Sunday, November 23, 2014

நாய்கள் ஓக்கே - சிபிராஜ் ஜாக்ரதை!!!


Share/Bookmark
உன் லவ்வுக்கு பூரா என் மூளையத்தானே யூஸ் பண்ணிகிட்டு இருக்கேன். உன் மூளை ஃப்ரஷ்ஷ்ஷா அப்டியேத்தானே இருக்குன்னு வடிவேலு கேக்குற மாதிரி இப்போ நம்மூர் படங்களுக்கெல்லாம் வெள்ளைக்காரன் மூளைய மட்டுமே யூஸ் பண்ணிட்டு நம்ம மூளைய அப்டியே ஃப்ரஷ்ஷா வச்சிருக்கோம். எதாவது ஒரு படம் வித்யாசமா வருதேன்னு பாத்தா அத எங்கருந்தாவது சுட்டுட்டு வந்துருக்காய்ங்க. வித்யாசமான  தலைப்ப வச்சே படத்துக்கு இழுக்குற படங்களின் வரிசையில அடுத்த ஒரு படம். இந்தப்படம் பார்க்குற ஐடியாவுல இருக்கவங்க தொடர்ந்து படிப்பது உசிதமல்ல.

இந்த நாய்கள் ஜாக்ரதை படம் எடுக்குறதுக்காக டைரக்டர் பல ஆங்கில போலீஸ் படங்களை பாத்துருக்காப்டி. ஒவ்வொரு படத்துலருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துப் போட்டு ரெண்டு நாய வச்சி எடுத்து முடிச்சிட்டாப்டி.

ஒரு கொலைகார கும்பல் ஒரு பில்டிங்ல பதுங்கியிருக்க விஷயம் தெரிஞ்சி ஹீரோ போலீஸ் அவரோட டீம அழைச்சிட்டு போறாரு. அங்க போனா முகமூடி போட்ட நாலு பேரு உள்ள வர்ற போலீஸயெல்லாம் வித்யாச வித்யாசமா கொண்ணு வீடியோ எடுத்துத்துட்டு ஹீரோவ மட்டும் உயிரோட விட்டுட்டு போயிடுறாங்க. போகும் போது வில்லன் குரூப்புல ஒரே ஒருத்தரோட வாட்ச் மட்டும் கீழ விழுந்துடுது. மற்ற போலீஸெல்லாம் இறந்து போனதுக்கு ஹீரோதான் காரணம்னு ஹீரோவ சஸ்பெண்ட் பண்ணிடுறாங்க. அந்த விரக்திலயே ஹீரோ பஜங்கர குடிகாரரா மாறிடுறாரு. அப்புறம் ஒரு சின்ன பையன் அவரோட வாழ்க்கையில வந்து அவர மாத்தி அந்த கொலைகார கும்பல கண்டுபுடிக்கிறாங்க. இது இப்டியே இருக்கட்டும்.

இன்னொரு டிடெக்டிவ் இருக்காரு. அவரோட பார்ட்னருக்கும் அவருக்கும் அவ்வளவா புடிச்சிக்காது. ரெண்டு பேரும் ஒரு கொலைகாரன புடிக்கப் போறாங்க. கொலைகாரன் பனிமூட்டமா இருக்க ஒரு மலைப் பாறையில ஓடுறான். ஹீரோவும் அவரோட பார்ட்னரும் தனித்தனியா தேடுறாங்க. பனிமூட்டத்தால யாரு எங்க இருக்காங்கன்னே கண்ணு தெரிய மாட்டுது. வில்லன் கையில வேற துப்பாக்கி. ஹீரோ சுத்தி சுத்தி பாக்குறாரு. திடீர்னு பனிமூட்டத்துல யாரோ ஓட, டுமீல்னு துப்பாக்கியால சுட்டுடுறாரு. அப்புறம் பக்கத்துல போய் பாத்தா தான் தெரியிது சுட்டது கொலைகாரன இல்லை அவரோட பார்ட்னரன்னு. அத யாரும் பாக்காததால கொலைகாரந்தான் பார்ட்னர சுட்டுட்டு ஓடிட்டதா எல்லார்டயும் சொல்லி நம்மவச்சிடுறாரு. ஆனா குற்ற உணர்ச்சியால தூக்கமே வராம தவிக்கிறார் டிடெக்டிவ். இன்னொரு மேட்டர் என்னன்னா டிடெக்டிவ் அவரோட பார்ட்னர சுட்டத வில்லன் பாத்துடுறான்.

