Tuesday, March 13, 2012

ஒரு கோடி.. ஒரு கோடி... போனா வராது.. பொழுது போனா கிடைக்காது!!!!


Share/Bookmark
"எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனே கால்"  "படையப்பா தமிழ் படமா ஆங்கில படமா"ன்னு  விவேக் கண்டேன் சீதையை படத்துல கேக்கும் போது நாம விழுந்து விழுந்து சிரிச்சோம்.. ஆனா அதை விட பல மடங்கு அறிவுள்ள சிந்தனையை தூண்டும் கேள்வி பதில்களின் பிறப்பிடமாக இருப்பது இப்போ சூர்யா விஜய் டிவில நடத்திக்கிட்டு இருக்குற  ப்ரோக்ராம்.

சில வருஷங்களுக்கு முன்னால சன் டிவி கோடீஸ்வரன்னு ஒரு நிகழ்ச்சிய சரத்குமார வச்சி நடத்திக்கிட்டு இருக்கும் போது, அத கிண்டல் அடிச்சி அதே டைம்ல ஜெயா டிவில பிச்சாதிபதின்னு ஒரு நிகழ்ச்சி படவா கோபிய வச்சி நடத்தப்பட்டது. எனக்கு தெரிஞ்சி அந்த டைம்ல ஜெயா டிவில ஒளிபரப்பப்பட்ட உருப்படியான ஒரு நிகழ்ச்சின்னா அது பிச்சாதிபதி தான். அந்த நிகழ்ச்சில கேட்கப்பட்ட ஒரு கேள்வி

வாழைமரத்தில் காய்க்கும் பழத்தின் பெயர் என்ன?

  a) மாம்பழம்   b) ங்கொய்யாப்பழம்   c) வாழைப்பழம்  d)அண்ணாசிப்பழம்

இந்த கேள்விய படவா கோபி ரொம்ப சீரியசா கேட்க, அந்த கண்டஸ்டண்ட் ரொம்ப நேரம் யோசனைக்கு அப்புறம் d) அண்ணாசிப்பழம்னு லாக் பண்ணுவாரு.. spoof ஆக செய்யப்பட்ட அந்த நிகழ்ச்சிக்கும் இப்போ விஜய் டிவில நடந்துகிட்டு இருக்க நிகழ்ச்சிக்கும் பெரிய வித்யாசம் ஒண்ணும் இல்ல. இந்த நிகழ்ச்சிய ரெண்டு நாள் தொடந்து பாத்தா போதும்... சட்டைய கிழிச்சிகிட்டு நாமளே நமக்கு அப்ளிகேஷன் ஃபார்ம் பில் பண்ணி கீழ்பாக்கத்துல சேர்ந்துருவோம். உங்களுக்காக சில உலக தரமான, சிந்தனையை தூண்டக்கூடிய வகையில் கேட்கப்பட்ட கேள்விகள். (ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட கேள்விகள் தவிற)


புதிய வீட்டிற்கு செல்லும் போது எதை காய்ச்சுவார்கள்?

a) பால்  b) தண்ணீர்  c) ரசம் d) மோர்

நல்ல வேளை ஆப்ஷன் e) சாராயம் னு குடுக்காம விட்டீங்களேடா...


கல்யாணம் ஆகாத ஆண்களுக்கு எந்த கட்டு போடவேண்டும் என கூறுவார்கள்?

a) கைகட்டு  b) கால் கட்டு  c) கண்கட்டு  d) தலப்பாகட்டு

வக்காளி உங்களையெல்லாம் ரோட்டுல விட்டு ஒரே வெட்டு.


தமிழ்நாட்டில் உணவை அடிப்படையாக கொண்ட பண்டிகையின் பெயர் என்ன?

a) பொங்கல்   b) மெதுவடை   c) கார போண்டா  d) தக்காளி சட்னி

அடடா..இதுவல்லவா கேள்வி... தமிழ்நாட்டுல ஒருபய இல்லை இதுக்கு பதில் சொல்ல...


கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி செந்திலிடம் எத்தனை பழங்கள் வாங்கி வரச்சொன்னார்?

     a) 1        b) 2        c) 3        d) 4

அப்புடியே அந்த சொப்பன சுந்தரியா யாரு வச்சிருக்காங்கங்குறதையும் கண்டுபுடிக்க  சொல்லுங்க ராசா

பின்வருவனவற்றில் எது கிரிக்கெட்டில் விளையாடும் ஸ்ட்ரோக் கிடையாது?

a) ஸ்ட்ரெய்ட் ட்ரைவ்  b) கவர் ட்ரைவ் c) ஆன் ட்ரைவ் d) பென் ட்ரைவ்

ஏம்பா இந்த் சிடி ட்ரைவ், டிவிடி ட்ரைவ்னுல்லாம் எதோ சொல்றாங்களே.. அதெல்லாம் நீங்க சேக்கலயா?

நீங்கள் M.B.B.S முடித்திருந்தால் பின்வருவனவற்றில் எந்த தொழிலுக்கு தகுதியானவர்?

a)கணித அறிஞர்      b) ஓட்டுனர்       c) வழக்கறிஞர்      d) மருத்துவர்

இய்ய்யாய்...எங்க தலைவரு பவர் ஸ்டார் MBBS படிச்சிட்டு நடிகரா இருக்காரு.. நீங்க ஏன் நடிகர்ங்குற ஆப்ஷன சேக்கல... இதுக்கு நீங்க பகிரங்கமா மன்னிப்பு கேட்டே ஆகனும்

எலும்பு முறிவை கண்டறிய எந்த வகை கதிர் வீச்சு உபயோகப்படுகிறது?

a) X-RAY      b) Y-RAY      c) Z-RAY    d) Q-RAY

 இந்த அண்ணா ஹசாRAY ன்னு ஒண்ணு இருக்கே... அத வச்சி எதையாச்சும் கண்டுபுடிக்க  முடியுமா பாத்து சொல்லுங்க...

இன்று போய் நாளை வா திரைப்படத்தில் இடம் பெறும் இந்த வரியை பூர்த்தி செய்க..

ஏக் காவுமே... ஏக் கிசான் _______ தாத்தா?

a) ரவி           b)    ராம            c) ரெட்டி        d ) ரகு

உங்களையெல்லாம் இந்தியன் தாத்தாகிட்ட தாண்டா புடிச்சி குடுக்கனும்
சரி இவியிங்க எப்புடியோ ஒழிஞ்சி போறாய்ங்கண்ணு பாத்தா, இப்போ இன்னோரு புது தொல்லை வேற ஆரம்பிக்க போகுது. "கையில ஒரு கோடி" ன்னு சன் டிவில...இந்த சன் டிவி மாதிரி வெக்கங் கெட்டவங்கள பாக்கவே முடியாது. விஜய் டிவில என்ன பண்றாய்ங்களோ அதயே திரும்ப  பண்ணாதான் இவிங்களுக்கு தூக்கம் வரும். அங்க கலக்கப்போவது யாரு ன்னு ஒரு ப்ரோக்ராம் நல்லா போயிட்டு இருந்துச்சி.. என்ன பண்ணாய்ங்க... அந்த நிகழ்ச்சில உள்ள ஜட்ஜுக்கு மொதக்கொண்டு மொத்தமா ஒரு ரேட்ட பேசி அப்புடியே இங்க கொண்டு வந்து ஒரே ஒரு வார்த்தைய மட்டும்  மாத்தி "அசத்தப்போவது யாரு" ன்னு ஓட்டுனாய்ங்க.

