”சார்
ICICI பேங்குலருந்து பேசுறேன்… கிரெடிட் கார்டு எதாவது யூஸ் பன்றீங்களா? “
“ஏற்கனவே
நாலு கார்டு இருக்கு”
“இதுல
புது ஆஃபர் இருக்கு சார்”
“டேய்
நாலு கார்டுக்கே நாக்கு தள்ள வேலை பாக்க வேண்டியிருக்கு விட்ருங்கடா”
------------
“சார்..
பர்சனல் லோன் எடுக்குற ஐடியா எதாவது இருக்கா?”
“லோன்
எடுக்குற ஐடியா இருக்கு… ஆனா திருப்பி கட்டுறதுக்கு தான் ஐடியா இல்லை…”
“டொய்ங்ங்ங்ங்”
----------
“சார்..
நாங்க sun Shine க்ளப்புலருந்து பேசுறோம்.. குறைஞ்ச விலையில லைஃப் டைம் மெம்பர்ஷிப்
கார்டு தர்றோம்…”
”அடுத்த
வேளை சோத்துக்கே சிங்கி அடிச்சிட்டு இருக்கோம்.. இதுல லைஃப் டைம் மெம்பர்ஷிப் கார்டு..
அதுவும் கிளப்புல… “
----------------
“சார்
நாங்க Save the Children organization லருந்து பேசுறோம்… ஒரு பத்து வயசு குழந்தைக்கு
ஹார்ட் ஆப்ரேசனுக்காக உங்களால முடிஞ்சத குடுத்தா கொஞ்சம் ஹெல்ப்ஃபுல்லா இருக்கும் சார்…”
“ஃபேஸ்புக்குல
1like = 100 prayers ன்னு போட்டு அந்த குழந்தைக்காக ஒரு 50 லைக் வேணா வாங்கித்தர்றேம்மா…
இப்பதைக்கு வேற எதுவும் முடியாது”
இப்டி
ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு வகையில கொடச்சல் குடுத்துக்கிட்டு தான் இருக்காய்ங்க. அவங்களுக்கு
பதில் சொல்றதுக்குன்னே நமக்கு கொஞ்சம் தனி பொறுமை தேவைப்படுது. அதுவும் எனக்கெல்லாம்
ரொம்ப மோசம். டெய்லி ஆக்ஸிஸ் பேங்குலருந்து கால் பன்னி கார்டு வேணுமான்னு கேப்பானுங்க.
தினமும் அட்டெண்ட் பன்னி “நேத்து தான் ஃபோன்
பன்னீங்க.. நா வேணாம்னு சொன்னேன். ஏன் திரும்ப திரும்ப கால் பன்றீங்க… தயவு செஞ்சி
நம்பர உங்க data base லருந்து delete பன்னிருங்க” ம்பேன். ப்ரபா ஒயின்ஸாப் வடிவேலு
மாதிரி “சாரி பார் த டிஸ்டர்பன்ஸ்” ன்னு சொல்லி நல்லவய்ங்க மாதிரி வைப்பாய்ங்க. ஆன
மறுநாள் மறக்காம கால் பன்னுவாய்ங்க.
”டேய்
நேத்து தானடா கால் பன்னீங்க”
“அது
வேற ப்ராஞ்ச்லருந்து பன்னிருப்பாங்க சார்”
“நீங்க
எங்கருந்து பேசுறீங்க ?”
“டி
நகர்”
”நேத்து
ஃபோன் பன்னவனும் டி நகர் ப்ராஞ்சுன்னு தான் சொன்னான்”
“இல்ல
சார்… இது டி நகர்ல இருக்க வடபழனி ப்ராஞ்ச்”
அடேய்..
ஒவ்வொரு ப்ராஞ்ச்லருந்து ஒவ்வொரு நாளுக்கு கால்பன்னீங்கன்னா நாங்க என்னடா பன்றது?
True
caller வந்ததுலருந்து பெரும்பாலான நம்பர்களை அவனே காட்டிக்குடுத்துருவான். அதனால நம்பர
பாத்த உடனே கட் பன்னி வச்சிருவேன். ஆனாலும் சில சமயம் அவனே யார் நம்பருன்னு கண்டுபுடிக்க திணரும்போது அட்டண்ட்
பன்னி பேச வேண்டியதாயிடும். பெரும்பாலான சமயங்களில் அவய்ங்ககிட்ட பொறுமையாதான் பேசுவேன்.
