Friday, May 27, 2016

கென்னடிக்கு பின்னடி – JFK சம்பவம் -3


Share/Bookmark
முதல்பகுதி இரண்டாவது பகுதி போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள போன கெழவி போலீஸ் காரங்க ஒவ்வொருத்தரு முன்னாலயா போய் போஸ் கொடுத்துருக்கு.. யாருமே கண்டுக்கல.. கடைசில அதுவே கடுப்பாகி ஒரு போலீஸ்காரர் பக்கத்துல மூஞ்சிய கொண்டுபோயி “என்னைத் தெரியல? என் முகத்த நல்லா உத்து பாருங்க” ன்னுருக்கு. “என்ன கெழவி கண்ணெல்லாம் செவந்து போயிருக்கு… நேத்து நைட்டு ஓவர் சரக்கா?” ன்னு கலாய்ச்சி விட்ருக்கான் அந்த போலீஸ். அப்புறம் அது வாயாலயே “அடேய் நாந்தான்னா நீங்க இவ்வளவு நாளா தேடிக்கிட்டு இருக்க Babushka lady ன்னுருக்கு.  உடனே கெழவியை அழைச்சிட்டு போய் கென்னடி கேஸ் பத்தி ஆராய்ச்சி பன்றவனுங்ககிட்ட விட்டுருக்கானுங்க. இப்ப நாந்தான் தாய்க்கெழவின்னு சொல்லிக்கிட்டு வந்துருக்க ஆயா பேரு பெவர்லி ஆலிவர்.


Gary Shaw ன்னு அப்ப கென்னடி கேஸ் பத்தி ரிசர்ச் பன்னிக்கிட்டு இருந்தவது “சரி நீ தான் தாய்க்கெழவின்னு நாங்க எப்புடி நம்புறது?... எங்க கென்னடி சுட்ட அன்னிக்கு நீ என்ன என்ன பாத்தன்னு கொஞ்சம் வெளக்கு” ன்னுருக்காரு. உடனே கெழவி கென்னடிய சுட்டதப் பத்தி வட சுட ஆரம்பிச்சிருக்கு.

“சார்… அன்னிக்கு நா அங்க தான் சார் இருந்தேன்… என்னோட Yashika Super-8 Zoom  கேமராவ வச்சி அவர படம் எடுத்துக்கிட்டு இருந்தேன்… அப்ப கென்னடியோட கார் வந்துச்சா… டொபீர்னு ஒரு சத்தம் சார்.. கென்னடியோட தலை அப்புடியே வெடிச்சி செதறுச்சி… ஒரு பக்கெட் அளவுக்கு ரத்தம் தெறிச்சிது சார்… “ கெழவி கதை சொல்லிக்கிட்டு இருக்கும்போதே ஆபீசர் Gary Shaw பக்கத்துல இருக்க போலீஸ்க்கு கண்ண காமிச்சிருக்காப்ள. சிங்கம் படத்துல சாஃப்ட்வேர் கம்பெனி லேடின்னு ஒண்ணு சூர்யாகிட்ட கம்ப்ளைண்ட் பன்ன வரும்ல.. அந்த சீன மைண்ட்ல நினைச்சிக்குங்க.

“சரி பாட்டி… நீங்க எடுத்த அந்த வீடியோ கேமரா எங்க”

“அ.. அது சம்பவம் நடந்து ரெண்டு நாள் கழிச்சி ரெண்டு பேர் என் வீட்டுக்கு வந்தாங்க சார்.. அதுல ஒருத்தர் பேரு ரெஜிஸ் கென்னடி. FBI ஏஜெண்டுன்னு சொன்னாரு. இன்னொருத்தரு CIA ன்னு சொன்னாரு. சொல்லி என்னோட வீடியோ கேமரா இன்வெஸ்டிகேஷனுக்கு வேணும்னு வாங்கிட்டு பொய்ட்டாங்க” ன்னு சொல்லி முடிக்கும்போது இவர் கண்ண காமிச்ச இன்னொரு போலீஸ்காரர் பக்கத்துல வந்து இவர் காதுக்குள்ள எதோ சொல்றாரு. உடனே Gary Shaw கெழவிய ஏற இறங்க ஒரு தடவ பாத்துட்டு

“ஏன் கெழவி.. நீ போட்டுருக்க பாடி ஸ்ப்ரேக்கும் உன் பல்லுல இருக்க கறைக்கும் நீ சொல்லுற கதைக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா… இருக்கா… (ஹை பிட்ச்) ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரைக்கும் வாடி இருக்குமாம் கொக்கு” ன்னு ஒரு பஞ்ச் டயலாக்க சொல்லிட்டு கெழவி சொன்ன கதையில உள்ள ஓட்டையெல்லாம் புட்டு புட்டு வச்சிருக்காரு.

