKS BROTHER

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...