ஆசைப்பட்டு ஒரு
தமிழ் படத்துக்குப் போய் அடி வாங்கிட்டு வரும்போது, ச்ச இப்டி ஒரு படத்துக்கு போய்
இப்டி நேரத்தையும், காசையும் வீணாக்கிட்டோமேன்னு தோணும். ஆனா தெலுங்கு படங்களுக்கு
போகும்போது படம் நல்லா இல்லைன்னாலும் அந்த மாதிரி ஃபீலிங் எனக்கு வந்ததே இல்லை. இதுவரைக்கும்
நா ஒரு 15 தெலுங்கு படங்களை தியேட்டர்ல பாத்துருக்கேன். அதுல 12 படங்களோட கதை ஒரே மாதிரி
தான் இருந்துருக்கு. இருந்தாலும் காமெடி, ஃபைட்டு, பாட்டு, விஷுவல்ன்னு எதாவது ஒரு
விஷயம் ஆறுதல் படுத்துற மாதிரி இருக்கும். தெலுங்கு படங்கள பாக்க ஆரம்பிச்சதுலருந்து,
NTR, ரவிதேஜா படங்கள் மட்டும் தியேட்டர்ல மிஸ் பண்ணாம பாத்துகிட்டு வர்றேன்.
நம்ம விஜய்னாவுக்கு
ஒரு சூப்பர் ஹிட்ட குடுத்த போக்கிரியோட ஒரிஜினல் வெர்ஷன் எடுத்த பூரி ஜகன்நாத் தான்
இந்த டெம்பர் படத்தோட டைரக்டர். போக்கிரியோட ஒரிஜினல் வெர்ஷன எடுத்தது SP.முத்துராமன்ங்குறது
வேற விஷயம். பூரி ஜகன்நாத்த பத்தி ஒரு விஷயம் சொல்லியே ஆகனும். ஒரு ஹீரோ ஒரு வருஷத்துக்கு
3 படம் ரிலீஸ் பண்றாருன்னா அது பெரிய விஷயம் இல்லை. ஆனா ஒரு டைரக்டர் ஒரு வருஷத்துக்கு
மூணு படம் ரிலீஸ் பண்றாருன்னா ரொம்ப பெரிய விஷயம்.
அப்படித்தான் இந்த
பூரி ஜகன்நாத்தும். குறைந்த பட்சம் வருசத்துக்கு ரெண்டு முதல் மூணு படங்களை ரிலீஸ்
பன்றவரு. நானும் என்னோட நண்பர் ஒருத்தரும்
என்னடா ஆடு புழுக்கை போடுறமாதிரி எடுத்து தள்ளிக்கிட்டே இருக்காருன்னு கிண்டல் பண்ணி
கூட சிரிச்சிருக்கோம். ஆனா அவர் எடுக்குற அந்த மூணு படத்துல ஒண்ணு மெகா ஹிட்டாகவும்,
இன்னொன்னு ஆவரேஜாகவும், இன்னொன்னு தரை ரேட்டுக்கும் இருக்கும்ங்குறது வேற விஷயம். இப்டித்தான்
அவர் ரவிதேஜாவ வச்சி எடுத்த ”தேவுடு ச்சேசின மனுஷுலு” படத்துக்கு நம்பி போய் ரப்படி
வாங்கிட்டு வந்தேன்.
சரி இந்தத் தடவ
NTR ah என்ன செய்யப்போறாரோன்னு பயந்துகிட்டே போனதுக்கு, ஒரு செம சர்ப்ரைஸ். NTR ரோட
பெஸ்டே இந்தப் படம்தான். அவர யாரும் இப்டி யூஸ் பண்ணதும் இல்லை இதுக்கு முன்னால
NTR இவ்ளோ சூப்பரா நடிச்சதும் இல்லை.
ஒரு பழைய படத்துல
நம்ம சத்யராஜ் ரொம்ப கெட்ட போலீஸா நடிச்சிருப்பாரு. படம் பேரு வீரப்பதக்கம்னு நினைக்கிறேன்.
எல்லார்கிட்டயும் லஞ்சம் வாங்குவாறு. எல்லாரையும் தப்பு செய்ய விடுவாறு. கடைசி வரைக்கும்
திருந்தாமயே இருக்கும்போது, ஒரு சீன்ல கூட இருக்க ஒரு ஏட்டு ரவுடிங்களால அடிபட்டு சாக
கிடக்கும்போது “நீ ஒரு நாளாவது நல்ல போலீஸா இருந்துட்டு சாகு”ன்னு எதோ வரு பஞ்ச் வசனம்
சொல்ல அப்புறம் க்ளைமாக்ஸ்ல நம்ம சத்யராஜ் நல்ல போலீஸா மாறுவாறு.
டெம்பர்ரோட கதையும்
கிட்டத்தட்ட இதுதான். ரொம்ப மோசமான ஒரு போலீஸ் நம்ம தலைவர் NTR. யூனிஃபார்ம் போடாத
போலீஸ். பூரி ஜகன்நாத் பட போலீஸ்கள் யாருமே யூனிஃபார்ம் போடமாட்டாங்கங்குறது வேற விஷயம்.
கெட்ட போலீஸ்னா இந்த நம்மூர் படங்கள் எடுக்குறதுக்கு முன்னால ”இந்தப் படத்துல ஹீரோ
ரொம்ப கெட்டவன்”ன்னு பில்ட் அப் குடுப்பாய்ங்களே அந்த மாதிரி இல்லை. உண்மையிலேயே ரொம்ப
மோசமான கேரக்டராத்தான் உருவாக்கிருக்காங்க.
