Monday, April 3, 2017

கவண்!!!


Share/Bookmark
ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு செண்டிமெண்ட் இருக்கு. அவங்களோட வெற்றிபெற்ற படங்கள்ல இருக்க எதாவது ஒரு விஷயத்த அவர்களோட அடுத்தடுத்த படங்கள்லயும் தொடருவாங்க. TR பெரும்பாலும் ஒன்பது எழுத்துக்களில் இருப்பது போலான தலைப்பை வைக்கிறது போல அயன் படத்தின் வெற்றியாலதான் கே.வி ஆனந்த் “அநேகன்” “மாற்றான்” “கவண்”ன்னு ஒரே ‘ன்’ல முடியிற பேரா வச்சிக்கொல்றாரு போல. மற்ற ரெண்டு பட பெயர்களாவது பரவால்ல. கவண்ங்குற பேர்ல ஒரு அட்ராக்‌ஷனே இல்லை.  படத்துலயாவது எதாவது இருக்கான்னு பாப்போம் .

                     செம ஸ்பாய்லர்ஸ்

படம் ரிலீஸான முதல்நாளே படத்துக்கு பயங்கர பில்ட் அப்பு.. அதுவும் சில ஆர்வக்கோளாறுகள் “மீடியாவ விட்டு கிழிச்சிட்டானுங்க” “மீடியாவ வச்சி செஞ்சிட்டானுங்க” ன்னு எக்கச்சக்கமா அடிச்சிவிட்டுக்கிட்டு இருந்தானுங்க. அப்டி என்னத்த கிழிச்சாங்க, நமக்கு தெரியாத எதோ ஒண்ண சொல்லிட்டாங்க போலன்னு பாத்தா எல்லாமே நமக்கு ரொம்ப பழக்கப்பட்ட நாடா.

விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள ஓட்டுரானுங்க. இது ரொம்பப் புதுசு பாருங்க நமக்கு. விஜய் டிவியே ஒரு மானங்கெட்டவனுங்க. அவனுங்களே ஷோ பன்னுவானுங்க. அப்புறம் அது இது எது, கலக்கப்போவது யாருங்குற பேர்ல அவனுங்களே அந்த ஷோவ ஓட்டிக்குவானுங்க. வாரம் ஏழு நாள்ல, பதினாலுதடவ அதயே திரும்பத் திரும்ப போட்டுக்காட்டி அருத்துக் கொல்லுவானுங்க.  இப்டி இருக்க அதே கண்டெண்ட்ட திரும்ப படத்துல வச்சா அது சுவாரஸ்யமா இருக்குமா?.

ஒரு வேளை கே.வி ஆனந்த் இந்தக் கதையை யோசிக்கும்போது இந்த விஷயங்கள் கொஞ்சம் புதிதாக இருந்திருக்கலாம் ஆனா, இன்னிக்கு தேதிக்கு இதெல்லாம் ரொம்ப பழைய மேட்டர்.

தனது டிவி சேனலை முதல் இடத்துக்கு கொண்டு வர துடிக்கிற ஒரு சேட்டு, சிலப் பல டகால்டி வேலைகள்லாம் பண்ணி சேனலோட TRP ய ஏத்திக்கிறாரு. சேனல் மூலமா எந்த செய்தியையும் மக்களை நம்ப வைக்கலாம்ங்குற மெண்டாலிட்டில தப்பான காரியங்கள் செய்யிறாரு. (இதெல்லாம் வாஞ்சிநாதன்ல ப்ரகாஷ்ராஜ் செஞ்சது) இதைத் தட்டிக்கேட்கும் விஜய் சேதுபதி & மடோனா செபஸ்டியன் குழு, அந்த டிவி சேனல்லருந்து வெளியேறி, இருக்கா இல்லையான்னே தெரியாத ஒரு டிவி சேனல்ல வேலைக்கு சேர்ந்து,  சூரியவம்சம் சரத் குமார் மாதிரி ஒரே பாட்டுல எப்படி அந்த சேனலை முன்னேத்துறாங்கங்குறது தான்.

