Friday, July 22, 2016

கபாலி - A ரஞ்சித் வித்தை!!!


Share/Bookmark
ஒரு இயக்குனர் அதிகபட்சம் ரெண்டு படத்துல அவர் யாரு, அவருடைய கெப்பாகுட்டி என்ன, அவரால என்ன மாதிரியான output குடுக்க முடியும்ங்குறத காட்டிருவாரு. அதுதான் அவரோட benchmark. அதுக்கப்புறம் அவருடைய ஒவ்வொரு படைப்புகள்லயும் ஒரு பத்து பதினைஞ்சி பர்செண்ட் இம்ப்ரூவ்மெண்ட் இருந்தாலே பெரிய விஷயம். Drastic ah ஒரு மிகப்பெரிய change ah அவங்க படங்கள்ல எதிர்பார்க்க முடியாது. மக்களுக்கு அவர் மீதான மீதான எதிர்பார்ப்புகளும் அவர் ஏற்கனவெ செட் பன்னிருக்க benchmark ah பொறுத்துதான் அமையிது. அந்த இயக்குனர் அவரோட standard ah யே meet பன்னாத பொழுதுதான் மக்கள்கிட்ட வண்டி வண்டியா வாங்கிக் கட்டிக்கிறது. அதே அந்த இயக்குனர் எந்த ஹீரோவ வச்சி படம் எடுக்கும்போதும் மக்களுடைய எதிர்பார்ப்பு இயக்குனரோட benchmark ல தான் இருக்கனும். ஆனா சிலசமயம் அப்படி இல்லாம மிகப் பெரிய ஹீரோக்கள இயக்கும்போது மக்களோட எதிர்பார்ப்பு ஹீரோக்களோட முந்தைய படங்களின்  standard க்கு போயிடுது. 

கபாலியில் நடந்ததும் அதுதான். ரஜினிகாந்த் என்கிற ஒரு பேரால, ரஞ்சித் யாரு, அவரால என்ன பன்ன முடியும், என்ன பன்ன முடியாதுங்குற சிந்தனைய தூக்கி எறிஞ்சிட்டு, மக்கள் எல்லாம் ரஜினியோட Standard ல ஒரு மிகப்பெரிய படத்தை எதிர்பார்த்திருந்தோம். இன்னும் சொல்லப்போனா அந்த சிந்தனையே நமக்கு வராத அளவுக்கு செஞ்சது படத்தோட மார்க்கெட்டிங் மற்றும் டீசர்.

படத்தோட முதல் போஸ்டரிலிந்து டீசர் வரை எல்லாத்துலயும் சாதனை. ரசிகர்கள் மட்டும் இல்லாம சாதாரண பொதுமக்களையும் திருப்திப் படுத்தி “கபாலி எப்போ, கபாலி எப்போ” ன்னு எதிர்பார்ப்பை தூண்டி விடுற அளவு இருந்த இரண்டு டீசர்கள் இது அடுத்த பாட்ஷாவா, அடுத்த பில்லாவான்னு எல்லாரையும் நினைக்க வைச்சிது.

ஓரளவு தெளிவா இருந்த சிலரையும் தடம் மாற வைத்தது இந்தப் படத்தை ரஞ்சித் இயக்க ரஜினி எப்படி ஒத்துக்கிட்டார்ங்குற கேள்வி. எந்திரன் 2 கிட்டத்தட்ட முடிவாகி ஆரம்பிக்கப்போற சமயம். கவுதம் வாசுதேவ மேனனிடம் கதை கேட்டு ஓக்கே பன்னி வச்சிருந்த நேரம், திடீர்னு பிக்சர்லயே இல்லாத ரஞ்சித் ரஜினி படத்தை இயக்கப்போறார்ங்குற நியூஸ். ரெண்டே படங்கள்.. அதுவும் மிகப்பெரிய வெற்றியெல்லாம் பெறாத, critically acclaimed படங்களை மட்டும் எடுத்த ரஞ்சித்திற்கு எப்டி வாய்ப்பு கிடைச்சிது? அப்ப நிச்சயம் பயங்கர பவர்ஃபுல்லான ஸ்டோரி இருக்கும் அப்டிங்குற  இந்த நினைப்புலதான் நானும் ஸ்லிப் ஆனேன். சரி உண்மையில என்னதான் நடக்குது?

