Friday, March 9, 2018

ஊடகமும் நாடகமும்!!!


Share/Bookmark
செய்தி ஊடகங்களின் பணி, நடந்த செய்திகளை நடந்தவாறு மக்களுக்குத் தெரிவிப்பதே. ஆனால் தற்போது இருக்கும் செய்தி ஊடகங்கள் மக்கள் எதை விரும்புகிறார்களோ அந்த செய்திகளை, மக்கள் விரும்பும் அதே கோணத்தில் தந்து கொண்டிருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் பரவிக் கிடக்கும் செய்திகளில் 90 சதவீத செய்திகள் ஆதாரமற்றவையாகவே இருக்கின்றன. ஆனாலும் அந்த செய்தி நாம் விரும்பும் செய்தியாக, இப்படி நடந்தால் நன்றாக இருக்குமே என நாம் நினைக்கும் செய்தியாக இருப்பதால் அந்த செய்தியின் உண்மைத் தன்மையைப் பற்றி நாம் கவலைப்படுவதே இல்லை.

ஒரு செய்தியை உருவாக்க ஆகும் நேரம் கூட அந்த செய்தியைப் பரப்ப தேவைப்படுவதில்லை. “நீ தமிழனாக இருந்தால்என்ற வார்த்தை இருந்தாலே நரம்பு முறுக்கேற வாட்ஸாப் கணக்கில் இருக்கும் அத்தனை நண்பர்களுக்கும், குழுக்களுக்கும் அந்தச் செய்தியைப் பரப்பி விட்டுத்தான் மறுவேலை பார்க்கும் தமிழ்ப் பற்றாளர்கள் ஏராளம்.

ஆங்கிலத்தில் பாரடைம் (Paradigm) என்ற ஒரு சொல்லாடல் உண்டு. அதாவது நம் மனதில் பதிந்து போய் விட்ட சில எண்ணங்கள், இது இப்படித்தான் இருக்கும் என்ற நமது பார்வையைத்தான் பாரடைம் என்கிறார்கள். உதாரணமாக அவர் ஒரு நேர்மையான அரசியல்வாதிஎன்று ஒருவரைக் குறிப்பிடும் போது நம்மை அறியாமலும் நமக்குள் சிரிப்பு வந்துவிடும். காரணம் அரசியல்வாதிகள் என்றாலே அவர் எப்படி நேர்மையானவராக இருக்க முடியும் என்பது நமது எண்ணம். நாம் இதுவரை கண்ட அரசியல்வாதிகள் மூலம் நம் மனதுக்குள் பதிந்த paradigm அதுஆனால் உண்மையிலேயே  அவர் நேர்மையான அரசியல்வாதியாகக் கூட இருக்கலாம். ஆனால் நம்முடைய paradigm  அந்த உண்மையை கண்டுகொள்ளாது. நாம் மனதில் ஏற்கனவே பதிந்து வைத்திருக்கும் செய்தியைத்தான் உண்மை என நம்ப வைக்கிறது.

மக்கள் தங்கள் மனதில் பதிந்திருக்கும் சில வகை paradigm ங்கள் தான் இன்றைய ஊடகங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. அதனால்தான் அவர்கள் கூறுவதை அப்படியே நம்புகிறோம். உண்மைத் தன்மையை ஆராயாமல் கண்மூடித் தனமாக பகிர்கிறோம்.

ஒரு சிறிய உதாரணம். சென்ற வருடம் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 250. உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக அரசின் சார்பில் ஒரு பதில் அளிக்கப்படுகிறது. அதாவது தமிழகத்தில் விவசாயிகள் வறட்சியின் காரணமாக தற்கொலை செய்துகொள்ளவில்லை. குடும்ப, மற்றும் சொந்த ப்ரச்சனைகளினால்தான் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்என்று.

தமிழக அரசின் இந்த பதிலிற்கு கோபப் படாதவர்களே இல்லை எனலாம்.  “எவ்வளவு மெத்தனப் போக்கு?” “இதெல்லாம் ஒரு அரசா?” என்றெல்லாம் கொதித்தெழுந்தனர். ஆனால் அரசின் அறிக்கையில் ஒரு சதவீத உண்மை இருக்குமா எனக் கூட யாரும் யோசிக்கவில்லை. காரணம் ஒரு பகுதி எதிர்க்கட்சியினருக்கு அரசைக் எதிர்க்க காரணம் வேண்டும். அவர்களுக்கு தேவையான காரணம் கிடைத்தாயிற்று. அதனால் அவர்கள் அந்த அறிக்கையின் உணமைத் தன்மையைப் பற்றி  கவலைப் படவில்லை. விவசாயிகள் சம்பந்தப்பட்ட செய்தி என்பதால் செண்டர் ஸ்டாண்டுகளும் நமக்கெதற்து வம்பு.. நாமும் கோபப்பட்டு வைப்போம் என்று ஒரு பொங்கு பொங்கி வைத்தனர்.

