சிலபேரு உயிரோட இருக்கும்போது அவங்க எவ்வளவு
பெரிய ஆள்ங்குறது அவங்களுக்கே தெரியிறதில்லை. இறந்த அப்புறம்தான் தூக்கி வச்சிக் கொண்டாடுறாங்க.
அப்துல் கலாம் அய்யா ஒரு வேளை இப்ப நடக்குறதயெல்லாம் பாத்துக்கிட்டு இருந்தார்ன்னா
அவரே நம்ப மாட்டாரு. ஒரு தனி மனிதனுக்கு இவ்வளவு மரியாதை, எத்தனை ரசிகர்கள், எத்தனை
ஃபாலோயர்கள். அதுல முக்கால்வாசி ”திடீர்” ரசிகர்கள், ”திடீர்” பாலோயர்கள். சரி அவங்கள பின்னால கவனிச்சிக்குவோம். சமீப காலங்கள்ல இவ்வளவு பேர் ஒரு தனிமனிதனோட இறப்புக்கு
வருந்துவது இதுதான் முதல் தடவ. ஒரு சில அரை கிறுக்கர்களத் தவற எல்லாருமே கலாம கொண்டாடுறாங்களே
தவற யாரும் திட்டல. அந்த கிறுக்கய்ங்க கூட இத செய்யாம விட்டுட்டாருன்னு திட்டுறாய்ங்களே
தவற “இப்புடிப் பன்னிட்டாரே”ன்னு சொல்லல. அந்த ஒண்ணே சொல்லுது இவர் எவ்வளவு பெரிய மனிதர்னு.
அவரோட மறைவு நிச்சயம் ஒரு பெரிய இழப்பு தான்.
ஆனா இந்த ரெண்டு நாள்ல தான் நம்ம எவ்வளவு
போலியா வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்னும் தெரியிது. வண்டாருய்யா கருத்து சொல்லன்னு யாரும்
ஆரம்பத்துலயே அசிங்கமா திட்டவேணாம். முழுசா படிச்சிட்டு கொஞ்சம் யோசிச்சி பாத்தப்புறம்
தப்புன்னா கழுவி ஊத்துங்க தப்பில்லை. இடம் பொருள் ஏவல்ங்குறது எல்லா விஷயங்களுக்குமே
உண்டு. ”மஞ்சுளா அம்மாவைப் பிரிந்து சோகத்தில் வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” ன்னு கேப்டன் ஒரே ஒரு வார்த்தை தப்பா சொல்லிட்டாரு.
அத வச்சி இப்ப வரைக்கும் ஓட்டுறோம். அன்னிக்கு எத்தனையோ பேர் இறங்கல் தெரிவிக்க கூட
இல்லை. அவங்கல்லாம் எஸ்கேப் ஆயிட்டாங்க. ஆனா மஞ்சுளா அவர்களோட இறுதி சடங்குளையெல்லாம்
நேரலையா கேப்டன் டிவில ஒளிபரப்பினாரு கேப்டன். அந்த ஒரு தப்பான வார்த்தை, அவர் அன்னிக்கு செஞ்ச நல்ல
விஷயங்கள் எல்லாத்தையும் மறக்க வச்சிருச்சி.
நல்லது செய்யனும்னு ஆசைப்பட்டு வர்றவங்க
செய்யிற சின்ன தப்பால மாட்டிகிறதும், எதுவுமே பன்னாம இருக்கவங்க safe ah எஸ்கேப் ஆயிடுறதும் இப்ப ரொம்ப சகஜமாயிருச்சி.
அதானால சில விஷயங்கள பன்றதுக்கு பண்ணாமலேயே இருக்கலாம் போலருக்கு. நேத்து கூட அப்படி
ஒரு விஷயம் ஆதித்யா டிவில நடந்துச்சி.
மதுரை முத்து ஒரு காமெடி சொல்லுவாரு.. “எங்களை கல்யாண
வீட்டுக்க்கு ப்ரோக்ராம் பன்ன பேசக்கூப்புடுவாங்க.. போவோம். காதுகுத்துக்கு ப்ரோக்ராம்
பன்ன கூப்புடுவாங்க போவோம். அரசியல் கூட்டத்துக்க்கு ப்ரோக்ராம் பன்ன கூப்டுவாங்க.
அங்கயும் போவோம். திடீர்னு ஒருநாள் ஒருத்தர் இறந்ததுக்கு பேசக்கூப்புட்டாய்ங்க. நாங்க
பயந்துட்டோம். அங்க போனப்புறம் “யோவ் சாவு வீட்டுல எப்புடிய்யா காமெடி சொல்றது?” ன்னு
அவய்ங்ககிட்ட கேட்டேன். அதுக்கு அவிங்க “கொஞ்சம் சிரிப்பு வராத மாதிரி சோகமான ஜோக்கா
சொல்லுங்க தம்பி” ன்னு சொன்னாய்ங்க. “அது எப்புடிய்யா சிரிப்பு வராத ஜோக்கு சொல்றது?”
ன்னு கேட்டேன். “இந்த டிவிலயெல்லாம் சொல்லுவீங்களே தம்பி அந்த மாதிரி சொல்லுங்க” ன்னு
சொல்லி அசிங்கப்படுத்திட்டாருன்னு.