கதை என்ன, கதைக்களம் என்னன்னு ஏற்கனவே ரஞ்சித், எடிட்டர் ப்ரவீன்னு ஆளாளுக்கு ஒவ்வொரு பேட்டில கொஞ்ச கொஞ்சமா சொல்லிட்டாங்க. மலேசியாவில் அடிமைப்பட்டு கிடக்கிற தமிழ் மக்களுக்காகப் போராடி அவங்கள மீட்டெடுக்கும் கபாலி இருபத்தைஞ்சி வருஷ ஜெயில் வாழ்க்கைக்கு பிறகு வெளில வந்து எப்படி தான் தொலைத்த வாழ்க்கையை மீட்டெடுத்து மலேசிய தமிழ் சமுதாயத்த சீரழிக்கும் எதிரிகளை எப்படி  ஒழிக்கிறார்ங்குறது தான் கதை. 

இதை எப்படி நீட்டி முழக்கி ரஜினிகிட்ட சொல்லி ஒப்புதல் வாங்குனாங்கன்னு தெரியல. ஆனா திரையில நமக்கு காண்பிக்கப்படுறது தெளிவில்லாத, முடிவில்லாத ஒரு கதை, திரைக்கதை. ரஜினிக்காக இந்த கதை இல்லை, இந்த கதையில் ரஜினியை பிக்ஸ் பன்னிருக்கோம்னு எக்கச்சக்க பேச்சு. ஆனா உண்மையிலயே இந்தப் படத்துல ரஜினிங்குற ஒரு விஷயத்த வெளில எடுத்துட்டு அப்டி என்ன இருக்குன்னு  பாத்தா எதுவுமே இல்லை


படத்தோட மிகப்பெரிய மைனஸ் காஸ்டிங். ஒரே டெக்னீஷியன்களை வச்சி படம் எடுக்குறது தப்பு இல்லை. ஆனா ஒரே ஆக்டர்கள வச்சிக்கிட்டு சூட் ஆனாலும் சூட் ஆகலன்னாலும் அவர்களை ஒவ்வொரு படத்துலயும் மாத்தி மாத்தி நடிக்க வைச்சிக்கிட்டு இருக்கது கண்டிப்பா கடுப்பாதான் ஆகும். ஒரு ரஜினி படம்னா, அவர் கூட நடிக்கிற மற்ற நடிகர்களும் கிட்டத்தட்ட அவரோட ஸ்க்ரீன் ப்ரசன்ஸ்க்கு ஈக்குவலா நடிக்கனும். ராதாரவி, நாசர், ரகுவரன், மனோரமா மாதிரியான பெரிய கைங்கள தலைவர் படங்கள்ல அடிக்கடி போடுறதுக்கு முக்கிய காரணமும் இதுதான். கார்த்தியையும், கேத்ரின் தெரெசாவையும் தவிற மெட்ராஸ் படத்துல நடிச்ச எல்லாரும் இதுல வர்றாங்க. அதுவே கடியா இருக்கு. ரஞ்சித் அவருக்கு பழக்கமான ஒவ்வொருத்தருக்கும் சான்ஸ் குடுக்கனும்னு அதுக்குன்னே தனியா கேரக்டர்கள உருவாக்கிருப்பாரு போல.

