Saturday, July 18, 2015

மாரி – Mass Unlimited!!!


Share/Bookmark
ஒரு படம் ஓடுற ரெண்டரை மணி நேரமும் கைதட்டி, விசிலடிச்சி, சிரிச்சிட்டு இருந்தா கூட, தியேட்டர விட்டு வெளில வந்த உடனே அது அனைத்தையும் மறந்துட்டு இது செம்ம மொக்கப்பா, கொன்னுட்டாங்கப்பா, செஞ்சிட்டாங்கப்பான்னு புளுகுறதுக்கு சில பேருக்கு எப்படி மனசு வருதுன்னு தெரியில. இப்போ ஃபேஸ்புக்குகள்ல நல்லா போயிட்டு இருக்க யாவாரம்னு பாத்தா மெமி க்ரியேஷன்தான். எவண்டா எப்படா சிக்குவான்னு பாத்துக்கிட்டு இருக்கதுதான் இப்ப வேலை. ஆனா நல்லா இல்லாத ஒரு விஷயத்த கலாய்க்கிறதுல தப்பே இல்லை. ஆனா ஓட்டுறதுக்காகவே ஒரு விஷயத்த மொக்கை பண்ணக்கூடாது. ரெண்டு நாளா மாரி பத்தின மெமிக்களப் பாத்துட்டு, படம் பாத்தப்புறம் தான் தெரியிது அந்த மெமி க்ரியேட் பண்ண எவனுமே படம் பாக்கலன்னு. அதுமட்டும் இல்லை அத ஷேர் பண்றவனுங்களும் படம் பாக்கல.

வழக்கம்போலவண்டான்யா தனுஷ் படம்னா பில்டப் குடுக்குறதுக்குன்னு நீங்க நினைக்கலாம். பரவாயில்லை. எனக்கு சரின்னு படுற விஷயத்த எத்தனை தடவையானாலும், எத்தனை பேர் தப்புன்னு சொன்னாலும் பதிவு செய்ய தவற மாட்டேன்.  

இந்த மசாலா பட அலர்ஜி உள்ளவனுங்க நிறையா பேர் இருக்கானுங்க. அதாவது தமிழ்நாட்டுலயே பொறக்காதவனுங்க மாதிரியும், ஆங்கில மற்றும் கொரிய மொழிகளில் வந்த தரமான திரைப்படங்களை மட்டும்தான் பாப்பானுங்கங்குற மாதிரியும் அள்ளி விடுவானுங்க. நாலு பேர் முன்னால ஒரு மசால படத்த நல்லாருக்குன்னு சொல்றதக் கூட அசிங்கமா நினைக்கிற கூட்டம் கூட இருக்கு.  நம்ம சினிமாவோட முதுகெலும்பே மசாலாப்படங்கள் தான்.

நம்மாளுங்ககிட்ட இருக்க இன்னொரு ப்ரச்சனை எல்லா படங்களையும் ஒரே தராசுல தான் எடை போடுவாய்ங்க. சமீபத்துல காக்கா முட்டைய பாத்துட்டா கொஞ்ச நாளுக்கு எல்லா படத்தையும் என்னைய்யா காக்கா முட்டை எவ்வளவு சூப்பரா ரியலா எடுத்துருந்தாய்ங்க. அது படம்யா… இது என்ன இப்டி இருக்கு” ங்க வேண்டியது. அந்த மாதிரி காக்கா முட்டைகள் ரெண்டு மூணு வருஷத்துக்கு ஒரு முறை வர்றதனாலதான் இவ்வளவு சிறப்பா கொண்டாடப்படுது. வர்றது பூரா காக்கா முட்டையாவே இருந்தா அப்ப தெரியும்.