ஆனாலும் சில சமயம் நம்ம கடுப்புல இருக்கும்போது இந்த மாதிரி கால் வர்றப்போ என்னையும்
அறியாம அவனுங்களுக்கு கண்ட மேனிக்கு திட்டு விழுறதுண்டு.
மேல
சொன்னதெல்லாம் இல்லாம இப்ப புதுசா ஒரு டிசைன்ல கெளம்பிருக்காய்ங்க. கால் வரும். அட்டெண்ட்
பன்னோம்னா
“
சார்…. உங்களோட ATM கார்டு ப்ளாக் ஆயிருக்கு. வெரிஃபிகேஷனுக்காக உங்க கார்டு நம்மர
சொன்னீங்கன்னா ப்ளாக்க ரிலீஸ் பன்னி விட்டுறலாம்” ம்பானுங்க.
”என்னடா
சாக்கடையில அடைப்பெடுத்து விடுறேங்குற மாதிரி சொல்றீங்க. என் கார்டு தான் ப்ளாக்கே
ஆகலயே நல்லா ஒர்க் ஆயிட்டு இருக்கே..”
“இல்ல
சார் ப்ளாக் ஆயிருக்கு”
“சரி
நீ எந்த பேங்க்லருந்து பேசுறீங்க?”
“நா
HDFC லருந்து பேசுறேன்”
”நா
HDFC கார்டே வச்சில்லையே.. AXIS கார்டு தான் வச்சிருக்கேன். இல்லாத கார்டு எப்டி ப்ளாக்
ஆகும்”
“இல்லை
சார்… உங்க AXIS கார்டு தான் ப்ளாக் ஆயிருக்கு…
நம்பர் சொன்னீங்கான்னா ப்ளாக் ரிலீஸ் பன்னிரலாம்”
“சார்
நீங்க HDFC லருந்து பேசுறேன்னு சொன்னீங்க… AXIS கார்டு ப்ளாக் ஆனா நீங்க எப்டி எடுப்பீங்க…”
“இல்லை
சார்.. ஆல் பேங்குக்கும் நா தான் மேனேஜர். இந்த மாதிரி கார்டு ப்ளாக் ஆகுற கம்ளைண்டெல்லாம்
நாங்கதான் டீல் பன்னிகிட்டு இருக்கும்”
அடிங்கொய்யால
டப்ஸா கன்னா… ஆல் பேங்கு மேனேஜரா நீயி ஓடிரு.. கொஞ்சம் விட்டா ரிசர்வ் பேங்குக்கு கூட
நீதான் மேனேஜர்னு சொன்னாலும் சொல்லுவ.. ஓடிரு…
இந்த
மாதிரி ஆல் பேங்க் மேனஜர்கள் நம்ம கார்டு நம்பர நம்மக்கிட்டயே கேட்ட சம்பவங்கள் கடந்த
ஒரு மாசத்துல ரெண்டு தடவ நடந்துருக்கு.
இன்னிக்கு
காலையில அதே மாதிரி ஒரு ஃபோன். பேசுனது ஒரு பொண்ணு
“வணக்கம்
சார்… …”
“சொல்லுங்க
மேடம்..”
“நீங்க
SBI credit கார்டு வச்சிருக்கீங்கல்லியா? அதுல உங்களுக்கு ஒரு upgradation package
வந்துருக்கு ”
“நா
SBI கார்டே வச்சில்லயே மேடம். அப்புறம் எப்புடி upgradation வரும்”
அந்த
பொண்ணு பேசுன முதல் வார்த்தையிலயே இது ஒரு டுபாகூர் கால்ன்னு என்னோட மைண்டுல ஃபிக்ஸ்
ஆகி, அதுக்கப்புறம் அந்த பொண்ணு கேட்ட எல்லா கேள்விக்குமே என்கிட்டருந்து ஒரு மாதிரி
எகத்தாளமான பதில்தான் வந்துச்சி.
“இல்ல
சார் நீங்க HDFC கார்டு தான் வச்சிருக்கீங்க… இதுவரைக்கும் நீங்க purchase பன்னதுக்கு
உங்களுக்கு கிரெடிட் பாய்ண்ட்ஸ் இருந்துச்சி. அத நீங்க யூஸே பன்னாதாதால இனிமே நீங்க
பன்ற ஒவ்வொரு பர்ச்சேஸூக்கும் 20% cash back தர்ற மாதிரி upgradation வந்துருக்கு”
ன்னு சொல்லுச்சி.