மதுரை முத்து சொன்ன காமெடிய நேத்து ஆதித்யா
டிவில செஞ்சே காமிச்சாய்க. ”அடிக்கடி கடிக்கடி”ன்னு நினைக்கிறேன். ப்ரகாஷ்ராஜ் மாதிரி
ஒருத்தன். பாக்யராஜ் மாதிரி ஒருத்தன். ரெண்டு பேரும் கலாம் இறந்ததுக்கு ரொம்ப சோகமா
ஹோஸ்ட் பண்ணிட்டு இருக்காய்ங்க. ஃபோன் பன்றவய்ங்க கிட்டயும் கலாம பத்தி ரொம்ப உருக்கமா
பேசிட்டு, “அய்யா நம்மளவிட்டு போனது ரொம்ப வருத்தமான செய்தி… சரி நீங்க இந்த காமெடி
சீன பாருங்க” ன்னாய்ங்க. அதப்பாக்கவே ரொம்ப awkward ah இருந்துச்சி. அவங்க இந்தப் ப்ரோக்ராம்
பன்னாமலேயே இருந்துருக்கலாமோன்னு தோணுச்சி.
நகைச்சுவைக்குன்னே இருக்க சேனல்ல இப்படி
ஒரு ப்ரோக்ராம் கண்டிப்பா பன்னித்தான் ஆகனும்னு எந்த அவசியமும் இல்லை. அடுத்தவங்க நம்ம
ஏன் ஃபீல் பன்னலன்னு கேள்வி கேட்டுருவாங்களோன்னு தான் இன்னிக்கு பல பேர் திரியிறாய்ங்க.
நம்ம இன்னிக்கு செய்யிற நிறைய விஷயங்கள் “பாருப்பா நானும் கலாம் இறந்ததுக்கு ஃபீல்
பன்றேன் நல்லா பாத்துக்கோ. நாளைப்பின்ன இல்லைன்னு சொல்லிடக்கூடாது” ங்குற மாதிரி தான்
இருக்கு.
இன்னொரு மெண்டல் குரூப்பு. ஜெயலலிதாவும்,
கலைஞரும் இறுதி அஞ்சலி செலுத்தப் போகலன்னும், தனுஷ் ஏன் நேத்து பர்த்டே கொண்டாடுனாருன்னும்
எதோ கொலைக்குத்தம் பன்ன லெவல்ல கழுவி ஊத்துறாய்ங்க. சரி ஒரு நிமிஷம். கலாம் இறந்துட்டாருங்குறதால
உங்களோட ரெகுலர் ஆக்டிவிட்டீஸ்ல எதயாவது நிறுத்திருக்கீங்களா இல்லை மாத்திருக்கீங்களா?
இல்லை ஒரு வேளை சாப்பாட்டையாவது நிறுத்திருக்கோமா?
இல்லை போன ரெண்டு நாள்ல பிறந்தநாள் கொண்டாடுன உங்க நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லாம
இருந்துருக்கீங்களா? நம்மளப் பொறுத்த அளவு கலாம் ஃபோட்டோவ ப்ரொஃபைல் பிக்சரா மாத்திக்கிறதும்
அவரப்பத்தின எதாவது மெசேஜ் வந்த அத உடனே நாலு பேருக்கு அனுப்புறதும், அவர் சொன்ன
“quotes” ah கூகிள்ல தேடி அத ஸ்டேட்டஸா போட்டுக்கிறதும் தான் நம்ம காட்டுற வருத்தம்.
இதே தனுஷ் யாருக்கும் சொல்லாம வீட்டுல நல்லா பிறந்தநாள் கொண்டாடிட்டு, ஃபுல்லா சரக்கடிச்சி தூங்கிட்டு
மறுநாள் காலையில ஒரு கலாமுக்காக ஒரு சோகமான ட்வீட் போட்டிருந்தா இந்நேரம் அந்த லெவலே
வேறயாயிருக்கும்.
ஒரு விஷயம் செஞ்சாலும் தப்பு கண்டுபுடிப்போம். செய்யலன்னாலும் தப்பு கண்டுபிடிப்போம். Maggi la நச்சுப்பொருள் இருக்குன்னு தடை பண்ணா, ஏன் மத்ததை தடை பன்னலன்னு கேப்போம். விஷால் நாய்களுக்காக போராட்டம் இருந்தா ஏன் ஈழத்துக்கு போராடலைன்னு கேப்போம். இந்த Celebrities ah கேள்வி கேக்குறதுலயும் அவிங்கள தொவைச்சி காயப்போடுறதுலயும் நமக்கு இருக்க சொகம் இருக்கே? அடடா.. ஏன்னா நாம என்ன சொன்னாலும் அவங்க கேட்டுக்குவாங்க. ரியாக்ட் பன்ன மாட்டாங்கங்குற தைரியம். விஷால நாய்களுக்கு போரட்டம் பண்ணிட்டு ஈழத்துக்கு ஏன் போராடலைன்னு கேக்குறவிங்களால அவிங்க ஆஃபீஸ் கேண்டீன்ல “இன்னிக்கு ஏன் பொங்கல் போடாம இட்லி போட்டீங்க? “ ன்னு கூட கேக்க முடியாது. ஏன்னா அங்க இன்ஸ்டண்ட் ரியாக்ஷன் இருக்கும்.
