
தெலுங்குல
ஜூனியர் NTR நடிச்ச பாட்ஷான்னு ஒரு படம். அந்தப்
படத்துல வர்ற ஒரு காமெடி சீன். “ரிவெஞ்ச் நாகேஸ்வரராவ்” ன்னு ஒரு இயக்குனர் கேரக்டர்
வரும். அந்த இயக்குனர்கிட்ட டிவில பேட்டி எடுப்பாங்க. அதுல பேட்டி எடுக்குற பொண்ணு
“சார்
உங்க அடுத்த படம் என்ன?”
“Blood
Bath part 2 “ ம்பாரு டைரக்டர்
“சார்
பார்ட் 1 தான் ஃப்ளாப் ஆயிருச்சில்ல”
“அதுக்குதான்
பார்ட் 2 எடுக்குறேன்”
“அப்ப
பார்ட் 2 வும் ஃப்ளாப் ஆயிட்டா?”
“பார்ட்
3 எடுப்பேன்” ம்பாறு.
அந்தப் படத்துல காமெடி
சீனா வைச்சதை சீரியஸா நம்மூர்ல பன்னிட்டு இருக்கவருதான் இயக்குனர் முத்தையா.
குட்டிப்புலி
எடுத்தாரு. ஓடல. அதனால குட்டிப்புலியவே கார்த்திய வச்சி கொம்பன்னு எடுத்தாரு. சுமாரா
போச்சு. இப்ப திரும்ப கொம்பனையே விஷால வச்சி மருதுன்னு எடுத்துருக்காரு. எப்புடியும்
இந்தக் கதை ஹிட்டாகுற வரைக்கும் ஓயமாட்டாருன்னு நினைக்கிறேன். ஒண்ணும் கவலப்படாதீங்க
சார். இன்னும் ஒரு நாலஞ்சி தடவ இதயே எடுத்துப் பாருங்க. கண்டிப்பா க்ளிக் ஆயிடும்.
அதுக்கப்புறம் வேற கதைக்கு நாம போவோம்.
எந்த
சூழ்நிலையிலும் கதையயோ, கதைக்களத்தையோ, ஹீரோ கேரக்டரையோ மாத்திரவே கூடாதுங்குறதுல நம்மாளு
ரொம்பத் தெளிவா இருந்துருக்காரு. அதே மண்டை கட்டிங்… உள்ள போட்டுருக்க டவுசர் தெரியிற மாதிரி கைலி..
கணவனை இழந்த அம்மா/பாட்டி. பக்கத்து ஊர் பொண்ண அங்க தேடிப்போய் கரெக்ட் பன்றது. பொண்ணுங்கள
தாயா மதிக்கிறது (நாங்க மட்டும் என்ன பேயவா மதிக்கிறோம்), எவனா இருந்தாலும் தூக்கிப்போட்டு
மிதிக்கிதுன்னு எல்லாமே அதே டெய்லர் அதே வாடகை.
“இங்யாரு…
சலிச்சி விட்ருவேன் பாத்துக்க” “கிழிச்சி விட்ருவேன் பாத்துக்க” “அறுத்து விட்ருவேன்
பாத்துக்க” ”தட்டி விட்ருவேன் பாத்துக்க” ன்னு அதே பழைய வசனங்களப் பேசிக்கிட்டு நீள
நீள கத்தி அருவாளோட template மதுரை வில்லன்கள். ”பொம்பளைக்கு ஒண்ணுன்னாலே புகுந்து
அடிப்பேன். புடிச்சவளுக்கு ஒண்ணுன்னா புலி
மாதிரி அடிப்பேன்” ன்னு கடுப்பேத்துற மாதிரி பில்டப் வசங்கள்.
இவ்வளவு
இருந்தாலும் படம் நல்லா தான் இருக்கு. எதிர்பாக்கலைல்ல… இப்டி சொல்லுவேன்னு எதிர்பாக்கலைல்ல…
அட உண்மையா படம் நல்லாதான் இருக்கு. குட்டிப்புலியோட upgraded version கொம்பன். கொம்பனோட upgraded version மருது.