அட என்னப்பா ஒரு படத்துக்கு ரெண்டு கதைய சொல்றானே.. இவன் படம் பாத்தானா இல்லையான்னு வெறிக்காதீங்க. நா மொத சொன்ன கதை ஜாக்கிசானோட “NEW POLICE STORY” ரெண்டாவதா சொன்ன கதை அல் பாச்சீனோ நடிச்ச ”INSOMNIA”. இந்த ரெண்டையும் K-9 ங்குற இன்னொரு படத்தோட மிக்ஸ் பண்ணி அடிச்சி அதுல சிபிராஜ் நடிச்சி வந்துருக்க படம் தான் இந்த நாய்கள் ஜாக்ரதை.  

சரி காப்பியடிக்கிறாய்ங்க இல்லை என்னவோ பண்றாய்ங்க. ஆனா எடுத்துருக்க கதையவே இன்னும் செமையா எடுத்துருக்கலாம். முதல்ல சத்யராஜோட சொந்த ப்ரொடக்‌ஷங்குறதால செலவுங்குற ஒண்ணே படத்துல பண்ணல. நீங்க செட்டு போடுங்க போடாதீங்க ஃபாரின் போங்க போகாதீங்க.. ஆனா casting மட்டுமாது ஒழுங்கா பண்ணிருக்கலாம்ல. நீங்க ப்ரொடியூசருங்குறதால சிபிராஜ் தான் ஹீரோ… வேற வழியில்ல நாங்க அத சகிச்சிகிட்டு தான் ஆகனும். ஆனா மத்த கேரக்டரயாது ஒழுங்கா செலக்ட் பண்ணிருக்கலாம்.

ஹீரோவோட போலீஸ் ஃப்ரண்ட்ஸா ஒரு நாலு பேர் வர்றாய்ங்க. அவனுங்க பானி பூரி விக்கிறாய்ங்கன்னு சொன்ன கூட யாரும் நம்ம மாட்டாங்க. அவனுங்க கையில ஸ்னைப்பரெல்லாம் குடுத்து கண்றாவி.. அதுவும் அவிங்க ஒரு சீன்ல “மச்சான் நா சுடல மச்சான்.. நா சுடல மச்சான்” ன்னு சொல்லும் போது.. டேய் சத்தியமா நீங்கதான் சுட்டீங்கன்னு சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாய்ங்கடா.. ஹோட்டல்ல வடை சுடுற மாதிரி இருந்துகிட்டு இவிங்க கையில துப்பாக்கி.

சிபிராஜோட பெரியக்கா மாதிரி இருக்கு ஹீரோயின். அந்தப்புள்ளை வந்து அரைமணி நேரம் வரைக்கும் அது சிபிராஜோட லவ்வரா இல்லை wife ahன்னு ஒரே கன்பியூசன். நிறைய இடத்துல சொல்ல வந்தத தெளிவாவே சொல்லல. படம் ஆரம்பிச்சி ஒரு அரைமணி நேரத்துல நா என்னோட படம் பாக்க வந்த நண்பர்கிட்ட “ஜி படத்துல நிறைய தப்பு இருக்குஜி..”ன்னேன் அதுக்கு அவரு ”ஆமாஜி… இந்தக் கதைய இந்த நாயிட்ட சொன்னதே பெரிய தப்புஜி…” ன்னாரு. ஆஹா நம்மளவிட கோவக்காரரா இருக்காரேன்னு விட்டுட்டேன்.  

