Tuesday, March 6, 2012

அரவான் - தமிழ் சினிமாவில் ஒரு கருங்கல்!!!


Share/Bookmark
"இந்த சீன் செம்ம  காமெடிப்பா"
                 
"இந்த ஆக் ஷன் சீன் பயங்கரம்"

 "இந்த செண்டிமெண்ட் சீன் பூந்து வெளையாடிருக்காங்கப்பா"

"இந்த பாட்டு ரொம்ப நல்லாருக்குபா"

"இந்த சீன் படு விறு விறுப்பா இருக்குபா"


இந்த மாதிரி எந்த ரியாக்ஷனுமே நம்மாள இந்த படம் பாக்கும் போது குடுக்க முடியாது, எப்புடி போறோமோ அதே மாதிரி ரோபோ மாதிரி உக்கார்ந்துருந்துட்டு எழுந்து வரவேண்டியது தான். வரும்போது வேணா தலைவலி, டென்ஷன்னு எதாவது நம்ம கூட  வரலாம். எதோ கடனுக்குன்னு படம் ஓடிகிட்டு இருக்கு. எதாவது ஒரு சீனாவது டச் பண்றமாதிரி இருக்கும்னு
நானும் பாத்துட்டே இருந்தேன்.. அப்புறம் என் பக்கத்துல உள்ளவரு "படம் முடிஞ்சிருச்சி ப்ரதர்..... வாங்க வீட்டுக்கு போவோம்" ன்னு சொன்ன அப்புறம் ஏமாற்றம் தாங்க முடியாம  எழுந்து வந்தேன்.


ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி படிச்சிட்டு இருக்கும் போது வெயில்னு ஒரு படம் வந்துச்சி.அந்த படம் மொத நாளே பார்க்க வேண்டிய சூழ்நிலை. அதுக்கு பெருசா ஒண்ணும் காரணம் இல்ல..  S pictures ங்கற பேனரும், ஏற்கனவே வந்த இம்சை அரசன் படத்தோட தாக்கமும் தான் காரணம். ஆனா வெயில் எனக்கு சுத்தமா புடிக்கல, எந்த சீனும் டச்சிங்கா இல்லைங்கற மாதிரி ஃபீலிங். ஆனா என் கூட வந்தவிங்க எல்லாம் வெயில் பயங்கர டச்சிங்கா இருந்ததா சொன்னாங்க. அதே மாதிரி படமும் நிறைய பேருக்கு புடிச்ச மாதிரி இருந்தது போலருக்கு. சரி நம்ம frequency க்கு இந்த ஆளு படம் செட் ஆகாது. இனிமே  இவரோட படங்கள் பாக்க கூடாதுன்னு அன்னிக்கே முடிவு பண்ணேன். அதுனால தான் நான் இந்த அங்காடி தெரு வ கூட இன்னும்
பாக்கல.

இதே மாதிரி இன்னும் சில டிரைக்டர்கள் படமும் பாக்க கூடாதுன்னு முடிவு பண்ணிருக்கேன். இந்த சரண், பாலா, பாலாஜி சக்திவேல், ப்ரபு சாலமன் இன்னும் ஒரு சில பேரு, பொதுவா இந்த அழுகாச்சி க்ளைமாக்ஸ் வச்சி படத்த ஹிட்டாக்க ட்ரை பண்ற டிரைக்டர்கள எனக்கு சுத்தமா  புடிக்கிறதில்லை. மத்தவங்கள்ளாம் எப்புடி மக்கள சிரிக்க வைக்கலாம், ஆச்சர்யபட வைக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கும் போது இவிங்க மட்டும் எப்புடி அழ வைக்கலாம்னு யோசிக்கிறவிங்க. என்ன பொறுத்த வரைக்கும் இவங்க ஒரு விதமான மன நோய் வந்தவர்கள்னு சொல்லலாம்.

இருந்தாலும் அரவான் பாக்குறதுக்கு காரணம்,  நான் தியேட்டர்ல படம் பாத்து மூணு மாசம் ஆகியிருந்ததும், வேறு எந்த நல்ல படமும் இப்ப ரிலீஸ் ஆகாம இருந்ததும், சில முண்னனி  பதிவர்கள் இந்த படத்துக்கு குடுத்த பில்ட் அப்பும் தான். வெயில் பாத்தப்ப எனக்கு என்ன  ஃபீலிங்க குடுத்துச்சோ அதே தான் இந்த படமும். இந்த சீன் நல்லாருக்குன்னு சொல்ற மாதிரி எதுவுமே இல்ல. எதோ நேரத்த கடத்தனும்னு ஓடிக்கிட்டு இருக்கு.