அப்படி கொடுத்தவரு அந்த கேரக்டர்கள அழுத்தமானதாகவும், ரஜினிக்கு ஈடுகொடுக்கும்படி அவங்களோட நடிப்பையும் கொண்டுவந்திருக்கனும். ஆனா அதப் பத்தி ரஞ்சித் கவலைப்பட்டதாகவே தெரியல. சுருக்கமா சொன்னா மெட்ராஸ் படத்து atmosphere la கோட் சூட் போட்டு தலைவர உள்ள விட்ட மாதிரி இருக்கு. இதுல ஒவ்வொரு கேரக்டரையும் detailing பன்றதுக்காக ஒவ்வொருத்தோர வாழ்க்கை பின்னனிய விளக்குறதுக்கும் தனித்தனி காட்சிகள். ஆனா இங்க அதெல்லாம் தேவையில்லாததா தோணுது.

என்னதான் இயல்பான சினிமா எடுத்தாலும், சில சினிமாத்தனங்கள் கண்டிப்பா படத்துக்கு தேவை. ஒவ்வொரு கேரக்டரோட உடல் மொழியும், அவங்க பேசுற வசனமும் இதுல அடங்கும். நிஜ வாழ்க்கையில ரெண்டு பேரு டீக்கடையில உக்காந்து பேசிக்கிட்டு இருக்கதுக்கும் ஒரு சினிமால ரெண்டு பேரு டீக்கடையில உக்காந்து பேசிக்கிட்டு இருக்கதுக்கும் வித்யாசம் இருக்கனும். சினிமாவுல பேசுறப்போ அவங்க பேசுற வசனங்கள் ரொம்ப precise ah வும், கொஞ்சம் ஸ்பெஷலாவும் இருக்கனும். ஆனா கபாலியில் வருபபை எல்லாம் நிஜ டீக்கடை டைப் வசனங்கள். ஆளாளுக்கு வாயில வர்றத பேசிக்கிட்டு இருக்காங்க.  

”படம் ஸ்லோவா இருக்கு… படம் ஸ்லோவா இருக்கு”ன்னு நிறைய பேர் சொல்றத கேட்டேன். படம் ஸ்லோவா இருக்குங்குறது தப்பே இல்லை. ஸ்லோவா இருந்தாலும் சீன்ஸ் பவர்ஃபுல்லாவும், அந்த காட்சி மூலமா நமக்கு எதாவது impact குடுக்குற மாதிரியும் இருந்தா ஸ்லோங்குறது ஒரு ப்ரச்சனையே இல்லை. கபாலியைப் பொறுத்த அளவு ஸ்லோன்னு நண்பர்கள் ஃபீல் பன்றது powerless காட்சிகள். எந்த ஒரு பாதிப்பையும் நமக்கு ஏற்படுத்தாத காட்சிகள்.

ரஜினிங்குற ஒருத்தர்தான் படம் முழுக்க நம்மள கட்டி வச்சிருக்கார். அவரோட சின்னச் சின்ன ஸ்டைலான மூவ்மெண்டுகள் படத்துல ஏராளம். வில்லன்களை எதிர்க்கும்போது கண்ணுல இருக்கும் வெறி, குழந்தை கிடைச்ச சந்தோஷத்துல எல்லத்தையும் மறந்து அவளையே அதிசயமா பார்க்கும் பார்வை, மனைவிய தேடும்போது இருக்க ஏக்கம்னு நடிப்புல பின்னிருக்காரு. ரஜினிக்கு அடுத்தபடியா சொல்லும்படியான பாத்திரப்படைப்பும், சொல்லும்படியான நடிப்பும் அட்டக்கத்தி தினேஷ்.தான். ஜான் விஜய், கிஷோர் போன்ற மற்ற அனைவரும் எதோ ஓகே ரகம்.

படத்துக்கு இன்னொரு ஆறுதல் சந்தோஷ் நாராயணன். ரெண்டு பாட்டுதான் படத்துல முழுமைய வருது. மத்ததெல்லாம் அங்கங்க பிட்டு பிட்டா background la வருது.  விக்ஸ் அப்டிங்குறதத்தான் சுத்தி சுத்தி எழுதிருக்கேன்னு விவேக் சொல்ற மாதிரி நெருப்புடா தீமத்தான் சுத்தி சுத்தி வேற மாதிரியான BGM ah போட்டுருக்காரு. நல்லாருக்கு. கேமராவும் சில காட்சிகள்ல செம. க்ளைமாக்ஸ் காட்சி நடக்குற CG ல செய்யப்பட்ட லொக்கேஷன் செம.

