Wednesday, December 18, 2013

வாங்க சார்.. வந்து ஃப்ரீ மெடிக்கல் செக்கப் பண்ணிக்குங்க சார்!!!


Share/Bookmark

எல்லாரும் குசேலன் படத்துல வர்ற காமெடி பாத்துருப்பீங்கன்னு நினைக்கிறேன். சலூன் கடை வச்சிருக்க வடிவேலு, கடைக்கு ஆள் வரலைன்னு நாலஞ்சி அடிஆளுங்கள செட் பண்ணி வலுக்கட்டாயமா பஸ்ல வர்றவனுங்களுக்கு மயக்க மருந்து அடிச்சி கடத்திக்கிட்டு வந்து மொட்டை அடிச்சி விட்டுட்டு அவனுகளுக்கு தெரியாமையே அவனுங்க பாக்கெட்லருந்து மொட்டை அடிச்சதுக்கு ஃபீஸா 50 ரூவாயையும் எடுத்துக்குவாரு. அந்த மாதிரி காமெடிதான் இப்போ சென்னை ரோடுங்கள்ள நடந்துகிட்டு இருக்கு. எது எதுக்கு ஆள் புடிக்கிறதுன்னு ஒரு வெவஸ்தையே இல்லாம போச்சு. அதுக்கு புடிச்சி இதுக்கு புடிச்சி இப்போ ஆஸ்பத்திரிக்கு கூட ஆள வலுக்கட்டாயமா புடிச்சி இழுத்துட்டு போக ஆரம்பிச்சிட்டாய்ங்க.

சென்னையில ரோடு ஓரங்கள்ள ஒரு பெரிய வெள்ளை கலர் கொடைய விரிச்சிட்டு ஒரு பாப்பாவும் ஒரு பையனும் நிப்பாங்க. அந்த பையன் நாட்டாமையில வர்ற மிச்சர் திங்கிற அப்பா மாதிரி டம்மியா நின்னுகிட்டு இருப்பான். அந்த புள்ளை மட்டும் ரோட்டுல போற வர்றவனுங்ககிட்ட எல்லாம்வாங்க சார்.. வந்து ஃப்ரீ மெடிக்கல் செக்கப் பண்ணிக்குங்க சார்” ”வாங்க சார்.. வந்து ஃப்ரீ  மெடிக்கல் செக்கப் பண்ணிக்குங்க சார்ன்னு கூப்புடும். நம்ம தான் ஃப்ரீயா குடுத்தா எதா இருந்தாலும் ஒரு கை பாத்துருவோமே. உடனேஃப்ரீயாத்தானே... அதுக்கென்னா நல்லா பண்ணிக்குங்கன்னு போயி நின்னுருவோம்.

உடனே ஒரு டேப்ப வச்சி உங்க ஹைட்ட அளப்பாய்ங்க. அப்புறம் ஒரு வெயிட் மெஷின்ல ஏற சொல்லி நம்ம வெயிட்ட எடுப்பாய்ங்க. பாத்துங்க மக்களே இது தான் அவியிங்க பண்ணுற ஃப்ரீ மெடிக்கல் செக்கப்பு. உடனே அந்த BMI கால்குலேஷன போட்டு பாத்துட்டுஅய்யய்யோஅப்டின்னு ஒரு ரியாக்சன்  விடுவாய்ங்க. உடனே என்ன நமக்குள்ள வியாதிய அதுக்குள்ள கண்டுபுடிச்சிட்டாய்ங்களோன்னு நமக்கே ஒரு டவுட்டு வந்துரும்

"சார் உங்க BMI ratio ரொம்ப அதிகமா இருக்கு சார்.. இத இப்டியே
விட்டீங்கன்னா உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்துரும்ம்ப்யாங்க. சரிடா அதுக்கு இப்போ என்ன பண்றது?ன்னு கேட்டா படக்குன்னு பாக்கெட்லருந்து ஒரு விசிட்டிங் கார்ட எடுத்துநாளைக்கு இந்த அட்ரசுக்கு வாங்க. அங்க சொல்லுவாங்கம்பாங்க. அட நாளைக்கு அங்க சொல்லப்போறத இங்கயே சொல்லக்கூடாதான்னு கேட்டாஇல்லை சார் நீங்க அங்க வந்து பாருங்க சொல்லுவாங்கன்னு உங்க நம்பர வேற வாங்கிக்குவாய்ங்க.

