Friday, November 11, 2016

பணம் பிறந்த கதை!!!


Share/Bookmark
”கோவிலில் இருக்கும் வரை சாமி என்கிறார்கள். திருடு போன பிறகு சிலை என்கிறார்கள்” அப்டிங்குற வரிகளை சிலர் சொல்லி கேள்விப்பட்டுருப்பீங்க. அதை கல்லா நினைக்கிறதும், சாமியா நினைக்கிறதும் மனுஷங்க மனசுலதான் இருக்கு. அத நூறு  சதவீதம் நிருபிச்சிருக்கது இப்ப அரசாங்கத்தோட அறிவிப்பும் அதை தொடர்ந்த சம்பவங்களும். ”ஒத்த ரூவா விழுந்தா கூட ஓடிப்போய் எடுப்பாண்டா இந்த ஸ்டைல் ச்சின்னா”ங்குற மாதிரி இருந்த பயலுக இப்ப 500 ரூவா நோட்டுல மிச்சர் திங்கிறானுங்க ஆயிரம் ரூவா நோட்டுல கப்பல் செய்யிறானுங்க. பொட்டில வச்ச காசு வச்சபடி தான் இருக்கு. யாரும் எதுவும் பன்னல. மொதநாள் ராத்திரி சாமியா தெரிஞ்ச காசு, அரசாங்கத்தோட ஒரு அறிவுப்புல மறுநாள் காலையில வெறும் காகிதமா தெரியிது. அப்ப அந்த பணத்துக்கு மதிப்பு இல்லை. அதுக்கு மதிப்பு இருக்க மாதிரி எல்லாரும் நினைச்சி புலங்கிக்கிறோம்.

சமீபத்துல எனக்கு பிடிச்ச ஒரு வாசகம். “Time doesn’t exist Only clocks exist”. உண்மையில பாக்கப்போனா நேரம் என்கிற ஒரு விஷயமே இல்லை. நாமதான் கடிகாரத்த கண்டுபுடிச்சி, அத மணி, நிமிடம், நொடின்னு பிரிச்சி வச்சிருக்கோம். அதுமாதிரி தான் இதுவும். பணம்ங்குற ஒரு பேப்பருக்கு சுய மதிப்புன்னு எதுவுமே இல்லை. பண்ட மாற்றுக்கான ஒரு ரசீதுதான் பணம். சரி தங்கக் காசு, வெள்ளிக்காசுன்னு பரிமாற்றத்துக்கு உபயோகிச்சிக்கிட்டு இருந்த மக்களுக்கு இந்த பணம்ங்குற கான்செப்ட் எப்படி வந்துச்சி. யாரு உருவாக்குனது? இதைப் பற்றி பார்க்கவேண்டுமானால் நாம் கி.பி முதலாம் நூற்றாண்டு வரையாவது செல்ல வேண்டும். எது வாடகை சைக்கிள்லயா? பின்னாடி டயர் பஞ்சருங்க. வாங்க நடந்தே போவோம்.

கி.பி 32 இல் யூதர்கள் அவங்க கோவிலுக்கு Shekilshekil ங்குற சுத்தமான வெள்ளியால் ஆன ஒரு காசத்தான் வரியா கொடுக்கனுமாம். கடவுள் அந்த சுத்த வெள்ளியாலான காசதான் காணிக்கையாக ஏற்றுக்கொள்வார்ங்குற நம்பிக்கை அவர்களிடத்தில் விதைக்கப்பட்டிருந்தது. அந்தக் காசும் ரொம்ப கம்மியான எண்ணிக்கையிலதான் புலக்கத்தில் இருந்தது.  கோவிலுக்கு வரி கொடுக்குறதுக்காக  மக்கள் கையிலிருக்கும் வேறு நாணயங்களை கொடுத்து அந்த சுத்த வெள்ளியாலான காச சந்தையில வாங்கனும். அந்தக் வெள்ளிக்காசு ரொம்ப குறைவான எண்ணிக்கையில இருந்ததாலும், அந்தக் காசை அச்சடிப்பவர்கள் மோனோபாலி என்பதாலயும் ஒரு வரைமுறையே இல்லாம அவனுங்க இஷ்டத்துக்கு விலை வச்சி வித்துருக்கானுங்க.