ஆனால் அந்த அரசின் அறிக்கை 90% உண்மையாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். முதலில் விவசாயத் தற்கொலைகளுக்கும், விவசாயி தற்கொலைக்கும் நிறையவே வித்யாசம் இருக்கிறது.  நகர்புறங்களைத் தவிற சிறுநகர் மற்றும் கிராமப் புறங்களில் விஷமருந்தி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இறக்கும் நபர்களுக்கான முதல் தகவல் அறிக்கையில், இறந்தவர் என்ன தொழில் செய்து வந்தாலும் அவரை விவசாயி எனவே காவல்துறை பதிவுசெய்கிறது. அதே முதல் தகவல் அறிக்கையின்படி மறுநாள் செய்தித்தாள்களிலும் இறந்தவர் விவசாயி என்று அச்சிடப்படுகிறது.

இரண்டாவது சமூகவலைத்தளங்களில் விவசாயிகள் சாதாரண மனிதர்களுக்கு அப்பார்பட்டவர்களாக காண்பிக்கப்படுகிறார்கள். அதாவது விவசாயி என்பவர் அவரால் விவசாயம் செய்து உலகிற்கு சோறு போட முடியாமல்போகிற பொழுது, உயிரை மாய்த்துக்கொள்ளும் கதாப்பாத்திரமாக சித்தரிக்கப்படுகிறார்.

மக்கழேவிவசாயியும் உங்களைப்போல் என்னைப்போல் ஒரு சாதாரன மனிதரே. நீங்கள் எப்படி உங்கள் வாழ்வாதாரத்திற்காக ஒரு கம்ப்யூட்டரில் ப்ரோகிராம் எழுதி சம்பாதிக்கிறீர்களோ அதே போல் விவசாயி வாழ்வாதாரத்திற்காக விவசாயம் எனும் தொழில் செய்து வருகிறார். '

ஒரு வேளை உங்கள் அலுவலகத்தில் திடீரென்று உங்களை வேலை நீக்கம் செய்துவிட்டார்கள் என வைத்துக்கொள்வோம். உடனே நீங்கள்அய்யஹோ.. இந்த உலகத்திற்கு என்னால் ப்ரோக்ராம் எழுதிக் கொடுக்கமுடியாமல் போய்விட்டதேஎன வருந்தி உடனே தற்கொலை செய்துகொள்வீர்களா? சத்தியமாக இல்லையல்லவா? அந்த கம்பெனி இல்லையென்றால் இன்னொரு கம்பெனி.. ப்ரோக்ராம் எழுதும் வேலை இல்லையென்றால் வேறு ஒரு வேலை. எப்படியாவது உங்கள் வாழ்க்கையை நட்த்த வழிவகைகளைத் தேடுவீர்கள் அல்லவா? உங்கள் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காவிட்டாலும் கூலி வேலை செய்தாவது உயிருடன் இருக்க முயற்சிப்பீர்கள் அல்லவா? அப்படித்தான் விவசாயி என்ற மனிதரும்.

அதுமட்டுமல்லாமல் நீங்கள் குறிப்பிடும் ஏழை விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. விவசாயிகள் விவசாயம் செய்வதை விட்டு வேறு தொழிலிற்கு மாறி வருகின்றர். கிராமப் புறங்களைப் பொறுத்த அளவு விவசாயம்  என்பது தற்பொழுது பணக்காரர்கள் பொழுதுபோக்கிற்காக செய்துவரும் தொழிலாக மாறி வருகிறது.

நூற்றில் தொண்ணூற்று ஒன்பது விவசாயியின் தற்கொலைக்கு விவசாயம் நேரடிக்காரணமாக இருக்காது. ஒருவேளை why why அனாலிஸில் செய்தால் கடைசி why யிலோ அல்லது அதற்கு முந்தைய why யிலோ விவசாயம் என்னும் காரணம் வரலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் அனைத்து தற்கொலைகளுக்குமே ஒன்றுதான். ஆனால் அரசு  தாக்கல் செய்த அந்த அறிக்கைக்கு கணக்கிலடங்கா கோபங்களே நம் பதிலாக இருந்தது.

எப்படிப்பட்ட செய்திகள் நமக்கு காண்பிக்கப்படுகின்றன? கடந்த ஒண்றிரண்டு ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரே மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து திரும்பத் திரும்ப நிகழ்வதை நம்மால் உணர முடிகிறதா? மாட்டிறைச்சித் தடையை எடுத்துக்கொள்வோம். அந்த சமயத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வட இந்தியாவில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றவர்கள் அடித்துக் கொலை என்ற செய்தியை ஒரு மாத காலத்திற்குள் எத்தனை முறை படித்தோம். ஏன் அதன்பிறகு அது மாதிரியான சம்பவங்கள் எதுவும் நிகழவே இல்லையா?

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் .பியில் குழந்தைகள் இறந்தன. தொடந்து ஒரு வார காலத்திற்குள் அதே மாதிரியான உயிரிழப்புகள் வெவ்வேறு மருத்துவமனைகளில். ஏன் அதற்கு முன்னரோ அல்லது பின்போ அந்த சம்பவங்கள் நடக்கவில்லையா? இவர்கள் காட்டுவதைப் பார்த்தால் விவசாயிகள் தற்கொலை கூட ஒரு சீசனில் மட்டுமல்லவா நடக்கிறது?