சரி மாரிக்கு வருவோம். என்னைப்பொறுத்த அளவு தனுஷுக்கு இன்னொரு பெஸ்ட் படம். எந்த இடத்துலயுமே போர் அடிக்கல. சொல்லபோனா அஞ்சி நிமிஷத்துக்கு ஒரு தடவ காமெடிக்கோ, இல்லை மாஸ் சீனுக்கோ தியேட்டர்ல கைதட்டலும் விசில் சத்தமுமாத்தான் இருந்துச்சி. நா சொல்றது டைட்டில் போடும்போதோ இண்ட்ரோ சீனும்போதோ இல்லை. படம் முழுசுக்கும் அப்டித்தான்.

ரொம்ப நாளுக்கு அப்புறம் நிறைய காட்சிகள்ல புல்லரிக்க வச்ச ஒரு படம் மாரி. முன்னெல்லாம் தலைவர் படம் பாக்கும்போது அப்டித்தான் இருக்கும். படையப்பா, சிவாஜிலாம் பாத்த எஃபெக்ட் படம் பாத்து ரெண்டு மூணு நாள் அப்டியே இருக்கும். ஆனா கொஞ்ச நாளா, அந்த மாதிரி புல்லரிக்கிற காட்சிகள் எங்கயாவது எப்பவாவது ஒவ்வொணு மட்டுமே வந்துக்கிட்டு இருந்துச்சி. எனக்கே ஒரு சந்தேகமாப் போச்சி. ஒரு வேளை வதவதன்னு நாம படம் பாக்குறதால நாம மந்தமாகி அந்தமாதிரி எதுவும் இப்ப தோணமாட்டுதோன்னு. ஆனா எனக்குள்ல அந்த ரசனை அப்படியேத்தான் இருக்கு, இப்ப வர்ற படங்கள்ல தான் அந்த மாதிரிக் காட்சிகள் கம்மிங்குறத மாரி புரிய வச்சிது. 

காளி வெங்கட், இன்ஸ்பெக்டர் விஜய் ஜேசுதாஸ்கிட்ட தனுஷப் பத்தி பில்டப் குடுக்க, குடுக்க ஆரம்பிக்கிற தனுஷ் இண்ட்ரோவுலருந்து, மாரி இண்ட்ரோ சாங் முடியிற வரைக்கும் உள்ள பத்து நிமிஷமும் தியேட்டர் ஃபுல்லும் நிக்காத விசில் சத்தம். செம ஸ்டைல் & மாஸ் ஓப்பனிங்.
இன்னும் சொல்லபோன நேத்துலருந்து வந்த நெகட்டிவ் ரிவியூவ்ஸ்லயெல்லாம் ரோபோ சங்கர்தான் நடிச்சிருக்காரு, அனிரூத் பின்னிருக்காரு தனுஷ் தெரியவே இல்லைன்னு என்னென்னவோ சொல்றாய்ங்க. தனுஷை மட்டம் தட்டுறதுக்கான வேலையாத்தான் இதெல்லம் தெரியிது.  ரோபோ சங்கர் ஒன் லைனர்ஸ் ல பட்டைய கெளப்பிருந்தாலும் ஒவ்வொரு காட்சிலயும் தனுஷோட ஸ்க்ரீன் ப்ரசன்ஸ்தான் செமையா இருக்கு.  

இன்னொன்னு இண்டர்வல் ட்விஸ்ட் ரொம்ப கெஸ் பன்ற மாதிரி இருக்காம். டேய் மொதல்ல அது ட்விஸ்டே இல்லைடா. இந்த மாதிரியான படங்களுக்கு ட்விஸ்ட்ங்குற ஒரு சமாச்சரமே தேவையில்லாத ஒண்ணு. இண்டர்வலுக்கு முந்துன சீன்ல பாக்குற எல்லாருக்குமே அடுத்தது என்ன நடக்கும்னு நல்லா தெரியிற மாதிரி தான் எடுத்துருப்பாய்ங்க. ஆனா இவய்ங்க மட்டும் ட்விஸ்ட கெஸ் பன்னிட்டாய்ங்களாம்.

