Monday, December 14, 2015

BENGAL TIGER – இது பழைய புலி!!!


Share/Bookmark
கடந்த ஒரு வருஷமா எல்லா  தெலுங்கு படங்களும் தேவி பாரடைஸ்ல தான் பாக்குறேன். கூட்டம் அள்ளும். அதுவும் NTR படம்னா சொல்லவே தேவையில்லை. உள்ள அடிக்கிற விசில் சத்தம் வெளில கேக்கும். ஆந்த்ராவுக்கே போய் படம் பாக்குற எஃபெக்ட் இருக்கும். ஆனா நேத்து பாருங்க தியேட்டர்ல இருந்ததே எண்ணி ஒரு இருபத்தஞ்சி பேர் தான். ”வெள்ள” எஃபெக்ட்டா இல்லை ரவிதேஜா எஃபெக்ட்டான்னு தெரில. இப்பதைக்கு சென்னையில பெரிய தியேட்டர்கள்ல தேவி பாரடைஸும் ஒண்ணு. மொத்த கூட்டமும் கடைசி ரெண்டு ரோவுல அடங்கிப்போச்சு. முன்னாடி பாத்தா அலைகடலென வெறும் காலி சீட்டு தான். நல்லா நடுவுல போய் உக்காந்து மாயா படத்துல நயன்தாரா தனியா படம் பாக்குற எஃபெக்ட்டுல இந்தப் படத்த பாத்துட்டு வந்தோம். சரி இந்தப் புலி நம்ம தமிழ்ப்”புலி” ரேஞ்சுக்கு இருக்கான்னு பாப்போம்.

இவய்ங்க படத்துக்கு ஒரே விமர்சனத்த எழுதி எழுதி எனக்கே போர் அடிக்கிது. ஆனா ஒரே மாதிரி எடுக்க இவய்ங்களுக்கு போர் அடிக்கவே அடிக்காது போல. அடங்கப்பா.. எத்தனை தடவ. அதுலயும் ரவிதேஜா கொஞ்சம் கூட கூச்சமே படுறதில்லை. டைரக்டர மாத்துவாறு.. ஹீரோயின மாத்துவாறு.. ஆனா மீசிக் டைரக்டரையும் கதையையும் மட்டும் மாத்தவே மாத்த மாட்டாரு. ரவிதேஜா வரவர நம்ம DSP மாதிரி ஆயிட்டாரு. என்ன ரவிதேஜாவும் “கபக் கபக் கப ஜல்சே” ன்னு வாந்தி எடுக்குறாரான்னு கேக்குறீங்களா? அதுக்கு சொல்லல. DSP தான் அவரு போட்ட பாட்ட அவரே காப்பி அடிச்சி (சில சமயம் அதே படத்துல கூட) இன்னொரு பாட்டு போட்டுக்குவாரு. இப்ப நம்ம ரவிதேஜாவும் அந்த ரேஞ்ச் தான்.அவர் படங்களை அவரே ரீமேக் பன்னிக்கிறாரு.

ஒரு நாலஞ்சி வருஷம் முன்னால டான் சீனுன்னு ஒரு படம் வந்துச்சி. அந்தப் படத்துல ரவிதேஜா சின்ன வயசுலருந்து டான் ஆகனும்னு ஆசைப்படுவாரு. அதுக்காக என்ன வேணாலும் செய்வேன்னு ஒரு ரவுடிக்கிட்ட வேலைக்கு சேருவாரு. உடனே அந்த ரவுடி (ஷாயாஜி ஷிண்டே) அவனோட எதிரியோட (ஸ்ரீஹரி) தங்கச்சி ஃபாரின்ல படிக்கிது. அத நீ லவ் பன்னனும்னு ஒரு வேலை குடுப்பாரு. அட ஹீரோன்னா இப்டித்தான வேலை குடுக்கனும். ரவிதேஜாவும் ஃபாரின் போய் அந்தப் புள்ளைய லவ் பன்னி அந்த புள்ளைய (ஷ்ரேயா) இண்டர்வல்ல ஊருக்கு அழைச்சிட்டு வருவாரு. வந்தப்புறம்தான் தெரியும் அது ஸ்ரீஹரியோட தங்கச்சி இல்லை ஷாயாஜி ஷிண்டேயோட தங்கச்சியேன்னு (டுஸ்டு)

அப்புறம் இண்டர்வலுக்கு அப்புறம் ஸ்ரீஹரியோட தங்கச்சியையும் லவ் பன்னி ஸ்ரீஹரியோடவும் க்ளோஸ் ஆயிடுவாரு. க்ளைமாக்ஸ்லதான் தெரியும் ஸ்ரீஹரி ரவிதேஜாவோட அக்காவ (கஸ்தூரி) ஏமாத்தி விட்டுட்டு வந்துருவாரு. அதனால ஸ்ரீஹரிய பழிவாங்க எல்லாத்தையும் பர்ப்பஸாதான் ரவிதேஜா செஞ்சாருன்னு சொல்லி க்ளைமாக்ஸ் ஃபைட்ட போட்டு படத்த முடிப்பாங்க.



