Saturday, January 30, 2016

அரண்மனை 2 – அல்வா!!!


Share/Bookmark
பொதுவா ஒரு படத்தோட ரெண்டாவது பார்ட்டுங்குறது முதல் பாகத்துல நடிச்ச அதே கேரக்டர்கள வச்சி முதல் பாகத்தோட கதையின் தொடர்ச்சியையோ இல்லை அதற்கு சம்பந்தமான வேற ஒரு கிளைக் கதையையோ எடுக்குறது தான். ஆனா நம்ம தமிழ் சினிமாவ பொறுத்த அளவுல அப்படி இல்ல. ஒருசில படங்களைத் தவிற ரெண்டாவது பார்ட்டுங்குறது பெரும்பாலும் ரெண்டாவதா எடுக்கப்படுற படத்தோட ப்ரமோஷனுக்காகவும் நல்ல ஓப்பனிங்குக்காக மட்டுமே பயன்படுத்தப்படுது. உதாரணத்துக்கு சொல்லனும்னா பீட்சா-2, பில்லா-2, காஞ்சனா-2, பசங்க-2, தலைநகரம்-2 போன்ற படங்கள் அதே ஹீரோ அல்லது அதே இயக்குனர் என்ற ஒருசில ஒற்றுமைகளைத் தவிற கதையில முழுசும் வேறுபட்ட படங்கள். எனக்கு தெரிஞ்சி சிங்கம்-2 மட்டும்தான் அதே கதாப்பாத்திரங்கள வச்சி முதல் படத்தோட தொடர்ச்சி மாதிரி வந்த படம்.

தமிழ்ல இப்போதைக்கு படம் எடுத்துட்டு இருக்குற இயக்குனர்கள்ல பி.வாசு, கே.எஸ்.ரவிகுமாருக்கு அப்புறம் அதிக படம் இயக்கிய இயக்குனர் சுந்தர்.சி தான். அன்பே சிவம், சின்னா போன்ற ஒண்ணு ரெண்டு படங்களைத் தவிற ஒர்க் பன்ன  அத்தனை படங்களும் காமெடிய மையமா வச்ச படங்கள்தான். கொஞ்ச நாள் நடிக்க வந்து கால் உடைஞ்சி நடிக்கிறத நிறுத்திருந்தாலும் திரும்ப ரெண்டாவது ரவுண்டு கலகலப்புல ஆரம்பிச்சி தொடர்ந்து 3 படம் செம ஹிட். ஆம்பள ஆவரேஜாதான் போச்சின்னாலும் காமெடில பட்டைய கெளப்பிச்சு.  அரண்மனை வெற்றியத் தொடர்ந்து அதோட அடுத்த பார்ட்ட சொந்த தயாரிப்புல எடுத்து ரிலீஸ் பன்னிருக்காரு. படம் எப்டின்னு பாப்போம்.

ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னால சந்திரமுகியோட ரெண்டாவது பாகம் தெலுங்குலயும் (நாகவள்ளி) , கன்னடத்துலயும் (ஆப்த ரட்சகா) பி.வாசு எடுத்திருந்தாரு. அதுக்கு நம்ம தளத்துல ஒரு விமர்சனமும் போட்டுருந்தோம் (நாகவல்லி விமர்சனம்). அதாவது அதுல ரெண்டாவது பார்ட்டுன்னு பேர மட்டும் வச்சிக்கிட்டு முதல் பாகத்துல இருந்த கேரக்டர்கள மட்டும் மாத்தி திரும்ப அதே படத்த எடுத்து ரிலீஸ் பன்னிருந்தாரு. ஆனா இங்க அரண்மனை-2 ல நடக்குற கொடுமையோ அதுக்கும் மேல.

அரண்மனையோட அடுத்த பார்ட்டுன்னு நெனைச்சி போனா, இது அடுத்த பார்ட் இல்லை. வேற நடிகர்கள் நடிச்சி அதே அரண்மனையோட முதல் பாகமே ஓடிக்கிட்டு இருக்கு. என்னடா பித்தலாட்டம் இது. ”அண்ணே போன வாரம் ஒரு வடை போட்டு குடுத்தீங்களே.. சூப்பரா இருந்துச்சின்னே… அதே மாதிரி ஒண்ணு போட்டு குடுங்கண்ணே” ன்னா அதே மாதிரி என்ன அதே வடையே இருக்கு” ன்னு எடுத்து குடுக்குற மாதிரி கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாம அப்புடியே எடுத்துருக்காங்க.

சக்திவாய்ந்த அம்மன் இருக்க ஒரு ஊரு. பேய்கள்லாம் அந்த ஊருல அண்டவே அண்டாது. அப்படி இருக்க கோயில புதுப்பிக்கனும்னு அம்மன தூக்கி ஒரு பத்து நாள் நவதாணிய கிடங்குன்னு எதோ சொல்லி அதுக்குள்ள வச்சி பூட்டிடுறாங்க. இந்த கேப்புல பில்லி சூனியம் வக்கிரவியிங்க அவனுங்க பொழப்புக்காக சில பேய்கள கிளப்பி விடுறாய்ங்க. அதுல ஒரு கொடுரமான பேயி நேர ஒரு அரண்மனைக்குள்ள போயிருது.

