Saturday, January 2, 2016

”ஓ”ரிங்குல ஓட்டை – நாஸா சம்பவம் பகுதி 2!!!


Share/Bookmark
இந்தப் பதிவின் முதல் பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும். லாஞ்ச் பன்னி சரியா 73 செகண்ட்ல சேலஞ்சர் Space shuttle வெடிச்சி அதில் பயணம் செய்த  டீச்சர் உட்பட ஏழு பேரும் இறந்து போனாங்க. இந்த சேலஞ்சர் Space shuttle லாஞ்ச் பன்றத கிட்டத்தட்ட அமெரிக்காவோட 17 சதவீத மக்கள் லைவ்வா பாத்துக்கிட்டு இருந்தாங்கன்னு போன பதிவில சொல்லிருந்தோம். அதனால சேல்ஞ்சர் வெடித்து சிதறிய செய்தி கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்குள்ள அமெரிக்க மக்கள் தொகையில 85 சதவீத பேருக்கு `தெரியப்பட்டுவிட்டதாக ஒரு சர்வே சொல்லுது. 

ஒரு மாத தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு சேலஞ்சரோட பாகங்கள் அட்லாண்டிக் கடலோட ஒரு பகுதியில கண்டெடுக்கப்பட்டது. அந்த பாகங்கள ஆய்வு செய்து பாக்கும்போது, சேலஞ்சர் வெடிக்கும்போதே ஏழு பேரும் இறந்து போகல. ஒரு சிலர் உயிரோட இருந்திருக்கலாம். ஆனா உடைந்த பகுதிகள் கடல்ல வந்து விழுந்த வேகம் ரொம்ப அதிகம். அதனால சேலஞ்சர் வெடிச்சப்போ ஒருசிலர் உயிரோட இருந்திருந்தாலும் கடல்ல மோதும்போது அவர்கள் இறந்திருக்கக்கூடும்னு தெரிவிச்சாங்க.

இந்த சேலஞ்சர்ல பயணம் செய்ஞ்சவங்க இருந்தது அலுமினியத்தாலான ஒரு மூடப்பட்ட கேபின். விபத்து ஏற்பட்ட போது அந்த கேபின் உடைஞ்சிருக்க வாய்ப்பில்லை எனவும், விபத்து நடந்த ஒருசில விநாடிகள்ல அந்த அலுமினியம் கேபின் ஒரே பீஸா ராக்கெட்லருந்து பிரிக்கப்பட்டு மேலருந்து கீழ விழுந்துருக்கும் எனவும் நாஸா விஞ்ஞானிகள் ஊகிச்சிருந்தாங்க. சேலஞ்சர் வெடிச்ச சமயத்துல அந்த அலுமினியம் கேபின்ல ஏற்பட்ட சேதம் மிகக் குறைவுதான் எனவும், கேபின் மேலருந்து கீழ விழும்போது அதில் இருந்தவர்கள் சுயநினைவோடுதான் இருந்திருப்பார்கள்ன்னும் சொல்லிருக்காய்ங்க. ஆத்தாடி சின்ன பாலத்துல பஸ் ஏரி கீழ இறங்கும்போதே நமக்கு தொண்டை அடைச்சிரும். அவிங்களுக்கு எப்புடி இருந்துச்சோ…

இந்த விபத்தால நாஸா 32 மாதங்களுக்கு இந்த space shuttle program ah நிறுத்தி வச்சிருந்தாங்க. அதே சமயம் இந்த விபத்துக்கான காரணத்த கண்டுபிடிக்க Rogers Commission ன்னு ஒரு குழுவ அமைச்சி விசாரணையும் நடத்திட்டு வந்தாங்க. இந்த ரோஜர்ஸ் கமிஷன் கொஞ்சம் டீப்பா உள்ள இறங்கித் துலாவுனதுல விபத்து ஏற்படக்காரணம் சேலஞ்சர்ல உள்ள Solid Rocket Booster ல ஏற்பட்ட டெக்னிக் fault தான் காரணம்னு தெரிஞ்சிது. அது மட்டும் இல்லாம இந்த டெக்னிக் ஃபால்ட் ஏற்பட முக்கியக் காரணமே நாஸாவோட organizational structure உம், அங்க இருக்கவிய்ங்களோட decision making process um தான்னு இன்னொரு பிட்டயும் சேத்து போட்டாய்ங்க. இது ரெண்டும் என்னென்னன்னு ஒவ்வொன்னா பாப்போம்.

