Tuesday, August 9, 2016

STRANGER THINGS!!!


Share/Bookmark
முதல் பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும். போன பதிவுல சொன்னது மாதிரி இந்த pschokenisis ஒவ்வொருவரப் பொறுத்தும் எப்படி மாறுபடுதுன்னு விளக்க ஒரு எக்ஸ்பெரிமெண்ட் பன்னாங்க. அதுல பங்கெடுதவங்கள ரெண்டு குழுவா பிரிச்சி, ரெண்டு பேருக்கும் தனித்தனியா ஒரு வீடியோ க்ளிப்பிங்க போட்டு காமிச்சாங்க. முதல் குழுவுக்கு மட்டும் “இப்ப நீங்க பாக்கப் போற வீடியோவுல ஒருத்தர் ஒரு சாவிய தொடாமலேயே வளைக்கப் போறார் பாருங்க. நேரம் ஆக ஆக அந்த சாவி கொஞ்சம் கொஞ்சமா வளைய ஆரம்பிக்கும் பாருங்க” ன்னு சொல்லி வீடியோவ போட்டு காமிச்சிருக்கானுங்க. ஆனா ரெண்டாவது குழுவுக்கு அந்த மாதிரி எந்த ஹிண்ட்டுமே குடுக்காம வீடியோவ போட்டு காமிச்சி ரெண்டு குழுவையும் தனித்தனியா கேட்டதுல முதல் குழுவுல இருக்கவனுங்கள்ள பெரும்பாலான பேரு “ஆமா சார்…. சாவி நல்லாவே வளைஞ்சிது” ன்னு சொல்லிருக்கானுங்க. ஆனா ரெண்டாவது குழுவுல பெரும்பாலானவங்க “என்னது சாவி வளைஞ்சிதா? அப்டி ஒண்ணும் எங்களுக்கு தெரியலையே” ன்னு சொல்லிருக்கானுங்க.

அதாவது முதல் குழுவுல இருக்கவனுங்க சாவி வளையும், சாவி வளையும்ங்குற ஒரு எதிர்பார்ப்பிலே பார்த்ததால சாவி உண்மையிலே வளைவது போல ஒரு illusion அவங்களுக்கு உண்டாகியிருக்கலாம் அப்டிங்குறதத்தான் இந்த experiment லருந்து சொல்ல வர்றானுங்க.  

2000 மாவது வருஷத்துல ஒரு பெரிய பொதுமக்கள் கூட்டத்துக்கு முன்னால  PC Sorkar junior ங்குறவரு தாஜ்மஹாலயே ரெண்டு நிமிஷம் மறைய வச்ச சம்பவம் நிறைய பேரு கேள்விப்பட்டுருப்பீங்க. ஒருத்தர் ரெண்டு பேருக்குன்னா பரவால்லை. ஒரு கூட்டமே இருக்கும்போது எப்படி அத்தனை பேருக்கும் அந்த illusion ah கொண்டு வர முடிஞ்சிது? ஒரு பொருளை நாம எப்படி பார்க்கிறோம்? ஒரு பொருள் இருப்பது எப்படி நமக்கு தெரியிது? ஒரு பொருள் மேல படுகிற வெளிச்சக் கதிர்கள் அந்தப் பொருளால எதிரொளிக்கப்பட்டு நம்ம கண்களை அடையும் போது அந்த பொருள் அந்த இடத்தில் இருப்பது நமக்கு தெரியிது. எப்படி தாஜ்மஹால மறைய வச்சீங்கன்னு Sorkar கிட்ட கேட்டப்ப அவர் சொன்னது “தாஜ்மஹால்லருந்து வர்ற Light Rays பார்வையாளர்கள் கண்ணுக்கு சென்றடையாம தடுத்தேன். அதனாலதான் தாஜ்மஹால் மறைஞ்சது மாதிரியான ஒரு optical illusion create ஆனதுன்னு சொல்லிருக்காரு. எப்படி தடுத்தார் என்பதெல்லாம் advanced science ஆம். நிறைய லேசர் லைட், அது இதுன்னு என்னென்னவோ வச்சி அத பன்னிருக்காங்க. நேரமிருப்பவர்கள் தேடி படிச்சிக்குங்க.

சரி ஏன் இந்த டாபிக்ல நாம இப்ப மொக்கை போட்டுக்கிட்டு இருக்கோம்னு நிறைய பேருக்கு சந்தேகம் வரும். நான் இந்த மாதிரி சம்பவங்களை தேடித்தேடி படிக்கிற ஆளெல்லாம் கிடையாது. எதாவது படம் பாக்கும்போது அதிலுள்ள கேரக்டர்கள பத்தி  படிக்கும்போது விஜயகாந்த் பேசிக்கிட்டு இருக்கும்போது மைக் ஒயர் கையில மாட்டுற மாதிரி எனக்கும் இந்த மாதிரி எதாவது மாட்டும். அப்டி மாட்டுற விஷயம் கொஞ்சம் interesting ah இருந்தா எழுதுறது. அவ்வளவுதான்.