அவ்வளவு தான். ஒவ்வொரு படத்துலயும் அதே கதையில ஒண்ணு ஒண்ணா improve பன்னிட்டு வர்றாரு
முத்தைய்யா..
கொம்பனும்
குட்டிப்புலியும் ஒண்ணுதான். ஆனா ராஜ்கிரனால கொம்பன் படம் தப்பிக்கும். கொம்பன்ல ராஜ்கிரன்
இல்லாத சீனயெல்லாம் பாத்தா கண்றாவியா இருக்கும். தம்பிராமைய்யாவ வச்சிக்கிட்டு காமெடிங்கிற
பேர்ல கத்திய எடுத்து கழுத்துல சொருகுவாய்ங்க. ஆனா மருதுல சூரியோட காமெடி ஓரளவுக்கு
நல்லாவே எடுபட்டுருக்கு. முதல் சீன்ல சூரி பேசுற வசனங்களப் பாத்தா அடுத்த கஞ்சா கருப்போன்னு
தோணுச்சி. ஆனா போகப் போக காமெடி ஓரளவுக்குப் பரவால்ல.
ஸ்ரீதிவ்யா
தங்கம் மாதிரி பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு. செம அழகு. RK சுரேஷ் (தாரை தப்பட்டை
வில்லன்) பயங்கரமா இருக்காரு. வில்லத்தனத்துல புதுசா எதுவும் இல்லை. ஆனா ஆளப் பாக்கவே
பயமா இருக்கு. யாரு அவங்க வேலைய ஒழுங்கா செஞ்சாலும் செய்யலன்னாலும் ஒரே ஒருத்தர் அவர்
வேலைய கரெக்ட்டா பாத்துக்கிட்டு இருக்காரு. நம்ம இமான் அண்ணாச்சி தான். அட “எலே மிஸ்பன்னிறாதிய..
அப்புறம் வருத்தப்படுவிய” அவரு இல்லப்பா.. நம்ம D. இமான். எல்லா பாட்டுமே நல்லா போட்டுருக்காரு.
குறிப்பா எனக்கு ரொம்ப புடிச்சது intro songum ”ஒத்த சடை ரோசாவும்”
அநியாயத்தக்
கண்டா பொங்குறது, பொண்ணுங்களே தெய்வமா மதிக்கிறது போன்ற முதன்மை வேலைகளோட, மூட்டை தூக்குறத
சைடு வேலையா பாக்குறவரு விஷால். அப்புடியே மூட்டை தூக்குறவங்க மாதிரியே இருக்காரு.
ஒரு அழுக்கு பனியன். முட்டிக்கு மேல ஏத்திக்கட்டுன கைலியோட கரு கரு காலோட பெரும்பாலான
சீன்ல அப்டியே பாத்துரமாவே தெரியிறாரு. பொதுவா ஹீரோக்கள் இந்த மாதிரி கேரக்டர் பன்றது
ஒண்ணும் புதுசு இல்லை. ஆனா இந்தமாதிரி ரோல் பன்னும்போது நடை உடை பாவனைன்னு ஹீரோ மட்டும்
அந்தக் கூட்டத்துல தனியாத் தெரிவாரு. ஆனா முதல் பாட்டுல மூட்டை தூக்குறவங்கல்லாம் சேர்ந்து
டான்ஸ் ஆடுவாங்க. அதுல விஷால் எங்க இருக்காருன்னு கண்டுபுடிக்கவே எனக்கு ரொம்ப நேரம்
ஆச்சு. எந்த வித ஸ்பெஷல் காஸ்டியூமோ மேக்கப்போ இல்லை. விஷால் ஸ்க்ரீன் ப்ரசன்ஸூம் செம.
