ஆந்த்ராவுல
தமிழ் தயாரிப்புகளுக்கு கொடுக்கபடுற மரியாதை தமிழ்நாட்டுல தெலுங்குப் படங்களுக்கு அவ்வளவா
இருந்ததில்லை. ரஜினி, கமல், விக்ரம், சூர்யா, விஷால், கார்த்தின்னு எல்லாரயும் அவங்களுக்குத்
தெரியும். இங்க மட்டையான சில படங்கள் கூட ஆந்த்ராவுல பிச்சிக்கிட்டு ஓடிருக்கு. ஆனா
பாலைய்யா, சிரஞ்சீவி, நாகர்ஜூனா தவற நம்மூர்ல தெலுங்கு நடிகர்கள் யாரையும் தெரியாது.
அவங்க படங்கள் டப் பன்னப்பட்டு ரிலீஸ் ஆனா கூட, ஒண்ணும் பெரிய ரெஸ்பான்ஸ் இருந்ததில்லை.
ஆனாலும் அம்மன், அருந்ததி, நான் ஈ ன்னு ஒவ்வொரு சீசன்லயும் ஒரு தெலுங்குப் படம் நேரடித்
ரிலீஸ்ல நம்மூர்லயும் சக்க போடு போட்டு அவங்களோட ப்ரசன்ஸ்ச நமக்கு காட்டிக்கிட்டுத்தான்
இருக்கு. அந்த வகையில நம்ம எல்லாரையும் அசர வைக்கிற மாதிரியான ஒரு படத்தோட வந்துருக்காரு
எஸ்.எஸ். ராஜமெளலி.
இந்தியாவுலயே
பெரிய பட்ஜெட் படமுங்க, ப்ரபாஸ் தமன்னா, அனுஷ்கா நடிச்சிருக்காங்க. இன்னும் ஒரு பார்ட்
வேற இருக்குதுங்கன்னு நானும் தொவைச்ச துணியவே
துவைச்சா ரொம்ப அருவையா இருக்கும். ஏன்னா கடந்த ரெண்டு வாரமா எல்லா இடத்துலயும் ஒரே
பாகுபலி பேச்சுத்தான். அதனால அந்த மேட்டரல்லாம் அப்டியே விட்டுடலாம்.
இதுவரைக்குமே
தலைவர் படங்களத் தவற, ஒரு படத்த பாத்த உடனே இன்னொரு தடவ பாக்கனும்னு தோணுனது கில்லி
ஒரு படத்துக் மட்டும் தான். பாத்துட்டு தியேட்டர விட்டுட்டு வெளில வரும்போதே, அடுத்த
ஷோ அப்டியே போயிடலாமான்னு யோசிச்சேன். காசில்லாத காரணத்தால் பொத்துனாப்புல ஹாஸ்டலுக்கு
வந்துட்டேன். கிட்டத்தட்ட அதே மாதிரி ஒரு ஃபீல் இந்தப் படத்த பாத்துட்டு வரும்போதும்
இருந்துச்சி. இன்னமும் இருக்கு.
கிராஃபிக்ஸ்ல
ஆங்கிலப்படங்களை மட்டுமே பாத்து வாயப் பிளந்துக்கிட்டு இருந்த நமக்கு, நம்மூர்ல கூட
அதே மாதிரி கொண்டு வர முடியும்ங்குற நம்பிக்கையக் கொடுத்துருக்கு இந்தப் படம். உண்மையிலயே அந்த ப்ரமிப்பு இன்னும் போகல. அந்த ப்ரம்மாண்டமான
Falls ஆகட்டும், மகிழ்மதி கோட்டைகளாகட்டும், யுத்த களமா இருக்கட்டும். அத்தனையும் இன்னும்
கண்ணு முன்னாலயே நிக்கிது. அதுவும் கடைசி அரைமணி நேரம் வாய்ப்பே இல்லை.
கதையோ
திரைக்கதையோ ரொம்பப் புதுசுன்னுலாம் சொல்ல முடியாது. எல்லாம் நமக்குப் பழக்கப்பட்ட
கதை தான். ஆனா அத விஷுவலா நமக்கு ப்ரசண்ட் பன்ன விதத்துலதான் இந்தப் படம் வேற லெவலா
தெரியிது. அதுவும் ஆரம்பத்துல ப்ரபாஸ் வளருற Falls எல்லாம் பாக்கும்போது நம்மளையும்
அறியாம உள்ளுக்குள்ள ரொம்ப சூப்பரான ஒரு ஃபீல்.