நடக்கும் சம்பவங்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட சம்பவங்கள் மட்டும் நமக்கு மிகைபடுத்திக் காண்பிக்கப்படுகின்றனஎதைக் காண்பித்தால் மக்களை உணர்ச்சிவசப் பட வைக்க முடியுமோ, எதை காண்பித்தால் அதே ப்ரச்சனயை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கி குளிர்காய முடியுமோ அதைத்தான் இன்றைய ஊடகங்கள் செய்து வருகின்றன.  மெரினா போரட்டத்தை ஒருவாரத்திற்கு  பின்னர் மாணவர்கள் முடித்துக்கொண்டாலும், ஊடகங்களுக்கு முடித்துக்கொள்ள மனதே இல்லையல்லவா?

சமீபத்திய அய்யக்கண்ணுவை பாஜக பெண்மணி கோவிலில் வைத்து அரைந்த சர்ச்சையை எடுத்துக்கொள்ளுங்கள்.. அய்யாக்கண்ணுவைத் தாக்கிய பாஜக பெண்மணி என தம்பட்டம் அடிக்கிறார்களே தவிற, அய்யாக்கண்ணு என்ன செய்து அடி வாங்கினார் என்பதை கூறவேயில்லை. பாஜக வை சேர்ந்தவர் என்பதற்காக, தகாத வார்த்தைகளால் பேசிய அய்யாக்கண்ணுவிற்கு ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்காமல், சமூக வலைத்தளங்களில் அந்தப் பெண்ணை மட்டுமே வசை பாடிக்கொண்டிருக்கின்றனர். இதுவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள Paradigm வகையே.

அரசியல் தலைவர்கள் கூறும் கருத்துக்களை இவர்கள் நமக்குத் தரும் விதம் எல்லாவற்றையும் விட ப்ரமாதம்.  அவர்கள் சொன்னது ஒண்றாகவும் இவர்கள் நமக்கு சொல்வது ஒண்றாகவும் உள்ளது.

சமூக வலைத் தளங்களில் ஏதாவது ஒரு செய்தித் தளத்தின் லோகோவுடன் ஒரு செய்தியைப் பார்த்தாலே, அதை அப்படியே உண்மையென வீறு கொண்டு எழும் வீரத் தமிழர்கள் மத்தியில், இவர்கள் செய்திகளை எவ்வளவு கவனமாக மக்களுக்குத் தரவேண்டும்? ஆனால் போட்டிக்காகவும், TRP க்காகவும் உண்மைக்கு புறம்பான, சில சமயங்களில் உண்மையை மறைத்துமே இன்று பல செய்தித் தளங்களில் செய்திகள் வெளியிடப்படுகிறது.  அனைவரும் சொல்வது போல என்றைக்கு இவர்கள் 24 மணி நேர செய்திகளை ஆரம்பித்தார்களோ அன்று ஆரம்பித்ததுதான் எல்லாம்.

ஒரு வேளை வரும் காலத்தில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய கலவரங்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்கு முக்கிய மூலகாரணமாக இருக்கப்போவது நம் ஊடகங்கள் மட்டுமே.

  



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

Anonymous said...

For Vairamuthu issue also, the same paradigm happend.

Media said its only H.Raja who is to be cornered....

But, actual culprit is vairamuthu....

Immediately everybody will argue that vairamuthu said sorry ....

Yes vairamuthu said sorry....but for what....see the below scenario....

variamuthu saw a person face-to-face for 10 minutes and slapped. Then said varundhugiren...(Sorry)

in tamil, "theriyama idichutta" sorry-nu solluvaanga...inga sorry na... varundhugiren....

in tamil, thappa purinjigittu....adipaanga....then sorry-nu solluvaanga...inga sorry na...yen thappukku mannichudu....

namma vairamuthu ketadhu....varundhugiren....mannippu kekka vendiya idathula....varundhugiren....


thevidya paya....tamil-a pulavaraaam......
inga...kooda....thevidya paya-na...neenga yennanu purinjukanum-na...vairamuthu amma sirandha...dheiva bakthi yudayavar....thappa solli irundha...varundhugiren....

rajaram said...

இப்படிதாம்பா ஒன்னும் இல்லாத ரஜினியை மிகைப்படுத்தி காட்டுராங்க

rajaram said...

இப்படிதாம்பா ஒன்னும் இல்லாத ரஜினியை மிகைப்படுத்தி காட்டுராங்க

rajaram said...

Where is jaisimha review

முத்துசிவா said...

இன்னும் பாக்கல 😢

Anonymous said...

Konjam latea vanthalum correct point ku vanthurukinga...antha paradigm endra varthaiku tamilil "Pothu puthi"....Ithu ippo namba oorla nadakuthu...ana intha 24X7 media concept start panathay ithuku thaan.. itha "Art of Mass deception" apdi nu kooda solranga....Mass and mind control mathiri....

Raja

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...