போன வெள்ளிக்கிழமை நைட்டு கார்த்தி அண்ணாவ பாக்கும் போது கேட்டாரு "அரவான் படத்துக்கு போலாமா சிவா?"ன்னு

"இல்லைண்ணா... நா வசந்தபாலன் படத்துக்கெல்லாம் வரமாட்டேன்... அதோட நா இன்னிக்கு  ஊருக்கு கெளம்பறேன்.. அடுத்த வாரம் வேணா வேற படத்துக்கு போவோம்"னு சொல்லிட்டேன்.

படம் பாத்த அப்புறம்.. "அய்யோ..கார்த்தி அண்ணா படத்த  பாத்தாலும் பாத்துருக்க போறாரு..உடனே  கால் பண்ணி அவர காப்பாத்துவோம்"னு அவசரமா கால் பண்ணேன்.. அந்த பக்கம்  ஒரு குரல் மெதுவா கேட்டுச்சி..

"I am sorry.... ஒரு ரெண்டரை மணி நேரம் முன்னாடி கால் பண்ணிருந்தீங்கன்னா பேஷண்ட்ட காப்பாத்திருக்கலாம்" ன்னு. சரி விதி யார விட்டுச்சின்னு நெனச்சிட்டு விட்டுட்டேன்.

நல்ல கதைக்களத்த தேர்ந்தெடுத்தும் சிறப்பான காட்சிகள் அமைக்காதது தான் படத்துக்கு பெரிய மைனஸ். கேமரா, லொக்கேஷன்ஸ் எல்லாமே ரொம்ப சூப்பர். மேக்கிங் & டைரக்ஷன்லையும் நல்ல Improvement. ஆனா  ஸ்கிரிப்டு தான் சற்று டொம்மை போல் இருக்கிறது . படம் ஆரம்பிக்கும் போது சில காட்சிகள் வித்யாசமான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் பின் வரும் காட்சிகள் ஏமாற்றத்தை மட்டுமே தருது.

இந்த படத்துக்கு பேரு மட்டும் தான் பீரியட் பிலிம்.. ஆனா படத்தோட முதல் பாதில ஹீரோ ஆதி, நம்ம வடிவேலு மாதிரி பேசிகிட்டு திரியிறாரு. பசுபதி இந்த படத்துல நல்ல நடிப்ப வெளிப்படுத்தியிருந்தாலும் படம் முடியும் போது "ஆமா இந்த படத்துல எதுக்குய்யா பசுபதி"ன்னு தோணுது. அப்புறம் நம்ம பரத் இந்த படத்துல மேக் அப் இல்லாம நடிச்சிருக்கரு.அழகுன்னா அழகு அப்புடி ஒரு அழகு. சிங்கம்புலி வர்ற ஒரு ரெண்டு சீனுக்கு தியேட்டர்ல இருந்தவங்க ரொம்ப கஷ்டப்பட்டு சிரிப்ப வரவழைச்சிகிட்டு சிரிச்சாங்க. வேற என்ன பண்ணித் தொலைக்கிறது.

வசந்தபாலன் ஏற்கனவே எடுத்த இரண்டு படங்களுமே ஹிட்.. அதனால இந்த படம் எப்புடி இருக்குன்னு தெரியிறதுக்கு முன்னாலயே

"இந்த படம் தமிழ் சினிமாவின் மைல் கல், செங்க கல்,கருங்கல்" ன்னு செய்தி ஊடகங்கள் Build upகளை  குடுக்க வாய்ப்பு இருக்கு.

இல்லைன்னா "ஒவ்வொரு தமிழனும்பார்க்க வேண்டிய படம்" "தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம், அடுத்த வட்டம்"ன்னு உங்க மொழி உணர்வுகளை தூண்டி உசுப்பேத்தி விட வாய்ப்பு இருக்கு.

அப்படி இல்லைன்னா "கடின உழைப்புக்கு மரியாதை செய்வோம்" "ஹீரோ ஒடம்ப கொறைச்சிருக்காரு, ட்ரைக்டர் வெயில்ல நின்னு படம் எடுத்துருக்க்காரு, ஹீரோயின் கஷ்டப்பட்டு சேலை கட்டி நடிச்சிருக்காங்க"
ன்னு செண்டிமெண்டா தாக்க வாய்ப்பு இருக்கு.

இதயெல்லாம் சமாளிக்கிறது உங்க கைல தான் இருக்கு.

இந்த படத்த பாக்கதீங்கன்னு நான் சொல்லலை. பாக்குற அளவு ஒர்த் இல்லைன்னு சொல்றேன். இது ஒரு பொழுது போக்கு படமும் இல்லை. அனுபவித்து ரசிக்கக்கூடிய படி ஒரு நல்ல பீரியட் படமும் இல்லை.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

23 comments:

பாலா said...