இந்த
மாதிரி upgradation , offer ன்னு எது ஆரம்பிச்சாய்ங்கன்னாலும் கடைசில நம்மகிட்டருந்து
இன்னும் கொஞ்சம் extra பணம் புடுங்குற ஐடியாவாத்தான் இருக்கும். எல்லாத்தையும் சொல்லிட்டு
கடைசில இந்த offer ah avail பன்னனும்னா நீங்க ஒரு 2000 ரூபா கட்டுற மாதிரி இருக்கும்சார்னு
சொல்லுவாய்ங்க. அதனாலயே அந்த பொண்ணு சொன்ன ஆஃபர்ங்குறது என்னோட காதுலயே ஏறல. திரும்ப
திரும்ப என்னோட மைண்டுல இது ஒரு ஃபேக் கால்ங்குற நினைப்பு தான் ஓடிக்கிட்டு இருந்துச்சி.
“மேடம்
நீங்க யாரு மேடம்… நீங்க ஏன் இதெல்லாம் சொல்றீங்க.. சரி நீங்க என்னோட கார்டு நம்பர
சொல்லுங்க” ன்னேன்.
”சார்
நா எப்டி சார் கார்டு நம்பர சொல்ல முடியும்.
அது சீக்ரெட் information. நீங்க யார்னு தெரியாம கார்டு நம்பரல்லாம் நாங்க சொல்லக்கூடாது
சார்”
“ஏங்க
என்கிட்ட நீங்க என்னோட கார்டு நம்பர் சொல்ல மாட்டீங்க.. ஆனா நா மட்டும் நீங்க சொல்றத
நம்பனும்… சரி நா என்ன கார்டு வச்சிருக்கேன்னாவது சொல்லுங்க..” ன்னேன்.
பேரயும்
நா எந்த பேங்க்ல கார்டு வச்சிருக்கேங்குறதயும் கரெக்ட்டா சொன்னுச்சி. அப்பவே அந்த பொண்ணு
வாய்ஸ்ல கோவமும் ஏண்டா இவனுக்கு கால் பன்னோம்ங்குற நினைப்பும் தெரிஞ்சிது. நா ஃப்ரண்ட்ஸோட
பேசிகிட்டு இருந்த சமயத்துல அந்த ஃபோன் வந்ததாலயும் ஏற்கனவே இந்த மாதிரி ரெண்டு பேரு
ஏமாத்த முயற்சி செஞ்சதாலயும் அந்த பொண்ணுக்கு நா ஒழுங்கான response உம் குடுக்கல. அந்த
பொண்ணு சொல்ல வந்ததயும் முழுசா சொல்ல விடல. இன்னும் கொஞ்ச எடக்கு முடக்கு பதில்களுக்கு
அப்புறம்
“ஹலோ
மேடம்… உங்களுக்கு இப்ப என்ன ப்ரச்சனை.. என்ன வேணும்?”
“ஒண்ணும்
இல்லை சார்… தயவு செஞ்சி லைன கட் பன்னுங்க” ன்னு கொஞ்சம் தளுதளுத்த குரல்ல சொல்லுச்சி. அப்பதான் எனக்கு செருப்புல
அடிச்ச மாதிரி இருந்துது.. அந்த பொண்ணு ஃபோன கட் பன்னுச்சான்னு தெரியல. ஆன நா கட்
பன்னிட்டேன்.
நான்
நிறைய பேரோட நிறைய தடவ சண்டை போட்டுருக்கேன். சண்டை போடும்போது ரொம்ப hurt பன்ற மாதிரி
பேசிருவேன். ஆனா அதுக்கப்புறம் அவங்க எப்டி ஃபீல் பன்றாங்களோ.. எனக்கு நினைச்சி ரொம்ப
மனசு கஷ்டமா இருக்கும். அவங்களுக்காக இல்லைன்னாலும் என்னோட மனசு திருப்திக்காகவாது,
யாரா இருந்தாலும் மன்னிப்பு கேட்டுருவேன். மன்னிப்பு கேக்குறதுக்கு நா வெக்கப்பட்டதே
இல்லை.
