Wednesday, November 6, 2013

பாண்டிய நாடு - தடையறத் தாக்க வெர்ஷன் 2.0!!


Share/Bookmark
மிர்ச்சி சிவாவ வச்சி ஒரு சீரியஸான கதை பண்ணா எப்டி இருக்கும்? ராமராஜன ஒரு yo yo boy ah வச்சி ஒரு பக்கா சிட்டி கதை பண்ணா எப்டி இருக்கும்? அந்த மாதிரி ஒரு சம்பவம் தான் இங்கயும்  நடந்துருக்கு. நானும் மதுரைக்காரன் தாண்டான்னு சொல்லிக்கிட்டு ஓங்கி அடிச்சா ஒன்பது பேரு  பறக்குற மாதிரி ஒரு இண்டர்வல் ஃபைட்டு இல்லாம ஒரு விஷால் படம். விஷாலோட பெரிய ப்ளஸ்ஸே அவர் படத்துல வர்ற அணல் பறக்கும் சண்டை காட்சிஙக தான். கிட்டத்தட்ட படம் முழுக்கவே விஷாலோட ட்ரேட் மார்க் சண்டைக் காட்சிங்க எதுவும் இல்லாம எடுத்து அதயும் பாக்குற மாதிரி எடுத்துருக்கதே இந்த படத்தோட முதல் வெற்றி. எனக்கு சுசீந்திரன் மேல ஒரு நல்ல அபிப்ராயம் இருந்ததே இல்லை. அவரோட ஒரு சில படங்கள் பாத்துருக்கேன். எல்லாருக்கும் புடிச்ச நான் மகான் அல்ல படம் எனக்கு அவ்வளவா புடிக்கலை. காரணம் வேற ஒண்ணும் இல்லை. பொல்லாதவன் படத்த அப்படியே எடுத்து வச்சிருந்தாரு.    

கதை மட்டும் கொஞ்சம் வேறன்னாலும்கேரக்டர்லருந்து சீன்ஸ் வரைக்கும் அப்படியே பொல்லாதவன நான் மகான் அல்ல படத்தோட ஒன் டு ஒன் மேட்ச்  பண்ண முடியும். ரெண்டு மூணு படம் தான் அப்போ நடிச்சிருந்தாருன்னாலும் ஒரு பெரிய ஹீரோவா  ஃபார்ம் ஆயிருந்த சமயத்துல நாலு ஸ்கூல் பசங்கள வில்லன்களா காமிச்சி அவங்க கூட சண்டை போடுறது என்னவோ என்னால ஏத்துக்க முடியல. அப்புறம் ராஜ பாட்டை பார்த்த பல பேரு அடுத்த சுசீந்திரன் படத்துக்கு போக ரொம்பவே யோசிப்பாங்கன்னு எல்லாருக்குமே தெரியும். இருந்தாலும் இந்த படத்துக்கு போக காரணம் நம்பத்தகுந்த நண்பர்கள் சிலர் குடுத்த நல்ல விமர்சனஙகளால தான்.

படம் ஆரம்பிக்கும்போதே அள்ளு கெளம்புது. கில்லின்னு ஒரு படம் மதுரைய வச்சி எடுத்து ஹிட் ஆச்சி. அதுக்கப்புறம் மொத்த சினிமா கதையும் மதுரைய சுத்தி மட்டுமே நடக்குது. மொதல்ல கோரிப் பாளையம். கூடல் நகர், தூங்கா நகரம் மாட்டு தாவணின்னு ஏரியா பேரா வச்சி படம் எடுத்தாய்ங்க. அப்புறம் மதுரை சம்பவம் , மதுரை டூ தேணி மாதிரியான மதுரை சார்ந்த பெயர்கள வச்சி எடுத்தாய்ங்க. இப்போ இவரு டைரக்ட்டா வச்சா தெரியும்னு பொத்தாம் பொதுவா பாண்டிய நாடுன்னு வச்சிருக்காரு. ஆக மொத்தத்துல நீங்க மதுரைய விட்டு வேற ஏரியாவுக்கு ஷிஃப்ட் ஆக மாட்டீங்க? 