சரி இப்ப 2016 ல வந்த Stranger Things அப்டிங்குற ஒரு மினி சீரிஸ பத்தி தான் பாக்கப்போறோம். 1983 ல அமெரிக்காவின் Hawkins நகர்ல நடக்குற மாதிரியான கதை. அந்த Hawkins la ஒரு பகுதிய restricted area வா அறிவிச்சி அதுல US Department of Energy oru Lab வச்சிருக்காங்க. முதல் காட்சிலயே அந்த Lab லருந்து தெறிச்சி ஓடுற ஒரு சயிண்டிஸ்ட்ட எதோ ஒண்ணு துரத்தி துரத்தி கொல்லுது.

அதே ஊர்ல நாலு ஸ்கூல் பசங்க ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்ட்ஸா இருக்கானுங்க. ஒரே  adventures படங்களையும், கதைகளையும் பாத்து, படிச்சி   எப்ப பாத்தாலும் ஒரு தனி உலகத்துல இருக்க பசங்க. அவனுங்க நாலு பேரு காண்டாக்ட் பன்னிகிறதுக்கு மட்டும் தனி வாக்கி டாக்கி வச்சிக்கிட்டு படங்கள்ல பேசிக்கிட்டு திரியிறவனுங்க.

இந்த சீரியல்ல பெரும்பாலான கேரக்டர்ஸ் இந்த நாலு பசங்களும் அவங்க ஃபேமிலி மெம்பர்ஸூம்தான். ஒரு நாள் ராத்திரி  நாலு பேரும் விளையாடி முடிச்சிட்டு, ஒவ்வொருத்தனும் வீட்டுக்கு போக, அந்த நாலு பேர்ல ஒருத்தனான Will buyers போற வழியில எதையோ பாத்து மிரண்டு ஓடுறான். அது துரத்தி வந்து அவனப் புடிச்சிருது.

அவ்வளவுதான். அன்னிக்கு ராத்திரி முழுக்க வீட்டுக்கு வரலன்னதும் Will buyers ஸோட அம்மா பதட்டமாகி ஒவ்வொரு ஃப்ரண்ட் வீட்டுக்கா ஃபோன் பன்னி கேக்குறாங்க. ஆனா யாருக்குமே எதுவும் தெரியல. கடைசில வேற வழியில்லாம போலீஸுக்கு போக, போலீஸ் கோதாவுல இறங்குறாய்ங்க. கொஞ்சம் மந்தமான இன்வெஸ்டிகேஷனயே மொதல்ல ஸ்டார்ட் பன்றானுங்க. ஒரு நாளாகுது ரெண்டு நாளாகுது.. பையனப் பத்தின எந்த க்ளூவும் கிடைக்காததால பையனோட அம்மா ரொம்ப Frustrated  ஆன Stage க்கு தள்ளப்படுறாங்க. அடிக்கடி அவங்க வீட்டுல power fluxuation ஆகி லைட்டெல்லாம் டிம்மாகி டிம்மாகி எரியிது. முதல்ல சாதாரணமா எடுத்துக்கிட்டவங்க போகப்போக அவங்க பையன் தான் லைட் மூலமா எதோ சிக்னல் குடுக்குறான்னு நம்புறாங்க.

அத மத்தவங்ககிட்ட சொல்ல, எல்லாரும் அந்தம்மா சொல்றத காதுகுடுத்து கூட கேக்க மாட்டேங்குறானுங்க. ஆனா அந்தம்மா காசு குடுத்து கடையில உள்ள அனைத்து சீரியல் பல்பையும் வீட்டுல வாங்கிட்டு வந்து வீட்டுக்குள்ள கட்டி வச்சிக்கிட்டு பையனோட சிக்னலுக்காக காத்திருக்குது.

அந்த சமயத்துல ஒரு டெலிஃபோன் வருது. எடுத்து அந்தம்மா காதுல வைக்க முதல்ல யாரோ ஒருத்தர் மூச்சு விடுற சவுண்ட் மட்டும் கேக்குது. அதத் தொடர்ந்து எதொ ஒரு வித்யாசமான சத்தம். உடனே அந்தம்மா போலீஸூக்கு ஃபோன் பன்னி என் ஃபோன்ல மூச்சு விட்டது என் பையந்தான்னு சொல்லுது. ஆனா அவனுங்க நம்பாம இந்தம்மாவ ஒரு லூசுமாதியே நினைச்சிட்டு இருக்கானுங்க.