படத்தொட பெரிய பலம் சுப்ரமணிங்குற நாய் தான். முதல் ரெண்டு காட்சிலயே சுப்ரமணி யாரு, எப்படிப்பட்டவங்குறத தெளிவா காட்டிடுறாங்க. ஆனா அதுக்கப்புறம் சுப்ரணிக்கும் சிபிராஜூக்கும் இடையில ஒரு bonding கொண்டு வர்றதுக்காக வச்சிருக்க காட்சிகள் தான் ரொம்ப அருவை ரகம். சுப்ரமணிய சிபிராஜ் வழக்கமான நாய்கள பழக்குற மாதிரி என்னென்னவோ சொல்லிப்பாக்குறாரு. ஆனா சுப்ரமணி எதுவுமே செய்யாது.

என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கும் போது திடீர்ன்னு ஒரு ஆர்மி ஆஃபீஸர் “soldier sit” ன்னு சொன்னதும் சுப்ரமணி டக்குன்னு உக்காருறான். இந்த சீன ரொம்ப சாதாரணமா எடுத்துருக்காங்க. இப்ப பாக்குறப்பவே புல்லரிச்சிருச்சி. இன்னும் செம மாஸா எடுத்துருக்கலாம். அதுவும் இண்டர்வலுக்கு முன்னால வர்ற chasing la சுப்ரமணி பட்டையக் கெளப்பிருக்கும். படத்துல உருப்படியான சில விஷயங்கள்ல அதுவும் ஒண்ணு.

சிபிராஜ் wife ah வில்லன் கடத்தி ஒரு இடத்துல புதைச்சிருவான். Wife ah புதைச்ச பெட்டில ஒரு கேமரா வச்சி அதோட லைவ் வீடியோ சிபி லேப்டாப்ல டெலகாஸ்ட் ஆயிகிட்டு இருக்கும். இன்னும் ஆறு மணி நேரத்துல ஹீரோயின் செத்துருவாங்க. (Note this point : 6 மணி நேரம்) அதுக்குள்ள அவங்கள எங்க புதைச்சிருக்காங்கன்னு கண்டுபுடிக்கனும். அங்க தான் காமெடியே ஸ்டார்ட் ஆவுது. சிபிராஜ் அவர் கூட இருக்க அந்த நாலு பானிபூரி நண்பர்களோட இன்வெஸ்டிகேஷன் ஸ்டார்ட் பண்றாரு.

”தமிழ்ப்படம்” படத்துல ஹீரோயின வில்லன் துப்பாக்கியால சுடுவான். புல்லட் travelling la இருக்கும். அப்போ ஹீரோயின் “sivaaaaa” ன்னு கத்தும். உடனே ஹாஸ்பிட்டல்ல இருக்க சிவா எழுந்து exercise பண்ணுவாரு. போய் டீ குடிப்பாரு. மெதுவா ஆட்டோவுல ஏறி ஆட்டோகாரண்ட பேரம்லாம் பேசுவாறு. எல்லாம் பண்ணி கடைசில புல்லட் வர்றதுக்குள்ள ஹீரோயின காப்பாத்திருவாரு. தமிழ்ப்படத்துல சிவா காமெடியா பண்ண இந்த விஷயத்த சிபி இந்தப்படத்துல சீரியஸாவே பண்ணிருக்காரு.

ஆறுமணி நேரம்தான் அந்தப்புள்ளை உயிரோட இருக்கும்னோன நமக்கே கொஞ்சம் படபடப்பா இருக்கும். ஆனா சிபி அப்பதான் நாய ட்ரெய்ன் பண்ணுவாரு. எதுக்கு? ஆறு மணி நேரத்துக்குள்ள கண்டுபுடிக்க. டேய் இதுக்கு மேல நீ நாய ட்ரெய்ன் பண்ணி.. உன் பொண்டாட்டிய கண்டுபுடிச்சி… வெளங்கும். அந்தப்புள்ளைய புதைச்ச இடத்துலருந்து வீடியோ லைவ் டெலகாஸ்ட் ஆகும். ஆனா இவிங்களால கண்டுபுடிக்க முடியாது. அதுக்கு அவன் ஃப்ரண்டு “மாப்ள இண்டர்நெட்ல ஒருத்தன தேடுறதுங்குறது கடல்ல ஊசிய போட்டுட்டு  தேடுற மாதிரிடா” ம்பான். “டேய் பானிபூரி.. உனக்கு கண்டுபுடிக்க தெரியலன்ன தெரியலன்னு சொல்லு.. சும்மா வாயில வந்தத பேசிக்கிட்டு… “