“நீ இப்ப சொன்ன கதையில முக்கால்வாசி டீட்டெய்ல் தப்பு… நீ Yashika Super-8 Zoom கேமராவ வச்சி படம் எடுத்ததா சொல்ற.. சம்பவம் நடந்தது 1963.. ஆனா நீ சொன்ன கேமரா மாடல் கண்டுபுடிச்சதே 1967 ல தான். கண்டுபுடிக்காத ஒரு கேமராவ வச்சி உன்னால எப்புடி படம் எடுத்துருக்க முடியும்? கென்னடி சுடப்பட்டப்ப தலை தெறிச்சி பக்கெட் பக்கெட்டா ரத்தம் வந்துச்சின்னு சொன்ன.. தலை பின்னால தெறிச்சது என்னவோ உண்மைதான்.. ஆனா படத்துல காட்டுற மாதிரி கொடூரமால்லாம் தெறிக்கல.. அப்புறம் என்ன சொன்ன, ரெஜிஸ் கென்னடி உன்கிட்ட வந்து கேமரா வாங்குனானா? நீ சொல்ற தேதில அவன் வேற ஒரு ஊர்ல இன்னொருத்தன விசாரிச்சிட்டு இருந்தான். இன்னொருத்தன் CIA ன்னு சொன்னானா? எந்த CIA வும் உன்ன மாதிரி பப்ளிக்கிட்ட தான் ஒரு CIA ஏஜெண்டுன்னு சொல்லிக்க மாட்டான்”

“நீ நைட் க்ளப்புல டான்ஸ் ஆடுறவ.. நீ இப்பவே பாக்க கொஞ்சம் இளமையாதான் இருக்க.. அப்டின்னா சம்பவம் நடந்த ஏழுவருசத்துக்கு முன்னால இன்னும் இளமையாத்தான் இருந்துருப்ப… நாங்க சொல்ற “தாய்கெழவி” ரொம்ப பழைய பீஸு… அது ஆப்ரகாம்  லிங்கன் செட்டு… நீ தாய்க்கெழவியா இருக்க வாய்ப்பே இல்லை. மரியாதையா ஓடிப்போயிரு..” ன்னு அனுப்பி விட்டாய்ங்க… அந்தக் கெழவி வெளில போய் இதே கதையெ டிவி ப்ரஸ்ஸூன்னு எல்லார்கிட்டயும் சொல்லி சீன் போட்டு திரிஞ்சிருக்கு. எப்புடியெல்லாம் ஃபேமஸ் ஆவுறாய்ங்க பாருங்க.

இப்ப வரைக்குமே கென்னடிய உணமையிலயே யாரு சுட்டது? சுட்டது ஒருத்தனா ரெண்டு பேரா? தனியா செயல்பட்டானா இல்லை யாரோட தூண்டுதல்ல செயல்பட்டானாங்குறது சந்தேகத்துக்குரிய கேள்விதான். நம்ம போன பதிவுல சொன்ன மாதிரி Warren Commission ரிப்போர்ட்ல கென்னடியோட கார நோக்கி மூணு ரவுண்ட் சுடப்பட்டதுன்னும், அதுல ஒண்ணு மிஸ்ஸாகி மத்த ரெண்டு புல்லட்தான் கென்னடியையும் கவர்னரையும் தாக்குச்சின்னும் சொல்லிருந்தாங்க. அதுலயும் முதல் புல்லட் கென்னடியோட இடுப்புல பாஞ்சிது. ரெண்டாவது புல்லட்தான் கென்னடியோட கழுத்த துளைச்சிட்டு, அதுக்கப்புறம் அதே புல்லட்தான் கென்னடிக்கு முன்பக்கம் உக்கார்ந்திருந்த கவர்னர் இடுப்புல பாஞ்சி இருப்ப துளைச்சிட்டு மறுபடியும் அவரோட தொடைப்பகுதில பாஞ்சதா சொல்லிருக்காங்க. இதத் தான் Single Bullet Theroy அல்லது Magic Bullet Theroy ங்குறாங்க.

இது முழுக்க முழுக்க Theoretical assumption தான். 6 வது மாடியிலருந்து சுடப்ட்ட ஆங்கிள், புல்லட்டோட ஸ்பீடு எல்லாத்தையும் கணக்கிட்டு இத யூகிச்சிருக்காங்க. இவங்க சொல்ற கணக்குப்படி அந்த ஒரு புல்லட் கிட்டத்தட்ட 15 அடுக்கு துணியையும், 7 அடுக்கு மனித தோலையும் துளைச்சிருக்கதா சொல்றாங்க. ஆக்சுவலா அந்த கார்ல கென்னடியும் கவர்னரும் உக்கார்ந்திருந்த பொஸிஷனுக்கு இந்த சிங்கில் புல்லட் கான்செப்ட்ட அப்ளை பன்னி பாத்த ரொம்ப காமெடியா இருக்கும். கீழ உள்ள படத்த பாருங்க. அதுல காமிச்சிருக்க புல்லட்டோட் பாதை நடைமுறையில சாத்தியப்படாத ஒண்ணு. ஆனா அதுக்கப்புறம் வந்த சில ஆராய்ச்சிகள்ல அவங்க ரெண்டு பேரோட பொஸிஷன் கொஞ்சம் மாறியிருக்கலாம்னு அனுமானிக்கிறாங்க. அப்டின்னா ஓரளவு இந்தத் தியரி மேட்ச் ஆகும்.                                                                     


