Friday, July 23, 2010

அழகுராஜா சைக்கிள் கடை


Share/Bookmark
குறிப்பு: இந்த பதிப்பில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே.... யார் மனதையும் புண்படுத்துவத்ற்காக அல்ல....
இடம் : ஆல் இன்
ஆல் அழகுராஜா சைக்கிள் கடை

கவுண்டர் : இங்கே வந்திருக்கின்ற ஆல் ஆம்பளைஸ் அண்டு பொம்பளைஸ்.... இந்தியாவுலயே.... ஏன் இந்த world லயே சைக்கிள் கடைக்கு interview வச்சி ஆள் எடுக்குறது ஒரே கடையில தான்.. அது நம்ம கடையில தான்... டேய் பேரிக்கா மண்டையா... இன்னிக்கு எத்தனை பேருடா வந்துருக்காய்ங்க..

செந்தில் : ஒரு நாலு பேரு வந்துருக்காய்ங்கண்ணே...

கவுண்டர் : சரி அவனுகள ஒருத்தன் ஒருத்தனா அனுப்பு..

முதல்ல வர்றது நம்ம இளைய தளபதி விஜய்... போக்கிரி ஸ்டைலுல chair ah நாலு சுத்து சுத்திட்டு உக்காருராறு.

கவுண்டர் : அய்யா என்ன பண்ணீங்க...
விஜய் : ஸ்டைலு....
கவுண்டர் : ஓ....... இதுக்கு பேருதான் ஸ்டைலா... இப்புடித்தான் ஊருக்குள்ள
நெறைய பயலுக இந்த plastic chair ah தூக்கி சுத்துறது, இந்த காலர்க்குள்ள சிகரட்ட வச்சி வாயால கவ்விஇழுக்குறது, கர்ச்சீப்ப தொடையில கட்டுறது இதயெல்லாம் ஸ்டைலுன்னு சொல்லிக்கிட்டு திரியிறானுக....ஆமா உன் பேரு
என்ன?

விஜய் : தமிழ்நாட்டுல என்ன பாத்து பேர் என்னனு கேட்ட மொத ஆள் நீ தான்....

கவுண்டர் : ஏன் மத்தவங்க எல்லாம் உன்ன பாக்காம தலைய குனிஞ்சிகிட்டு பேருஎன்னன்னு கேட்டாங்களா? பேர சொல்றா நாயே...

விஜய் : என் பேரு டாக்டர் விஜய்..
கவுண்டர் : ஓஓஓஒ....... அய்யா என்ன படிச்சிருக்கீங்க?...

விஜய் ; பத்தாவது பெயிலு.....

கவுண்டர் : பண்ணாட பயலே.... பஞ்சர் ஒட்ட வந்த நாயிக்கு பேச்ச பாரு.. என்ன வேல தெரியும் ஒனக்கு...

விஜய் : நா நல்லா பன்ச் லயலாக் பேசுவேங்கண்ணா.. கேக்குரீங்களா... "நா
அடிச்சா அடி விழாது.. இடி விழும்"

கவுண்டர் : இந்தா பக்கத்துல நிக்கிறானே கீரிப்புள்ள தலையன்... இவன்
கடிச்சான்னா கடி விழாது.... ஒரு கிலோ கறிய எடுத்துருவான்...

செந்தில் : வொவ்..... வவ்வவ்.....

கவுண்டர் : பாத்தியா.... ஒழுங்கா போயி அந்த ரிம்ம தொடை.... இந்த மாதிரி
வசனமெல்லாம் இதுவே கடைசி தடவையா இருக்கனும்...

விஜய் : ஏய்....நீ தொடச்சா தூசு.. நா தொடச்சா மாஸ்சு...

கவுண்டர் : வக்காளி....வந்தன்னா எட்டி குறுக்கு மேலயே மிதிச்சிபுடுவேன்...
பல்சர் தலையா... ஒழுங்கா தொடைடா.... டேய்.... என்ன பார்டி கூட்டிட்டு வந்துருக்க நீ.... இவனுகளால என் சைக்கிள் கடை பேரே கெட்டுரும் போலருக்கு,,,,,

செந்தில் : கோச்சிக்காதீங்கண்ணே... அடுத்த பார்டி நல்ல ஆளா மாட்டுவான்....அந்தா வர்றாரு பாருங்க.

கவுண்டர் : யாருடா இவன்... சைக்கிள் கடை வேலைக்கு கோட் சூட், கண்ணாடி எல்லாம் போட்டுக்கிட்டு வர்ரான்...

செந்தில் : அவருதாண்ணே அஜித்.... அவரு எப்பவுமெ அப்புடித்தாண்ணே.... எங்க போனாலும் இந்த கெட் அப்புல தான் போவாரு..

(அஜித் வர்ராறு)

கவுண்டர் : சார்... உக்காருங்க சார்...யார் சார் நீங்க?

அஜித் : 100 கோடி பேர்ல ஒரு ஆள்.. 6 கோடி பேர்ல மொத ஆள்....