செம கடுப்புல படம் பார்க்க போயிருப்பீங்க போலிருக்கே. எனக்கு படம் ஓகே. பிற படங்களை கம்பேர் பன்னும்போது அவ்வளவு மோசமில்லை.

முத்துசிவா said...

//செம கடுப்புல படம் பார்க்க போயிருப்பீங்க போலிருக்கே.// padam patha appuram than thala kaduppayitten :)

Karthikeyan said...

தலைவா.. நீங்க இவ்வளோ டென்சன் ஆகுற அளவுக்கு மோசம் இல்லியே. நல்லாத்தானே இருக்கு. வேணும்னா டாக்டர் படத்தை கம்ப்பேர் பண்ணி பாருங்க.

fowzanalmee said...

ivaru oru vela sura rasigana irupparo

fowzanalmee said...

ivaru oru vela sura rasiganaa irupparo

முத்துசிவா said...

@fowzanalmee :


//ivaru oru vela sura rasigana irupparo//


smart boy... correct ah kandupudichitteenga... :)

முத்துசிவா said...

@Karthikeyan

//தலைவா.. நீங்க இவ்வளோ டென்சன் ஆகுற அளவுக்கு மோசம் இல்லியே. நல்லாத்தானே இருக்கு. வேணும்னா டாக்டர் படத்தை கம்ப்பேர் பண்ணி பாருங்க.//

aama neenga entha doctor ah solreenga? nadikka vanthu doctor aanare avaraya illa doctor aanappuram nadikka vanthaare avaraya? :)

therla thala... ennavo intha padam avvalava attract pannala... :)

கோவை நேரம் said...

என்னது..வெய்யில் கூட உங்களுக்கு பிடிக்கலையா....என்னை ரொம்ப பாதித்த படம் அது..அரவான் கூட பார்க்கலாம்...நன்றாக தானே இருக்கு...

ராஜ் said...
This comment has been removed by the author.
Anonymous said...

சிரிக்கரதுக்கே படம் எடுக்கறதும் மன நோய் தான். வெய்யில் படம் பிடிக்கலை என்று

சொல்லும் போதே, உங்க ரசனை (!!) தெரியுது. உங்க ரசினி குரூப், விஜய் குரூப் இவிங்கல்லாம் இந்த மாதிரி படத்துக்கு போகபடாது. இந்த படம் பார்க்க கொஞ்சம் அறிவும், ரசனையும் தேவைப்படும்.

முத்துசிவா said...

//சிரிக்கரதுக்கே படம் எடுக்கறதும் மன நோய் தான்.//

ஏற்கனவே இவர நோய் தாக்கிருச்சி போலருக்கு...

//வெய்யில் படம் பிடிக்கலை என்று
சொல்லும் போதே, உங்க ரசனை (!!) தெரியுது.//

ஓ அப்ப வெயில் ங்குற ஒலக படம் புடிச்சவங்க மட்டும் தான் ரசனை உள்ளவங்க... அதாவது நீங்க... பலே பலே

// உங்க ரசினி குரூப், விஜய் குரூப் இவிங்கல்லாம் இந்த மாதிரி படத்துக்கு போகபடாது.//

ரஜினி, விஜய் படம் பாக்குறவங்க ஒன்னும் முட்டாள்கள் இல்லீங்க... நா விஜய் படமா இருந்தாலும் விஜய டி ராஜேந்தர் படமா இருந்தாலும் பாத்த அப்புறம் தான் நல்லாருக்கு நல்லா இல்லைன்னு சொல்லுவேன்... உங்கள மாதிரி போஸ்டர பாத்துட்டே விஜய் படம் நல்லா இல்லன்னு சொல்றதும் லோ பட்ஜெட் ல ஆண்டி க்ளைமாக்ஸ் வச்சி படம் எடுத்தா அது நல்லா இல்லானா கூட நல்லா இருக்குன்னு சொல்லி நடிக்கிரவனும் நா இல்ல...

// இந்த படம் பார்க்க கொஞ்சம் அறிவும், ரசனையும் தேவைப்படும்.//

நீங்க சொன்ன இந்த வாக்கியத்த தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சிட்டு பக்கத்துலையே நீங்க உக்கார்ந்துக்குங்க... உங்களுக்கு பின்னாடி வர்ற சந்ததிகள் பாத்து படிச்சி தெரிஞ்சிக்குவாங்க...

ஆமா இவ்வளவு அறிவுள்ள நீங்க ஏன் அனானிய கமெண்டு போடுறீங்க... உங்க கருத்தையே உங்களால தைரியமா சொல்லமுடியல.. என்ன போங்க... கேள்வி கேக்குறதுக்கும் தப்பு கண்டுபுடிக்கிரதுக்கும் கூட ஒரு தைரியம் வேணும் பாஸ்...