விஷால்
ஹைட்டுக்கு சம்பந்தமே இல்லாம மூணடியில விஷாலோட பாட்டி. ரொம்ப தைரியமான பாட்டி. ஓரளவுக்கு
நடிக்கவும் செஞ்சிருக்கு. அடிக்கடி விஷாலு “ஆத்தா நீ என் சாமி ஆத்தா” ம்பாறு. அப்பவே
நமக்கு தெரிஞ்சிரும் ஆத்தாவ சீக்கிரம் சாமிக்கிட்ட அனுப்பிருவாங்கன்னு. அத இண்டர்வல்ல
அனுப்புறாய்ங்களா இல்லை க்ளைமாக்ஸ்ல அனுப்புறாய்ங்களான்னுதான் டவுட்டு. ஸ்டண்டு முந்தைய
ரெண்டு படத்துல இல்லாத அளவுக்கு இதுல நல்லா இருக்கு.
ஒரு
குறிப்பிட்ட சமுதாயத்தப் பத்தி மட்டும் படமெடுக்குறார்ன்னு முத்தையா மேல ஏற்கனவே ஒரு
குற்றச்சாட்டு இருக்கு. இந்தப்படத்துலயும் அது கண்டிப்பா தொடரும். நம்ம இதப்பத்தி ரொம்ப
உள்ள பூந்து தொலாவத் தேவையில்லை. பெரும்பாலும் பெண்களை மதிப்பது, பெண்கள் பாதுகாப்பு,
பெண்களோட வீரம் இதை மட்டுமே மையமா வச்சி படம் எடுக்குற முத்தைய்யா குட்டிப்புலி படத்துல
இரண்டு பெண்கள் சேர்ந்து வில்லன் கழுத்த கத்தியால துண்டா வெட்டி எடுத்துட்டு வர்ற மாதிரி
ஒரு கொடூரமான காட்சி வச்சிருந்தாரு
இங்க
இன்னும் ஒருபடி மேல போய் ரெண்டு பெண்களை இந்தப் படத்துல கொடூரமாக வில்லன்கள் கொல்றது
மாதிரியான காட்சிகள் வருது.. படத்துக்கு U/A சர்டிஃபிகேட் வந்ததுக்கு இதுதான் காரணமா
இருந்துருக்கனும். நிச்சயம் இந்தக் காட்சிகள தவிர்த்துருக்கலாம். ஒரு ஆம்பளைய நடுரோட்டுல
வெட்டிக்கொல்ற காட்சிகள ஏராளம் பாத்துருக்கோம். அதயே ஒரு பொண்ணை நடுரோட்டுல நாலு பேரு
அமுக்கி புடிச்சி கழுத்தை அறுத்துக் கொல்றது மாதிரியான ஒரு காட்சி வைக்கும்போது ரொம்ப
ஒரு மாதிரி இருக்கு.
விஷால்
வெள்ளத்தின் போது எதுவுமே பன்னல.. அவன் படத்தையெல்லாம் யாரும் பாக்காத்தீங்கன்னு ஒரு
குரூப்பு ப்ரச்சாரம் பன்னிக்கிட்டு திரியிது. இவய்ங்கல்லாம் என்ன ரகம்னே தெரியலை. இவய்ங்க இருக்க ஃபோர்ஸ பாத்தா வெள்ளத்துல உதவி பன்ன சித்தார்த் படத்தையெல்லாம் இனிமே கண்டிப்பா 100 நாள் ஓட்டுவாய்க்க போல.
என்னைப்
பொறுத்த அளவு மருது வோட முதல் பாதி நல்ல பாட்டு, நல்ல காமெடின்னு கொம்பன விட நல்லா
இருந்துச்சி. செகண்ட் ஹாஃப் கொஞ்சம் ஆவரேஜ் தான். ஆனா ஓவராலா படம் நல்லா தான் இருக்கு.
என்னைப் பொறுத்த வரை மருது கொம்பனை விட கொஞ்சம் பெட்டர்னுதான் தோணுச்சி.
1 comment:
komban is a blockbuster
Post a Comment