அந்த லைவ் டெலகாஸ்ட்ல ஹீரோயின் இருக்க பொட்டிக்குள்ள தண்ணி வரும். உடனே எந்த ஏரியாவுல மழை பெய்யிதுன்னு பாப்பாங்க. “மாப்ள சென்னைய சுத்தி எந்த ஏரியாவுலயுமே மழை பெய்யல. இப்பதைக்கு தமிழ்நாட்டுலயே ஊட்டில மட்டும் தான் மழை பெய்யிது” ம்பான் ஒரு ஃப்ரண்டு. உடனே சிபி “அப்போ அவள ஊட்டிலதான் புதைச்சிருக்காங்க.. வாங்க ஊட்டிக்கு போவோம்” ம்பாரு. ஆமா ஏண்டா ஊட்டிக்கு போறீங்க. அப்டியே காஷ்மீர் வரைக்கும் பொய்ட்டு வாங்க. ஆறுமணி நேரத்துல எத்தனை ஊருக்குடா போவீங்க. 

கடைசில வில்லனுங்க அவனுங்களா வந்து மாட்டிக்க, சுப்ரமணியும் சிபியும் அவனுங்கள பிண்ணி பெடலெடுத்து அந்தப் புள்ளைய காப்பத்துறாங்க. ஹீரோயின தொலைச்சிட்டு தேடுற கதைகள் இந்த வருஷம் மட்டுமே அரிமா நம்பி, இரும்புக் குதிரைன்னு ரெண்டு வந்துருச்சி. இது மூணாவது. மொக்கை மொக்கையான லாஜிக் வச்சதுக்கு இன்னும் ரெண்டு மூணு ஆங்கிலப்படங்களப் பாத்து கொஞ்சம் ப்ரில்லியண்டான மூவ்ஸ் வச்சிருக்கலாம்.

சிபிராஜ் முன்னால இருந்தத விட இப்ப கொஞ்சம் பாக்குற மாதிரி இருக்காரு. ஆனா போலீஸ் கெட்டப் சூட் ஆகல. வசனம் பேசும்போதும் சரி நடிக்கும்போதும் சரி நிறைய இடங்கள்ல சத்யராஜ் தெரியிறாரு. “doggy style” பாட்டும் “பூமி சுற்றும் வரையே” பாட்டும் சூப்பர். BGM லாம் சுமார் தான்.

படம் முடிஞ்சி போயிட்டு இருக்கும்போது நண்பர் எண்ட ”ஜி.. படத்துல சுத்தமா செலவே இல்லஜி.. 5 லட்ச ரூவாய்ல எடுத்துருப்பாய்ங்க போல”ன்னாரு. அதுக்கு நா ”5 லட்சத்துலயெல்லாம் படம் எடுக்க முடியாதுஜி. நாய வேற வச்சி எடுத்துருக்காய்ங்கள்ள.. நிறைய டேக் வாங்கிருக்கும்ஜி” னேன். டக்குன்னு அவரு ”ஆமாஜி.. சின்ன நாய விட பெரிய நாய் நிறைய டேக் வாங்கிருக்கும்”ன்னு சொல்லி ஆஃப் பண்ணிட்டாரு.  


மொத்தத்துல அருமையா நடிக்கக்கூடிய ஒரு நாய வச்சி (இது சிபிராஜ் இல்ல) சூப்பர எடுத்துருக்க வேண்டிய ஒரு படத்த ரொம்ப சுமாராவே எடுத்துருக்காங்க. 


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

11 comments:

V said...

பரவாயில்லையே..இருவரும் ஒரே மாதிரி எழுதி இருக்கிறோம். நானும் நேற்று படத்தை பற்றி மிகவும் விளக்கி எழுதவே நினைத்தேன்..இருந்தாலும் இந்த படத்துக்காக 2 மணி நேரம் செலவளித்ததே போதும். இன்னும் அதிக நேரம் செலவழிக்க வேண்டாம் என்று சுறுக்கி விட்டேன்.