மக்கள்கிட்டருந்து நடக்குற அநியாயக் கொள்ளைய பார்த்த ஜீஸஸ் கோபப்பட்டு, அந்தக் கோவிலுக்குள்ள புகுந்து “இது கொள்ளையர்களோட குகை” ன்னு சொல்லி, அங்க இருக்கவனுங்களையெல்லாம் சவுக்கால அடிச்சி விரட்டி, அதுக்கப்புறம் அந்த சிஸ்டத்தையே மாத்துனாராம். அவர் வாழ்க்கையில அடுத்தவங்க மேல கடுமையா நடந்துக்கிட்டதும் அந்த ஒரு சம்பவம்தானாம். அதன்பிறகு அங்க ஒரு பொரூளை உருவாக்குறவந்தான் அந்தப் பொருளோட மதிப்பை நிர்ணயிக்க ஆரம்பிச்சான்.

சில நூற்றாண்டுகள் கழிச்சி, நகை வியாபாரிகள் உள்ள புகுந்தாங்க. ”உங்க கிட்ட இருக்க தங்கக் காசுகளையும், வெள்ளிக்காசுகளையும் நாங்க பத்தரமா வச்சிக்கிறோம். வேணுங்குறப்ப வந்து வாங்கிக்குங்க”ன்னு மக்கள்கிட்ட சொல்ல, மக்களும் வீட்டுல தங்கம் வெள்ளிக்காசுககளை வச்சிக்கிறது பாதுக்காப்பில்லைங்குறத உணர்ந்து அந்த நகை வியாபாரிகள்கிட்ட கொண்டுபோய் கொடுக்க ஆரம்பிச்சாங்க. அவன் அந்த தங்கக் காச வாங்கிட்டதுக்கு அடையாளமா ஒரு சின்ன ரசீது ஒண்ணு குடுத்தான்.



இப்ப அந்த ரசீது தங்கக் காசுகளுக்கு இணையா மதிக்கப்பட்டுச்சி. 50 தங்க காசுகளை கையில எடுத்துட்டு போய் வணிகம் பன்றதுக்கு, 50 தங்கக் காசுகள் மதிப்புடைய இந்த சின்ன ரசீத கொண்டு போறது மக்களுக்கும் ரொம்ப ஈஸியா இருந்துச்சி.

கொஞ்சம் கொஞ்சமா  ஊருக்குள்ள எல்லா பரிமாற்றங்களும் அந்த ரசீதுகள் மூலமாவே நடக்க ஆரம்பிச்சிது. தங்கக் காச  குடுத்து ரசீது வாங்கிட்டு போனவனுங்கள்ள ஒருசில பேருதான் அதுவும் ரொம்ப நாள் கழிச்சி வந்து திரும்ப காச வாங்குனானுங்க. மத்தவனுங்க ரசீதோட போனவனுங்க திரும்ப வரவே இல்ல.  அப்பதான் தங்கக் காச வச்சிருக்க நகைவியாபாரிகளுக்கு கிரிமினல் புத்தி வேலை பாக்க ஆரம்பிச்சிது.

இது வரைக்கும் தங்கத்த வாங்கிக்கிட்டு ரசீது அடிச்சி குடுத்தவனுங்க, இப்ப தங்கம் இல்லாமலேயே ரசீது அடிச்சி, அத வட்டிக்கு விட ஆரம்பிச்சானுங்க. அதாவது கெணறு வெட்டாமலேயே கெணறு வெட்டுன ரசீது. இப்பதான் ஊருக்குள்ள ரசீதக் காட்டுனாலே பொருள் வாங்கிக்கலாம்ல. அதனால தங்கமே இல்லாம ரசீத மட்டும் அடிச்சி அதுக்கு வட்டிங்குற பேர்ல பணம் சம்பாதிச்சிக்கிட்டு இருந்தானுங்க.