நம்ம செஞ்சா அது நியாயம். அடுத்தவன் செஞ்சா
அது தப்பு. அவங்களும் மனுஷங்கதாங்குற ஒரு அறிவுகூட இல்லாம வாய் இருக்குன்னு என்ன வேணாலும்
பேச ஆரம்பிச்சிடுறோம். கலைஞரோட உடல்நிலை என்னன்னு எல்லாருக்குமே தெரியும். ஜெயலலிதாவுக்கும்
கொஞ்ச நாளா உடல்நிலை சரியில்லைன்னு தகவல்கள்தான் வந்துட்டு இருக்கு. அப்படி இருக்கும்போது
அவங்க இறுதிஅஞ்சலிக்கு போகலன்னு அசிங்கமா பேசுறத எந்த வகையில சேத்துக்கிறது?
கடந்த ரெண்டு நாளா நீங்களே நல்லா யோசிச்சி
பாருங்க. கலாம் சம்பந்தமா எத்தனை செய்திய wats app la நம்ம அனுப்பிருக்கோம். அதுல எத்தனை
உண்மை? எத்தனை பொய்யி? கலாம் இறந்துட்டாருங்குற செய்தி மட்டும் உண்மை. உடனே பத்துவருசத்துக்கு
முன்னால எடுத்த ஒரு ஃபோட்டோவ “கலாமின் இறுதி நிமிடங்கள்” ங்குற பேர்ல போட்டுவிட்டாய்ங்க.
ஒருத்தன் நாளைக்கு எல்லாருக்கும் லீவு. கவர்மெண்ட்
சொல்லிருச்சுன்னு அனுப்புறான். ராமேஸ்வரத்துக்கு கவர்மெண்ட் இலவசமா பஸ் இயக்குதுன்னு
ஒருத்தன் கிளப்பி விடுறான். (இதயெல்லாம் அரசாங்கம் அறிவிக்கிறதுக்கு முன்னாலயே). திடீர்ன்னு
இன்னிக்கு காலையில ஒபாமா கலாமுக்கு இறுதி அஞ்சலி செலுத்துறதுக்கு ராமேஸ்வரத்துக்கு
வர்றார்ன்னு அனுப்புறாய்ங்க.
இறந்த செய்தி வந்து அரைமணி நேரம்கூட ஆகல.
கலாமைப் பத்தி பக்கம் பக்கமா கட்டுரைங்க வந்து குவியிது. கலாம் இத சொல்லிருக்காரு.
அத சொல்லிருக்காரு. அவ்வளவுயும் பாத்து “டேய்.. கலாம் இவ்வளவு சொல்லிருக்க்காராடா..
இவ்வளவு நாள் எங்கடா போயிருந்தீங்கன்னு தான் தோணுச்சி. அதயெல்லாம் கலாம் தான் சொன்னாருன்னு
நாம எத்தனை பேருக்கு உறுதியாத் தெரியும்? எதோ வருது நாமளும் அனுப்புறோம்.
இந்த வாட்ஸ் ஆப் வந்ததுலருந்தே என்னன்னு
தெரியல நம்மாளுங்களுக்கு “தாய்க்கு ஒரு ப்ரச்சனைன்னா ஆம்புலன்ஸ கூப்புடுவேன். தாய்நாட்டுக்கு
ஒரு ப்ரச்சனைன்னா நானே ஓடுவேன்” ன்னு உணர்ச்சி பொங்க எவனுக்காச்சும் உதவி பன்னியே ஆகனும்னு
அடம்புடிக்கிறானுங்க. எவனுக்காச்சும் ரத்தம் கேட்டு மெசேஜ் வருதா? இல்லை இத ஒருத்தருக்கு
அனுப்புனா பாதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு வாட்ஸ் ஆப் பத்து பைசா தர்றேன்னு ஒத்துக்கிச்சின்னு
மெசேஜ் வருதா? Forward ah போட்டுவிடு. அது உண்மையா பொய்யா? யாருக்கு என்ன போச்சு?
போனவாரம் திடீர்ன்னு ஆக்சிடெண்ட் ஆன ஒருத்தனுக்கு
அவசரம “A +ve “ வேணும்னு ஒரு மெசேஜ். நானும் சரி உதவலாமேன்னு ஒரு நாலுபேருக்கு அனுப்புனேன்.
அப்புறம் விசாரிச்சிப் பாத்தாதான் தெரியிது. அவனுக்கு ஆக்ஸிடெண்ட் நடந்தது ரெண்டு வருஷத்துக்கு
முன்னாடி. ஆக்ஸிடெண்ட் ஆனவனுக்கே அந்த மெசேஜ் திரும்ப போயிருக்கு. “அடப்பாவிகளா ரெண்டு
வருஷம் முன்னால ஆக்ஸிடெண்ட் ஆன எனக்கு இன்னுமாடா ரத்தம் கேட்டுட்டு இருக்கீங்க” ன்னு
புலம்புன சம்பவங்களும் இருக்கு. இன்னிக்கு ”ராத்திரி 12 மணிலருந்து 3 மணிவரைக்கும்
ரொம்ப கொடிய ரேடியேஷன்கள் பூமியைத் தாக்குறதால எல்லாரும் ஃபோன சுட்ச் ஆஃப் பண்ணி வைங்க.