அப்புறம் என்ன… திடீர் திடீர்னு ஒடையிதாம்.. சாயிதாம்… ராதாரவிய தூக்கி போட்டு மிதிக்கிதாம். ராதாரவி பையன் சித்தார்த்தும் பேயப் பார்த்து மெரண்டு போயிட, அப்புரம் வர்றாரு நம்ம ”ஷரவணா” சுந்தர்.சி. அரண்மனை 1 ல என்ன பன்னாரோ அதயே இங்கயும் பன்றாரு பேய யாருன்னு கண்டு புடிச்சி அதுகூட பேச்சுவார்த்தை நடத்தி பத்தரமா திரும்ப அனுப்பி வைக்கிறதுதான் மீதிக் கதை.

படத்துல வர்ற எல்லா சீனுமே அருதப் பழசு. தீயா வேலை செய்யனும் குமாரு படம் ரிலீஸ் ஆனப்போ நானும் என் நண்பனும் “மச்சி இந்தப் படத்த பாருடா.. எதோ புது டைரக்டர் எடுத்த மாதிரி இருக்கு… சுந்தர்.சி இந்த ட்ரெண்டுக்கு சூப்பரா அடாப்ட் ஆயிட்டாருடா” ன்னு பேசிக்கிட்டு இருந்தோம். இப்ப என்னன்னா அப்டியே உல்டாவாயிருச்சி. அரண்மனை வந்தப்புறமே எத்தனை சூப்பர் பேய் படம் எவ்வளவு நல்ல புது சீனோடா வந்துச்சி. அதப் பாத்தாவது கொஞ்சம் திரைக்கதைக்கு மெனெக்கெட்டிருக்கலாம்.

ஒரு பேய் படத்துல யாராவது ஒரு பொண்ணு முழிய உருட்டி உருட்டி பாக்கும். ஸ்லோ மோஷன்ல போகும். எப்ப பாத்தாலும் மொறைச்சிகிட்டே இருக்கும். அதாவது நம்ம அதுதான் பேயின்னு நினைப்போமாம். எத்தனை படம் அதே மாதிரி. இப்பல்லாம் அதுமாதிரி எதாவது கேரக்டருக்கு பில்ட் அப் குடுத்தாலே அந்த கேரக்டர் டம்மி பீஸாத்தான் இருக்கும்னு பொறந்த குழந்தை கூட சொல்லிடும். அப்டி இருந்தும் படத்துல பூனம் பாஜ்வாவுக்கு அந்த கேரக்டர் தான்.

பேய் வர்ற சீன்லயெல்லாம் பூணம் பாஜ்வா ரூமுக்குள்ள எதோ பயங்கரமா மந்திரம் பன்னிட்டு இருக்கு. சரி எப்புடியும் அந்தப்புள்ள பேயா இருக்காது. நா ஒரு படி மேல போய் யோசிச்சேன். ஒரு வேளை ஹாரி பாட்டர் படத்தோட 1st part ல Professor Snape ah இப்டித்தான் காமிப்பாய்ங்க. எப்பவுமே மந்திரம் பன்னிட்டு இருக்க கெட்டவன் மாதிரி. ஆனா ஸ்நேப் தீய சக்திக்கிட்டருந்து காப்பாத்துரதுக்கு தான் மந்திரம் பன்னாருன்னு கடைசில தான் தெரியும்.  ஒரு வேளை அதத் தான் காப்பி அடிச்சிருப்பாய்ங்களோன்னு பாத்தா.. கடைசில ஒண்ணு சொன்னாய்ங்க பாருங்க. ச்சை.. உங்களுக்கு போய் ஹாரி பாட்டர் லெவல்ல யோசிச்சேன் பாருடா.. என் மூஞ்சில நானே காரி துப்பிக்கனும்னு நெனைச்சிக்கிட்டேன்.

பேய் காட்சிகள் பெரிய தாக்கத்த ஏற்படுத்தாதது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. ஏன்னா முதல் பாகத்துலயே பெருசா பயமா இருக்காது. ஆனா மிஸ்ஸானது என்னன்னா காமெடிதான். சந்தானத்தோட impact la ஒரு பத்து சதவீதம் கூட சூரியால குடுக்க முடியலங்குறது தான் உண்மை. வழக்கமா சுந்தர்.சி பட காமெடிங்க கொடூரமா சிரிக்க வைக்கும். அரண்மனை 1 கூட அப்டித்தான். சந்தானம் லட்சுமிராய பாத்துக்கிட்டு இருக்கும்போது திடீர்னு நடுவுல நித்தின் சத்யா எந்திரிப்பான். “யார்ரா இவன் மழையில திடீர்னு முளைச்ச நாய்கொடை மாதிரி” ம்பாரு.

