ஒரு
உயிரோட மதிப்பு என்ன? சிட்டி சொல்றது மாதிரி கண்டிப்பா அது எந்த உயிருங்குறதப் பொறுத்தது
தான். ஒரு ஊரையே கொன்னதுக்காக பழிவாங்குறது, குடும்பத்தை கொன்ன வில்லன்களை பழிவாங்குறது.
தங்கச்சியைக் கொன்னவங்களைப் பழிவாங்குறது காதலியைக் கொன்ன வில்லன்களை பழிவாங்குறதுன்னு
பல பழிவாங்குற படங்களைப் பாத்துருக்கோம். .செத்துப்போன ஒரே ஒரு காதலிக்காக ஹீரோ நாற்பது
ஐம்பது வில்லன்களை ஹீரோக்கள் கொல்லுவாங்க. ஆனா அதெல்லாம் நமக்கு தப்பா படாது. ஏன்னா
செத்துப்போனது எந்தத் தப்பும் செய்யாத ஒரு அப்பாவி ஜீவன். அதற்காக எத்தனை கெட்டவனுங்களையும்
கொல்றதுல தப்பில்லைன்னு நம்ம மனசு சொல்லும்.
எப்பவுமே
ஒரு படம் பாக்கும்போது அந்த ஹீரோ கேரக்டர்லதான் ஆடியன்ஸ் இருப்பாங்க. அவருக்கு வர்ற
சுக துக்கங்கள் ஆடியன்ஸூக்கும் வர்ற மாதிரி தான். ரிவெஞ்ஜ் படங்கள்ல ஹீரோ பழிவாங்குறத
justify பன்றதுக்காக கண்டிப்பா ஒரு ஃப்ளாஷ்பேக் இருந்தே ஆகும்.
ஃப்ளாஷ்பேக்ல அம்மாவோ, தங்கச்சியோ, காதலியோ ஹீரோமேல
ரொம்ப அன்பா இருப்பாங்க. ஹீரோ எந்த சண்டைக்கும் போகாத நல்ல புள்ளையா இருப்பார். அப்ப
வர்ற வில்லன்கள் ஹீரோவுக்கு பிரியமானவங்களை கொன்னுட ஹீரோ ரிவெஞ்ஜ் நாகேஸ்வராவா மாறி
எல்லாரையும் பழி வாங்குவாரு. எல்லா ஃப்ளாஷ்பேக்லயும் அவங்க சொல்ல வர்றது அந்த உயிர்
ஹீரோவுக்கு எவ்வளவு முக்கியம் அப்டிங்குறதாத்தான் இருக்கும்.
ஹீரோவுக்கு
படத்துல வில்லன்களை பழிவாங்குறதுக்காக வர்ற அதே கோவம் ஆடியன்ஸூக்கும் வந்துச்சின்னா
படம் ஹிட்டு. இல்லைன்னா மட்டை. அந்த ஃபீல கொண்டு வர்றதுக்கு நிறைய மெனக்கெடுவாங்க.
எத்தனை பேர் கொல்லப்பட்டாங்கங்குறத விட யார் கொல்லப்பட்டாங்கங்குறது தான் அந்த இம்பேக்ட்ட
அதிகப்படுத்தும்.
சிட்டிசன்
படத்துல கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டவங்களை வில்லன்கள் கொன்னுருப்பாங்க. ஆனாலும்
நமக்கு அஜித் சொல்ற ஃப்ளாஷ்பேக்க கேட்டு வர்ற ஃபீல விட கஜினில ஒரே ஒரு கல்பனாவ வில்லன்கள்
அடிச்சி கொல்லும் போது வர்ற ஃபீல் அதிகம்.
மனித உயிர்களைக் கொன்னா மட்டும்தான் கோவம்
வருமா? ஒரு படத்துல ஒரு சின்ன நாய் குட்டிய கொன்னதுக்காக குறைந்த பட்சம் இருநூறு பேர
ஒருத்தர் கொல்லுவாறு. ஆனா படம் பாக்குற நமக்கு
கொஞ்சம் கூட அது உறுத்தாது. அவர் செய்றது சரிதான்னு தோணும்.
ஒரு ரிட்டயர்டு ரவுடி உயிருக்கு உயிரா நேசிச்ச
காதலி இறந்து போயிடுறா. அவ நினைவா காதலன்கிட்ட இருக்க ஒரே ஒரு விஷயம் அவளோட நாய் குட்டி
ஒண்ணு தான். அதப் பாக்கும்போதெல்லாம் அவ நினைப்புல வாழ்ந்துகிட்டு இருக்காரு ஹீரோ.
அந்த சமயத்துல ஊடால வந்த வில்லனுங்க அந்த நாய்குட்டிய சுட்டு கொன்னுடுறானுங்க. அவவளவு
தான். மொத்த வில்லன் கூட்டத்தையும் சுட்டே கொன்னுருவாரு ஹீரோ.
உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்
என்ன படம்னு. John Wick . பெரும்பாலானவங்க இந்த படத்தை பாத்துருப்பீங்க. மாஸ்னா என்னனு
இந்தப் படத்த பாத்து தான் கத்துக்கனும். பிரிச்சிருப்பானுங்க. John Wick ங்குறவன் யாரு..
அவனால என்ன பன்ன முடியும்னு பில்டப் சீன் எதுவும் இல்லாம வில்லன்கள் வாயாலயே பில்ட்
அப் ஏத்திருப்பானுங்க. அதுக்கேத்த மாதிரி அத்தனை பேரயும் தொம்சம் பன்னுவாறு. எல்லாம் ஒரு நாய் குட்டிய கொன்னதுக்காக. அந்த நாய்
குட்டியோட உயிரோட மதிப்பு 200 மனித உயிர்களுக்கும் மேல.
இப்ப நம்ம படத்துக்கு வருவோம். தீவிரவாதிகளைப்
புடிக்கிறதுக்கான ஒரு சீக்ரெட் மிஷன். அதுக்கு ஹெட்டா இருக்கது ஒரு லேடி ஆஃபீசர். ரொம்ப
நாளா அவனுங்கள வலை போட்டு தேடிக்கிட்டு இருக்கு. நிறைய சர்வேலன்ஸ் கேமரா வச்சி, நிறைய
Spy ங்கள வச்சி அவனுங்கள வாட்ச் பன்னிக்கிட்டு இருக்கு. அப்ப தான் அந்த தீவிரவாதிங்க
கென்யால ஒரு வீட்டுல ஒண்ணு கூடப்போறதா இம்ரேசன் (information) கிடைக்கிது.
இந்த மிஷன்ல நிறைய பேர் வேலை செய்றாங்க.
அதுல ரெண்டு பைலட்டும். அவங்களோட வேலை மிக உயரத்துல பறந்துகிட்டு இருக்க ஆளிள்ளா விமானத்த
இங்கருந்து கண்ட்ரோல் பன்றதுதான். ஆளில்லாம அதுமட்டும் ஏன் தனியா பறக்குதுன்னு கேப்பீங்க.
அந்த ஃப்ளைட்டுல உள்ள hi definition கேமராவ வச்சி தான் அந்த தீவிரவாதிகளோட எல்லா மூவ்மெண்டையும்
watch பன்றாங்க. அந்த விமானத்த வச்சி மொத்த ஏரியாவையும் surveillance ல வைக்க முடியும் ஒரு கார் போகுதுன்னா அதுக்கேத்த மாதிரி ஃப்ளைட்ட முன்ன பின்ன
நகர்த்தி ஃப்ளைட்டுல உள்ள கேமரா மூலமா அந்த கார தொடர்ந்து ஃபாலோ பன்ன முடியும். அதுமட்டும்
இல்லாம மிஸைல்களை தாங்கி நிக்கிற ஒரு போர் விமானமும் கூட. தேவைப்பட்டா அதன் மூலமா ஏவுகனைத்
தாக்குதலும் நடத்த முடியும்.
அந்த ஒரு விமானம் மட்டும் இல்லாம குருவி
மாதிரி பறக்குற ஒரு கேமரா. சின்ன வண்டு சைஸ்ல ஒரு கேமரான்னு அங்கங்க ஒரு கேமராவ வச்சி
தீவரவாதிகள் பக்கத்துல நெருங்காமையே அவங்களோட ஒவ்வொரு மூவ்மெண்டயும் வாட்ச் பன்னிட்டு
இருக்காங்க.
நாலு தீவிரவாதிகளும் (ஒரு பெண் உட்பட) கென்யால
உள்ள ஒரு வீட்டுல ஒண்ணு கூடி ஒரு தற்கொலைப் படை தாக்குதலுக்கு ப்ளான் பன்றாங்க. இதை
நடக்க விடக்கூடாது. இவ்வளவு க்ளோஸா அந்த தீவிரவாதிகளை
நெருங்குனதும் இந்த நேரத்துலதான். அதனால இங்கயே வச்சி அவனுங்க கதைய முடிச்சிடலாம்னு
முடிவு பன்னுது மிலிட்டரி.
தீவிரவாதிகள் தங்கியிருக்க வீட்டுக்கு பக்கத்து
தெருவுல ஆறு ஏழு வயசு மதிக்கத்தக்க ஒரு குழந்தை இருக்கு. தினமும் அவங்க அம்மா ரொட்டி
சுட்டு தர, இந்த அஞ்சு வயசு குழந்தை அதை தெருவுல வச்சி வித்துட்டு வீட்டுக்கு போகும்.