சரி இந்த Solid Rocket Booster ங்குறது என்ன? சேலஞ்சர் Space shuttle க்கு ரெண்டு சைடுலயும் நம்ம தீவாளிக்கு விடுற ராக்கெட் மாடல்ல ரெண்டு நிக்கிதே.. அதான் சாலிட் ராக்கெட் பூஸ்டர். இதோட முக்கிய வேலை என்னன்னா முதல் ரெண்டு நிமிஷத்துக்கு ராக்கெட் பறக்க தேவையான உந்து சக்தியை குடுக்குறது தான். அதாவது அது ஒரு solid fuel ல எரிஞ்சி, ராக்கெட்ட பறக்க வைக்கும். இரண்டு நிமிஷத்துல இதுல உள்ள எரிபொருள் முழுசும் எரிஞ்சி முடிஞ்சப்புறம் இத ராக்கெட்டுலருந்து கழட்டி விட்டுருவாய்ங்க. பாராஷூட் உதவியோட இந்த சாலிட் பூஸ்டர் கடல்ல விழுந்துடும். கடல்ல விழுந்த பூஸ்டர திரும்ப recover பன்னி அதுல என்னென்ன பார்ட்ஸெல்லாம் மட்டையாயிருச்சோ அதயெல்லாம் மாத்திட்டு, நல்லா இருக்க பார்ட்ஸையெல்லாம் அப்டியே வச்சிகிட்டு பட்டி டிங்கரிங்லாம் பாத்து அதே பூஸ்டர அடுத்த தடவ ராக்கெட் பறக்க விடுறதுக்கு பயன்படுத்துவாய்ங்க.

இப்ப வெடிச்ச சாலிட் ராக்கெட் பூஸ்டர் ஏற்கனவே ஒரு ஏழெட்டு தடவ பயன்படுத்தப்பட்டதுதான். இப்ப மட்டும் அதுக்கு என்ன கேடு வந்துச்சின்னு தான கேக்குறீங்க. இந்த சாலிட் ராக்கெட் பூஸ்டருக்குள்ள பெரிய சைஸ்ல ரெண்டு “O’ ring இருக்கு. இந்த O ring தான் பூஸ்டருக்குள்ள எரியிற நெருப்ப வெளில வராம தடுக்குறது. ஆனா அன்னிக்குன்னு பாத்து இந்த ஓரிங்ல கொஞ்சம் ப்ரச்சனை ஆனதால சாலிட் ராக்கெட் பூஸ்டருக்குள்ள மட்டும் எரிய வேண்டிய நேருபு கேப்புல வெளில வந்துருச்சி. வெளில வந்தது கூட ப்ரச்சனை இல்லை. ஆனா அது வந்த இடத்துல பாருங்க நம்மாளுங்க ஒரு fuel tank ah வச்சிருந்துருக்காய்ங்க. பெட்ரோல் டாங்கிக்குள்ள நெருப்ப கொளுத்தி போட்டா என்னாகும்? டஸ் ஆயிருச்சி.  

சரி வழக்கமா ஒழுங்கா வேலை செய்யிற ஓரிங் இந்த தடவ மட்டும் ஏன் மட்டை ஆயிருச்சின்னு ரோஜர்ஸ் கமிஷன் விசாரிக்க ஆரம்பிச்சாங்க. அந்த ஓரிங்க தயாரிச்ச நம்ம தியோக்கால் இஞ்ஜினியர்கள்கிட்ட விசாரிக்க ஆரம்பிக்கும்போது தான் நிறைய உண்மை தெரிய வந்துச்சி. சேலஞ்சரோட ஒரிஜினல் லாஞ்சிங் டேட் தள்ளி தள்ளி போனதால நாஸா விஞ்ஞானிகள் ஒரே டென்ஷன்ல இருந்துருக்காய்ங்க. அந்த சமயத்துல தான் ஜனவரி 28ம் தேதி கண்டிப்பா ராக்கெட்ட லாஞ்ச் பன்னியே ஆகனும்னு முடிவு பன்னாங்க. ஆனா வானிலை ரொம்ப மோசமாத்தான் இருந்துச்சி.