படம் ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்குமே ஒரே ஸ்பீடுல கொஞ்சம் கூட முகம் சுழிக்கிற மாதிரியோ அருவையாவோ இல்லாம போகுது. அனிரூத் BGM கொஞ்சம் இறைச்சலா இருந்தாலும், அந்த “ஜிந்த்தா… ஏ ஜிந்த்தா” தீம் வாய்ப்பே இல்லை. பட்டையக் கெளப்புது.

முதல் பாதில முக்கால்வாசிக் காமெடி கால்வாஸி மாஸ்னா ரெண்டாவது பாதில கால்வாசி காமெடி முக்கால்வாசி மாஸ். தெறிக்க விட்டுருக்காய்ங்க. அதுவும் மாமூல் வசூல் பண்ண வர்ற கேங் முன்னாடி, தனுஷ் ஸ்டைலா உக்காந்துட்டு ஒவ்வொரு பட்டாசாத் தூக்கி போடுறது செம்ம.

”எரிஞ்சி போன கூண்டுலருந்து போன புறாவெல்லாம் திரும்ப வராது மாரி… வா நம்ம இந்த ஏரியாவ விட்டுப் போயிடலாம்னு ரோபோசங்கர்  சொன்னதும் டக்குன்னு ஒரு புறா வந்து தனுஷ் பக்கத்துல உக்காரும். இது நிச்சயமா predictable சீன் தான். இருந்தாலும் ரொம்ப ஃபீல் குட் சீன். “அதுங்களுக்கே இதுதான் நம்ம இடம்னு தெரியிது. உங்களுக்கு ஏண்டா தெரிய மாட்டேங்குது” ன்னு தனுஷ் திரும்ப கேக்குறது சூப்பர்.

துப்பாக்கி படத்துல தங்கச்சிய கடத்துனவன் எங்க இருக்கான்னு தெரியாம விஜய் தேடிட்டு இருப்பாரு. வில்லன் குரூப் ”நம்ம இருக்க இடத்த யாராலையும் கண்டுபிடிக்க முடியாது”ன்னு சொல்லிட்டு கழுத்துல கத்தி வைக்கப் போகுதும்போது, தூரத்துல சின்னதா நாய் கொலைக்கிற சத்தம் கேக்கும். அப்ப நமக்கு ஒரு ஃபீல் இருக்கும் பாருங்க. அந்த ஃபீலுக்குப் பேருதான் சார் “மாஸ்”. அந்த மாதிரி மாஸ் காட்சிகள் எல்லாருக்கும் வைக்க முடியாது. வச்சாலும் அந்த ஃபீல் க்ரியேட் பன்றது ரொம்ப கஷ்டம். ஆனா அந்த மாதிரி நிறைய இடத்துல சீன்ஸ் வச்சி, எல்லா இடத்துலயுமே நமக்கு அந்த ஃபீல க்ரியேட் பன்னிருக்காங்க.

அனைத்து பெரிய வெப்சைட்டுகளோட விமர்சனங்களிலும் பாலாஜி மோகன் அடுத்த படத்தில் come back தருவார் என எதிர்பார்ப்போம்னு போட்டுருக்காய்ங்க. அவரு இதுக்கு முன்னால எடுத்தது ரெண்டு படம். ரெண்டு படத்தையும் முழுசா நா பாக்கல. சத்தம் போடாமல் பேசவும் ன்னு ஒரு படத்த ஒரு நாள் பஸ்ல போட்டாய்ங்க. நா கொஞ்ச நேரத்துல கண்ணை மூடி தூங்கிட்டேன். அவர் இதற்கு முன்னால எடுத்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றிப்படங்கள் இல்லை. அப்படி இருக்கும்போது இதுல அவர் சருக்கிட்டதா எழுதுற யார மட்டப் படுத்தன்னு தெரியல.

