Saturday, October 2, 2010

எந்திரன் First Day -First Show -First Row


Share/Bookmark

காலைல 5.30 மணிக்கு அலாரம் அடிக்காம எந்திரிச்சது இன்னிக்கு தான்..சட்டுபுட்டுன்னு கெளம்பி சத்யம் தியேட்டருக்குஒரு 6.30 மணிக்கு போனா, ஊர்ல உள்ள மொத்த பேரும் அங்க இருக்காய்ங்க. என்ன மாதிரியே எல்லரும் அப்புடிதான் எந்திரிச்சிருப்பாங்க போலருக்கு.... ஒருத்தன் அங்க வந்து தான் பல்லே வெளக்குனாருன்னா பாருங்களேன்.. சத்யம்ல வழக்கமா வக்கிற பெரிய size banner la தலைவர பாக்கலாம்னு ஆசையா போன எனக்கு மிஞ்சுனது கடுப்பு தான்... இன்னும் அந்த பழைய பாஸ் (எ) பாஸ்கரன் banner ah மாத்தாம வச்சிருந்தாய்ங்க...ரசிகர் மன்றத்துல ஏற்பாடு செஞ்சிருந்த தாரை தப்பட்டைகள் கிழிய, அங்க சில ரசிகருங்க குத்தாட்டம் போட்டுக்கிட்டு இருந்தாங்க... 7.30 மணிக்கு show. டிக்கெட் வச்சிருந்த என் நண்பேன் வராததுனால, தியேட்டருக்கு எதுத்தாபுல நின்னு சுத்தி சுத்தி வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தேன்.

"தம்பி" அப்புடின்னு ஒரு குரல் கேட்டு side la பாத்தேன்...நாப்பது வயசு உள்ள ஒருத்தர் பக்கத்துல நின்னாரு.

"சொல்லுங்கண்ணே"

"தம்பி எக்ஸ்ட்ரா டிக்கெட் எதாவது இருக்கா.. எவ்வளவா இருந்தாலும் பரவால்ல"

"அய்யோ... இல்லண்ணே... எனக்கே என் frineds ரொம்ப கஷ்டப்பட்டு வாங்குனாங்கண்ணே... எக்ஸ்ட்ரா டிக்கெட் எதும் இல்லண்ணே...வேணும்னா காசி, கமலா ல ட்ரை பண்ணுங்கண்ணே... வாய்ப்பு இருக்கு"ன்னேன்..

"அங்கல்லாம் பொய்ட்டு தாம்பா இங்க வந்துருக்கேன்" ன்னாறு...

"அண்ணே நீங்க எங்களுக்கும் மே....ல இருக்கீங்க"ன்னு சொல்லிட்டு அங்கருந்து நகந்துட்டேன்... "

மணி 7.05.. இன்னும் பசங்க வரல... அங்க நடந்த சில அளப்பறைகல மொபைல் ல வீடியோ எடுத்துக்கிட்டு இருந்தேன்... அப்ப ஒரு Bajaj caliber வந்து ரோடு ஓரமா நின்னுச்சி... அத ஓட்டிகிட்டு வந்தவருக்கு ஒரு 55 வயசு இருக்கும்.. பின்னாடி இருந்தவருக்குஒரு 50 வயசு இருக்கும். ரெண்டு பேரும் தியேட்டர்ல உள்ள கூட்டத்த ஏற இறங்க ஒரு தடவ பாத்துட்டு பின்னடி இருந்த என்ன பாத்து

"தம்பி... 7 மணிக்கு ஒரு ஷோ இருக்குல்ல?"ன்னாங்க...

"ஆமா சார்... 7 மணிக்கு, 7.30 ஒரு ஷோ... கண்டினுயஸா இருக்கு சார்" ன்னேன்..

" ச்ச.. நானும் எல்லா ரசிகர் மன்றத்துலயும் சொல்லி வச்சிருந்தேன்பா...கடைசில எதுலயும் கெடைக்கல... ஏதாவது ரிசல்ட் தெரிஞ்சிச்சாப்பா.... படம் எப்புடி இருக்காம்... யாராவது பாத்தவங்க சொன்னாங்களா?"