ஃபோன்
பேசி வச்ச அடுத்த ஒரு மணி நேரம் ரொம்ப சங்கடமா போச்சு. ஏன் அப்டி பேசுனோம்னு ரொம்ப
அசிங்கமா இருந்துச்சி. பேச புடிக்கலன்னா எப்பவும்போல கட் பன்னிட்டு பேசாம இருந்துருக்கலாம்.
ஆனா அப்டி இல்லாம அந்த புள்ளைய ரொம்ப கஷ்டப்படுத்திட்டோமோன்னு உறுத்திக்கிட்டே இருந்துச்சி.
ஒரு
நாள் காலையில ஆஃபீஸ்ல யாராவது ஒருத்தன் நம்மள டென்ஷன் ஆக்கி விட்டுட்டாலும் அன்னிக்கு
பூராவுமே கடுப்பா இருக்கும். அப்டி இருக்கும்போது இந்த மாதிரி க்ரெடிட் கார்டுகளுக்காகவும்
பர்சனல் லோன்களுக்காகவும் கால் பன்ற பொண்ணுங்களையும் பசங்களையும் நினைச்சி பாத்தா,
ஒரு நாளைக்கு எத்தனை பேரு அவங்களுக்கு ஒழுங்க respond பன்னுவாங்க? இன்னிக்கு நா பன்ன
மாதிரி ஒரு நாளுக்கு எத்தனை பேர அவங்க பாப்பாங்க. எத்தனை பேர் கிட்ட திட்டு வாங்குவாங்க.
யாரோ
ஒரு பாஸ் குடுக்குற டார்கெட்ட achieve பன்றதுக்காகவும், குடும்பத்த காப்பாத்த கிடைச்ச
வேலைய விட்டுட முடியாமலும் என்னை மாதிரி எத்தனை பேர் என்ன சொன்னாலும் சகிச்சிக்கிட்டு
திரும்ப திரும்ப எல்லாருக்கும் கால் பன்னித்தான ஆகனும். நம்ம பாக்குற வேலைதான் கஷ்டம்னு
ஒவ்வொருத்தரும் நினைச்சிட்டு இருப்போம். ஆனா இவங்கள நினைச்சி பாக்கும்போது கண்டிப்பா இல்லை.
ஒரு
மணி நேரமாகியும் எனக்கு இன்னும் மனசு உறுத்திக்கிட்டேதான் இருந்துச்சி. சரி வழக்கம்போல
நம்மளே மன்னிப்பு கேட்டுடலாம்னு முடிவு பன்னி அந்த நம்பருக்கு ஃபோன் பன்னேன். கிட்டத்தட்ட
அரை மணி நேரம் பிஸி. அதுக்கப்புறம் அந்த நம்பர்லருந்து திரும்ப கால் வந்துச்சி.
“சொல்லுங்க
சார்”
“மேடம்
கொஞ்ச நேரத்துக்கு முன்னால எனக்கு ஃபோன் பன்னீங்கல்ல… நா கொஞ்சம் கோவமா பேசிட்டேன்
மேடம் மன்னிச்சிருங்க” ன்னேன்
“உங்க
பேர் என்ன சார்” ன்னு. கேட்டதும் பேர சொன்னேன்.
“உங்களுக்கு நா கால் பன்னல சார்… வேற
representative பன்னிருப்பாங்கன்னு நினைக்கிறேன்” ன்னுச்சி.
பரவால்ல
மேடம் அவங்ககிட்ட நா மன்னிப்பு கேட்டேன்னு சொல்லிருங்கன்னு சொன்னதும் “சார் நா அவங்களையே
உங்களுக்கு கால் பன்ன சொல்றேன்” ன்னு சொல்லிட்டு வச்சிருச்சி..
திரும்ப
அடுத்த ரெண்டு நிமிஷத்துல அதே நம்பர்லருந்து கால். அட்டெண்ட் பன்னதும் “சொல்லுங்க சார்…
”
என்னோட
பேர சொல்லி “மேடம் கொஞ்ச நேரத்துக்கு முன்னால நீங்க எனக்கு கால் பன்னிருந்தீங்க.. அப்ப
நா கொஞ்சம் கோவமா பேசிட்டேன். மன்னிச்சிருங்க மேடம். கொஞ்சம் டென்ஷனா இருந்ததால அப்டி
பேசிட்டேன்” ன்னு சொன்னேன்.