படத்தில் மிகப்பெரிய பலவீனம் Casting. முதல்ல இந்த கதைக்கு விஜய் சேதுபதி பொருத்தமானவரே இல்லை. நிறைய இடங்கள்ல சொதப்பல். ஆங்கிலம் பேசும் காட்சிகள் அபாரம். அதுவும் ஒரு விக்கயும் கண்ணாடியயும் மாட்டி விட்டு, சில காட்சிகள்ல அப்டியே chitti ட்ரெயின் பன்னுற டாக்டர் வசீகரன் மாதிரியே இருக்காரு.  என்னைப் பொறுத்த வரை இந்தக் கேரக்டர்ல விஜய் சேதுபதியை விட மாதவன் இன்னும் சிறப்பாக பொருந்தியிருப்பார். ஆனாலும் சில இடங்களில் விஜய் சேதுபதி அவருக்கே உரிய சில பாடி லாங்குவேஜ், ஒன்லைன்கள்ல நம்மள கவருறாரு. 

இன்னொரு மொக்கையான பாத்திரப் படைப்பு அரசியல் வாதியா வர்ற போஸ் வெங்கட்டோடது. தொடர் குடிகாரர், லோக்கல் பாஷையில் பேசும் ரவுடி கம் அரசியல் வாதி. இந்தக் கேரக்டர அசால்ட்டா பன்ன தமிழ்ல எத்தனையோ பேர் இருக்காங்க. போஸ் வெங்கட்ட கூப்டு வந்து அவருக்கு ஒரு மொக்கை கெட்டப்ப போட்டு விட்டு, செம மொக்கை போட்டுருக்காங்க. அதுவும் சேனல் ஓனர் சேட்டும், போஸ் வெங்கட்டும் பேசிக்கிற காட்சிகள் கண்றாவி. “ஃபேஸ்புக்குல என்ன வச்சி காமெடி தானடா பன்னிக்கிட்டு இருந்தீங்க” என்கிறார் ஒரு காட்சியில். ஒரு வேளை கேப்டனை imitate செய்ய  முயற்சித்திருக்கிறார்களா என தெரியவில்லை.

முதல் ஒரு முக்கால் மணி நேரப் படம் ரொம்ப நல்லாவே போகுது. கதை நகருது. ஆனா ஒரு கட்டத்துல டிவி ஷோவ ஓட்ட ஆரம்பிக்கிறேன்னு பவர் ஸ்டார chief கெஸ்ட்டா கூப்டு வந்து ஒரு ஷோ பன்ற மாதிரி காமிக்கிறானுங்க. அப்ப ஆரம்பிக்கிறது தான்.. அப்புறம் க்ளைமாக்ஸ் வரைக்கும் படம் கடி தான். அதுவும் ரெண்டாவது பாதிலல்லாம் கதை நகரவே இல்லை. இண்டர்வல் வரைக்கும் கதை எவ்வளவு வந்துச்சோ அவ்ளோதான் க்ளைமாக்ஸ் வரைக்கும். இன்னும் இந்த ஃபேக்டரி கழிவுகள்லருந்து மக்களைக் காப்பாத்துற கதைய எத்தனை படத்துல எடுக்கப் போறாய்ங்கன்னு தெரியல. 

படத்தில் ஒரு சில ஆறுதல்கள்ல டி.ஆரும் ஒண்ணு. வடிவேலு ஒரு படத்துல பார்த்திபனப் பாத்து சொல்லுவாறு “இவன் ரூபத்துல ஒருத்தன ஊமையா பாக்குறது மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு”ன்னு. கிட்டத்தட்ட எனக்கும் அதேதான் தோணுச்சி. இவர் ரூபத்துல வாயக் கொஞ்ச நேரம் மூடிக்கிட்டு ஸ்க்ரீன்ல வர்றதப் பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. இவர் வசனம் பேசுவதற்காக திணிக்கப்பட்ட காட்சிகளும் ஒண்ணு ரெண்டு இருக்கு.