"படம் சூப்பரா இருக்காம் சார்...லண்டன்லருந்து என்னோட friend oda friend கால் பண்ணாறாம் சார்" ன்னேன்..

"அப்பாடா... காலைலயே ஒரு நல்ல வார்த்தை சொன்னப்பா.. ரொம்ப சந்தோஷம்... என் பையன் கூட ஆஸ்திரேலியால இன்னிக்கு பாத்துட்டான், ஆன அவன்ட இருந்தும இன்னும் ரிசல்ட் தெரியல... சரி படம் எப்புடி.. ரஜினி எடுத்துட்டு போற மாதிரி இருக்காஇல்ல ஷங்கர் எடுத்துட்டு போற மாறி இருக்கா..?"

"சார் என்ன சார் இப்புடி கேக்குறீங்க...லண்டன்லருந்து ஒருத்தர் கால் பண்ணி சொல்றாருன்னா அது தலைவரால தான் சார்" ன்னேன்..

"இதான் வேணும்பா.. ரொம்ப சந்தோஷம்... நீங்க பாத்துட்டு ஒரு தடவ எனக்கு கால் பண்ணி சொல்லுங்க... படம் எப்புடி இருக்குன்னு" ன்னு சொல்லுஅவரு மொபைல் நம்பர குடுத்துட்டு கெளம்பிட்டாரு. எனக்கு அப்டியே புல் அரிச்சிருச்சி..இந்த வயசுல இப்புடியா...அதும் காலைல 7 மணிக்கே...தலைவரால் மட்டுமே, தலைவருக்காக மட்டுமே நடப்பவை இவையெல்லாம்..ஆறிலிருந்து அறுபது வரை இது போன்ற ரசிகர்கள் தலைவருக்கு மட்டுமே...

7.30 மணிக்கு பசங்கலாம் வந்தோன உள்ள போனோம்.... எல்லாரும் 1st day 1st show பாக்கதான் ஆசப்பட்டுவாங்க... ஆனா உள்ள போன அப்புறம்தான் தெரிஞ்சிது நாங்க 1st row லயே உக்கந்து படம் பாக்கபோறோம்னு...

முதல் காட்சியிலிருந்தே வித்யாசம்.. நிறைய வியப்பு...பிரமிப்பு...தலைவரின் நடிப்பில் இன்னொரு பரிணாமம்.. படம் வெளிவருவதற்கு முன்,ரோபோ அந்த படத்தின் copy, இந்த படத்தின் copy என்று சொன்னவர்கள் இனி வாய் திறக்க முடியாதபடியான திரைக்கதை. நெற்றிக்கண் படத்தில் இருந்த அந்த ரஜினியின் அதே வில்லத்தனம், தில்லு முல்லில் இருந்த அதே குறும்பு.. ஜானியில் இருந்த அதே துடிப்பு... அத்தனை காட்சியிலும் தலைவர் ஜொலிக்கிறார் ஷங்கரின் கைவன்னத்தில்.

படத்தின் கதை? சாரிங்க... அது ஷங்கரோட கதை.. நா சொன்னா நல்லாருக்காது.... நீங்களே பாத்து தெரிஞ்சிக்குங்க... இதுக்கு மேல பெஸ்ட்டா எடுக்க முடியாது.வேறெந்த படமும் இதுக்கு மேல பெஸ்ட்டா இருக்க முடியாது.

மொத row la உக்கார்ந்து பாத்ததுனால படம் முடியும் போது கழுத்து bend ஆயிருச்சி.. எந்திரிச்சி நிமித்துனாலும் கழுத்து மட்டும் சாய்ஞ்சபடிக்கே இருக்கு.