முதல் காட்சில அந்த லேப்ல ஒருத்தர் செத்தாரே… அவனுங்க வேற லேப் லருந்து யாரோ ஒரு பொண்ணு எஸ்கேப் ஆயிட்டதா யாருக்கும் தெரியாதமாதிரி சீக்ரெட்டா தேடிக்கிட்டு இருக்கானுங்க. அந்த பொண்ணை கண்டு புடிக்கிறதுக்காக பாக்குறவனுங்களையெல்லாம் சுட்டு கொல்லவும் தயங்க மாட்டானுங்க. அவ்வளவு முக்கியம் அந்த பொண்ணு.

நண்பன் (Will Buyers) காணாம போன உடனே மத்த மூணு பசங்க நாமளே அவன தேடி கண்டுபுடிப்போம்னு அவய்ங்களுக்கு தெரிஞ்ச இடத்துலயெல்லாம் தேடுறானுங்க. ராத்திரி நேரத்துல காட்டுல அவன தேடிக்கிட்டு இருக்கும்போது “ஆஹா.. தேளத் தேடி வந்த இடத்துல தேனா..” ங்குற மாதிரி ஒரு பொண்ணு இவனுங்க கிட்ட வந்து சிக்குது
.  
அந்த பொண்ணுதான் நாம போன பதிவுல மொக்க போட காரணமா இருந்த Psychokinesis பொண்ணு. எந்தப் பொருளையும் தொடாம கண்பார்வையாலேயே அந்தப் புள்ளையால கண்ட்ரோல் பன்ன முடியும். அந்தப் பொண்ணுக்கு நம்ம X-Men மெக்னீடோவோட பவர் மட்டும் இல்லாம Charles Xavier ரோட பவரும் சேர்ந்து இருக்கு. அது என்னன்னு நீங்களே பாத்து தெரிஞ்சிக்குங்க. அந்தப் பொண்ணுக்கு ஒழுங்கா பேசக்கூட வரமாட்டேங்குது. பயந்து நடுங்குற அந்த பொண்ணை யாருக்கும் தெரியாம பத்தரமா வீட்டுல தங்க வச்சி பாத்துக்குறாங்க அந்த பசங்க.

ஒரு கட்டத்துல அந்த பொண்ணுக்கு Will Byers  பற்றிய information தெரியும்னு பசங்களுக்கு தெரிய வர, அந்த பொண்ணை வச்சே நண்பனை கண்டுபுடிக்க முயற்சி பன்றாங்க. இந்த நிலையில் போலீஸ் ஒரு சின்ன பையனோட பாடிய ரெகவர் பன்னி, அது Will byers ரோடதுன்னு identify பன்றாங்க. எல்லாரும் அது Will byers தான்னு ஒத்துக்கிட்டாலும் அவங்க அம்மா மட்டும் அது என்னோட பையன் இல்லைன்னு ஆணித்தனமா நம்புறாங்க. 

உண்மையிலயே அது யார்? Will byers உயிரோட இருக்கானா இல்லையா? இருக்கான்னா அவன யார் தூக்குனதுங்குறத செம இன்ட்ரஸ்டிங்கா கொஞ்சம் fantasy கலந்து சொல்லியிருக்கது தான் இந்த Stranger things. மொத்தமே 8 எபிசோட் தான். அதிகபட்சம் ரெண்டு படம் பாக்குற டைம் தான். 

Mystery, Thriller விரும்பிகளுக்கு இந்த சீரிஸ் கண்டிப்பா புடிக்கும். தவறாம பாருங்க. 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

Anonymous said...

wow last la sonna katha sema boss.really super writing.
continue continue

Anonymous said...

wow last la sonna katha sema boss.really super writing.
continue continue

Alex said...

Full kathaiyum interst ah solli irukalam siva nanga yaru paka porom

Anonymous said...

eppdi na unkalukka vanthu ipdi ellam maddethu. but nice.
meethikathaiumsolli irukkalame na

Anonymous said...

நான் Terror'a பார்த்த படம் நம்ம Christopher Nolan அண்ணாச்சி பன்ன Interstellar. மனுஷன் ரொம்பவே யோசிக்க வச்சுட்டாப்ல. Time travel, 4th Dimension போன்ற Conceptல நம்மள involvo ஆக்கிட்டாரு. எனக்கென்னவோ சூர்யாவோட 24 படம் கூட interstellarவோட தாக்கம்தான்னு நினைக்கிரேன்.

உங்களுக்கும் அந்தமாரி conceptல interest இருந்தா post போடுங்க. காபி சாப்டுட்டே பேசலாம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...