Tuesday, December 24, 2013

பிரியாணி


Share/Bookmark
ஆரம்பத்துல தடதடன்னு அதிரடியா சில ஹிட்டுகள குடுத்துட்டு போகப்போக மொக்கையாகி காணாமல் போன பல டைரக்டர்கள நாம் பாத்துருக்கோம். தரணி, பேரரசு, அமீர்ன்னு அந்த வரிசை நீண்டுகிட்டே போகும். ஆனா இதுல ரிவர்ஸ்ல வந்துகிட்டு இருக்கவரு நம்ம வெங்கட் பிரபு.  முதல் படமான சென்னை 28  ஹிட். அது எதோ ஒரு ஃப்ளூக்ல ஹிட்டாயிருச்சின்னு நெனைச்சா அப்டியெல்லாம் இல்லன்னு சரோஜாவுல ப்ரூவ்  பண்ணாரு. கோவாவுல லைட்டா சருக்குனாலும் அடுத்து தலய வச்சி அவர் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத அளவு ஒரு ஹிட்ட குடுத்து எங்கயோ பொய்ட்டாரு. இப்போ இந்த பிரியாணி.

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில அடி விழலாம். ஆனா அடியே வாழ்க்கையா இருந்தா எப்புடிங்குற ரேஞ்சுல சகுனி, அலெக்ஸ் பாண்டியன், அழகுராஜான்னு ஹார்ட்ரிக் மெகா ஃப்ளாப்புகள குடுத்த கார்த்திக்கு ஓரளவு கை குடுக்க கூடிய அளவு வந்துருக்க படம் தான் இது. கொஞ்ச நாளுக்கு முன்னால கார்த்திக்கு அழகுராஜா, பிரியாணி ரெண்டு படமுமே ரிலீஸுக்கு ரெடியா இருக்க, எந்த படத்த முதல்ல ரிலீஸ் பண்ண போறீங்கண்ணு கேட்டதுக்கு “அழகுராஜாவ தான் ரிலீஸ் பண்ண போறோம்.. அதான் ரொம்ப நல்லா வந்துருக்கு”ன்னு சொல்லிருந்தாப்டி. எவ்வளவு நல்லா வந்துருந்துச்சின்னு நம்ம தான் பாத்தோமே.

இப்போ இந்த பிரியாணி செய்வது எப்படின்னு பாப்போமா. முதல்ல வானலிய எடுத்து அடுப்புல தேவையான அளவு எண்ணெய விட்டுட்டு அதுல கார்த்தி, ப்ரேம்ஜி ஹன்சிகா,நாசர், ராம்கி, சம்பத் எல்லாரையும் எடுத்து போடனும். கொஞ்ச நேரத்துல ரெண்டு மூணு சூப்பர் ஃபிகர்களையும் அதுல சேத்து நல்லா ரொமாண்டிக் மூடு வர்ற அளவு வதக்கனும். இத நல்லா பொன்முறுவலா வறுத்தப்புறம் ஏற்கனவே நீங்க ரெடியா வச்சிருக்க சரோஜா படக்கதையையும் மங்ககாத்தா படக்கதையும் எடுத்து தேவையான அளவு சேத்து நல்லா வாசம் வர்ற வரைக்கும் கிண்டு கிண்டுன்னு கிண்டனும். அப்புறம் அதுக்கு மேல ஜெய், அர்விந்த்ன்னு சிலப்பல கேரக்டர்களோட கெஸ்ட் அப்பியரன்ஸயும், வழக்கமான ப்ரேம்ஜியோட மொக்கை காமெடியையும் அப்டியே மழைச்சாரல் மாதிரி தூவனும்.  அவ்வளவுதான் பிரியாணி ரெடி.

நோ.. நோ.. இதுக்கெல்லாம் எதுக்கு என்ன அடிக்க கல்ல பொறுக்குறீங்க. நா சும்மா ஒரு ஃப்ளோவா நல்லா இருக்கேன்னு எழுதிப்பாத்தேன். பாக்குற பொண்ணுங்களையெல்லாம் உசார் பண்ணுறத மட்டுமே முழுநேர வேலையா வச்சிட்டு அலையிறவரு கார்த்தி. அவர் பாக்குற பொண்ணுங்கள மட்டும் இல்ல ப்ரேம்ஜி பாக்குற  பொண்ணுங்களையும் அவரே உசார் பண்ணிடுறாரு. முதல் பாதி முழுக்க உசார் பண்ணுறதுலயே படம் ஓடிக்கிட்டு இருக்க, ஒரு சூப்பர் ஃபிகர் கார்த்தியையும் ப்ரேம்ஜியையும் மயக்கி ஹோட்டலுக்கு அழைச்சிட்டு போய் குடிக்க வச்சி மட்டை ஆக்கிருது. மறுநாள் பாத்தா பெரிய தொழிலதிபரான நாசர் அங்க இறந்து கிடக்க பழி கார்த்தி மேல விழுது. உண்மையான கொலைகாரன் யாருன்னு கண்டுபுடிச்சி எப்டி எஸ்கேப் ஆகுறாருங்கறது தான் மிச்ச கதை.