இத நாசா கூட கன்ஃபார்ம் பன்னிருக்காங்க” ன்னு ரெண்டு மாசம் முன்னால
ஒரு மெசேஜ். ”நாசாவே சொல்லிட்டாங்களா.. அப்ப உண்மையாத்தான் இருக்கும்”னு நானும் நாலு
பேருக்கு அனுப்பிட்டு நைட்டு ஃபோன வேற ஆஃப் பண்ணி வேற வச்சேன். இப்ப வரைக்கும் அந்த
மெசேஜ் எனக்கு ஒரு இருபது தடவ வந்துருக்கு. ஒவ்வொரு தடவ அது வரும்போதும் “தா… அந்த
நாசாவ கொளுத்துங்கடா” ன்னு தான் தோணுது.
இந்த மாதிரி தப்பான தகவல்கள் குடுத்து ஏமாத்துறப்
பத்தி ஓரு ரெண்டுவரிக்கதை இருக்கு. “ஒரு பையன் ரூமுக்குள்ள புலி வந்துருச்சி புலி வந்துருச்சின்னு
அவங்க அப்பாவ அடிக்கடி ஏமாத்துவானாம். பதறியடிச்சிட்டு அவங்க அப்பா ஓடிப்போய் ரூமுக்குள்ள
பாத்தா பையன் மட்டும்தான் இருப்பான். புலியக் காணும். திடீர்னு ஒரு நாள் உண்மையிலயே
புலி வந்துருச்சாம். பையன் புலி வந்துருச்சி புலி வந்துருச்சின்னு கத்த, அப்பா எப்பவும்
போலத்தான்னு நினைச்சி கண்டுக்காம விட்டுட்டு ஒரு அரைமணி நேரம் கழிச்சி போய் பாத்தாரம்.
அப்போ ரூம்ல புலி மட்டும் இருந்துருக்கு. பையனக் காணும். அவ்வளவுதான். (இந்த புலிக்கதை எந்தப் படத்திலிருந்து ஆட்டையப் போட்டது எனக் கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு வெங்கலக் கின்னம்)
நம்மளும் இதயேத்தான் பன்னிட்டு இருக்கோம்.
இந்த மாதிரி தப்பு தப்பா அனுப்பி அனுப்பி, வெறுத்துபோனவங்க, உண்மையிலேயே யாருக்கவது
உதவி தேவைப்படுறப்போ அத செய்யாம விடுறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு. ஒரு விஷயத்த வந்த
உடனே மத்தவங்களுக்கு அனுப்பித்தான் நம்ம கடமை உணர்ச்சியக் காட்டனும்னு இல்லை. ஒவ்வொரு
செய்தியையும் கிளப்பி விடுறதுக்கு முன்னாலயோ இல்லை மத்தவங்களுக்கு அனுப்புறதுக்கு முன்னாலயோ
கொஞ்சம் யோசிச்சி பாருங்க.
19 comments:
Sema Boss as usual...
To All Poraalis,
நாட்ல இந்த பெருச்சாளிங்க தொல்ல தாங்கல
எல்லாத்தையும் அரை குறையா தெரிஞ்சுகிட்டு உசுர வாங்குறாங்க
இது வரைக்கும் ஒடச்சது பத்தல போல
Regards,
A Yusuf
U r correct. Recently i wont forward any help seeking messages..
விளையாட்டு புள்ள என்று இந்தனை நாள் நினைத்திருந்தேன். நீ இவ்வளவு அறிவாளி என்று இப்ப தான்
புரியுது.
surya.
Super. மிக அருமையான கட்டுரை . பாராட்டுக்கள்!
Really very good article,, elloroda manasula irunthatha apdiye correct ah sollirukinga.. keep it up pls
Nice article as it resembles the current mentality of people in social network. Instead of forwarding this kind of messages, let them atleast do something good to their locality's water sources rectification.
That story mentioned was from telugu movie S/O. Sathyamurthy, right?
That movie was a good one. Keep it up
@Anonymous
//That story mentioned was from telugu movie S/O. Sathyamurthy, right?//
Smart boy :-)
தனுஷ் அவர்களை நெட்டிசன்கள் திட்டி விட்டதால் உங்களுக்கு இவ்வளவு கோவம் வருகிறது. மற்ற படங்களை தரமாக விமர்சனம் செய்யும் நீங்கள் தனுஷ் ரஜினி படங்களை மட்டும் எவ்வளவு கேவலமாக இருந்தாலும் நன்றாக இருக்கிறது என்று செல்கிறீர்கள். மாரி படம் மரண மொக்கை ஆனால் நீங்கள் அந்த படத்தை மாஸ் என்கிறீர்கள். தேசமே அப்துல் கலாம் மறைவுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் போது தனுஷ் அவர்களுக்கு இந்த பிறந்தநாள் கும்மாளம் தேவைதானா? அப்படியே கொண்டாடிநாலும் இப்படி பல பேருக்கு தெரிகிற மாதிரி கொண்டாட வேண்டுமா?நன்றாக குடித்துவிட்டு காலையில் கலாமிற்கு இரங்கல் ட்வீட் போட்டால் அது அவருக்கு செய்கிற மரியாதையா? கலாமிற்காக நிறைய பேர் உண்மையாக அழுதார்கள். தனுஷிற்காக அவர்களை கொச்சை படுத்த வேண்டாம். கலாம் அவர்கள் உயிரோடு இருக்கும் போது இவர்கள் என்ன செய்தார்கள் என்று பெரிய அறிவுஜீவி போல் பேசுகிறீர்கள். அவர் உயிரோடு இருக்கும் போது அவரை பற்றி பேசும் போது சிந்திக்கும் போது மக்கள் அவரை போற்றி தான் இருந்தனர். யாரும் அப்துல் கலாம் மறைவு தனக்கு இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்று யாருக்கும் காட்டிக்கொள்ள தேவையில்லை. அவர் மீது உண்மையான அன்பும் பாசமும் உள்ளவர்கள் தான் சமூகவலைதளங்களில் தங்கள் வேதனையை தெரிவித்தார்கள். சாதாரண மக்களால் வேறு என்ன தான் செய்ய முடியும்? எல்லோரும் உடனே ராமேஸ்வரம் சென்று அஞ்சலி செலுத்துவது இயலாத காரியம். முதலில் நீங்கள் எல்லாவற்றுக்கும் குறை கூறுவதை நிறுத்துங்கள். அப்துல் கலாம் மறைவுக்காக ஏற்கனவே துயரத்தில் இருக்கும் மக்களை நடிகர் தனுஷிற்காக வார்த்தைகளை கொட்டி துன்புறுத்த வேண்டாம்...