முழு திருப்தியோட படம் பாத்துட்டு வெளில வந்தோம். அப்ப அடிவயிற்றிலே ஒரு சிறிய மாற்றம்... என்ன? இயற்கை அன்னை வந்துருக்காங்க... மூணு மணி நேரம் படத்த வெறிக்க வெறிக்க பாத்ததுல உச்சா போக மறந்துட்டேன்.. செரி rest room போயிட்டு, போயிட்டு போவோம்ன்னு போனேன். உள்ள போயி வாஷ் பேசின் பக்கத்துல நிக்கும் போது என் தோள்ல ஒரு கை விழுந்துச்சி.. திரும்பி பாத்தா என்கிட்டடிக்கெட் கேட்ட அந்த அண்ணேன்.

" தம்பி டிக்கெட் வாங்கிட்டேன்.. வெளில ஒருத்தரு குடுத்தாறு...600 ருவா தான்" ன்னாறு..

"ஆ... ஆ... ஆறுனூருவாதானாண்ணே... ரொம்ப சந்தோஷம்ணே"ன்னு வெளிய வந்து காலைல என்டபோன் பண்ண சொன்னவருக்குphone பண்ணி சொன்னேன்... " சார்... படம் நிஜமாவே தாரு மாறு சார்.... தல பிண்ணிருக்காரு."

"தம்பி..ரஜினி fan ங்குறதுக்காக சொல்லாதீங்க... ஷங்கருக்காக சொல்லதீங்க.. உண்மைலயே படம் எப்புடி இருக்கு?"ன்னாறு

"இதுல பொய் சொல்ல என்ன சார் இருக்கு... படம் 100 நாள் ஓடும் சார்.. இங்க இல்ல US லயே நூறு நாள் ஒடும்" ன்னேன்

"அப்பா.... இந்த நல்ல செய்தியை சொன்ன நீ வாழ்க... நின் குலம் வாழ்க.. உன் புகழ் ஓங்குக" ன்னு சொல்லிட்டு வச்சாரு,எனக்கு திரும்பவும் புல்லரிக்க ஆரம்பிச்சிருச்சி...

திரையிடப்படும் முன்பு உலகத்தையே திரும்பி பார்க்க வத்த இந்த ரோபோ, இனி அனைவரயும் விரும்பி பார்க்கவைக்கும்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

மதுரை சரவணன் said...

//திரையிடப்படும் முன்பு உலகத்தையே திரும்பி பார்க்க வத்த இந்த ரோபோ, இனி அனைவரயும் விரும்பி பார்க்கவைக்கும்.//

ramas said...

Correcta sonna Siva...
"நெற்றிக்கண் படத்தில் இருந்த அந்த ரஜினியின் அதே வில்லத்தனம், தில்லு முல்லில் இருந்த அதே குறும்பு.. ஜானியில் இருந்த அதே துடிப்பு... அத்தனை காட்சியிலும் தலைவர் ஜொலிக்கிறார் ஷங்கரின் கைவன்னத்தில். " - I too say the film will run for 100 days only for Rajni and may be few more days for the animations...

One honest comment - Padatha vida padatha paaka vantha rasigar perumakkal thaan entertainment'la kalakitaanga... Thalaivarooda rasiga perumakalluku 100/100... :)

கழுகு said...

//படம் வெளிவருவதற்கு முன்,ரோபோ அந்த படத்தின் copy, இந்த படத்தின் copy என்று சொன்னவர்கள் இனி வாய் திறக்க முடியாதபடியான திரைக்கதை//


ஆமாம் சிவா, சொல்லுறவங்க 1008 சொல்லுகிட்டே இருப்பாங்க, அப்படி பார்த்தா எல்லா படமும் எதாவது ஒரு படத்தோட காப்பிதான்.

ரசிக்க தெரியாதவங்க.

தமிழ் மொழி தெரியாத ஒரு வடமாநில நண்பர், படம் பார்த்த பின் சொன்ன ஒரே வாக்கியம்,

" இது இந்திய சினிமாவின் அடையாளம் "

இது ஒன்றே போதும்.

Anonymous said...

unnai madhiri muttal rasigan irukkira varaikkum indha madhiri aayiram cinema eduthalum odum.

முத்துசிவா said...
This comment has been removed by the author.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...