பொதுவாவே இந்த ரப்பரோட property வெப்பநிலையப் பொறுத்து மாறுபடும். அதே மாதிரி ரப்பர் ஐட்டங்கள ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில தான் ஸ்டோர் பன்னி வைக்கனும்.. எதாவது Manufacturing கம்பெனிகள்  ல வேலைபாக்குறவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஸ்டோர்கள்ல ரப்பர் ஐட்டங்களை மட்டும் A/C room ல தான் ஸ்டாக் வச்சிருப்பாங்க. அதுமட்டும் இல்லாம அதுங்களுக்கு shelf life ன்னு ஒண்ணு இருக்கு. ரொம்ப நாள் ஸ்டோர்லயே வச்சிருக்க முடியாது. யூஸ் பன்னாம இருந்தா கூட ஒரு சில வருஷங்கல ரப்பர் சீல்கள டிஸ்போஸ் பன்னித்தான் ஆகனும்.

நாஸா ஜனவரி 28ம் தேதி லாஞ்ச் பன்னப்போறாங்கங்குறத தெரிஞ்சிக்கிட்ட தியோக்கால் இஞ்ஜினியருங்க மொதநாள் நாஸா ஆளுங்களுக்கு ஃபோன் பன்னி “அண்ணே.. நம்ம ஓரிங் நல்ல ஓரிங் தான்னே.. ஆனா அது 10 டிகிரி செண்டிகிரேட் க்கு மேல தான் அது ஒழுங்கா ஒர்க் பன்னும். ஆனா இப்ப இருக்க temperature ரொம்ப கம்மி. இந்த கண்டிஷன்ல லாஞ்ச் பன்னா ஓரிங் ஃபெயில் ஆகுறதுக்கு நிறைய வாய்ப்பிருக்கு” ன்னு சொல்லிருக்காய்ங்க.

ஆனா நாஸா இருந்த டென்ஷன்ல இவய்ங்க சொல்றத காதுல வாங்கிக்கிற நிலமையில இல்லை. அதே மாதிரி இந்த காரணத்த காட்டி இன்னொரு தடவ லாஞ்ச்ச தள்ளி போட்டுக்கவும் அவங்க விரும்பல. அதனால தான் அன்னிக்கு நைட்டு தியோக்கால கன்வீன்ஸ் பன்னி இந்த விஷயத்த பெருசாக்காம சேலஞ்சர லாஞ்ச் பன்னி வெடிக்க விட்டுட்டாய்ங்க.

சரி நாஸாவோட Organizational Structure உம் Decision making உம் தான் இந்த விபத்து ஏற்படக் காரணம்னு ரோஜர்ஸ் கமிஷன் சொன்னதுக்கும் ஒரு முக்கியக் காரணம்  இருக்கு. இந்த சேலஞ்சர் Space shuttle லாஞ்ச் பன்னது கென்னடி ஸ்பேஸ் செண்டர்ங்குற இடத்துலருந்து. அதுக்கும் கொஞ்ச நாள் முன்னால கொலம்பியா ஸ்பேஸ் ஸ்டேஷன்லருந்து ஒரு சேட்டிலைட் லாஞ்ச் பன்னப்பவே தியோக்காலோட ஓரிங்ல கொஞ்சம் எரோஷன் இருந்ததாக கொலம்பியா ஸ்பேஸ் ஸ்டேஷன் இஞ்ஜினியர்ஸ் சொல்லிருக்காங்க. ஆனா அவங்க சொன்ன இந்த் ஸ்டேட்மெண்ட் நாஸாவோட தலைமை அதிகாரி காதுக்கு கடைசி வரைக்கும் போகாம இடையில உள்ளவனுங்களே தியோக்காலோட சேந்து இத மூடி மறைச்சிட்டாங்க. அதே மாதிரி சேலஞ்சர் லாஞ்சுக்கு மொதநாள் ராத்திரி நடந்த டிஸ்கஷனும் நாஸாவுல பெரிய லெவலுகு போகாமா இடையில இருந்தவய்ங்களே பேசி அமுக்கிட்டாய்ங்க.