கொஞ்சம் கொஞ்சமா அதயே பெருசாக்கி, வட்டி கம்பெனிக்கு தனிப் பேரு, தனி முத்திரைன்னு பேங்காகவே நடத்த ஆரம்பிச்சிட்டானுங்க. இல்லாத ஒண்ண இருக்கதா சொல்லி, அதன் மூலமா ஊருக்குள்ள பரிவர்த்தனைகளை நடக்க வச்சி, அதன் மூலமா இவனுங்களும் சம்பாதிக்கிறது. அதாவது வெறும் வாய மட்டும் எடுத்துட்டு போய் எல்லார் சரக்குலயும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கிக் குடிச்சிட்டு வர்ற மாதிரி.


இந்த ரசீது கலாச்சாரம் கொஞ்சம் நாள் ஓடிக்கிட்டு இருக்க, கி,பி.1100 ல ஹென்ரிங்குற அரசர் Tally Sticks எனப்படுகிற மரத்தால் ஆன சிறிய கம்புகள் மூலமா பரிவர்த்தனைகளை நடக்க வச்சாரு. அதாவது ஒரு மரத்துண்ட நல்லா பாலிஷ் பன்னி, முனைகள்லாம் சரியா செதுக்கி அதுல எண்கள் பொறிக்கப்பட்டு, அந்த மரத்துண்ட ரெண்டு பாதியா வெட்டி, (ஒரு துண்டு மற்றொன்றோட mating part மாதிரி இருக்கும்படி) ஒரு மரத்துண்டை அரசர் இடத்துல வச்சிக்கிட்டு மற்ற மரத்துண்டை பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்திக்க வைச்சார்.

சரி சும்மா மரத்துண்டை கொண்டு போய் குடுத்தா அதுக்கு மதிப்பிருக்குன்னு மத்தவங்க நம்பனும்ல. அதுக்காக அரசரவைக்கு கொடுக்கப்படும் வரிகள் எல்லாம் அந்த மரத்துண்டுகளாத்தான் (tally sticks) தரனும்னு சொல்லவும், மக்களும் அந்த மரத்துண்டுகள பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்திக்கிட்டாங்க. கிட்டத்தட்ட 700 வருஷங்கள் இந்த tally sticks முறைதான் பயன்படுத்தப்பட்டிருக்கு. வரலாற்றில் மிக நீண்ட காலம் பயன்படுத்தப்பட்ட முறையும் இந்த tally sticks முறை தான்.


எல்லாத்தையும் அரசாங்கம் கண்ட்ரோல்ல வச்சிருந்தவரைக்கும் எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சி. கி.பி.1500 ல எட்டாம் ஹென்றி என்ன பன்னிட்டாப்ள , இந்த கந்துவட்டி தொடர்பான சட்டங்களையெல்லாம் தளர்த்திட்டாரு. அதனால தங்கம் வெள்ளிக்காசு நிறைய வச்சிருந்த பல பேரு மார்க்கெட்ட இறங்கி அவன் அவன் வட்டிக்கு விட ஆரம்பிச்சிட்டானுங்க. அதுல முக்கால்வாசி மேல சொன்ன மாதிரி கெணறே இல்லாம கிணறு வெட்டுற மாதிரி தான். ஒரு கட்டத்துல அரசாங்கத்த விட இந்த பண மாற்றிகள் (money changers) பவர்ஃபுல்லா மாற ஆரம்பிச்சிட்டானுங்க.