Anonymous said...

boss, padam coimbatore la nadakura kathai. chennai illa. avan moonjiya paathu tension aayitinganu nenaikiren...

முத்துசிவா said...

//padam coimbatore la nadakura kathai. //

கரெக்ட். ஆனா அந்த ஃப்ரண்ட் சிஸ்டம்ல பாத்து சிபிகிட்ட சென்னை சுத்தி எங்கயும் மழை பெய்யல.. தமிழ்நாட்டுலயே ஊட்டில மட்டும் தான் மழை பெய்யுதுன்னு தான் சொல்ல்வரு. சந்தேகமா இருந்தா ஒரு தடவ செக் பண்ணுங்க :-)

முத்துசிவா said...

@vathikuchi

//இருந்தாலும் இந்த படத்துக்காக 2 மணி நேரம் செலவளித்ததே போதும். இன்னும் அதிக நேரம் செலவழிக்க வேண்டாம் என்று சுறுக்கி விட்டேன்.//

ஹாஹா கரெக்ட்

Anonymous said...

Dark knight படத்துல வர ஜோக்கரை பாத்து மிஷ்கின் காப்பியடிச்சா, அதை பாத்து இவனுங்க அடிக்குறாங்க.. அந்த முகமுடி வாங்குறதுக்காகவாது ஒரு ஐம்பது ருபாய் செலவு பண்ணியிருக்கலாம். கருமம் புடிச்சவங்க வெள்ளை பேப்பர்ல நாலஞ்சு ஓட்டையை போட்டு வில்லன் தலையில மாட்டிட்டாங்க.

ஆனா வில்லனுங்க, பாஸ்போர்டை கூட மண்ணுக்குள்ள பொதச்சு வைக்குற சீன் உலக சினிமாவுக்கே புதுசு

Anonymous said...

கண்ணியமாக எழுத பழகுங்க. படம் பிடிக்கவில்லை, காப்பி என என்ன வேண்டுமானுலும் விமர்சனம் செய்யலாம். அதற்காக நாய் என பிரண்ட் சொன்னார் என சொல்வதெல்லாம் ஓவர்.

Anonymous said...

ஈயத்தைப் பார்த்து இளிச்சதாம் பித்தளை.....
இவுங்களே ஒரு கன்னட கழுதையோட அடிமை ரசிகர்கள். இவுங்க சொல்றாங்களாம் தமிழன் சிபிராஜை நாயென்று. நல்லாயிருக்கய்யா நாயம் ;)

முத்துசிவா said...

@

// காப்பி என என்ன வேண்டுமானுலும் விமர்சனம் செய்யலாம். அதற்காக நாய் என பிரண்ட் சொன்னார் என சொல்வதெல்லாம் ஓவர்.//

இதைப் பார்த்தவுடன் அந்த இரண்டு பத்திகளை நீக்கிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால்

//ஒரு கன்னட கழுதையோட அடிமை ரசிகர்கள். இவுங்க சொல்றாங்களாம் தமிழன் சிபிராஜை நாயென்று. நல்லாயிருக்கய்யா நாயம்//

இதைப் பார்த்தவுடன் அது அப்படியே இருக்கட்டும் என விட்டுவிட்டேன்.

முத்துசிவா said...

@Anonymous

//ஈயத்தைப் பார்த்து இளிச்சதாம் பித்தளை.....//

ஈயத்த பாத்து பித்தளை இளிக்கிறதெல்லாம் இருக்கட்டும்.. இங்க எதுக்கு ஒரு தகரடப்பா வந்து சலம்பிக்கிட்டு கெடக்கு?

Anonymous said...

//சந்தேகமா இருந்தா ஒரு தடவ செக் பண்ணுங்க//

i did checked... none mentioned as chennai... you can check it again...

முத்துசிவா said...

ஹாஹா.. அத திரும்ப போய் செக் வேற பண்ணீங்களா :-) எதுக்கும் நா ஒரு தபா செக் பண்ணிக்கிறேன்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...