வண்ணத்து
பூச்சிங்கல்லாம் உடம்புல சுத்தி இருக்க மாதிரி வர்ற தமன்னா இன்ட்ரோ தாறு மாறு. ஆனா
கோவமா வசனம் பேசுறது, விறைப்பா நடக்குறதெல்லாம் தமன்னாவுக்கு செட் ஆகல. அனுஷ்கா அம்மையார்
சில காட்சிள் வந்தாலும் நல்லா நடிச்சிருக்காங்க. என்ன அம்மையாருன்னெல்லாம் சொல்றேனு
பாக்குறீங்களா? அந்த கெட்டப்புல பாத்தப்புறம் வெறும் அனுஷ்கான்னு டைப் பண்ணவே ஒரு மாதிரி
இருக்கு.
பார்த்த
மாதிரி காட்சிகள் இருந்தா கூட நிறைய இடத்துல புல்லரிக்க வச்சிருக்காங்க. க்ளீஷே ஆனா
கூட சில காட்சிகள் எத்தனை தடவ பாத்தாலும் புல்லரிக்க வைக்கும். பாட்ஷாவுல மாணிக்கம்,
மாணிக் பாட்ஷாவா மாறுற மாதிரி, ஹீரோ அப்பாவியா இருந்து அதிரடி ஆக்ஷனுக்கு மாறுற மாதிரி
சீன்ஸ் இதுவரைக்கும் ஒரு முப்பது படத்துல வந்துருக்கும்.
ஆனா அந்த சீன பாக்குறதுக்கு நமக்கு கொஞ்சம் ஆர்வமாதான் இருக்கும்.
பாபா
படத்துல எல்லாரும் தலைவர் எப்ப வருவாருன்னு காத்துக்கிட்டு இருப்பாங்க. திடீர்னு கவுண்டர்
வந்து இறங்குவாரு. எல்லாரும் வெறியாயிருவாய்ங்க. அப்போ சுஜாதா சாமி ரூமுக்குள்ள போக,
பாபாஜி படத்துலருந்து ஒரு பூ கீழ விழும். உடனே சுஜாதா ஸ்லோமோஷன்ல சிரிச்ச மாதிரி திரும்பி
“பாபா வந்துட்டு இருக்கான்” ம்பாங்க. புல்லரிக்கும். அதே மாதிரி இருபத்தைஞ்சி வருஷாமா சங்கிலியால கட்டப்பட்டு
கஷ்டப்படுற அனுஷ்கா, ப்ரபாஸ் அந்த ஊருக்குள்ள கால வச்சதும் “anushka instinct” ல டக்குன்னு
செம சந்தோஷமா “மகிழ்மதியே உயிர்த்தெழு.. என் மகன் வந்துவிட்டான்னு சிரிச்சிட்டெ சொல்றது
சூப்பர். யாருக்குமே பாகுபலிய ஞாபகம் இருக்காதுன்னு சொன்ன ராணாவப் பாத்து, சிலை வைக்கும்போது
ஊரே “பாகுபலி பாகுபலி” ன்னு கத்துறப்போ அனுஷ்கா ஒரு லுக்கு விடுவாங்க பாருங்க.
ரம்யா
கிருஷ்ணன் செம கெத்து. அதே மாதிரி சத்யராஜூக்கும் செம ரோல். நாசரோட கெட்டப் கொஞ்சம்
மாத்திருக்கலாம். ஏன் சத்யாரஜ், நாசர் மாதிரியான தமிழ் ஆட்களுக்கு வாய்ப்பு குடுத்தீங்கன்னு
கேட்டு எல்லார்கிட்டயும் ஏத்து வாங்குன சுரேஷும் இந்நேரம் படத்த பாத்திருப்பார். அவருக்கே
அந்தக் கேள்விக்கு விடை கிடைச்சிருக்கும். ராணா ரெண்டு கெட்டப்புலயும் சூப்பர். ராணாவுக்கு
டப்பிங் வாய்ஸும், அந்த ஸ்லாங்கும் ரொம்ப நல்லா இருந்துச்சி.