ரஞ்சித்தோட திரைக்கதையும் சரி வசனமும் சரி ரொம்ப வீக். திரைப்படம்ங்குற மீடியத்த மக்களை எண்டர்டெய்ன் பன்ன மட்டும் பயன்படுத்துவது உசிதம். தேவையில்லாம அந்த கருத்த சொல்றேன் இந்த கருத்த சொல்றேன், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு படத்துல குரல் கொடுக்குறேன்னு கிளம்புறதெல்லாம் வேலைக்கு ஆகல. வேண்டுமென்றே தினிக்கப்பட்ட ஆண்டையர் டைப் வசனங்கள் ஏராளம்.

நிறைய விஷயங்கள்ல படத்துல தெளிவே இல்லை. முதலாவதா மலேஷிய மக்கள் பேசுற தமிழ்ல வர்ற சில வார்த்தைகள் நமக்கு ரொம்ப புதுசு. “கட்டைய தொட்டான்” “கட்டி ஓட்டுறான்” மாதிரியான வசனங்கள திரும்ப திரும்ப கேரக்டர்கள் பேசிக்கிட்டு இருக்கு. அப்டின்னா என்ன அர்த்தம்னே நாலஞ்சி சீனுக்கு அப்புறம்தான் நமக்கு புரியிது. அப்புறம் மலேசிய போலீஸே பயப்படும் அளவுள்ள ஒரு டான், பெரிய மாஃபியாவ எதிர்த்து சண்டை போடுற ஒரு டான்..  அவரை சுற்றி இருக்க நபர்கள் எப்டி இருக்கனும்? அவரோட கேங் எப்டி இருக்கனும்? ஆனா தலைவர் கூட நச நசன்னு பேசிக்கிட்டு ஜான் விஜய் மட்டுமே திரியிறாப்ள. காமெடியனா இருந்தாலும் ஜனக ராஜ் கேரக்டர் பாட்ஷாவுலயோ, நாயகன்லயோ பாக்க எவ்வளவு பவர்ஃபுல்லா இருக்கும். ஆனா இங்க சிறப்பா இல்லை.

ஃப்ளாஷ்பேக் அவ்வளவு பெரிய இம்பாக்ட்ட தரல. அதே மாதிரி இருபத்தைஞ்சி வருஷம் ஜெயில்ல போடுற அளவுவுக்கோ, அவர அதுக்கப்புறம் ரிலீஸ் பன்னலாமான்னு போலீஸ் டிஸ்கஸ் பன்ற அளவுக்கோ ஃப்ளாஷ்பேக் காட்சிகள பவர்ஃபுல்லா காட்டல.

மலேஷிய நண்பர்கள் சிலர்கிட்ட பேசியவரை, ரஞ்சித் அங்க இருக்க தமிழர்களோட வாழ்க்கைய அப்படியே படம் புடிச்சிருக்கதாகவும், படத்துல காமிக்கிற மாதிரிதான் நிஜத்துலயும் அந்த கேரக்டர்களோட நடை உடை பேச்சு பாவனை எல்லாம் இருக்கும்னு சொன்னாங்க.


பொதுவா எந்த ஒரு இயக்குனர் ரஜினி படத்த இயக்கும் போதும் “முதல்ல நா அவருக்கு ரசிகன்.. அப்புறம் தான் இயக்குனர்” ம்பாங்க. அப்படி ரசிகனா இருக்க நீங்க ஒரு ரசிகனோட எதிர்பார்ப்பு எப்படி இருக்கும்னும் கண்டிப்பா நீங்க உணர்ந்து தான் படம் எடுக்கனும். ஆனால் ரஞ்சித் நிச்சயம் அந்த விஷயத்துல தவறிட்டார்னுதான் சொல்லனும். 