சரி ஒவ்வொரு இன்சிடெண்டும் ஒரு சில பாடங்களக் கத்துக்கொடுக்குது. அதே மாதிரி இந்த் சேலஞ்சர் டிஸாஸ்டரும் space shuttle ல ஒரு சில குறிப்பிட்ட டிசைன் மாற்றங்கள் உண்டாகக் காரணமா இருந்துச்சி. முதல்ல fail ஆன ஓரிங் assembly design ah 3” க்கு அதிகப்படுத்தி இன்னொரு protection ring ங்கும் குடுத்தாங்க. 

அடுத்ததா பயணம் செய்யிறவங்களோட safety. சேலஞ்சர் வெடிக்கிற வரைக்கும், ஒரு வேளை ஆக்ஸிடெண்ட் எதாவது நடந்தா அந்த ராக்கெட்ல பயணம் செய்யிறவங்க தப்பிக்கிறதுக்கான Emergency Escape Plan எதுவுமே இல்லை. இந்த விபத்துல 7 பேர் இறந்த உடனே நாஸா இந்த மாதிரி Emergency Escape Option கொடுக்குறதுக்கான தீவிர ஆராய்ச்சில இறங்குனாங்க. நம்ம படங்கள்ல வர்ற மாதிரி Ejector seat டைப் எஸ்கேக் ரூட்டுகள ட்ரை பன்னி பாத்தாய்ங்க. ஆனா எதுவுமே ஒத்து வரல. கடைசில ராக்கெட்டுல பயணம் செய்யிறவங்க எஸ்கேப் ஆகுற மாதிரி ஒரு option ah implement பன்னாங்க. அதுகூட ராக்கெட் ஸ்மூத்தா பறக்கும்போது மட்டும் தான் எஸ்கேப் ஆக முடியும். சேலஞ்சர்ல நடந்த மாதிரி வெடிச்சி சிதறும்போதெல்லாம் அத வச்சி ஒண்ணும் செய்ய முடியாது.




இதுமாதிரி எமர்ஜென்ஸி எஸ்கேப் குடுக்குறதுல நிறைய ப்ரச்சனை இருக்கதால, ரிஸ்க்க கம்மி பன்றதுக்கு ராக்கெட்ல பயணம் செய்யிற ஆட்களின் எண்ணிக்கையும் கணிசமா குறைச்சாங்க. இன்னும் இந்த விபத்த பத்தின ஏராளமான விஷயங்கள் கொட்டிக்கிடக்கு. நம்ம இதுக்கு மேல மொக்க போடாம முடிச்சிக்குவோம்.

“The Challenger Disaster” ங்குற படத்துல அந்த ரோஜர்ஸ் குழு எப்படி இந்த சேலஞ்சர் விபத்த இன்வெஸ்டிகேட் பன்றாங்கன்னு காமிச்சிருப்பாங்க. முடிஞ்சா பாருங்க.





பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

Unknown said...

இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் மூடி மறைக்கறது நம்ம ஊர்ல சர்வ சாதாரணம். அது தப்புன்னு பன்றவங்களுக்கு புரியகூட செய்யாது. அப்படியே பழகிட்டாங்க. சங்கர் படத்துல சொல்ரா மாதிரி தப்பு என்ன பனியன் சைஸா?? விளைவு எல்லாமே மெகா சைஸ் தான்.

bandhu said...

Richard B Feynman பற்றி இங்கே குறிப்பிட வேண்டும். இவர்தான் அந்த கமிஷனில் இருந்த Physisit. இவர் தான் இந்த ஓ ரிங் பிரச்சனையை பற்றி தெளிவாகவும் எளிமையாகவும் தொலைக் காட்சியில் விளக்கினார். அந்த வீடியோவும் யூ டியுபில் கிடைக்கிறது.

முத்துசிவா said...

ஆமாம். The challenger disaster படத்தில் இந்த physist கேரக்டர்தான் ஹீரோ

முத்துசிவா said...

ஆமாம். The challenger disaster படத்தில் இந்த physist கேரக்டர்தான் ஹீரோ

Madhu said...

Very informative. I heard about shelf life already but other details are new.

Unknown said...

Good info...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...