இன்னொரு சீன்ல கோவைசரளா வெக்கப்பட்டு ஓடி வரும். ஏன் ஒடி வர்றன்னு சந்தானம் கேக்க “அவரு பாத்ரூம்ல என் மூஞ்ச வரைஞ்சி வச்சி பக்கத்துல ஐ லவ் யூன்னு எழுதிட்டு வந்துட்டாருன்னு” வெக்கப்பட்டுக்கிட்டே சொல்லும். அதுக்கு சந்தானம் “பாத்ரூம்ல கிரிணி பழத்த கீரி வச்ச மாதிரி ஒரு மூஞ்சி வரைஞ்சிருந்திருச்சே அது உன் மூஞ்சி தானா” ம்பாரு அதெல்லாம் நினைச்சி நினைச்சி சிரிப்பு வரும். ஆனா சூரி சிரிக்க வைக்கிறதுக்கு பதில் பெரும்பாலான இடங்கள்ல கடுப்பத்தான் கெளப்புறாரு. வசனங்கள்னு பாத்தா எல்லாம் சந்தானத்துக்கு எழுதுன மாதிரி தான் தெரியிது. ஆனா நம்ம சூரிக்கு “வந்துட்டாய்ன்… நின்னுட்டாய்ன்… செஞ்சிட்டாய்ன்” ன்னு ஒரே ஸ்லாங்குலதான் வசனம் பேச வரும். கோவை சரளா மனோபாலா காம்போவுல ஒருசில இடங்கள் சிரிக்க வச்சாலும் பெரிய அளவுல ஒண்ணும் இல்லை.

படத்துல உருப்படியான ஒரு விஷயம்னா கேமராதான். நல்ல கலர்ஃபுல்லா தரமா எடுத்துருக்காப்ள. அதுவும் அந்த ப்ரம்மாண்ட அம்மன் சிலை சம்பந்தப்பட்ட காட்சிகளும், கடைசில் குஷ்பு ஆடுற பாட்டும் விஷுவல் செம. உருப்படியான இன்னொரு விஷயம்.. ச்ச ச்ச.. ஒண்ணு இல்லை மூணு… திரிசா, ஹன்சிகா, பூணம் பாஜ்வா.. தரம். திரிசால்லாம செம அழகு. சுந்தர்.சி யோட வழக்கமான பீச் பாட்டுல திரிசா நல்ல ஃப்ரீயா நடிச்சிருக்கு. அந்த ஃப்ரீ இல்லீங்க. நல்ல காத்தோட்டமான ட்ரெஸ்லாம் போட்டுக்கிட்டு நடிச்சிருக்குன்னு சொன்னேன். செகண்ட் ஹாஃப்ல செகப்பு புடவையில திரிசாவும், ஹன்சிகாவும் மாறி மாறி வரும்போது… பாக்க ரெண்டு கண்ணு பத்தல.. செம்ம அழகு.

ஹிப் ஹாப் தமிழா ரெண்டு பாட்டு ஓக்கே.. ஆனா ஒரே இரைச்சல். பாட்டு ஓடி முடிஞ்சி ரெண்டு நிமிஷம் ஆகியும் காதெல்லாம் “கொய்ய்ய்ய்ய்ங்” ன்னு சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கு. தம்பி பாடுறத கொஞ்சம் நிறுத்திக்கிட்டா நல்லாரும். இவன் பாடுனா எல்லா பாட்டும் ஒரே மாதிரி இருக்கு.

பேய் வர்ற காட்சிகள் ஒண்ணு ரெண்டு பயமுறுத்துது. மற்றபடி எந்த காட்சியுமே அவ்வளவு சிறப்பா இருக்குன்னு சொல்ல முடியல. அதுபாட்டுக்கு ஓடுது. பாத்த படத்தையே திரும்ப பாக்குறதால நமக்கு எந்த ரியாக்‌ஷனுமே வரல. ரெண்டாவது பார்ட்டுன்னு கடனுக்கு எடுக்காம கொஞ்சம் மெனக்கெட்டிருந்தா இன்னும் நல்லா பன்னிருக்கலாம்.


சமீப காலங்கள்ல வந்த சுந்தர்.சி படங்கள்ல என்னை ஏமாற்றிய முதல் படம் இதுதான். எடுக்காமயே இருந்துருக்கலாம். 

                                                               (Idream, 29/01/16, 10pm)

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

கண்ணன் கீழச்செக்காரக்குடி said...

சுந்தர் C. படத்தில முரட்டுகாளைக்கு அப்புறம் உங்க வாய்ல பாராட்டு பெற்ற படம் இதுதான் தியேட்டர்ல பாக்கலாமா? இல்ல நெட்ல பாக்கலாமா ?

முத்துசிவா said...

//தியேட்டர்ல பாக்கலாமா? இல்ல நெட்ல பாக்கலாமா ?//

போஸ்டர்ல பாருங்க :-)

Saran said...

போஸ்டர்ல திருஷா ஃபிரியா நடுச்சது தெரியுமா?

Madhu said...

Thank god.. I didn't get the ticket for this week end. Sundar.C yemathitara ??

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...