ஒரு ரசிகனா எனக்கு இதுபோல நிறைய ஆதங்கங்கள்.  இருந்தாலும் படம் ரொம்பலாம் அருக்காம டீசனட்டாதான் போகுது. இண்ட்ரோவை தொடர்ந்து வர்ற 15 நிமிஷம், இண்டர்வல் ப்ளாக், ரஜினி ராதிகா ஆப்டே செண்டிமெண்ட் காட்சிகள்  சிறப்பு. ஒரு சீன்ல அழுக வச்சிட்டாங்க. 

மொத்தத்துல ரஜினிங்குற சூரியன வச்சி உலகத்துக்கே வெளிச்சம் காட்டலாம். ஆனா ரஞ்சித் அவரை வைச்சி கொடுத்துருக்க output  ஒரு ஊருக்கு கூட பத்தாது. (இதன் மூலமா என்ன சொல்ல வர்றேன்னு எனக்கே புரியல யுவர் ஹானர்.. அட்ஜஸ்ட் பன்னிக்குங்க) 




பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

12 comments:

SathyaPriyan said...

சிவா ஒரு ரசிகனாக உங்கள் ஆதங்கம் தெரிகிறது. ஆனால் முழூ தவறும் ரஞ்சித் மீது இருப்பது போல ஒரு பதிவை நீங்கள் வெளியிட்டிருக்கிறீர்கள். எனக்கு தவறு தாணு மீது தான் என்று தோன்றுகிறது. தேவையே இல்லாமல் அவர் கொடுத்த பில்டப்பு தான் ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்புக்கு காரணம்.

இங்கே அமெரிக்காவில் $30 டிக்கெட். மிகப்பெரிய ஹாலிவுட் படங்கள் எல்லாம் $8 டிக்கெட் கொடுத்து பார்க்கும் போது $30 கொடுத்து விட்டு படம் சூப்பராக இல்லாமல் இருந்ததால் அது எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும்.

ரஜினி என்ற பொன் முட்டையிடும் வாத்தை இயக்குனர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து வெட்டி இருக்கிறார்கள்.

காரிகன் said...

நேத்தே சொல்லணும்னு நினைச்சேன். பாவம்பா நீங்க. எத்தனை பில்டப் குடுத்தீங்க?

vivek kayamozhi said...

மிகவும் சரியாக சொல்லியிருக்கிறீர்கள்..
தாணுவை சொல்லி குற்றமில்லை.
பணம் போட்டவர் திருப்பி எடுக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்.
முழு தவறும் ரஞ்சித் மீதும், ரஞ்சித் சொன்ன கதையை(? !) நம்பி வாய்ப்பு கொடுத்த ரஜினி மீதும் தான்.
யாராரோ காத்திருக்க எவ்வாறு ரஞ்சித்க்குக்கு வாய்ப்பு கிடைத்ததோ?
சந்திரமுகி, எந்திரன்,படையப்பா போன்ற வலுவான கதை,திரைக்கதை, இசை எதுவும் இல்லாத சாதாரண படம்.
"இப்போவே தமிழ்நாடு போலாம்..
உடனே எப்படி போறதுப்பா?
எப்படிந்னு தெரியாதா?
கபாலி பொண்ணுக்கு தெரியாதா?
ஹஹ்..ஹாஹாஹ்ஹா..."
சத்தியமாக வெறுப்பு தான் வந்தது இந்த டயலாக்க கேட்டு.எல்லாம் இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான வசனங்கள்.
ரஜினியின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீர்.
கோவில்களில் திருவிழா காலத்தில் கம்பீரமாக சாமியை சுமந்து செல்லும் யானையை, கடைத்தெருவில் பிச்சை எடுக்க வைத்துள்ளனர்..அதுவும் மலேசிய தெருவில்..!!