அதுவும் ஆரம்பத்துலயே “இவரு தான் இந்த ஏரியாவுலயே பெரிய கையி... இந்த ஏரியாவுல என்ன நடந்தாலும் இவருக்கு கமிஷன் தராம நடக்க கூடாதுன்னு வேற ஆரம்பிச்சி ரெண்டு குரூப் சண்டையா வேற பிரிஞ்சோன ரொம்ப பயமாயிருச்சி. ஆத்தாடி தெலுகு படம் மாதிரி எதுவும் ஆரம்பிக்கப் போறாய்ங்களோன்னு..

நல்ல வேளை.. அந்த மாதிரியான சம்பவங்கள் எதுவும் நடக்கவே இல்லை. பாத்த கதைதான்னாலும் கேரக்டருங்களை நல்லாவே பண்ணிருந்தாரு. ரெண்டு ரவுடி குரூப்னா ஒருத்தர் தமிழ் சினிமா ரெகுலர் டைப் வில்லனாவும் இன்னொருத்தர சைலண்ட்டான கேரக்டராவும் காட்டி முதல் பாதிய ரொம்ப நல்லாவே நகர்த்திட்டு போயிருந்தாரு. செவந்தி பூ கொட்டும் போது வணக்கம் வச்சா மாதிரியே  பல்ல காட்டிகிட்டு ஸ்க்ரீன்ல ஸ்லோ மோஷன்ல எண்ட்ரி குடுக்குற மாதிரியான இண்ட்ரோ எதுவும்  விஷாலுக்கு இல்லை. ரொம்ப சாதாரணமான கேரக்டராவே வர்றாரு. விஷாலோட அண்ணனா வர்றவரும் சரி... சினிமாத் தனமா இல்லாம ரொம்ப இயல்பா இருக்கமாதிரியான ஒரு ஆள போட்டுருக்காங்க.

விஷால் இதுக்கு முன்னால பண்ண மொக்க காமெடி மாதிரியெல்லாம் இல்லாம இந்த படத்துல கொஞ்சம் நல்லாவே காமெடியும் பண்ணிருக்காரு. பரோட்டா சூரி அங்கங்க வந்து தலைய காமிக்கிறாரு. சிரிப்ப ரொம்ப வரவழைக்கலன்னாலும் கடுப்பேத்தாம இருக்கது ரொம்ப நிம்மதி. முதல் பாதில முழுக்கவே ஒரு விஷாலோட லவ் சீன் முடிஞ்சா அடுத்து வில்லனோட ஒரு டெரர் சீனுன்னு மாறி மாறி வர்ற  மாதிரி போயிட்டு இருக்க இண்டர்வல்ல நமக்கு ஒரு செம்ம ஆக்‌ஷன் ப்ளாக் இருக்குன்னு நெனைக்கும் போது, ரொம்ய இயல்பா ஒரு இண்டர்வல். முதல் பாதி முழுக்க நா யோசிச்ச ஒரு விஷயம் என்னன்னா இந்த சாதாரண அப்பா கேரக்டருக்கு எதுக்குப்பா பாரதி ராஜான்னு தான். ஆனா ரெண்டவது பாதி பாத்தப்புறம் தான் தெரிஞ்சிது ஏன் அவர போட்டாங்கன்னு. அடிச்சி தூள் கெளப்பிருக்காரு. அவரு குடுக்குற சில ரியாக்‌ஷன்கள வேற யாராலயும் குடுத்துருக்க முடியுமான்னு தெரியல.

இன்னொரு சூப்பர் கேரக்டர் விக்ராந்தோடது. 5 நிமிஷம் வந்தாலும் கெத்தா இருந்தாரு. முதல்பாதில பஸ் ஏரி வெளியூர் போற விக்ராந்த் கடைசில விஷால வில்லன்கள் வெட்ட தொறத்தும் போது கெத்தா வந்து ரீ-எண்ட்ரி குடுப்பாருன்னு ஆவலா இருந்தேன். ஆனா அங்கயும் வச்சாங்க ஒரு ட்விஸ்டு. இந்த படத்து வில்லனையும் எங்கயோ பாத்தா மாதிரி இருக்கு. ஆனா எங்கன்னு தான் தெரியல.