இன்னும் சில பேரு சம்பவம் நடந்த அன்னிக்கு துப்பாக்கி சத்தம் அந்த Book Depository Building லருந்து கேக்கலன்னும், “The Grassy Knoll” ன்னு அழைக்கப்படும் ரோடு ஓரமா இருக்க சின்ன குன்று மாதிரி இடத்துலருந்து தான் சத்தம் கேட்டுச்சின்னும் சொல்றாங்க. அதுமட்டும் இல்லாம கென்னடி சுடப்பட்டதும் போலீஸ்காரங்க முதல்ல அந்த Grassy knoll ah நோக்கிதான் ஓடுனாங்களே தவற அந்த பில்டிங்க நோக்கி இல்லைன்னும் சொல்றாங்க. ஆனா இதயும் சப்போர்ட் பன்றதுக்கு நிறைய ஆதாரங்கள் இல்லை. மொத்தத்துல ஒருத்தனை சிறப்பா சம்பவம் பன்னிட்டாய்ங்க.

சரி இப்ப 11.22.63 ன்னு 2016 ல வந்த மினி சீரிஸ் ஒண்ணு இருக்கு. 2016 ல Dallas நகரத்துல ஒருத்தர் ஒரு Burger shop வச்சிருக்காரு. அந்த பர்கர் ஷாப்புக்குள்ள ஒரு சின்ன சந்து மாதிரி இருக்கு. அந்த சந்துக்குள்ள போனா அது நேரா நம்மள 1960 க்கு கொண்டு போயிருது. அங்க நீங்க எத்தனை நாள் வேணாலும் இருக்கலாம். திரும்பி 2016 வந்தா வெறும் ரெண்டு நிமிஷம் தான் ஆயிருக்கும். (நார்நியா கான்செப் மாதிரி) நீங்க 1960 க்கு போகும்போது அங்க எதாவது செஞ்சிட்டு வந்தா அதோட impact நீங்க 2016 திரும்பி வந்தப்புறமும் இருக்கும். ஆனா once நீங்க 2016 க்கு வந்துட்டு திரும்ப அந்த சந்து வழியா 1960 க்கு போனீங்கன்னா , போன தடவ நீங்க என்ன செஞ்சீங்களோ எல்லாம் reset ஆகிடும். அதாவது ஒவ்வொரு தடவ நீங்க அந்த சந்து வழியா போகும்போதும் அது 1960ல ஒரு குறிப்பிட்ட அதே நாளுக்குதான் அழைச்சிட்டு போகும். இது basic concept.

இப்ப 1960 ங்குறது கென்னடி சுடப்பட்டதுக்கு மூணு வருஷம் முன்னால. கென்னடி சுட்டுக்கொல்லப்படாம இருந்துருந்தா, இன்னும் மக்களோட வாழ்க்கைத்தரம் சிறப்பா அமைஞ்சிருக்கும்னு ஒருத்தர் ஃபீல் பன்றாப்ள. அதனால 2016 லருந்து 1960 க்கு போய் மூணு வருஷம் அங்கயே தங்கியிருந்து கென்னடியோட கொலைய தடுக்க வேண்டிய முயற்சிகள் இன்வெஸ்டிகேஷன்கள் எல்லாம் பன்றாப்ள. அவர் கென்னடிய காப்பாத்துனாரா இல்லையாங்குறத ”டைம் ட்ராவல்” ங்குற சுவாரஸ்யத்தோட சொல்லிருக்க சீரியல் 11.22.63. மொத்தம் 8 எபிசோடுதான். முடிஞ்சா பாருங்க.பதிவே முடியப்போகும்போது ஏன் இந்த கவர்ச்சிப் படம்னு யோசிப்பீங்க. இருக்கு… இந்தப் படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்கு… முடிஞ்சா இன்னொரு பதிவுல அது என்னன்னு பாப்போம்.

நன்றி : நண்பன் பாலவிக்‌னேஷ்
பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

Anonymous said...

Excellent Siva

sivaje36 said...

சூப்பர் மச்சி

Madhu said...

'ithu namma aalu' movie ku review than eluthi irupinga nu ninachu unga page ku vanthen, but line ah 3 post parthu apdiye shock ahiten !! very nice posts!!!. Keep it up :-)

Natarajan S said...

Very Nice!!!

Nash said...

Very nice

பெம்மு குட்டி said...

மார்லின் மன்றோ கூட கென்னடி க்கு தொடர்பு இருந்தது னனு கென்னடி மனைவியே இந்த கொலையை அரங்கேற்றியதாக ஒரு தியரி உண்டு. அதுக்காகதான் இந்த போட்டோவா??

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...