Nice read boss
Regarding criticism of dhanush's bday, it is a common trend all over the world. Recently C.ronaldo was criticised for hosting his bday party,just becoz his team had lost a match that day!!!
And with those fake whatsapp messages, also keep in mind that about 90% of "medical tips" "new cure found" "research says that.." are completely untrue. Wonder who & why they spend their time to create these false claims.
@Anonymous
முதலில் பதிவைப் படித்துவிட்டு மனதிற்குள் திட்டாமல் வெளிப்படையாக உங்கள் கருத்துக்களை கூறியதற்கு நன்றி.
இந்தப் பதிவில் தனுஷ், ஜெயலலிதா, கலைஞர் மற்றும் விஜய்காந்த் ஆகிய அனைவரைப் பற்றிய விமர்சனங்களையுமே எடுத்துக்காட்டாக கூறியிருக்கிறேன். நெட்டிசன்கள் தனுஷைத் திட்டியதற்காக மட்டுமே இந்தப் பதிவு எழுதப்பட்டது என எப்படி உங்களுக்கு அர்த்தமானது என்பது புரியவில்லை. இருக்கட்டும். பரவாயில்லை.
ரஜினி, தனுஷ் படங்களை எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் நான் குறை கூறுவதேயில்லை என்கிறீர்கள். ஒரு படம் என்னை திருப்திபடுத்தும் வகையில் இருக்கும்பொருட்டு நான் அதை ஏன் குறைகூற வேண்டும். ”எவ்வளவு கேவலமாக இருந்தாலும்” என்பது அந்தப் படத்தைப் பற்றிய உங்களுடைய பார்வை. நானும் ஏன் அதையே கூற வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். ஒருவருக்கு ஒரு படம் பிடித்திருக்கிறது பிடிக்கவில்லை என்பது அவரவர்களுடைய ரசனை, ரசிப்புத்தன்மை, பிடித்த விஷயங்கள் போன்றவற்றை பொறுத்து அமையும். நீங்கள் சொல்வதையே நானும் சொல்லவேண்டும் என நினைப்பது முட்டாள்தனம்.
மாரி உங்களுக்கு படுமொக்கையாகத் தெரியலாம். ஏனென்றால் தனுஷிற்கான ஆக்ஷன் காட்சிகளையும் பில்ட் அப்புகளையும் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்திருக்கலாம். ஒருவேளை நீங்கள் அஜித் அல்லது விஜய் ரசிகராக இருந்தால் அந்த மாதிரி காட்சிகளை ஜீரனிக்க முடியாமல் கூட பிடிக்காமல் இருந்திருக்கலாம். எனக்கு தனுஷைப் பிடிக்கும். எனக்கு அவ்வாறு எதுவும் தோன்றவில்லை. எந்தக்காட்சியும் போர் அடிக்கவும் இல்லை. பிறகு நான் ஏன் குறை கூற வேண்டும்?
சமீபகால தனுஷ் படங்களில் நையாண்டியைத் தவிற மற்ற அனைத்துப் படங்களுமே எனக்கு பிடித்தமானதாகவே இருந்திருக்கிறது. தனுஷ் படங்கள் என்று மட்டும் இல்லை. நான் பார்க்கும் எந்தப்படமாக இருந்தாலும், பிடித்திருக்கிறது என்றால் பிடித்திருக்கிறது என்றே கூறியிருக்கிறேன். போன மாதம் ரிலீஸ் ஆன ”மாஸ்” படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மாரியைப் போலவே பரவலாக மாஸ் படு மொக்கை என்றே கருத்து. ஆனால் எனக்கு பிடித்திருந்தது. அப்படியே எழுதியும் இருக்கிறேன்.