ஒரு ஃபங்க்‌ஷன்ல வெங்கட் ப்ரபுவ பத்தி சிவ கார்த்திகேயன் ஒண்ணு சொன்னாரு. “இவரு கதை இல்லாம கூட படம் எடுப்பாரு. ஆனா அவரு தம்பி இல்லாம மட்டும் படம் எக்கவே மாட்டாரு”. அது என்னவோ உண்மைதான். காமெடியே வராத ப்ரேம்ஜிய வச்சி இவரும் பல படங்களா காமெடி ட்ரை பண்ணிகிட்டே இருக்காரு. ஆனா ஒண்ணும் வேலைக்கு ஆவுற மாதிரி தெரியல. நல்ல வேலை இந்தப்படத்துல பேக்ரவுண்டுல இளையராஜா பாட்ட போட்டு காமெடி சீன் வக்கிறத கம்பி பண்ணிருக்காரு.

ஆனாலும் சில வழக்கமான வெங்கட் ப்ரபு டைப் காமெடிங்க சூப்பர். உதாரணமா ஜெய் வரும்போது “இவரு டைரக்டரோட க்ளோஸ் ஃப்ரண்டு. டேட் ஃப்ரீயா இருந்ததால கெஸ்ட் ரோல் பண்ணிருக்காரு”ன்னு போடுறதும், ப்ளாஷ்பேக் முடிஞ்சதும் கார்ல பறந்துகிட்டு இருக்க ப்ரேம்ஜி “எனக்கும் இதுவரைக்கும் தாங்க கதை தெரியும். இனிமெ என்ன நடக்க போவுதுன்னி இனிமே தான் பாக்கனும்”ன்னு சொல்றதும், பொணத்த டிஸ்போஸ் பண்ண மூணு வழி ட்ரை பண்ணி ஆன எந்த வழில போனாலும் கடைசில தூக்குக்கு போய் நிக்கிறதும் செம.

கார்த்தி ஆளூ செம ஃபிட்டா இருக்காரு. நடிப்ப பத்தி சொல்லத் தேவையில்லை. வழக்கம்போல பட்டைய கெளப்பிருக்காரு. ஹன்சிகா ஒரு  "I am paavam" சும்மா ஒரு நாலு சீன் வந்துட்டு போவுது. நம்ம ராம்கி ஒரு அமெரிக்க மாப்பிள்ளையா நடிச்சிருக்காரு, ஆளு செமயா இருக்காரு. யுவன் சங்கர் ராஜா லைட்டா மெண்டலி மெண்டல் ஆயிட்டாருன்னு நெனைக்கிறேன். சார் இது தமிழ் படம் சார். கொஞ்சம் ஞாபகம் வச்சிக்குங்க. பாட்டுல தமிழே வர மாட்டுது. மொதல்ல பாட்டே வரமாட்டுது. மூணு நிமிஷம் வெறும் மீசிக் மட்டுமே வருது. சும்மா காய்மூய்னு ராப் பன்றேன்னு கண்ட மேனிக்கு கத்திகிட்டு இருக்காய்ங்க. மியூசிக் அந்த அளவுக்கு சிறப்பா இல்லை.

மொத்ததுல சூப்பர்னு சொல்ல முடியலன்னாலும் நல்லா இல்லைன்னு சொல்ல முடியாத அளவுக்கு  எடுக்கப்பட்ட ஒரு நல்ல படம். (அய்யய்யோ டங்கு ரொம்ப ரோல் ஆவுதே) அட படம் நல்லாருக்குbaa. பாக்கலாம்baa.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

Unknown said...

நானும் பார்த்துடேன் பாஸ் இடைவேளை வரை ஏதோ போகுது அதுக்கு அப்புறம் தான் படமே

Karthikeyan said...

//மெண்டலி மெண்டல்// Nice

வெங்கட் நாகராஜ் said...

ok...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...