கவுண்டர் : டேய் ஸ்ப்ரிங் மண்டையா... 6 வருசத்துக்கு முன்னாடி எழுதுன வசனத்த இன்னும் புள்ளி விவரம் கூட மாறாம அப்புடியே பேசிக்கிட்டு திரியிரியா? இப்ப இந்தியாவோட ஜனத்தொகை என்னன்னு தெரியுமாடா? 100 கோடி 120 கோடியாவும் 6 கோடி 10 கோடியாவும் ஆயி பல மாசம் ஆயிருச்சி.... இப்ப என்ன ஜனத்தொகைன்னு யாருக்குமே தெரியாது... இன்னொருக்கா இந்த வசனத்த எங்கயாச்சும் பேசி கேட்டேன்...நாக்க இழுத்து வச்சி கடிச்சிபுடுவேன்... ஆமா எங்க வந்த?

அஜித் : அண்ணே எதாவது வேல இருந்தா போட்டு குடுங்கண்ணே...

கவுண்டர் : ஓ....வேலையா? அந்த தெரு மொனையில ஒரு ரெண்டு மாடி கட்டடம் இருக்குல்ல... அதுல ஒரு bank வச்சி தர்ரேன்... அத வச்சி நீ பொழச்சிக்க..

அஜித் ; ரொம்ப நன்றிண்ணே!!!

கவுண்டர்: (Hi-pitch) நான்சென்ஸ்... இது என்ன employment exchange nu
நெனச்சியா.... எதாவது வேல போட்டு குடுக்குறத்துக்கு... மேல படிச்சி
பார்... "ஆல் இன் ஆல் அழகுராஜா" சைக்கிள் கடை"... இங்க சைக்கிள் வேல மட்டும் தான் குடுக்க முடியும்....பன்சர் ஒட்ட தெரியுமா?

அஜித் : ஒரளவு தெரியும்ண்ணே...

கவுண்டர் : ஒரளவுன்னா... பாதி ஒட்டி பாதி ஒட்டாம குடுத்துடுவியா? போய் அந்த சைக்கிள் வீலுக்கு பஞ்சர் ஒட்டு போ...

அஜித் : அண்ணே...கார் ன்னா எனக்கு ரொம்ப புடிக்கும்ணே... அதுனால மொத
மொதலா எதாது கார் டயர குடுத்தீங்கன்னா.......

கவுண்டர் : (அஜித் பின்னந்தலைய புடிச்சி) டேய்...McLaren தலையா.. கார் டயர் பஞ்சர் ஒட்டுவதற்கு இது மூஞ்சி அல்ல..இது சைக்கிள் டயர் பஞ்சர் ஒட்டத்தான் லாயக்கு.....போ..

அஜித் : ஏய்......அது...................(punch)

கவுண்டர் : ஓ... அதுவா... கக்கூஸ் பின்னாடி இருக்கு...நல்லா சுத்தமா பொயிட்டு வந்து வேலய ஆரம்பி...ஏன் கடையில இருக்கவங்க சுத்தமா இருக்கனும்.. அதான் முக்கியம்... அப்புறம் அங்க தண்ணி லாரி தலையன் வீல் தொடச்சிக்கிட்டு இருப்பான்... அவன் வேல செய்யலன்னா...

அஜித : உங்ககிட்ட சொல்லட்டுமாண்ணே?

கவுண்டர் : வேணாம்... நீ கொஞ்ச நேரம் அவன்கிட்ட பேசு... உன் தொல்லை தாங்க முடியாம அவனே வேல செய்ய ஆரம்பிச்சிடுவான்...ச்ச இவனுகளோட ஒரே குஸ்டமப்பா.....

செந்தில் : அப்புறம் அண்ணே.... ரெண்டு பேர வெற்றிகரமா வேலைக்கு
சேத்துட்டீங்க.... ஏன் கமிஷன வெட்டுரீங்களா...

கவுண்டர் : ஆமா...இவரு IBM la ரெண்டு software இஞ்ஜினியர refer பண்ணி வேலைக்கு சேத்துருக்காரு... கமிஷன் வேனுமாம்... இந்தா நாயே ரெண்டு ரூவா நாப்பது காசு... இதான் உன் கமிஷன்... எடுத்துட்டு போயி பொறை வாங்கி சாப்புடு... மசால் வடை தலையா....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

8 comments:

Ilavarasan said...

hahahahahahahahahhaha.. ROTFL.. thaarumaaru machi.. Best of ur blog da.. second part eluthda simbu, vishal, dhanush vachu...

உமர் | Umar said...

அடுத்த interview எப்பன்னு சொல்லுங்க, வேடிக்கை பாக்க வர்றோம்!

எங்க கடையில interview வச்சி ஆள் எடுக்குறது கெடையாதுங்க. அதுனால வீல் நிமித்த ! பெண்டெடுக்க! சைக்கிள்களை இங்கே விடவும்!

Anonymous said...

sirichu sirichu vayiru valikkuthunee .. hehe

சி.பி.செந்தில்குமார் said...

அருமையான் காமெடி

முத்துசிவா said...

//Ila

Sure machi :)

//கும்மி

அடுத்த interview , வர்ற செவ்வாய் கிழமைண்ணே... கண்டிப்பா வந்துருங்க..

R.Gopi said...

தலைவா......

இன்னும் நிறைய காமெடி பீஸுங்க இருக்குங்கோ....

மறக்காம அவிங்களையும் இண்டர்வியூ பண்ணுங்ணா....

Ramesh said...

செம காமெடி..

HERITAGEBRAND said...

HAHAHAAAAA,,, REALLY I LAUGHED WHILE READING THIS ARTICLE IN MY OFFICE,,,,

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...