இப்ப இங்க ஆரம்பத்துல ஹீரோ பொண்ணு பாக்க போகும்போது அந்தப் பொண்ணு “என்னக்கு ஃபேமஸான ஆள்தான் மாப்பிள்ளையா வரனும். உன்னையெல்லாம் கல்யாணம் பன்னிக்க முடியாதுன்னு சொல்லி அசிங்கப்படுத்திடுது. உடனே ரவிதேஜாவுக்கு கோவம் வந்து ஃபேமஸ் ஆகியே ஆகனும் அதுக்காக என்ன வேணா செய்வேன்னு அடம்புடிக்கிறாரு. இப்ப அப்புடியே மேல சொன்ன கதையில ஹீரோயின்களையும், ஸ்ரீஹரிக்கு பதிலா போமன் இரானியையும் போட்டா அதான் பெங்கால் டைகர். ஷாயாஜி ஷிண்டேவ கூட மாத்த தேவையில்லை.  

அஞ்சி பாட்டும் சூப்பரா எடுத்துருக்காய்ங்க. ரெண்டு மூணு ஃபைட்டும் ஓக்கே. காமெடி எதோ ட்ரை பன்னுருக்கானுங்க. ஆனா வேலைக்கு ஆகல. ப்ரம்மானந்தம் பேரு அமலா பால் (அமலாபுரம் பாலகிருஷ்ணன்) ரெண்டு சீன் வர்றாரு. ஆனா சிரிப்பு தான் வரல. தமன் வழக்கம்போல கேக்குற மாதிரி அதே அஞ்சி ட்யூன்கள போட்டுத்தள்ளிருக்காரு.

முதல் பாதில ரஷி கன்னான்னு ஒரு ப்ரம்மாண்ட ஹீரோயின். ரவிதேஜாவ விட உயரமா இருக்கு. லாங் ஷாட்ல காட்டும்போது சூப்பரா இருக்கு. செகண்ட் ஹாஃப்ல நம்ம தங்கத்தாரகை தம்மன்னா. அவ்வளவு சிறப்பா இல்லை இந்த படத்துல. ரவிதேஜா ஆளும் காஸ்ட்யூமும் செம. ஆனா வழக்கமான காமெடி கம்மி.

கடைசி வரைக்கும் ஏன் படத்துக்கு பெங்கால் டைகர்னு பேர் வச்சாய்ங்கன்னே தெரியல. அப்புறம் போட்டாய்ங்க ப்ளாஷ்பேக்குல. “அதாவது காட்டுக்கு ராஜா சிங்கம். ஆனா அந்த சிங்கமே தப்பு பன்னா தட்டி கேக்குற உரிமையும் தைரியமும் டைகருக்கு இருக்கு. குறிப்பா பெங்கால் டைகருக்கு இருக்கு. அதனால தான் நாம புலிய தேசிய விலங்கா வச்சிருக்கோம்” ன்னு ரவிதேஜா சின்னக் குழந்தையா இருக்கும்போது அவங்க அப்பா சொல்லுவாரு. அடங்கப்பா…. தியேட்டருக்கு வந்தது ஒரு குத்தமாடா. படத்துக்கு பெங்கால் டைகருன்னு வைங்க இல்லை Banglore டைகர்னு வைங்க. ஆனா விளக்கம் சொல்றேன்னு போட்டு கொல்லாதீங்கடா சாமி.



கொஞ்ச நாள் முன்னால RJ பாலாஜி சில பேருக்கு பிரியாணி பொட்டலம் வாங்கி குடுத்து அத வீடியோ எடுத்து youtube ல போட்டாரு. அப்புறம் அதுக்கு 500 views வந்த உடனே அதுக்கு ஒரு வெற்றிவிழா கொண்டாட்டம்னு நம்மாளுங்கள ஓட்டுறதுக்காக இன்னொரு வீடியோ எடுத்து மிஷ்கின், லிங்குபாய் எல்லாரையும் ஓட்டுவாய்ங்க. அதுல சீப் கெஸ்ட UTV தனஞ்ஜெயன கூப்டு அவரு பேச ஆரம்பிக்கும்போது டக்குன்னு கட்பன்னி “இவர் ஒண்ணும் புதுசா பேசல. இதுக்கு முன்னால 54320 ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன்ல என்ன பேசுனாரோ அதே தான் இங்கயும்” ன்னு சொல்லி முடிச்சிருவாய்ங்க. அதே மாதிரிதான் இதுக்கு மேல எதாவது எதிர்பாத்தீங்கன்னா இதுக்கு முன்னால நா ஒரு பதினைஞ்சி இருபது தெலுங்கு படத்துக்கு விமர்சனம் எழுதிருப்பேன். அதுல எதையாவது படிங்க. எல்லாமே இந்த படத்துக்கு மேட்ச் ஆகும்.


மொத்தத்துல பெங்கால் டைகரப்பத்தி சொல்லனும்னா  “இது பழைய புலி” “இது ஏற்கனவே பலதடவ பாத்த புலி” .


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

Paranitharan.k said...

ஹாஹா ;-)))

Unknown said...

Excellent narration Thalaiva...stress buster indeed

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...