Anonymous said...

போய்யா முட்டாள் நீயும் ஒண்ட ஒரு விமர்சனமும்......
உனக்கு சினிமா ன்னா என்னான்னு தெரியுமா முதல்ல அத சொல்லு????

Karthikeyan said...

சரி விடுங்க தல. ஏதோ நம்ம புள்ளைங்களும் கஷ்டப்பட்டு டெக்னிகலா முன்னேறி வருகிறத பார்க்கும்போது அதுக்காவது நம்ம வரவேற்பை பதியலாமே!

Karti said...

எனக்கும் இந்த படம் பிடிக்கல. இத சொன்ன உணக்கு படத்த ரசிக்க தெரியல‍னு சொல்றாங்க :-(

Karti said...

எனக்கும் இந்த படம் பிடிக்கல. இத சொன்ன உணக்கு படத்த ரசிக்க தெரியல‍னு சொல்றாங்க :-)

முத்துசிவா said...

//போய்யா முட்டாள் நீயும் ஒண்ட ஒரு விமர்சனமும்......
உனக்கு சினிமா ன்னா என்னான்னு தெரியுமா முதல்ல அத சொல்லு???? //


வாங்க மிஸ்டர் ஜேம்ஸ் கேமரூன்


எனக்கு சினிமான்னா என்னனு தெரியாது... இவருதான் சினிமாவ கண்டுபுடிச்சவரு

முத்துசிவா said...

@karthikeyan:

//சரி விடுங்க தல. ஏதோ நம்ம புள்ளைங்களும் கஷ்டப்பட்டு டெக்னிகலா முன்னேறி வருகிறத பார்க்கும்போது அதுக்காவது நம்ம வரவேற்பை பதியலாமே! //

கண்டிப்பா டெக்னிக்கல் மற்றும் மேக்கிங்ல நல்ல முன்னேற்றம் தான்... இந்த தீம்ல இன்னும் தரமான படைப்பா குடுத்துருக்கலாம் தல... :) அதுதான் என்னோட அதிருப்திக்கு காரணம்.. வேற ஒன்னும் இல்ல :)

முத்துசிவா said...

@karti:

//எனக்கும் இந்த படம் பிடிக்கல. இத சொன்ன உணக்கு படத்த ரசிக்க தெரியல‍னு சொல்றாங்க :-( //


அடுத்தவங்க ஆயிரம் சொன்னாலும் நம்மோட கருத்த பதிவு செய்ய என்னிக்குமே யோசிக்க கூடாது :)

Anonymous said...

try to watch at least 10 world movies listed by Sezhiyan.(Anandavikatan). Before writing reviews for movies like Aravaan, equip yourself with some basic knowledge of cinema.

முத்துசிவா said...

ayyaa,,, anony... enakku cinema pathi irukkura knowledge pothum... neenga poi innum 10 thadava aravaan padathaye paarunga...

//try to watch at least 10 world movies listed by Sezhiyan.(Anandavikatan//

sezhiyan ku mattum than athu top 10 movies ah irukkum... unagalukku pudicha padatha neenga vena varaisai paduthunga.. unga olaga ariva paakkalam...

Anonymous said...

ஒங்கள மாதிரி ஆளுகளுக்கு நாலு குட்டு பட்டு மூணு FIGHT இருந்தா நல்ல படம்... மட்டமான டேஸ்ட் யா உணக்கு..

santhosh-chennai said...

are u serious people...??? omg...it was an average movie..even veyil too...jus because it made u cry with sentimantal scenes,it doesnt belong to Great movies...please understand..the problem with most of our people is,we all go in hype..always for anything over hype,overbuildup..too much publicity,then we call it as a sure hit and even the when the film sometimes suck to the core,we still stand by the movies just because of our fav directors and actors...this is stupidity..muthusiva might have illustrated his points in a harsh way..but really the movie was an average one...jsut beacuse you latest cameras ,u do six pack..work very hard and finally create an average one,it wud still called average,,i appreciate the efforts made by them..but only for that reason,i cant appreciate an average one as the greatest one"first time in tamil cinema" and all......first people,dont speak for others...speak only if u have really felt that this movie deserved something...just bcuz of hype,buildup and craziness towards one person,dont give appreciation to something which it doesnt deserve.....Period....no offense anyone or to many anonymous here.....

santhosh-chennai said...

makkalae...many people have felt the same about tis movie...for ur info...dont raise ur voice here as this is a good and priceless movie..

https://www.facebook.com/notes/muruganantham-balakrishnan/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/279972932073019

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...