மேல சொன்னா மாதிரி நம்மாளுங்க கிட்ட உள்ள கெட்டப் பழக்கம் ஒரே மாதிரிப் படங்களை ஒருத்தர்கிட்டருந்து எதிர்பாக்குறது தான். ஒரு மாஸ் ஆக்‌ஷன் எண்டர்டய்னரா மாரில பாலாஜி மோகன் 100 % வெற்றி பெற்றிருக்கிறார்னு தான் சொல்லனும். “இந்த டைரக்டர் இந்த டைப் படங்கள் மட்டும்தான் எடுப்பார்” ன்னு பேரெடுக்குற இயக்குனர்களைக் காட்டிலும் “இந்த டைரக்டர் எந்த மாதிரி படம்  எடுத்தாலும் நல்லா எடுப்பார்” ன்னு பேரெடுக்குறவங்க தான் நீண்ட நாள் நிலைச்சி நிப்பாங்க.

காஜல் அகர்வால ஹைட்டெக் கலர்ஃபுல் தெலுங்கு செட்டுகள்ல பள பளன்னு பாத்துட்டு இந்தப் படத்துல லோக்கல் ஏரியால பாக்க கொஞ்சம் மனசு கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா ஓக்கே. புராக்கூண்டு பத்தி எரிஞ்சிட்டு இருக்கும்போது நேரா காஜல் புறாக்கூண்ட நோக்கி ஓடும்போது அப்டியே கட் பண்ணி அடுத்த ஷாட்டுக்குப் போக, நா கூட கேம் ஆப் த்ரோன்ஸ்ல தினாரிஸ் டார்கேரியன் தீக்குள்ள இருந்து பொறிச்ச ட்ராகன் குஞ்சுகளோட வர்ற மாதிரி இவனும் புறாவெல்லாம் பத்தரமா பாதுகாத்து வச்சிருந்து உள்ளருந்து வருவாளோன்னு பயந்துட்டேன். அப்புறம் அந்த விமர்சகர் வேற அதுக்கும் இதுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறதுன்னு ஆரம்பிச்சிருவாரு. நல்லவேள அப்டி எதுவும் இல்லை.

படத்துல இன்னும் கொஞ்சம் கான்சண்ட்ரேட் பண்ணிருக்கலாம்ன்னு ஒரு சில விஷயங்களைச் சொல்லலாம். ஏரியாவ கண்ரோல் பன்ற தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரொம்ப குறுகய வட்டத்துக்குள்ளயே இருக்கு. அதாவது தனுஷ் பெரிய ரவுடின்னு எல்லாரையும் மிரட்டுறாரு. ஆனா அவரு பெரிய ரவுடிங்குறதுக்கு அடையாளமா அவரை விட ஒரு பெரிய ரவுடிக்கு கீழ வேலைபாக்குறதும், எட்டு வருஷத்துக்கு முன்னால நடந்த ஒரு கொலையுமே பின்னனியா காமிக்கப் படுதே தவற வேற காட்சிகள் இல்லை.

உதாரணமா புதுப்பேட்டையில தனுஷ் பெரிய ரவுடியா ஃபார்ம் ஆனப்புறமும், அழகம் பெருமாள் அவர் பொண்ணு ப்ரச்சனையச் சொல்லி உதவி கேப்பாரு. அப்போ அந்த வீடியோ கேசட்ட வாங்க போகும்போது கூட தனுஷ் கண்ண காட்டுனதும் தனுஷோட அள்ளக்கை ஒருத்தன ஒரே போடுல போட்டுத்தள்ளுவான். அதுக்கு தனுஷ் “சவுண்ட் வுட்ரான் பாரு.. இன்னும்  ப்ராக்டிஸ் வேணும்” ன்னு அசால்ட்டா சொல்லுவாறு. அந்த மாதிரி அவரோட பேக்ரவுண்ட மெயிண்டெய்ன் பன்ற மாதிரி ஒருசில காட்சிகள் வச்சிருக்கலாம். அப்புறம் புறாப் பந்தையம் வருஷா வருசம் நடக்குதா இல்லை மாதா மாத போட்டியான்னு ஒரு கன்பீசன். நினைச்ச நேரத்துல கப்பு, டோர்னமெண்டுன்னு பேசிட்டு இருக்காய்ங்க.