அது ரொட்டி விக்கிற இடம் கரெக்டா தீவிரவாதிகள் தங்கியிருக்க விட்டுக்கு ரொம்ப பக்கத்துல.
இப்படி இருக்க, மிஷன் இன்ச்சார்ஜ் லேடி தீவிரவாதிகளப்
போட்டுத் தள்ளிடலாம்னு முடிவு பன்னி , எல்லார்கிட்டயும் பர்மிஷனும் வாங்கி, மிஸைல்
மூலமா அந்த வீட்ட தாக்குறதுன்னு முடிவு பன்றாங்க. எல்லாம் செட் பன்னி மிஸைல் லாஞ்ச்
பன்னப்போகும்போது அந்த சின்னக் குழுந்தை ரொட்டி விக்க வந்து அந்த வீட்டுக்கு பக்கத்துல
உக்கார்ந்துருது.
ஃப்ளைட் இன்சார்ஜா இருக்கவன் குழந்தை உயிருக்கு
ஆபத்து வரும்னு சொல்லி missile ah லாஞ்ச் பன்ன
முடியாதுன்னு சொல்லிடுறான். அந்த வீட்டோட எந்த பகுதில தாக்குனாலும் அந்த குழந்தை அதனால
பாதிக்கப்படும்னு அனுமானிக்கிறாங்க. டெலிகேட் பொசிஷன்.
அதனால குழந்தை அந்த ரொட்டியெல்லாம் விக்கிற
வரைக்கும் வெய்ட் பன்னிட்டு இருக்காங்க. இந்த பக்கம் தீவிரவாதிகள் உடம்புல பாம் எல்லாம்
கட்டிக்கிட்டு தற்கொலைப்படை தாக்குதலுக்கு ரெடி ஆயிட்டாங்க. இன்னொரு பக்கம் குழந்தை
இருக்கதால ஏவுகணை விட பர்மிஷன் இல்லை. இன்னிக்கு தீவிரவாதிகளை விட்டுட்டா இனிமே என்னிக்கு
கண்ணுல படுவானுங்கன்னே சொல்ல முடியாது. கடைசி வாய்ப்பு.
அந்த ஒரு குழந்த உயிரப் பத்தி கவலைப்பட்டா தீவிர வாதிகளோட தற்கொலைப் படை தாக்குதல்ல பல பேர இழக்க வேண்டியிருக்கும். அதுனால யோசிக்காம தாக்கிடலாம்னு சொல்லுது மிஷன் இன்சார்ஜ் லேடி. ஆனா குழந்தையோட உயிருக்கு ஆபத்து வர்ற மாதிரி இருந்தா பர்மிஷன் குடுக்கு முடியாதுன்னு சொல்றாங்க மேலிடம். ஒவ்வொரு நிமிஷமும் திக் திக்னு போகுது. Missile வச்சி தீவிரவாதிகளை
கொன்னானுங்களா இல்லையாங்குறத செம த்ரில்லிங்க்கா காமிச்சிருக்க படம் தான் EYE IN
THE SKY.
கிட்டத்தட்ட பின்லேடனைப் பிடிக்கிற ZERO
DARK THIRTY மாதிரியான படம். நேரமிருந்தா கண்டிப்பா பாருங்க. ZERO DARK THIRTY யை பாக்கலன்னா அதயும் ஒருக்கா பாருங்க.
IMDB Rating : 7.3
4 comments:
Shooter படத்துலகூட "You don't understand, they killed my dog!" அப்படீனு ஹீரோயின் கிட்ட டயாலக் வுட்டுட்டு வில்லன்களை வூடுகட்டி சுட்டு கொல்லுவாப்ள நம்ம ஹீரோ ஸ்வாகர்.
திரைபடம் திரில்லிங்காக உள்ளது என்பதையும் தாண்டி படத்தின் மைய கரு என்ன சொல்கிறது , ஒரு சிறிய குழந்தையின் உயிர்காக அனுதாபம் ,அதிகாரம், விவாதம் ,நெருடல் என திரைப்படம் முழுவதும் காட்சியமைக்கபட்டுள்ளன.
இன்றைக்கும் சிரியா,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் அமெரிக்க ஆளில்லாத விமானங்கள் மற்றும் ட்ரோன் தாக்குதலில் பல அப்பாவி பெண்கள் , குழந்தைகள் என கொல்லபட்டுதான் வருகின்றனர் .இது ஒரு அப்பட்டமான அமெரிக்க தீவிரவாத போருக்கு நியாயம் கற்பிக்கும் அமெரிக்க அடிவருடி அரசியல் திரைப்படம்...
Ithe india la yarum defense forces ku support ah padam yeduka matanunga, yedukavum vuda matanunga.
Eduthal kandippaga atharipean athil nearmai irunthal muttumea utharanama EYE IN THE SKY!!! poel illamal...
Post a Comment