மற்ற நடிகர்களிலிருந்து ரஜினியை வேறுபடுத்திக்காட்டுவது மற்றவர்களைக் காட்டிலும் ரஜினி மக்களிடத்தில் எவ்வாறு சென்று சேர்ந்திருக்கிறார் என்பதே. அவர் உடலின் ஒவ்வொரு பகுதியுமே ஒரு டெம்ப்ளேட். ரஜினிக்கான அடையாளம் அவரது முகம் மட்டுமல்ல. தலைமுடி முதல் பாதம் வரை ஒவ்வொரு பகுதியிலும் ரஜினியைக் கண்டறிய முடியும்.
முகத்தைக் காட்டாமல், யார் என்று சொல்லாமல் ஒருசில கோடுகளில் அது ரஜினி என்பதை உணர்த்த முடியும்.
சாதாரணமாக முகத்தின் நெற்றிப்பகுதியை நேராக வரையாமல் ஒரு Sine wave வைப் போல வரைந்தால் அது ரஜினி.
அதே நெற்றிப்பகுதியில் இரண்டு கற்றை முடி தொங்குவதைப் போல வரைந்தால் அதுவும் ரஜினி.
வாயில் சிகரெட்டை நேராக வைக்காமல் பக்கவாட்டில் வைத்திருந்தால் அது ரஜினி.
வெறும் கழுத்தில் ருத்ராட்சத்தைக் மட்டும் காண்பித்தால் அது ரஜினி.
கையில் ஒரு செப்புக் காப்பைக் காண்பித்தால் அது ரஜினி.
நான்கு விரல்களை மடக்கி "ஒரு தடவ சொன்னா" என ஒரு விரலைக் காட்டினாலும் ரஜினி.
மூன்று விரல்களை மடக்கி பாபா முத்திரையைக் காட்டினாலும் ரஜினி.
ஷூவிற்குள் Pant இன் செய்யப்பட்டிருந்தால் அது ரஜினி.
ஒரு காலை மடக்கி மற்றொறு காலின் பின்னே வைத்து நின்றால் அது ரஜினி.
இரண்டு காலயும் லேசாக அகட்டி பாக்கெட்டுக்குள் கை விட்டு நிற்பதைப் போல வரைந்தால் அதுவும் ரஜினி.
தலையை சீப்பால் சீவாமல் கையால் கோதிவிட்டால் அதுவும் ரஜினி.
அன்றாடம் ரஜினியை மக்களுக்கு ஞாபகப்படுத்த இப்படி ஏராளமான விஷயங்கள் உள்ளன. அதுதான் அவருக்கான மார்க்கெட். மக்களிடத்தில் அவரிடைய ரீச். வேறு எந்த நடிகரையும் இப்படி அடையாளப்படுத்த முடியாது.
அதுமட்டுமல்லாமல் ஒரு திரைப்படத்தில் கதை, திரைக்கதையெல்லாம் தாண்டி கதாநாயகனின் அறிமுகக் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வைத்ததும் ரஜினியின் டெம்ப்ளேட் தான்.
திரையரங்கத்தில் உள்ள பார்வையாளர்கள் அனைவரையும் உற்சாகத்தில் கூச்சலிடவைக்க அவரவர் என்னென்னவோ செய்தும் வேலைக்காகல் போகிறது. ஆனால் ரஜினியைப் பொறுத்தவரை அவர் எதுவுமே செய்யத் தேவையில்லை. அவரின் கை மட்டுமோ அல்லது கால் மட்டுமோ திரையில் காண்பிக்கப்பட்டால் போதும்.
அப்படிப்பட்ட ரஜினியின் டெம்ப்ளேட்டுகளால் உருவான, டெம்ளேட்டுகளை உருவாக்கிய அண்ணாமலையின் 30 ஆண்டு!!!
3 comments:
நீங்கள் சொல்வது அனைத்தும் உலக உண்மை. ரஜினி என்னும் மந்திர எழுத்தில் இந்த உலகம் வசப்பட்டு விட்டது. தலைவா.
நன்றி முத்து சிவா.
100% unmai Muthu siva
சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் அண்ணாமலை ரிலீஸ் ஆன போது ரசிகர்களின் உற்சாகமும், கட்டுக்கடங்காத கூட்டமும். தியேட்டரில் ஒரு போர்டில் அடுத்த 15 நாட்களுக்கு தேதி வாரியாக ஹவுஸ் புல் என்று முன்பதிவு ஆன விவரம் குறித்து தொங்க விட பட்டு இருந்ததும்...
இப்போது நினைத்தாலும் பிரமிப்பாக இருக்கிறது.
முப்பது ஆண்டுகள் முடிந்த பிறகும் இன்னும் ரஜினி சூப்பர் ஸ்டார்.
Post a Comment