அதாவது ”If there is no market, create one" ன்னு ஒண்ணு சொல்லுவாய்ங்க. மார்க்கெட் இல்லைன்னா உங்களுக்கு ஒரு மார்கெட்ட உருவாக்கிக்குங்க. இத எதுல வேணாலும் யூஸ் பண்ணிக்கலாம். டாக்டருங்க இத யூஸ் பண்ணலாமா? அதாவது ஹாஸ்பிட்டலுக்கு வர்ற பேஷண்ட் கணக்கு குறைஞ்சிட்டா, வியாதி இல்லாத ஒருத்தன வியாதி உள்ளவனா மாத்தி அவன பேஷண்டா ஆக்கிக்குறாய்ங்க. பலே வெள்ளையத்தேவா.

ஒரு நாள் MEPZ பக்கத்துல இப்டிதான் ஒரு பாப்பா கத்திகிட்டு இருந்துச்சி. அந்தப்பக்காமா போன என்னசார்.. வந்து மெடிக்கல் செக்கப் பண்ணிக்குங்கன்னு அதட்டுற மாதிரி சொல்லுச்சி. அய்யய்யோ ஒரு வேள அம்மா எல்லாரும் இந்த மெடிக்கல் செக்கப் பண்ணிக்கனும்னு சட்டம் போட்டுருக்காங்க போலன்னு போனேன். ஹைட்டு வெயிட்டு பாத்துட்டுசார் உங்களுக்கு ஓவர் வெயிட்.. நாளைக்கு  காலையில இங்க வந்துருங்கன்னு கார்ட குடுக்கஅதுக்கென்ன தாராளமா வர்றேன்னு கெளம்புனேன்.

அப்பதான் ஒரு சின்ன டவுட்டு வந்துச்சி. ஒரு வேளை கரெக்டா இருந்தா என்ன சொல்லுவாய்ங்க?  சரி பாப்போம்னு பக்கத்துல வித்த அவிச்ச கடலையில ஒரு பத்துருவாய்க்கு வாங்கிகிட்டு ஓரமா நின்னு என்ன பண்றாய்ங்கன்னு பாத்துக்கிட்டு இருந்தேன். ஒவ்வொருத்தனா வர வரசார் உங்களுக்கு ஓவர் வெயிட்நாளைக்கு ஹாஸ்பிட்டலுக்கு வந்துருங்கசார் உங்களுக்கு அண்டர் வெயிட்நாளைக்கு ஆஸ்பத்த்திரிக்கு வந்துருங்கன்னு சொல்லிகிட்டே இருக்க அப்பதான் அவன் வந்தான்.

ஆளு செம ஃபிட். ஹைட்டு வெயிட்டு எல்லாமே பக்கா. BMI கரெக்டா வந்துருச்சி.  சார் உங்களுக்கு எல்லாமே கரெக்டா இருக்கு.. நாளைக்கு இந்த அட்ரஸூக்கு வந்து பாருங்கன்னாய்ங்க. அதான் எல்லாம் கரெக்டா இருக்கே நா எதுக்கு நாளைக்கு வரணும்? ன்னான். அதுக்கு ஒரு பதில் சொன்னாய்ங்க பாருங்க. நா அப்டியே ஸா...க் ஆயிட்டேன். “சார் இப்போ கரெக்டா இருக்கு. நாளைக்கு அதிகமாயிட்டா? அதனால நீங்க நாளைக்கு வந்தீங்கன்னா இத எப்டி மெயிண்டெய்ண் பண்றதுன்னு சொல்லுவோம். கண்டிப்பா வந்துருங்க”.