நாடே துக்கம் அனுஷ்டிக்கும்போது தனுஷிற்கு கும்மாளம் தேவைதானா என்கிறீர்கள். கலாம் இறந்து விட்டதால் நீங்கள் இன்னும் இரண்டு நாட்களுக்கு சாப்பிடக்கூடாது என நான் உங்களைப் பார்த்து சொன்னால் நீங்கள் கேட்பீர்களா? பலபேருக்கு தெரிவதுபோல் அவர் செய்ததே தவறு. தெரியாமல் செய்திருந்தால் இங்கிருக்கும் ஏராளமான “ஃபீலர்களைப்” போல் அவரும் போற்றப்பட்டிருப்பார்.
ஒரு சாதாரண மனிதனான நம்மால் என்ன செய்ய முடியும் என நீங்கள் கேட்பது நியாயம் தான். ஆனால் ஜெயலலிதா, கலைஞர், தனுஷ் ஆகியோரும் நம்மைப்போல ஆனால் பலரால் அறியப்பட்ட சாதாரண மனிதர்களே என்பதை நாம் ஏன் மறந்து விடுகிறோம். நமக்கு இருக்கும் அதே விருப்பு வெறுப்புகள் அவர்களுக்கும் இருக்கும் என்பதை நாம் ஏன் ஒப்புக்கொள்ள முடிவதில்லை.
துக்கம் தாழமுடியவில்லை துக்கம் தாழமுடியவில்லை என்கிறீர்களே. // கலாம் இறந்துட்டாருங்குறதால உங்களோட ரெகுலர் ஆக்டிவிட்டீஸ்ல எதயாவது நிறுத்திருக்கீங்களா இல்லை மாத்திருக்கீங்களா? இல்லை ஒரு வேளை சாப்பாட்டையாவது நிறுத்திருக்கோமா? இல்லை போன ரெண்டு நாள்ல பிறந்தநாள் கொண்டாடுன உங்க நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லாம இருந்துருக்கீங்களா? // இந்த வரிகளுக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? அப்துல் கலாம் புகைப்படங்களையும், அவர் சொன்ன வரிகளையும் நினைவு கூர்ந்ததையும், நாலந்து பேர்களுக்கு அனுப்பியதையும் தவிற நீங்கள் என்ன துக்கம் அனுஷ்டித்தீர்கள்?
நம்மால் வேறு என்ன செய்ய முடியும் என்று கேட்டீர்களே? ராமேஸ்வரம் எங்கு இருக்கிறது? தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் இருந்தாலும் அதிகபட்சம் 12 மணிநேரப் பயணத்தில் அங்கு சென்றுவிடலாம். துக்கம் அனுஷ்டிக்கும் உங்களால் இதைச் செய்ய முடியாதா? இதைச் செய்யாமலிருக்க அதிகபட்சம் நீங்கள் என்ன காரணம் கூறிவிடப்போகிறீர்கள்? அலுவலகப் பணி, ஒரு நாளை வீணாக்க இயலாது, குடும்பத்தை தனியே விட்டுவிட்டு செல்ல முடியாது. இவ்வளவுதானே. இதுதான் உங்கள் துக்கத்தின் சுயரூபம். (நீங்கள் வெளிநாட்டு வாசியாகக் கூட இருக்கலாம். இது உங்களுக்கு மட்டுமானது அல்ல. பொதுவானதே)
ஒருவரைச் சேர்ந்தவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும்பொருட்டே அது அவரை முழுமையாகப் பாதிக்குமே தவிற, மற்ற அனைத்திற்கும் ஒருவருடைய வாய் மட்டுமே வருந்துமேயன்றி, நம்முடைய அன்றாட செயல்களில் எந்தவித மாற்றத்தையும் அது ஏற்படுத்தாது என்பதே கசப்பான உண்மை. இந்தப் பதிவின் நோக்கம் போலியான முகமூடியை அணிந்து கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதை எடுத்துக்காட்டவே.
சாப்பிடாமல் இருந்தால் தான் அவருக்குகாக நாம் வருத்தப்படுவதாக அர்தமா? பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது உங்கள் வாதம். 12 மணி நேரம் தான் ஆகும் என்பதற்காக உடனடியாக அனைவராலும் கிளம்பிவிட முடியாது. கூட்ட நெரிசலில் பார்பதைவிட தொலைக்காட்சியில் நன்றாக பார்க்கலாம். கலாம் மீது யார் எவ்வளவு மரியாதை வைத்து இருக்கிறோம் என்று உங்களை போன்றோருக்கு நிரூபிக்க எந்த அவசியமும் இல்லை. ஒரு நடிகனை விமர்சித்தால் உடனே நீ அந்த நடிகரின் ரசிகனாக இருப்பாய் என்று இட்டுக்கட்டுவதை நிறுத்திக்கொள்ளவும். நான் தரமான படங்களின் ரசிகன். மாரி போன்ற படங்கள் உங்களுக்கு பிடித்தால் தவறு இல்லை தான், ஆனால் மற்ற படங்களை ஒப்பிட்டு சொல்லி அந்த படங்களை கேலி கிண்டல் செய்யும் போது நீங்கள் உங்களுக்கு பிடித்த படம் பற்றி பேசும் போதும் அதே கேலி கிண்டல்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று நீங்கள் உணராதது ஆச்சரியம் தான். நம் அன்றாட வாழ்வில் ஒருவருடைய இழப்பு பாதிப்பு ஏற்படுத்தினால் தான் நாம் அவருக்காக உன்மையயாக வருந்துகிறோம் என்று சொல்வது உங்கள் அறியாமையை காட்டுகிறது. தனுஷிற்கும் ரஜினி போன்றோருக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம். அவர்களை யாராவது ஏதாவது பேசினால் உங்களுக்கு என்ன? உடனே அவர்களுகாக வரிந்து கட்டிக் கொண்டு நீங்கள் பதிவு போடவில்லையா? அப்போது அதுவும் போலி முகமூடியா? நாளை அவர்களே இறந்தால் உங்களுக்கு எப்படியோ? அவர் மேல் மதிப்பு மரியாதை வைத்தவர்கள் கண்டிப்பாக வருந்துவார்கள். அவர்களை பார்த்து பழகியிருந்தால் தான் உண்மையான அன்பு என்று சொல்வது நீங்கள் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்று காட்டுகிறது. நீங்கள் எப்போதும் யாரையாவது குற்றம் கூறிக்கொண்டே திரிபவர் என்று உங்கள் பேச்சில் இருந்து தெரிகிறது. நான் நினைப்பது தான் சரி. எல்லோருமே முட்டாள்கள் என்று நீங்கள் நினைப்பதை விட்டு உண்மையான அன்பை பாருங்கள். அப்போது உங்களுக்கு குறைகள் தெரியாது.