1642 ல இந்த பண மாற்றிகளோட சப்போர்ட்டுல, அந்த ஆட்சில மிலிட்டரி ஆஃபீசரா இருந்த ஆலிவர் க்ரோம்வெல்ங்குறவன நல்லா உசுப்பேத்தி உசுப்பேத்தி அவனுக்கு காசும் கடனா குடுக்க, அவன் ஒரு படைய திரட்டிக்கிட்டு அப்ப இங்கிலாந்த ஆண்ட மன்னர் சார்லஸ்ஸ மட்டை பன்னிட்டானுங்க. இதனால பெரிய கலவரம் வெடிச்சி, கிட்டத்தட்ட 50 வருஷம் சண்டை நடந்துக்கிட்டு இருந்துச்சி.

எல்லாத்துக்கும் பின்னால இருந்து காசு குடுத்து உதவுனவனுங்க இந்த பண மாற்றிகள்தான். அவனுங்க சண்டை போடுறதுக்குண்டான செலவுக்கெல்லாம் கடன் குடுத்தது இந்த பண மாற்றிகள் குரூப்பு. வட்டி ஏறிக்கிட்டே போக, ஒரு கட்டத்துல மன்னர்கிட்டருந்து வட்டிக்காக ஒரு ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள ஒரு இடத்த வாங்கி ஆக்கிரமிச்சிக்கிட்டானுங்க. அதுதான் இப்ப City of London ன்னு அழைக்கப்படுது.

50 வருட போர்னால, அரசு அதிகாரிகள்லாம் அதற்கான செலவுக்கு இவனுங்ககிட்ட கடன் கேட்டு போய் நின்னாங்க. மிகப்பெரிய நிதிநெருக்கடி வர ஆரம்பிச்சிது. அப்ப இந்த குள்ளநரிங்கல்லாம் அரசாங்கத்தோட நிலைய புரிஞ்சிக்கிட்டு, ஒரு டீல் போட்டுக்கிட்டாய்ங்க. அதாவது தனியாரால் நடத்தப்படும் ஒரு பேங்க் ஆரம்பிக்கிறது. அதுல எந்த தங்கமோ வெள்ளியோ இருப்பு இல்லாம கூட கரன்ஸி அடிச்சி சர்குலேஷன்ல விட்டுக்கலாம். இதுதான் அந்த டீல். அந்த டீலிங்குல  உருவானதுதான் Bank of England.

அவனுங்க எதுவுமே இல்லாம  சும்மா அடிச்ச கரண்ஸிய அரசாங்கம் கடனா வாங்கி, அத மக்கள் வரி மூலமா திரும்ப கட்டிக்கிட்டு இருக்கானுங்க. இந்த டீலிங் நல்லா இருந்ததால, இத ரோல் மாடலா வச்சி ஒவ்வொரு நாட்டுலயும் இந்த மாதிரி ஒரு செண்ட்ரல் பேங்க் ஆரம்பிச்சானுங்க. அந்த நாட்டையே கைப்பற்றி கண்ட்ரோல் பன்ற அளவு பவர் அந்த செண்ட்ரல் பேங்குகள்கிட்ட இருந்துச்சி.


இந்த சம்பவங்களுக்கெல்லாம் பிறகுதான் மெயின் ஹீரோவே எண்ட்ரி ஆகுறாரு. ஹீரோ பேரா? Child… Rothschild…..  (Bond.. JamesBond style ல் படிக்கவும்). பேருதான் child ன்னு சின்னப்புள்ள மாதிரி வச்சிருக்கான். ஆனா எமத்திருடன்… அவனோட லீலைகளைப் பத்தி அடுத்த பதில் தொடர்வோம். 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

Madhu said...

Writing style different ah iruke!! ithu neenga matum eluthina madiri therila ;-) BTW good info

முத்துசிவா said...

ஹாஹா... நா எழுதுனதுதான். இதுல காமெடி எதுவும் இல்லாததால கொஞ்சம் வித்யாசமா இருக்கு

ஜீவி said...

அருமையான விளக்கம்

Anonymous said...

MuthuSiva,


Jews!!!

Are you going to write about the new wold order and Free masonary?

Sibi said...

meethi article enga pa?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...