மிகப் பெரிய காமெடி என்னன்னா டி ஆர் ஒரு டொம்மையான டிவி சேனலுக்கு ஓனர். அவரோட ஆஃபீஸக் காமிக்கிறானுங்க. ஒரு பாழடைஞ்ச வீடு. அதுல கூட்டுறதுக்கு ஒரு ஆயா.. டி ஆருக்கு அள்ளக்கை ஒண்ணு. லேகியம் விக்கிறா ப்ரோகிராமுக்கு ரெண்டு பேரு. இவ்வளவுதான் மக்களே ஒரு சேனல் ஆஃபீஸ் செட்டப்பு. சேனல்ன்னு சொன்னதுக்காகவாச்சும் எதாவது பன்னிருக்கலாம்ல. அதுலயும் டிஆர் சேனல் ஓனர்னு தான் பேரு. சும்மா சொங்கி மாதிரி வந்துட்டு போறாப்ள.  அவரோட சேனல் செட்டப்ப பாக்கும்போது அப்படியே ஞானப்பழம் படத்துல பாக்யராஜோட ப்ரஸ்ஸ பாக்குறா ஃபீல் 

விஜய் சேதுபதி டிஆர் கிட்ட வேலை கேட்டு போறதும் அதுக்கு அவர் மறுக்குறதும் அப்படியே கிரி பட காமெடிய ஞாபகப்படுத்துது. “எதுவுமே இல்லாத என் கம்பெனிக்கு வேலைக்கு வரனும்னு துடிக்கிறியே அது ஏன்? என்கிட்ட இருக்கதே அரைக்கிலோ மைதா மாவும் நாலு வரிக்கியும்தாம்”பாறு வடிவேலு. இங்க டிஆர்கிட்ட வரிக்கிக்கு பதிலா லேகியம். அவ்ளோதான் டிபரன்ஸ். விஜய் சேதுபதி டீம் இவர் சேனலுக்கு வந்தும் பெருசா இன்னோவேட்டிவால்லாம் எதுவும் பன்ன மாட்டானுங்க. கூட்டி பெருக்கி சுத்தம் மட்டும் பன்னி சுத்தி உக்காந்து பேசிக்கிட்டு இருப்பானுங்க அவ்வளவுதான். அதுவும் அவனுங்க கவர் பன்றது அந்த ஃபேக்டரி மேட்டர் மட்டும்தான்  சேனல் முன்னேறிடும்.

தமிழ்சினிமாவுல ஷங்கர் மூலமா பரப்பப்பட்ட ஒரு அபத்தமான காட்சிகள்ல ஒண்ணு, ஒரு சேனல்ல ஹீரோ பேசும்போது தமிழ்நாட்டுல உள்ள அத்தனை மக்களும் அந்த சேனல கூட்டமா வீட்டுல உக்காந்தோ இல்லை ரோட்டு ஓரமா வசந்த் அன் கோவுல நின்னோ பாத்து “அப்புடிக் கேளுய்யா… அடிச்சாம்பாரு ஆப்பு.. அந்தத் தம்பி சரியாத் தான் பேசுது “ போன்ற வசங்களப் பேசிக்கிட்டு இருப்பானுங்க. ஏண்டா நம்மாளுக கிரிக்கெட் மேட்சத் தவற வேற எதயாவது ஒண்ணா நின்னு பாத்துருகானுங்களா? அதுமட்டும் இல்லாம ஒருத்தன் குடிகாரன்னா கையிலயே பாட்டில வச்சிக்கிட்டு ரெண்டு நிமிஷத்துக்கு ஒருதடவ வாயில ஊத்திக்கிற மாதிரி காமிக்கிறாய்ங்க. மொடா குடிகாரன்கூட அப்டி குடிக்க மாட்டான்.

கேவி ஆனந்தின் முந்தைய படமான அநேகன்ல கொஞ்சமாவது படத்த ட்ரைவ் பன்றதுக்கு ஒரு கதையும் கண்டெண்டும் இருக்கும். இங்க மீடியாங்குறா மேட்டர மட்டும் எடுத்துக்கிட்டு ஒரு முழுப் படத்தையும் தொயிவில்லாம கொண்டு போற ஒரு கதைய எழுதாம விட்டுட்டாரு. கேமரா முதல் பாதி சூப்பர். ரொம்ப ரிச்சா இருந்துச்சி.. ரெண்டாவது பாதில ரொம்ப சுமார். காட்டுக்குள்ள லொக்கேஷன் பொய்ட்டாலே பிக்சர் குவாலிட்டி மொக்கையாயிரும்.