ஸ்மக்லிங்க் பண்ற
வழக்கமான வில்லனான ப்ரகாஷ்ராஜ் “என்னை விட கெட்டவனா ஒருத்தன போஸ்டிங்” போடுங்கன்னு
சொன்னதும் ”தயா”வ (NTR) அந்த ஏரியாவுக்கு போஸ்டிங்க் போடுறாங்க. ப்ரகாஷ்ராஜோட சேந்துகிட்டு
அவரோட எல்லா கெட்ட காரியங்களுக்கும் சப்போர்ட் பண்றார். இடையில காஜல பாத்து (ஹலோ அந்த
இடை இல்லப்பா) அந்தப்புள்ளை நமக்குத்தான்னு ஃபிக்ஸ் ஆயிருறாரு. அவரோட குறி எப்பவுமே
பணம் பணம் பணம்.
”நா பணம் வாங்குறதால
யாரும் சாகலை. யாரும் கற்பழிக்கப்படல. நா எதுக்கு காசு வாங்குறத நிறுத்தனும்”ன்னு தனக்கே
ஒரு ஜஸ்டிஃபிகேஷன் வச்சிட்டு சுத்திட்டு இருக்க NTR, அவரால எது நடக்கலன்னு கெட்டவரா
இருந்தாரோ அது நடந்துடவே, ஃபீல் ஆயி திருந்திடுறாரு.
NTR கூட இருக்க
கான்ஸ்டபிள் கேரக்டர் செம்ம. அவர் NTR கெட்டவர்னு தெரிஞ்சதும் அவருக்கு சல்யூட்டே அடிக்க
மாட்டாரு. அதே கடைசில NTR திருந்தி வில்லன்கள அடிச்சி பறக்க விடும்போது, NTR அடிக்கிற
ஒவ்வொரு அடிக்கும் அந்த கான்ஸ்டபிள் ஒவ்வொரு சல்யூட் அடிக்கிற சீன் தாறுமாறு. அதுவும்
க்ளைமாக்ஸ்ல வர்ற கோர்ட் சீன் கொடூரம். யாருமே எதிர்பார்த்துருக்க மாட்டாய்ங்க.
NTRக்குள்ள இப்டி
ஒரு நடிகர் ஒளிஞ்சிட்டு இருக்கதே இப்பதான் தெரியிது. ஒவ்வொரு சீனும் சும்மா பின்னி
பெடல் எடுத்துருக்காரு. மொத்த படத்தையும் carry பண்ணிட்டு போறதே அவர் ஒருத்தர்தான்.
என்னைப் பொறுத்த அளவு அவரோட பெஸ்ட் இது தான்.
படத்துல ப்ரம்மானந்தம்
இல்லாத குறைய தீத்து வைக்கிறது வில்லன் ப்ரகாஷ்ராஜ்தான்.
நாய குளிப்பாட்டி நடுவீட்டுக்குள்ள வச்சாலும் அது திரும்ப நடுரோட்டுக்கு ஓடிரும்னு
சொல்ற மாதிரி பழைய தாதா கேரக்டர விட்டுட்டு கொஞ்ச நாளா நல்ல நல்ல ரோலா பன்னிட்டு இருந்த்வர,
திரும்ப பூரி ஜகன்நாத் தரை லோக்கல் வில்லனா ஆக்கிவிட்டாரு. அதுவும் அவரோட கெட்டப்ப
பாக்கனுமே. சாக்கடையில அடைப்பெருக்க போறவங்க மாதிரி பேண்ட்ட போட்டு அத முக்கால மடிச்சி
விட்டுக்கிட்டு பாக்கவே கண்றாவிகா உந்தி.
பஞ்ச் டயலாக் எழுதுறதுல
மட்டும் தெலுங்கு படங்களை அடிச்சிக்க முடியாது. ப்ரகாஷ்ராஜ் : உள்ள என்னோட ஈகோ ஹர்ட்
ஆவுதுடா.. NTR : உனக்கு ஈகோ உள்ள தான் இருக்கு. எனக்கு ஈகோ சுத்தி wifi ல இருக்கும்பாரு.
அப்புறம் ஒரு சீன்ல அவர் ரவுடிங்கள அடிக்கும்போது அவர் உடம்புலருந்து wifi signal வர்ற
மாதிரி காமிக்கிறாய்ங்க. ஆத்தாடி.
அனூப் ரூபன்ஸ்ங்குறவர்
மியூசிக்ல அஞ்சி பாட்டுமே சூப்பர். லெமூரியா கண்டத்தோட வழக்கொழிஞ்சி போன மணி ஷர்மா
மீண்டும் இந்தப்படத்துக்கு BGM மட்டும் போட்டிருக்காரு. பூரி ஜகன்நாத் ஃபுல் பார்ம்.
ஸ்க்ரீன்ப்ளே, டயலாக் எல்லாமே தாறுமாறு. அவரோட கவுண்ட்ல வருஷத்தோட சூப்பர்ஹிட் படத்த குடுத்துட்டாரு. அடுத்து
ஒரு ஆவரேஜ், ஒரு தரைமொக்கை கண்டிப்பா உண்டு. உசாரைய்யா உசாரு.
2 comments:
நல்ல விமர்சனம். ஹீரோயின் பத்தி ஒரே ஒரு வரி தானா..?
கிளைமேக்ஸ் கோர்ட் சீன்லாம் , எனக்கே அதிர்ரச்சியாகிடுச்சிணா . வழக்கமான தெலுங்கு படங்கள்ல இதெல்லாம் வைக்கமாட்டானுங்க . ஆனா பூரி ,வச்சி பட்டாசு கிளப்பிட்டாரு .சரி ,தலைவரோட 8 பேக் பத்தி எதுவுமே சொல்லல ???
Post a Comment