விஷாலுக்கும் லட்சுமேனனுக்கும் காதல் காட்சிங்க முதல் பாதியிலேயே முடிஞ்சிருது. ஆனாலும்  ஹீரோயினுக்கு குடுத்த காசு வீணா போயிடக் கூடாதுங்கறதுக்காக வலுக்கட்டாயமா ஒரு குத்து பாட்ட உள்ள நுழைச்சிருக்காய்ங்க. fi fi fi கலாச்சிஃபைன்னு ஒரு பாட்டு. அந்த பாட்டு மட்டும் தான் படத்துக்கே திருஷ்டி பொட்டு.  கண்றாவி அத கேக்கவும் முடியல பாக்கவும் முடியல. லட்சுமி மேனன் கும்கில இருந்த அளவு  அழகா இல்லை.

தடையற தாக்க எத்தனை பேரு பாத்துருக்கீங்கன்னு தெரியல. கிட்டத்தட்ட இந்த படமும் அதே மாதிரியான படம் தான். சில காட்சிகளும் சரி காட்சி பதிவுகளும் சரி. அப்படியே அந்த படத்த ஞாபகப்படுத்துது. ஆனாலும் அத விட இதுல கொஞ்சம் காமெடி, லவ்வுன்னு மசாலா அதிகாமாவே  சேத்து ரொம்பவே நல்லா பண்ணிருக்காய்ங்க.

விஷாலுக்கு ரொம்ப நாள் கழிச்சி ஒரு நல்ல படம். சுசீந்திரனுக்கும் கூட.. கண்டிப்பா பாக்கலாம். தீபாவளிக்கு வந்த படங்கள்ல இதான் பெஸ்டு. சரி மதுரைய விட்டு கொஞ்சம் வேற ஊரு பக்கம் வாங்கப்பா. புண்ணியமா போகும்.

ஆல் இன் ஆல் அழகுராஜா தான் போலாம்னு இருந்தேன். ஒரு கல் ஒரு கண்ணாடியிலயே ராஜேஷ் மேல லைட்டா டவுட் வந்துருச்சி. இருந்தாலும் கார்திக்காக போலாம்னு தான் நெனைச்சேன். போன பல பேர் ரத்த களரியொட வர்றத பாத்து நல்ல வேளை  உசாராயிட்டேன்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

7 comments:

Unknown said...

பாஸ் விமர்சனம் நச்சுனு போடுறிங்க. இந்த படம் பாக்கும்போது எனக்கும் தடையறத்தாக்க ஞாபகம் வந்தது .

Unknown said...

விமர்சனம் அருமை. எனக்கும்கூட தடையறத்தாக்க ஞாபகம் வந்தது.

Unknown said...

பாரதிராஜா ஓவர் ஆக்டீங்க்ன்னு ஒரு பதிவர் சொன்னாரு

இந்த படம் நல்ல இருந்த நாளா உங்க கிண்டலில் இருந்து தப்பியது

Anonymous said...

intha copymenia ungala vittu pogavey seyyathu

கேரளாக்காரன் said...

//முதல்பாதில பஸ் ஏரி வெளியூர் போற விக்ராந்த் கடைசில விஷால வில்லன்கள் வெட்ட தொறத்தும் போது கெத்தா வந்து ரீ-எண்ட்ரி குடுப்பாருன்னு ஆவலா இருந்தேன்//

Same Blood :)

திருவாரூர் சரவணா said...

//////////////ஆல் இன் ஆல் அழகுராஜா தான் போலாம்னு இருந்தேன். ஒரு கல் ஒரு கண்ணாடியிலயே ராஜேஷ் மேல லைட்டா டவுட் வந்துருச்சி. ///////////

எனக்கு லைட்டா கூட டவுட் இல்லை... இவருகிட்ட சுத்தமா சரக்கு காலின்னு முடிவே ப்ண்ணி வெச்சிருந்தேன்.

Dhilipan said...

////இந்த படத்து வில்லனையும் எங்கயோ பாத்தா மாதிரி இருக்கு. ஆனா எங்கன்னு தான் தெரியல.///////

எதிர்நீச்சல் படத்துல நந்திதாவோட அப்பாவா வருவாருல..... அவருதான் பான்டியநாடுல வில்லன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...