கே.வி ஆனந்தும் ரஞ்சித் மாதிரி ஆயிட்டாரு. ஹீரோ ஹீரோயினத் தவற மற்ற துணை நடிகர்களெல்லாம் அவரோட இதற்கு முந்தைய படங்கள்ல பார்த்து பழக்கப்பட்ட அதே ஆட்கள். மடோனா செபஸ்டியன் ஆளு சூப்பரா இருக்கு. ஆனா நம்ம பயளுக அந்தப் புள்ளைய சத்யராஜ் சத்யராஜுன்னு சொல்லி ஓட்டுறதால அதப் பாக்கும்போதெல்லாம் சத்யராஜ் ஞாபகம்தான் வருது.

கே.வி ஆனந்த் படங்களுக்கு பெரிய பலம் ஹாரிஸின் பாடல்களும் பின்ணணி இசையும். இங்க அது இல்லை. ஹிப் ஹாப் தமிழாவின் பாடல்கள் காதுக்குள்ள காய்ச்சுன கம்பிய விட்டு கொடாயிற மாதிரி இருக்கு. ஹிப் ஆதிக்கு ஜாஸி கிஃப்ட், சுக்விந்தர் சிங் மாதிரியான கொஞ்சம் பெக்குலியர் வாய்ஸ். பத்தில் ஒரு பாடல் அவர்கள் குரலில் கேட்டால்தான் நல்லாருக்கும். பத்தயுமே அவர்கள் குரல்ல கேட்டா காது ஜவ்வு கிழிஞ்சிரும். நம்மதம்பி அனைத்து பாட்டையும் அவரே பாடனும்னு ஆசப்படுறாப்ள. அவருக்கு வாயில எதாவது ஆப்ரேஷன் பண்ணி பாடவிடாம பன்ன முடியுமா பாருங்க. ஆப்ரேசன் செலவுக்கு கூட நானும் ஷேர் தர்றேன்.

மொத்ததுல படத்துக்கு ப்ளஸ்ஸுன்னு பாத்தா முதல் முக்கால் மணி நேரம். விஜய சேதுபதியோட ஒண்ணு ரெண்டு காமெடிகள். மத்தபடி அனைத்துமே படத்துக்கு துணை நிக்கல.  கே.வி ஆனந்த், சேதுபதி, டிஆர் காம்பினேஷன்ல நம்ம எதிர் பாத்த அளவு இல்லாம, ரொம்ப ஆவரேஜான படம். 
பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

Anonymous said...

தமிழ்சினிமாவுல ஷங்கர் மூலமா பரப்பப்பட்ட ஒரு அபத்தமான காட்சிகள்ல ஒண்ணு, ஒரு சேனல்ல ஹீரோ பேசும்போது தமிழ்நாட்டுல உள்ள அத்தனை மக்களும் அந்த சேனல கூட்டமா வீட்டுல உக்காந்தோ இல்லை ரோட்டு ஓரமா வசந்த் அன் கோவுல நின்னோ பாத்து “அப்புடிக் கேளுய்யா… அடிச்சாம்பாரு ஆப்பு.. அந்தத் தம்பி சரியாத் தான் பேசுது “ போன்ற வசங்களப் பேசிக்கிட்டு இருப்பானுங்க. ஏண்டா நம்மாளுக கிரிக்கெட் மேட்சத் தவற வேற எதயாவது ஒண்ணா நின்னு பாத்துருகானுங்களா?

Correct Muthusiva, Tamil Cinema'vula ena irritate panra scenes'la ithuvum onu.

Anonymous said...

சரியான மொக்க review. இதே படத்தில ரஜினி நடிச்சிருந்தான்னா இதே review எழுதியிருக்க மாட்டீங்க. படம் நல்லா இருக்கு.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...