வக்காளி டேய்… ஆக உங்க கிட்ட செக்கப் பண்ணிக்க போற எல்லாரையும் பேஷண்டா மாத்தி பணம் சம்பாதிக்கிறது தான் நோக்கமே. இதுல இந்த கிரெட் கார்டுக்கு ஆள் புடிக்கிறவங்களுக்கு டார்கெட் இருக்கது மாதிரி இந்த மெடிக்கல் செக்கப் பண்ணி ஆள் புடிச்சி விடுறவிங்களுக்கும் டார்கெட் இருக்கும் போல. காலையில ஆரம்பிச்சி நைட்டு எட்டு மணி வரைக்கும் தீயா வேலை செய்யிறாய்ங்க

நாம சம்பாதிக்கிறதுக்கு  என்னென்ன வழியிருக்குன்னு யோசிக்கிறோமோ அதே மாதிரி அத நம்மகிட்டருந்து புடுங்குறதுக்கு என்னென்ன வழி இருக்குன்னு ஒரு கும்பலே ரூம் போட்டு யோசிப்பாய்ங்க போல. இது சென்னையில மட்டும் இல்லாம ஊர் சைடுலயும் ஆரம்பிச்சிட்டாய்ங்க. கொடுமை என்னன்னா மறுநாள் போகலன்னா கிரெடிட் கார்டு பில்லு ஃபாலோ பண்ற மாதிரி ஃபோன் பண்ணி வேற பாஃலோ பண்றாய்ங்க

டாக்டர்களே.. உடம்பு சரியில்லாதவங்களுக்கு வைத்தியம் பாருங்க. இந்த மாதிரி ஃப்ரீ மெடிக்கல் செக்கப்புங்குற பேர்ல  நல்லா இருக்கவங்கள உடம்பு சரியில்லாதவங்களா ஆக்கி சம்பாதிக்கிறத தயவு செஞ்சி நிறுத்துங்க. நண்பர்களே இந்தமாதிரி கொடைய வச்சிக்கிட்டு செக்கப்புக்கு கூப்டுற கூட்டத்த பாத்தா தயவு செஞ்சி பத்தடி தள்ளி நடந்து போங்க.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

Unknown said...

ஹாஹ்ஹா எப்படி எல்லாம் கொள்ளையடிக்கிறானுங்க

Anonymous said...

tHANKS BROTHER FOR THIS UPDATE....

Abdul said...

அவுங்க டாக்டர்களுக்கு ஆள் பிடுச்சு விடல்ல....
உடம்ப குறைக்க, குறிப்பா தொப்பை யா குறைக்க இங்க நிறைய பேரு கடையை தொறந்து வச்சு இருக்கணுங்க..அவுங்களுக்கு தான் இவனுங்க ஆள் பிடிக்கிறாங்க...

எடை, உயரம் ல நீங்க மாட்டலனாலும் இன்னும் ஒன்னு வச்சு இருபங்க அது கைல பிடிக்க சொல்லுவாங்க அது கொழுப்பு , உடல் அமைப்பு எப்படி இருக்குனு சொல்லும்...அதை வச்சு உங்கள easy யா பயம்புடுத்திருவாங்க...

abdul said...

அவுங்க டாக்டர்களுக்கு ஆள் பிடுச்சு விடல்ல....
உடம்ப குறைக்க, குறிப்பா தொப்பை யா குறைக்க இங்க நிறைய பேரு கடையை தொறந்து வச்சு இருக்கணுங்க..அவுங்களுக்கு தான் இவனுங்க ஆள் பிடிக்கிறாங்க...

எடை, உயரம் ல நீங்க மாட்டலனாலும் இன்னும் ஒன்னு வச்சு இருபங்க அது கைல பிடிக்க சொல்லுவாங்க அது கொழுப்பு , உடல் அமைப்பு எப்படி இருக்குனு சொல்லும்...அதை வச்சு உங்கள easy யா பயம்புடுத்திருவாங்க...

Anonymous said...

super bro... nice information...

வெங்கட் நாகராஜ் said...

எல்லாவற்றிலும் விளம்பரம்...... :((((

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...