ஜீவி said...

அருமையான விமர்சனம். ஆனால் முழுத்தவறும் ரஜினியின் மீதுதான். எம்ஜிஆருக்கு அடுத்து தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். ஆனால் எம்ஜிஆர் தனது படங்களின் நடிகர் தேர்வு முதல் இசை எடிட்டிங் வரை தனது கவனத்தை செலுத்தி உழைப்பார். ஆனால் ரஜினி மகள் சொன்னதை கேட்டு ரஞ்சித் கிட்ட பொறுப்பை கொடுத்துட்டு அக்கடான்னு நடித்ததன் விளைவுதான் இது. இன்னொரு முக்கியமான விஷயம்... வெளிநாட்டில் பெரிதும் படம் பிடித்து மக்களை பிரமிக்க வைத்த காலம் எண்பதுகளோடு முடிந்து விட்டது. இன்று எவ்வளவு விறுவிறுப்பான கதையாக இருந்தாலும் பார்க்கும் மக்களுக்கு நேடிவிட்டி மிகவும் அவசியம். இல்லாவிட்டால் படத்தோடு ஒன்றுவது மிகவும் கஷ்டம். கபாலிக்கு நேர்ந்தது அதுதான்... மலேசிய டான் கதையை எப்படி தமிழ் நாட்டில் ரசிக்க முடியும்? மெட்ராஸ் மாதிரி படம் நடிக்க ரஜினி எதற்கு? கடைசி படம் சறுக்கியது சோகம்தான்.

NewWorldOrder said...

Kabali is fantastic! Watch more to understand the movie!

முத்துசிவா said...

ஏற்கனவே ரெண்டுதடவ பாத்தாச்சு

முத்துசிவா said...

ஏற்கனவே ரெண்டுதடவ பாத்தாச்சு

Anonymous said...

வெளிநாட்டில் பெரிதும் படம் பிடித்து மக்களை பிரமிக்க வைத்த காலம் எண்பதுகளோடு முடிந்து விட்டது. இன்று எவ்வளவு விறுவிறுப்பான கதையாக இருந்தாலும் பார்க்கும் மக்களுக்கு நேடிவிட்டி மிகவும் அவசியம். இல்லாவிட்டால் படத்தோடு ஒன்றுவது மிகவும் கஷ்டம்.

Very Good Line you told...

தமிழனின் கனவுகள் said...

One of the nice review i read

Anonymous said...

First I wish to tell you that I am an ardent Kamal fan. But I like many rajini movies.

Watched Kabali last morning show at 9.45am at Faridabad (Haryana). There were only 22 members watched alongwith me, mostly malayalees.

Being a kamal fan, I throughout enjoyed the movie and superb acting by Rajini. What a screen presence. Almost in every frame, Rajini, Rajini & Rajini only. I also cried in one scene i.e. when rajini meets his wife after 25 years back.

Every time Rajini laughs, his characterization emerges. I like his style & charisma very much in this movie.

Ups: Rajini's Screen presence, Style & Very Good Acting
Downs: As you told, Casting is not good. Director has to be used Radharavi, Prakash Raj & some senior multi-talented actors. Too much publicity. While releasing Rajini movie, it is a festival, hence not necessary for such advt & publicity.

For final touch, I enjoyed very much and most malayalees also told that movie is nice & good.

Unknown said...

தலைவர் நடிப்புகாக பல முறை பார்க்கலாம

Paranitharan.k said...

கடைசி பாரா ...ஹாஹா ...

ஒரு ரசிகனாய் உங்கள் விமர்சனத்தை எனது மனது பிரதிபலிக்கிறது ...

வந்துட்டேன்னு சொல்லு ..படம் பாத்துட்டு வந்துட்டேன்னு சொல்லு ..ரஜினி படம் பாக்காலாம்ன்னு போனா ரஞ்சித் படம் பாத்துட்டு வந்தேன்னு சொல்லு ..;-(

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...