“பரவால்ல
சார்… நானும் கொஞ்சம் ஒரு மாதிரி பேசிட்டேன் சாரி” ன்னு சொன்னுச்சி. திரும்பவும் இன்னொரு
தடவ மன்னிச்சிருங்க மேடம்னு சொல்லிட்டு அதுக்கு மேல எதுவும் பேசுனா தப்பான எண்ணதுல
எதுவும் கால் பன்னிருக்கமோன்னு அந்த சகோதரி தப்பா நினைச்சிருவாங்கன்னு அதோட கட் பன்னிட்டேன்.
அதுக்கப்புறம்தான்
ஓரளவு மனசுக்கு ஓக்கே.. ஆனாலும் மொத தடவ பேசும்போது அது சொல்ல வந்த கிரெடிட் கார்டு ஆஃபர பத்தி திரும்ப
முழுசா சொல்ல சொல்லி அத கவனமா கேக்குற மாதிரி நடிச்சிருந்தாலாவது அந்த பொண்ணுக்கும்
கொஞ்சம் நிம்மதியாக இருந்திருக்க வாய்ப்பு இருந்துருக்கும். அது சொன்ன “பரவால்லை” க்கு அர்த்தம் ”மன்னிச்சிட்டேன்” ங்குறது இல்லைன்னு மட்டும் எனக்கு நல்லா தெரிஞ்சிது.
பல சமயங்களில் இந்த மாதிரி ஃபோன் கால்கள் உச்சக்கட்ட கடுப்புகளையும், கோபங்களையும் தான் வரவழைக்கிது. ஆனா நம்ம கோவத்த அவங்க மேல கொட்டுறதுக்கு முன்னால அவங்க நிலமையிலயும் கொஞ்சம் இருந்து பாத்தா அவங்களுக்கும் வேற வழி இல்லைன்னு தான் தோணும்.
6 comments:
Samma siva nanum neraiya feel panni iruken avanga nelamaila irunthu pavam avanga
“பரவால்ல சார்… நானும் கொஞ்சம் ஒரு மாதிரி பேசிட்டேன் சாரி” ன்னு சொன்னுச்சி. திரும்பவும் இன்னொரு தடவ மன்னிச்சிருங்க மேடம்னு சொல்லிட்டு அதுக்கு மேல எதுவும் பேசுனா தப்பான எண்ணதுல எதுவும் கால் பன்னிருக்கமோன்னு அந்த சகோதரி தப்பா நினைச்சிருவாங்கன்னு அதோட கட் பன்னிட்டேன்."
Enna Muthusiva! நீங்க ஆரம்பிச்ச விதத்த பார்த்தா loveல தொபுக்கடீர்னு விழுந்துருப்பிங்கனு பார்த்தா last'ல sister'னு முடிச்சிட்டீங்க.
BTW உங்க வீட்ல இன்னும் உங்களுக்கு பொண்ணு பாக்க ஆரம்பிக்கலுன்னு நினைக்கிரேன். அப்படி பன்னும்போது Tamilmatrimony பக்கம் போயிடாதிங்க. காச வாங்கர்துக்கு முன்னாடி எல்லா Buildup'ம் குடுப்பானுங்க, ஒரே மாசத்துல பொண்ணு கிடைக்கும் உடனே சாந்திமுகூர்த்தம் Sorry முகூர்த்தம் வெச்சிக்கலாம்னு சொல்லுவாய்ங்க. அவிங்க குடுக்கர Package'பார்த்தா டர்ராய்டுவீஙக. BE CAREPUL..VERY DANGEROUS PELLOWS
// ஆரம்பிச்ச விதத்த பார்த்தா loveல தொபுக்கடீர்னு விழுந்துருப்பிங்கனு பார்த்தா//
ஏற்கனவே ஒருக்கா தொபுக்கடீர்னு குதிச்சி மூக்கு மொகரையெல்லாம் பேந்துருச்சி... அதுனால ரிஸ்க் எடுக்குறதில்லை :-)
// ஆரம்பிச்ச விதத்த பார்த்தா loveல தொபுக்கடீர்னு விழுந்துருப்பிங்கனு பார்த்தா//
ஏற்கனவே ஒருக்கா தொபுக்கடீர்னு குதிச்சி மூக்கு மொகரையெல்லாம் பேந்துருச்சி... அதுனால ரிஸ்க் எடுக்குறதில்லை :-)
யதார்த்தம்.... அந்த சகோதரிகள் வேலையில் படும்பாடு நிச்சயம் கண்ணீரை வரவைக்கும்
நெகிழ்ச்சி
Post a Comment