ப்ரபாஸ்
ஆளு மொரட்டுத்தனமா இருக்காரு. லிங்கத்த அடியோட பேத்து தூக்கி எடுத்துட்டுப் போறப்போ,
உண்மையிலயே தூக்கிட்டுப் போன மாதிரி தான் இருந்துச்சி. எஸ். எஸ். ராஜ மெளலியோட ப்ரபாஸுக்கு
இது ரெண்டாவது படம். ஏற்கனவே நம்மாளுங்களுக்கு ரொம்ப பழக்கமான “வாடு போத்தே வீடு… வீடு
போத்தே நேனு” வசனம் ப்ரபாஸ், ராஜமெளலி காம்பினேஷன்ல வந்த சத்ரபதி படத்துல வர்றதுதான்.
ராஜமெளலிய பட்டைய கிளப்பிருக்காரு, வேற லெவலுக்குப் பொய்ட்டாருன்னு தனியா ஒருதடவ புழகத்தேவையில்லை.
இந்த போஸ்டுல உள்ள எல்லா புகழும் அவருக்குத்தான். MM கீரவாணி பாட்டும் சரி, BGM மும்
சரி. படத்துக்கேத்த மாதிரி ப்ரம்மாண்டமாவே குடுத்துருக்காரு.
படத்துல
குறையா ஒரு சில விஷயங்கள மட்டும் சொல்லலாம். ப்ரபாஸ மிகப்பெரிய பலசாலி, வீரன், பயமில்லாதவன்னு
காமிக்கிறதுக்காக நூறடிக்கு ஜம்ப் பன்றது, 100 அடி சிலைய ஒரே ஆளா தடுத்து நிறுத்துறது,
மிகப்பெரிய பாறைய கம்புக்குச்சிய உடைக்கிறமாதிரி படக்குன்னு உடைக்கிறதுங்குற மாதிரி
காமிச்சிருக்க காட்சிகள்ல கொஞ்சம் கவனம் செலுத்திருக்கலாம். முதல் பாதில நிறைய இடங்கள்ல
ஆடியன்ஸ் கேலி பண்ணி சிரிக்க இதெல்லாம் வாய்ப்பு குடுக்குது. ரொம்ப கம்மியான இடைவெளில
பாட்டுங்க நிறைய வருது. அதுவும் எல்லா தெலுங்கு படங்க மாதிரி இதுலயும் தேவையே இல்லாத
ஒரு ஐடம் சாங். என் கூட வந்தவருக்கிட்ட “ஏன் ஜி இந்தப் படத்துல கூட இப்டி ஒரு பாட்டு
வைக்கனுமா?” ன்னேன். அதுக்கு அவரு “அட நீங்கவேறஜீ… இந்தப் பாட்டு இல்லைன்னா ஆந்த்ராவுல படத்த ஃப்ளாப்
ஆக்கி விட்டுருவாய்ங்க ஜீ” ன்னாரு. அதுக்கப்புறம் நோ கொஸ்டீன்ஸ்.
ஏற்கனவே
சொன்னமாதிரி படத்தோட கதை ஒண்ணும் புதுசு இல்லை. இரண்டு பாகமா எடுக்கனும்ங்குற அவசியமும்
இருக்க மாதிரி தெரியல. அவங்க நினைச்சிருந்தா இத ஒரு பார்ட்டாவே எடுத்துருக்கலாம்னு
தான் தோணுது. ஆனா போடுற உழைப்புக்கும், பணத்துக்கும் ஒரே பார்ட்டா எடுத்துட்டா பெத்த
கல்லூ சின்ன லாபம். அதே ரெண்டு பார்ட்டா ரிலீஸ் பன்னா ”அதே கல்லூ… பெத்த பெத்த லாபம்”.
அவ்வளவு தான்.
முதல் நாள்லயே எல்லா கலெக்ஷன் ரெக்கார்டயெல்லாம் உடைச்சிட்டதா சொல்றாங்க. அதுக்கு நிச்சயம் தகுதியான படம் தான். படம்
பாத்துட்டு வந்து ஒரு நாள் ஆனப்புறமும் இன்னும் மனசு அந்த பாகுபலி உலகத்துலயே சுத்திட்டு
இருக்கு. கண்டிப்பா மிஸ் பன்னாம பாக்க வேண்டிய படம்.
2 comments:
செமையான விமர்சனம்
வாழ்த்துக்கள்
பல இடங்களில் சிரித்தேன்
தொடர்ந்து எழுதுங்கள்
தம +
பெத்த கல்லூ, பெத்த லாபம்... :-)) good writing Siva
Post a Comment