Monday, March 27, 2017

என்கிட்ட மோதாதே.- லிஸ்டுலயே இல்லாத படம்!!!


Share/Bookmark
நம்மோடா பார்க்குற லிஸ்டுலயே இல்லாத படம்.. விஜயகாந்த் மேடையில பேசிக்கிட்டு இருக்கும்போது “இது என்ன கையில வந்து மாட்டுது”ன்னு மைக் ஒயர் அதுவா வந்து மாட்டுற மாதிரி பழைய நண்பர் ஒருவரை சந்திக்கப் போன போது வந்து மாட்டுனது தான் இந்த எங்கிட்ட மோதாதே. 

”கட்டவுட் வரையிறது தான் என்னோட தொழில்… நா ரஜினிய வரைவேன்.. என்னோட நண்பன் கமல வரைவான்.. நாங்க வரையிற” ன்னு நட்ராஜோட வாய்ஸ் ஓவர்ல துவங்குற படத்துல முதல் காட்சிலயே, பொல்லாதவன், பருத்தி வீரன் லெவல் எஃபெக்ட்ட குடுத்துருந்தாங்க. பத்து பதினைஞ்சி ரவுடிங்க கையில அருவா கத்தியோட யாரயோ தேடிக்கிட்டு இருக்க “இந்த கட்டவுட் வரைஞ்சதால என்னோட தலைக்கு கத்தி குறி வச்சிருக்கு.. விடியிறதுக்குள்ள இத முடிச்சாகனும்”ங்குறாரு நட்ராஜ்.  ஆனா படம் முடியும்போது தான் தெரிஞ்சிது “கத்தி குறி வச்சிருக்கது அவரை இல்லை நம்மளன்னு.

1980 கள்ல நடக்குற மாதிரியான கதைக்களம். ரஜினி, கமல் படங்கள் ரிலீஸ்,  ரசிகர்கள் மோதல்ன்னு நல்லாத்தான் ஆரம்பிக்குது படம். ஆனா காட்சிகள் எதுலயுமே எந்த ஒரு அழுத்தமும் இல்லாம ரொம்ப சாதாரணமா கடந்து போய்கிட்டு இருக்கு. ஒரு படம்னா அதோட ஒவ்வொரு காட்சியும் கதைக்கு சம்பந்தமாதாக, பின்னால சொல்லப்போற எதோ விஷயத்த நேரடியாவோ மறைமுகமாவோ வெளிப்படுத்துற மாதிரியானதாக இருக்கனும்.

ஆனா இங்க சில காட்சிகள்லாம் எதற்காக வச்சாங்கன்னே தெரியல.  உதாரணமா நட்ராஜ் அவரோட நண்பர் ராஜாஜிய விட படம் வரையிறதுல ரொம்ப திறமைசாலியா காமிக்கிறாங்க. ஆனா அது படத்தோட கதைய எங்கயுமே பாதிக்கல. அப்படிக் காட்ட வேண்டியதுக்கான எந்த அவசியமும் கதையில இல்ல.
நட்ராஜ்-ராஜாஜி நட்பும் ரொம்ப சிறப்பால்லாம் காமிக்கப்படல. நட்ராஜ்-சஞ்சிதா, ராஜாஜி-பார்வதி நாயர் காதலும் ஒழுங்கா காமிக்கப்படல. ரஜினி-கமல் ரசிகர்கள் சண்டையையும் சரி, கொண்டாட்டங்களையும் சரி ரொம்ப உணர்வுப் பூர்வமாகவும் காமிக்கல. 

கடைசில ரசிகர்கள்தான் பெரியவங்க.. அவர்கள் நினைச்சா அரசியல் மாற்றத்த கொண்டு வரமுடியும்ங்குற விஷயத்த சொல்லத்தான் இயக்குனர் சுத்திச் சுத்தி கதை எழுதிருப்பாரு போல.

நாயகன், மனிதன் பட ரிலீஸ், RMKV ஸ்ரீதேவி விளம்பரம், பழைய மாடல் புல்லட், டேப் ரெக்கார்டர் ன்னு 1980 to 90 ah படத்துல கொண்டு வர முயற்சி செஞ்சிருக்காங்க. நட்ராஜூம் ராஜாஜியும் நார்மலாக இருக்காங்க. ஆனா சுத்தி உள்ளவங்கள்ளாம் wig ah வச்சிக்கிட்டு இன்று போய் நாளைவா பாக்யராஜ் கெட்டப்புல இருக்காங்க. ஒப்பனைகள்ல இன்னும் கவனம் செலுத்திருக்கலாம்.

படத்துக்கு இரண்டு பெரிய ப்ளஸ் ராதாரவியும், நட்ராஜூம். ராதாரவி வழக்கம்போல பட்டையைக் கிளப்பிருக்காரு. மருது படத்துல ராதாரவி பன்ன அதே கேரக்டர் இந்தப் படத்துலயும். நட்ராஜூக்கும் நல்ல ஸ்க்ரீன் ப்ரசன்ஸ்.. ஆனா அவரு செலெக்ட் பன்ற கதைகள்லாம் கப்பியா இருக்கு. இப்ப அவர் நடிச்சிட்டு இருக்கதெல்லாம் பாத்தா, எதாவது நல்ல கதைங்க அவருக்கே தெரியாம அவருக்கு வந்து மாட்டுனாதான் உண்டு போல.

சஞ்சிதா ஷெட்டியயும் பார்வதி நாயரையும் கண்கொண்டு பாக்க முடியல. நல்ல புள்ளைங்களா ரெண்ட புடிச்சி போட்டுருக்கலாம். வில்லனாக வரும் விஜய் முருகன் ஆள் மிரட்டலா இருக்காரு.. ஆனா மிரட்டுற மாதிரி காட்சிகள்தான் ஒண்ணும் இல்லை. அங்கங்க சிலப் பல ரெட்டை அர்த்த வசனங்கள அள்ளி தெளிச்சி விட்டுருக்காங்க.

மொத்தப் படத்துலயும் நல்ல காட்சிகள்னு ஒண்ணு ரெண்ட சொல்லலாம். குறிப்பா ராதாரவியோட படம் ரிலீஸ் பன்றதுக்காக நட்ராஜ் நேரடியா பேசுற காட்சி. (ட்ரெயிலர்லயே வரும்) முதல் பாட்டுல கொஞ்சம் CG யெல்லாம் செஞ்சி நல்லா பன்னிருந்தாங்க. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரால “லவ்வுன்னாலே ஃப்ரெஷ் தான் ஜி” ன்னு சொல்லுவாறே… அவரோட ஒரு சில ஒன் லைன் காமெடிகள் நல்லாருந்துச்சி.

ஒரே ஒரு ஆறுதல் என்னன்னா படம் சூப்பரா இருந்துச்சின்னு சொல்ல முடியலன்னாலும் கரகரன்னு கழுத்தல்லாம் அறுக்கல. அதுபாட்டுக்கு இருந்த இடம் தெரியாம ஓடிக்கிட்டு இருக்கு.

மொத்தத்துல பாக்கலாம்னுலாம் நா சொல்லமாட்டேன். “நல்லாருந்தா நல்லாருங்க” ன்னு கவுண்டர் ஆசீர்வாதம் பன்ற மாதிரி பாக்குறதுன்னா பாத்துக்குங்க. கம்பெனி எதற்கும் பொறுப்பாகாது. 



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...