வில்லன் சற்று டொம்மை மாதிரி இருக்காப்ள. ஆனா அவனோட கேரக்டரே ரொம்ப கெத்தான கேரக்டரெல்லாம் இல்லாம, தனுஷுக்கு எப்பவுமே அடங்கி நடக்குற மாதிரியான கேரக்டர்ங்குறதால ஓக்கே தான்.  விஜய் ஜேசுதாஸ் கெட்டப்பும் கேரக்டருக்கும் நல்லாருக்காரு. ஆனா வாய மட்டும் நம்ம நவரச நாயகன் ஸ்லாங்குல பேசுற மாதிரி “ஏய்.. அவ்வ்வ்.. மிஷ்டர் சந்திரமெளலி.. என்ன காலிங்” ன்னு வாய்க்குள்ள பீடா மென்னு வச்சிருக்க மாதிரியே வச்சிருக்காரு.

படம் முழுக்க சிகரெட் காட்சிகளும், பார் காட்சிகளும் எக்கச்செக்கம். ஸ்லோ மோஷன் காட்சிகள்ல அது கெத்தாத் தெரிஞ்சா கூட, ரொம்ப நாளா இந்த மாதிரி காட்சிகள அதிகம் பாக்காம இருந்து திடீன்னு அன்லிமிட்டடா இந்தப் படத்துல வர்றதால கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு.
ஒரு சில நெகடிவ் இருந்தா கூட, அதெல்லாம் படம் பாக்குறவங்கள ஒண்ணும் பெருசா பாதிக்கல. ஒரு படத்தோட முதல் குறிக்கோள், படம் பாக்குறவங்கள எதோ ஒரு வைகையில எங்கேஜ் பன்னி வச்சி எண்டர்டெய்ன் பன்றது. அத மாரி 100% கரெக்டா பன்னிருக்குங்குறதுல எந்த சந்தேகமும் இல்லை.

நிச்சயம் மாரி, சமூக வலைத்தளங்கள்லயும் பிரபல பத்திரிக்கை விமர்சனங்கள்யும் ரேட் பண்ணப்பட்டிருக்க அளவு ஒரு சுமாரான படமோ மோசமான படமோ இல்லை. நிச்சயம் ரெண்டரை மணி நேரத்திற்கு எண்டர்டெண்ட்மெண்ட் கேரண்டி தரக்கூடிய ஒரு படம்.


Mark my words. அடுத்த சூப்பர்ஸ்டார் அப்டிங்குற ஒரு விஷயம் இருந்தா, அதுக்கு தகுதியான ஆள் தனுஷ் தான்ங்குறத இந்தப் படமும் ஒரு அடி முன்னால போய் உறுதிப் படுத்திருக்கு. தியேட்டர்ல வந்த ஒவ்வொரு விசில் சத்தமும் இதுக்கு சாட்சி. (இதுக்காக எத்தனை பேர் கழுவி ஊத்தப் போறாய்ங்களோ.. )


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

8 comments:

Alex said...

Enna siva Next super star nu sollitinga konjam over than mmm pakkalam

தனிமரம் said...

இப்படியே உசுப்பேர்த்தியேஏஏஏஏஏஏஏஏஎ![[[

Anonymous said...

Othukamaaten..Othukamaaten...Othukamaaten...Adutha Superstar Engal Annan STR Thaan...VAALU Padam release aagatum, una oru kai paakaren Muthusiva...

rmn said...

மாரி=மாசு

ram said...

கன்னட வந்தேறி நடிகன்

Anonymous said...

What? next super star ah? idhu rombavae too much thaan.. :)

Anonymous said...

you are Danush fan,maybe for you he looks like a super star.I read all your Danush moivie reviews.You never given bad comments to his all movies, even all his duppa movies also.It seems to be you are not eligible to comment other movies.

Anonymous said...

Today only watched Maari Movie! indha padam mass unlimited and adutha super star ah! really siripu thaanga mudiyalai :) :)

Neenga Rajini oda tharathai yae kuraichiduveenga pola irukae... :D

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...