Monday, January 3, 2011

ஒரு பதிவரின் அவசர பதிவுக்கு ஆப்பு


Share/Bookmark "கண்ணால பாக்குறதும் பொய் ,Blog la படிக்கிறதும் பொய் , நேரா போய் பாக்குறதே மெய்" ங்குறத நா இன்னிக்கு தான் புரிஞ்சிகிட்டேன்.சில மிகைப்படுத்தப்பட்ட விமர்சனங்களால, ஒரு இயக்குனர பத்தி ஒரு பதிவர் சில நாட்களுக்கு முன்னாடி சில தவறான கருத்துக்கள தெரிவிச்சிருந்தாரு.அதற்கு மறுப்பு தெரிவிக்கவே இந்த பதிப்பு.

அந்த இயக்குனர் வேற யாரும் இல்லை. நம்ம சசிகுமார் தான். அந்த பதிவர் வேற யாரும் இல்ல, நான் தான். சில காரணங்களால ஈசன் படத்த உடனே பாக்க முடியல.

தியேட்டர்ல மொத ஷோ படம் ஓடிக்கிட்டு இருக்கும் போதே சுட சுட விமர்சனம் எழுதுறதா நெனச்சிகிட்டு கருமாந்த்ரமா எழுதுற சில பதிவர்கள் இங்க இருக்காங்க. (பெயர் சொல்ல தேவையில்லன்னு நெனக்கிறேன்) அவங்களோட விமர்சனங்கள படிச்சேன். படம் பைசாவுக்கு தேறாதுங்கறதே அந்த விமர்சனங்கள்லேருந்து தெரிஞ்சிது. ஈசன் படத்தை பத்தின இது மாதிரியான விமர்சனங்களினால, சசிகுமாரும் எல்லா இயக்குனருங்க மாதிரி ஆயிட்டாரோன்னு நெனச்சி, போன வாரம் "முதல் வெற்றிப்பட இயக்குனர்கள்" ங்குற பதிவுல சசிகுமார பத்தியும் போட்டுருந்தேன்.

நேத்து ஈசன் படம் பாத்தப்புறம் தான், நா படிச்ச விமர்சனம் தான் பைசாவுக்கு தேறாதுங்கறத தெரிஞ்சிகிட்டேன். என்னோட அந்த பதிவுல சசிகுமார இழுத்தது ரொம்ப  தப்பு. அதுக்கு மன்னிப்பு கேக்குறதுக்காகவே இந்த பதிவு. மத்தபடி நா பொதுவா  வெளியிட்ட கருத்துக்கள்ல எந்த மாற்றமும் இல்லை.

சுப்ரமணிய புரத்தை விட இந்த படத்துல சசிகுமாரோட இயக்கத்துலயும், திரைக்கதையிலயும் நல்ல முன்னேற்றம். படத்துல நடிச்ச எல்லாருமே ரொம்ப பழக்கப்படாத நடிகர்களா இருக்கது படத்துக்கு பெரிய ப்ளஸ். வைபவ்க்கு நடிப்பை வெளிப்படுத்துற மாதிரி ஒரு காட்சியும் இல்லை. அவரு அப்பாவா வர்றவருக்கு அந்த வாய்ப்பிருந்தும் அவர நடிக்க வைக்க முடியல. இது மட்டும் தான் இந்த படம் முடியும் போது குறையா தெரியுது.

சமுத்திரகனிய பத்தி சொல்லியே ஆகனும், அவரு ஒரு நல்ல இயக்குனருங்கறத தாண்டி மிக சிறந்த நடிகர்ங்கறது இந்த படத்த பாத்தா தெரியும்.ரொம்ப இயல்பான நடிப்பு. ஹீரோவா நடிக்க எந்த விதத்துலயும் குறைஞ்சவர் இல்லை. அவரோட கதாபத்திர அமைப்பும் மிக அருமை. ஜேம்ஸ் வசந்தனோட இசைல எல்லா பாட்டுமே நல்லா தான் இருக்கு.குறிப்பா ஃப்ளாஷ்பாக் ல வர்ற "கண்ணில் அன்பை சொல்வாளே" பாட்டு ரொம்ப சூப்பர்.

படத்துல சில pub சீன்கள வெட்டித்தள்ளிட்டாங்கன்னு நெனக்கிறேன். படம் இப்பொ சிக்குன்னு சிறுத்த குட்டி மாத்ரி சூப்பரா இருக்கு. க்ளைமாக்ஸ் ல சுப்ரமணியபுரம் க்ளைமாக்ஸ்ல நமக்கு என்ன feel இருந்துதோ, அதைவிட அதிகமாவே இருக்குங்கறது உண்மை

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

Azar said...

உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடுச்சு இருக்கு.

Azar said...

உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடுச்சு இருக்கு.

சக்தி கல்வி மையம் said...
This comment has been removed by the author.
Philosophy Prabhakaran said...

அந்த பதிவர் யாருன்னு சொல்லவே இல்லையே...

சாமக்கோடங்கி said...

பாராட்டுகள்..

ஆனாலும் சுப்ரமணியபுரம் அளவுக்கு இந்தப் படம் இல்லை என்பதே உண்மை.. ஆனாலும் புகழ்ச்சி வலையில் விழாத நேர்மையான உழைப்பு தான் இந்தப் படத்தில் தெரிகிறது. கதைக்கரு வித்தியாசமாக இருந்தது..

ஆனாலும் ஏதோ ஒரு குறை படத்தில்..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...