நான் என் நண்பர்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் எல்லாம் சொல்ல வில்லை. யாருக்கும் பிறந்த நாளும் வரவில்லை. ஏதோ புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்து கொண்டு ஏதேதோ உளராதே. நம் சொந்த பந்தங்கள் இறந்து போனால் நாம் என்ன செய்வோம். அவரை பற்றி அவரின் நல்ல செயல்களை பற்றி பேசி புகழ்ந்து அவரை இழந்ததற்காக வருந்துவோம். அதை தான் அப்துல் கலாம் மறைவுக்கும் அவர் மேல் அவரின் குணங்களை பற்றி கேள்விப்பட்டு அவரின் ஒழுக்கம் பழக்கம் பேச்சு பற்றி கேள்வி படும் போது மரியாதையும் பாசமும் தானாக வரும். உங்களை போன்றோருக்கு தனுஷ் ரஜினி மீது வருகிறது எங்களுக்கு அப்துல் கலாம் போன்றவர்கள் மீது வருகிறது. ராமாயணத்தில் ராமர் பற்றி அவரின் கதையை கேட்கும் போதும் பேசும் போதும் மகாத்மா காந்தியை பற்றி கேட்கும் போதும் நம்மை அறியாமல் ராமர் மேல் காந்தி மேல் சிலிர்ப்பு வருகிறதல்லவா? அதற்காக நீ காந்தியை ராமரை பார்த்து பழகினால் தான் நீ உண்மையாக அவரின் மேல் அன்பு மரியாதை வைத்ததாக அர்த்தம் என்றால் உங்களை போன்ற ஒரு சர்வ மடையன் யாரும் இல்லை. ஒருவரின் அன்பை புரிந்துகொள்ள முதலில் நமக்கு மனதில் அன்பு இருக்க வேண்டும். உங்களுக்கு சுத்தமாக இல்லை. மனநல மருத்துவரை பாருங்கள். உங்களை போன்றோருக்கு உடனுக்குடன் பதில் சொல்லி கொண்டு இருப்பதும் மிகப்பெரிய முட்டாள்தனம். இருப்பினும் இதை படிப்பவர்கள் உங்களுக்கு நான் ஒரு பதிலும் சொல்லவில்லை என்று நினைக்ககூடாது. அதற்காக தான் 2, 3 பதில்கள் பதிவு செய்தேன்.
நான் என் நண்பர்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் எல்லாம் சொல்ல வில்லை. யாருக்கும் பிறந்த நாளும் வரவில்லை. ஏதோ புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்து கொண்டு ஏதேதோ உளராதே. நம் சொந்த பந்தங்கள் இறந்து போனால் நாம் என்ன செய்வோம். அவரை பற்றி அவரின் நல்ல செயல்களை பற்றி பேசி புகழ்ந்து அவரை இழந்ததற்காக வருந்துவோம். அதை தான் அப்துல் கலாம் மறைவுக்கும் அவர் மேல் அவரின் குணங்களை பற்றி கேள்விப்பட்டு அவரின் ஒழுக்கம் பழக்கம் பேச்சு பற்றி கேள்வி படும் போது மரியாதையும் பாசமும் தானாக வரும். உங்களை போன்றோருக்கு தனுஷ் ரஜினி மீது வருகிறது எங்களுக்கு அப்துல் கலாம் போன்றவர்கள் மீது வருகிறது. ராமாயணத்தில் ராமர் பற்றி அவரின் கதையை கேட்கும் போதும் பேசும் போதும் மகாத்மா காந்தியை பற்றி கேட்கும் போதும் நம்மை அறியாமல் ராமர் மேல் காந்தி மேல் சிலிர்ப்பு வருகிறதல்லவா? அதற்காக நீ காந்தியை ராமரை பார்த்து பழகினால் தான் நீ உண்மையாக அவரின் மேல் அன்பு மரியாதை வைத்ததாக அர்த்தம் என்றால் உங்களை போன்ற ஒரு சர்வ மடையன் யாரும் இல்லை. ஒருவரின் அன்பை புரிந்துகொள்ள முதலில் நமக்கு மனதில் அன்பு இருக்க வேண்டும். உங்களுக்கு சுத்தமாக இல்லை. மனநல மருத்துவரை பாருங்கள். உங்களை போன்றோருக்கு உடனுக்குடன் பதில் சொல்லி கொண்டு இருப்பதும் மிகப்பெரிய முட்டாள்தனம். இருப்பினும் இதை படிப்பவர்கள் உங்களுக்கு நான் ஒரு பதிலும் சொல்லவில்லை என்று நினைக்ககூடாது. அதற்காக தான் 2, 3 பதில்கள் பதிவு செய்தேன்.
