Monday, May 9, 2011

ஷங்கர், KSR தொழில மாத்திருங்க... விஜய், அஜித் ஊர விட்டு ஓடிருங்க..


Share/Bookmark

இன்னிக்கு காலைல எங்க அம்மா "இன்னிக்கு குரு பெயர்ச்சிடா.. கோயிலுக்கு பொய்ட்டு வா" ன்னு சொன்னதுனால, காலைல பட் ரோடு சிவன் கோயிலுக்கு போயிட்டு ரிட்டன் ராமாபுரத்துக்கு வந்துகிட்டுருந்தேன். Trade சென்டர்கிட்ட வரும்போது திடீர்னு ஒரு மாற்றம். என்னடா எப்பவும் வெயில் மேலேருந்து தான அடிக்கும் இப்ப side லருந்து அடிக்துதேன்னு பாத்தா, நம்ம பவர் ஸ்டார் சீனிவாசனோட லத்திகா 50 வது நாள் விழாவோட பெரிய பெரிய பேனருங்க.. நம்மாளு வித வித மான கெட்டப்புல 32 பல்லும் தெரியிற மாதிரி ஒரு 25 பேனர்ல Trade சென்டர் full ah சிரிச்சிகிட்டு இருந்தாறு. (தெலுங்குல பவர் ஸ்டார் பவன் கல்யாண். அவருக்கு இந்த விஷயம் என்னிக்கு தெரியுதோ அதான் அவருக்கு கடைசி நாளா இருக்கும்)

இத பாத்ததும் நா, அய்யோ அம்மான்னுட்டு ஆக்ஸிலேட்டர வேகமா முறுக்குறேன்... ஆனா என் வண்டி அங்கருந்து நகர மாட்டேங்குது. நானும் லக்ஷ்மி ஸ்டார்ட்...லக்ஷ்மி ஸ்டார்ட்...ன்னு கத்துறேன் கதறுறேன்... வண்டி start  ஆகவே இல்ல. அப்புறம் கீழ இறங்கி அந்த கொடுமைய ரெண்டு photo எடுத்துகிட்டு வந்து start பண்ணோன தான் நம்மாளு ஸ்டார்ட் ஆனான். என்னடா அம்மா இன்னிக்கு குரு பெயர்ச்சி ன்னு சொன்னிச்சி ஆனா இங்க சனி பெயர்ச்சி நடக்கும் போலருக்கேன்னு நெனச்சிகிட்டேன்
நம்மாளுக்கு ஒரு படம் ரிலீஸ் ஆனதே பெருசு. இதுல அடுத்த படமான ஆனந்த தொல்லை ஆடியோ ரிலீஸ் வேற.. இருக்குறவியிங்க தொல்லை பத்தாதுன்னு இவியிங்க தொல்லை வேற.. எங்கருந்து கெளம்புறாயிங்கன்னே தெரியல. எங்காளு JKR பரவால போலருக்கு. வந்தாரு ரெண்டு படம் நடிச்சாரு MP ஆனாரு.. செண்ட் அடிச்சிட்டு செட்டில் ஆயிட்டாரு...  நம்மாளு இன்னும் ஒரு ஆறு ஏழு படம் லைன்ல வேற வச்சிருக்காரு.மொதல்ல film institute la படிச்சிட்டு, நாடகத்துல எல்லாம் நடிச்சிட்டு சினிமால நடிக்க  வந்தாங்க.. அந்த படங்கள  பாத்தோம். அப்புறம் தயாரிப்பாளருங்க அவங்க பசங்கள நடிக்க வச்சாங்க. அத பாத்தோம்.அப்புறம் நடிகர்களோட மகன், மகள் லாம் நடிக்க வச்சாங்க.. அத பாத்தோம்..  அதுக்கப்புறம் டைரக்டருங்கல்லாம் நடிக்க வந்தாங்க.. அதையும் பாத்தோம்.. இப்போ டாக்டரு வக்கீலுன்னு எல்லாருமே நடிக்க வந்துட்டா தமிழ்நாட்டுல வேற வேலை செய்யிறதுக்கு யாருப்பா இருக்கா.. எங்கள பாத்தா உங்களுக்கு பாவமா இல்லையாடா...


தமிழ்நாட்டுக்கு எந்தெந்த ரூபத்துலயெல்லாம் ஆபத்து வருதுப்பா.... இன்னும் யாரு யாரெல்லாம் வரப்போறாயிங்களோ?........இவியிங்க தொல்லை தாங்க முடியாம நம்மள நாமே கடிச்சிகிட்டு தொப்புள சுத்தி 16 ஊசி போட்டுக்க வேண்டியதுதான்..

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

9 comments:

ராஜகோபால் said...

//நம்மள நாமே கடிச்சிகிட்டு தொப்புள சுத்தி 16 ஊசி போட்டுக்க வேண்டியதுதான்//

இது டூமச் இதுக்கு பவர்ஸ்டார் உங்க தொப்புள்ள உம்மா கொடுப்பார்

முத்துசிவா said...

அய்யோ... அது நா இல்லீங்க.. பவர் ஸ்டார் கேட்டா நா வெளியூர் பொய்ட்டேனு சொல்லுங்கோவ்

பொன் மாலை பொழுது said...

.//இவியிங்க தொல்லை தாங்க முடியாம நம்மள நாமே கடிச்சிகிட்டு தொப்புள சுத்தி 16 ஊசி போட்டுக்க வேண்டியதுதான்..//

Wonderful :)))

முத்துசிவா said...

எல்லா புகழும் தல கவுண்டருக்கே..:)

வீராங்கன் said...

அண்ணன் யாரும் வம்புக்கும் போகாதவர்

Anonymous said...

அழகில் சிறந்தவர் பவர் ஸ்டாரா இல்ல சாம் ஆண்டர்சனா?

ஒப்பீடு: முன் தள்ளும் பானை தொப்பை மற்றும் தேங்காய் துருவி பற்கள்.

FARHAN said...

அகில உலக பவர் ஸ்டார் நற்பணி மன்றம் சார்பாக இந்த பதிவை வன்மையாக கண்டிக்கின்றேன் ......

கொ.ப.செ
அகில உலக பவர் ஸ்டார் தலைமை ரசிகர் மன்றம்

Anonymous said...

அப்பட நன் தப்பிச்சிட்டேன் படமும் பாக்கள நந்தம்பாக்கம் பக்கமும் போகல வாழ்க பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்

தலைவருக்கு ஜே

Anonymous said...

இவனுக்கு ஏன் இந்த நாற புழைப்பு ?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...