டிவியில் பார்த்தால் நன்றாகத்தெரியுமா? நீங்கள் என்ன கிரிக்கெட் மேட்ச்சா பார்க்கிறீர்கள்? நான் கூற வந்ததும் இதையேதான். இதே உங்களின் சொந்தபந்தங்களுக்கு எதேனும் அசம்பாவிதம் நடந்திருந்தால் இதுபோல் நீங்கள் உட்கார்ந்திருப்பீர்களா? டிவியில் பார்த்துக்கொள்ளலாம் என வீட்டில் இருப்பீர்களா? இல்லை பஸ்ஸீல் கூட்டம் அதிகம் என கிளம்பாமல் இருப்பீர்களா? நான் சொல்ல வந்த வித்யாசம் இதுதான். அடுத்தவருக்கு நடக்கும்போது அது இப்படித்தான் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டே டிவியைப் பார்த்து “அய்யோ பாவம்” என வருந்துவது மட்டுமே மனித இயல்பு. இதில் தவறில்லை. அதை சுட்டிக்காட்டவே இந்தப்பதிவு.
ரஜினி தனுஷ் போன்றோருடன் என்ன சம்பந்தமா? நீங்கள் கலாமைப் பற்றி கேள்விமட்டும் பட்டு அவர்மேல் அளவுகடந்த மதிப்பு மரியாதை வைக்கலாம். நாங்கள் ரஜினியைப் பற்றி கேள்விப்பட்டு மரியாதை வைத்தால் நாங்கள் மடையர்களா?
இந்தப் பதிவில் என்ன சொல்ல வந்திருக்கிறேன் எனவே புரியாமல் மெண்டல் போல சம்பந்தம் இல்லாத விஷயங்களுடன் கோர்த்து வாதிக்கும் நீங்களே முதலில் மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
முதிர்ச்சியைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். உயிரோடிருப்பவர்கள் மேல் நேரடியாக “இறந்தால்” என்ற வார்த்தையை உபயோக்கிக்கக்கூடாது என்ற நாகரீகம் கருதியே நான் மறைமுகமாக கூறியிருக்கிறேன். ஆனால் நீங்கள்... இதுதான் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்யாசம்.
டிவில் நன்றாக தெளிவாகப் பார்த்து கலாமிற்காக வருந்தும் அனைவருக்கும் அனுதாபங்கள்.
லூசு. சொந்த பந்தங்கள் இறந்து போனால் டிவில போடுவாங்களா? நீ தானே சொன்ன. ஒருத்தர் பற்றி கேள்வி பட்டதினால் டிவியில் பார்ததினால் மட்டும் பாசம் வந்து விடாது என்று. உனக்கு ரஜினி தனுஷ் மீது வந்தா பாசம் எங்களுக்கு வந்தா அது போலி முகமூடியா? கூட்ட நெரிசலில் அங்கு நெருங்க கூட முடியாத நிலை தான் அங்கு இருந்தது. நீ முதலில் சரியாக பேசு.
இறந்தால் என்று நான் அவர்களை சொன்னால் உங்களுக்கு என்ன ஆயிற்று? அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் மீது அன்பு இருப்பது போல நீங்கள் காட்டி கொள்கிறீர்கள். எல்லாம் போலி முகமூடி. நீங்கள் ரஜினிகாந்தை பார்த்து பழகியிருக்கிறீரர்களா? பேசியிருக்கிறீர்களா? பின் எப்படி உங்களுக்கு அவர்கள் மீது அன்பு மரியாதை வரும்.
( எப்படி உங்களை போலவே பேசுனேனா? இதை படிக்கும் போது எப்படி உங்களுக்கு கோபம் வருகிறது அதேமாதிரி தான் நீங்கள் ஏழுதிய போது எனக்கும் வந்தது)
நான் (இறந்தால்) என்கிற வார்த்தை பயன்படுத்தியது தவறு தான். இருந்தாலும் சிலபேர் அடுத்தவர்களை அவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்ளாமல் தான் நினைத்துதான் முற்றிலும் சரியானது என்று பேசுகிறார்கள். அவர்களுக்கு பதில்களை அவர்கள் பாணியில் இப்படி பேசினால் தான் அவர்களுக்கு உறைக்கிறது. என்ன செய்ய?
There is a difference between movie critic and movie reviewer. Siva is a reviewer and not a critic.He reviews movie in his own way based on his own likes and dislikes. Though if many feels a particular is as bad as crap, a reviewer can still say its a good movie based on his view. So just try to understand this.He is entitled to say his own views.if u want very unbiased reviews, then its good a read a critic's review.
Like Kalam's whatsapp fwds, friendship[ day wishes are also quite strange and looked very artificial.
super boss
Post a Comment