இப்ப என்னடான்னா அவிங்களே KBC ய  உள்டா அடிச்சி ஒரு நிகழ்ச்சிய ஆரம்பிச்சி ஒட்டிகிட்டு இருக்காய்ங்க.. உடனே இவுக அதயும் உல்டா அடிச்சி  "கையில் ஒரு கோடி" ன்னு ஓண்ண ஆரம்பிச்சிட்டானுங்க.. ஏண்டா வர வர கோடிக்கு உண்டான மரியாத போச்சேடா உங்களால.. இதெல்லாம் பாக்கும் போது எனக்கு கருணாஸ் ஒரு படத்துல சொன்ன வசனம் தான் ஞாபகம் வருது.. "எங்க ஊர்ல பத்து வருஷத்துக்கு முன்னாடி ஏர் ஓட்டிகிட்டு இருந்த முனுசாமி இன்னும் ஏர் தான் ஒட்டிக்கிட்டு இருக்கான்... சைக்கிள்ல் போயிட்டு இருந்த கந்தசாமி இன்னும் சைக்கிள்ல தான் போயிட்டு இருக்கான்.. ஆனா
உங்க கிட்ட மட்டும் எப்புடி இவ்வள காசு.. ஓண்ணு நீ குறுக்கு வழில சம்பாதிச்சிருக்கனும்... இல்லை அரசாங்கத்த ஏமாத்தி சம்பாதிச்சிருக்கனும்" ன்னு.

சரி அந்த மேட்டர விடுவோம்...விஜய் டிவில உள்ள ப்ரோக்ராமுக்கே கேள்விங்க அப்புடி  இருந்துச்சின்னா சன் டிவில எப்புடி இருக்கும்? அதுக்காக கஷ்டப்பட்டு ஒரு மாதிரி  வினாத்தாள தயாரிச்சிருக்கேன்... இத மட்டும் மட்டும் படிச்சிட்டு போட்டிக்கு போனீங்கன்னா..கோடியோட தான் வீட்டுக்கு வருவீங்க.. இதோ கேள்விகள் உங்களுக்காக...

1. தமிழ்நாட்டில் சமயலுக்கு பயன்படுத்தப்படும் பூவின் பெயர் என்ன?

  a)வாழைப்பூ     b) மல்லிகைப்பூ        c) குஷ்பூ        d) கனகாம்பரம்

2. புள்ளி ராஜாவுக்கு _________ வருமா?

  a)கேன்சர்   b) மலேரியா        c) Short term memory loss       d) எய்ட்ஸ்

3.நயன் தாரவின் தற்போதைய காதலர் பெயர் என்ன?

  a) சிம்பு        b) ப்ரபு தேவா        c) பவர் ஸ்டார்    d) Selection under progress

4. கோடிட்ட இடத்தை நிரப்பவும்
   தேவுடா தேவுடா ___________ தேவுடா!!!!

   a)பழனி       b) திருத்தணி        c) திருச்செந்தூர்       d) ஏழுமலை

5. மூக்கடைப்பு உடலின் எந்த பகுதியில் ஏற்படும்?

  a) வாய்         b) முழங்கால்         c) மூக்கு         d) கபாலம்

6. சிம்புவுக்கு நடிக்கத் தெரியாது

  a)ஆமாம்        b) இருக்கலாம்      c) கரெக்டா சொன்னீங்க    d) போடா டேய்

7. டீசல் எஞ்ஜினில் பயன்படுத்தப்படும் எரிபொருளின் பெயர் என்ன?

  a)சுடு தண்ணி         b) பச்ச தண்ணி        c) டீசல்          d) விளக்கெண்ணை


8.  சாம் ஆண்டர்சன் நடித்த திரைப்படம் " யாருக்கு யாரோ______________"


      a)கிட்னி      b) சட்னி        c) மேட்னி     d) ஸ்டெப்னி

9. தமிழ்நாட்டில் குடிநீர் குழாயை திறந்தால் என்ன வரும்?

  a) காத்து    b) தண்ணீர்      c) பெட்ரோல்     d) சமயல் எரிவாயு

10. கீழ்கண்டவர்களில் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளூடன் தொடர்புடைய்வர் யார்?

  a) பூர்ணம் விஸ்வநாதன்   b) வி.எஸ்.ராகவன்    c) மன்மோகன் சிங்   d) கேப்டன் விஜயகாந்த்

11. கண்ணா... ரெண்டாவது _________ திங்க ஆசையா?

   a) வடை       b) இட்லி         c) லட்டு         d) தோசை

12. விஜய் ஒரு  ______________
 
 a)நகைச்சுவை நடிகர்   b) அமெரிக்க மாப்பிள்ளை     c) சங்கி மங்கி  d) மங்கி சங்கி


13. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் எத்தனை இலைகள் இருக்கும்?

   a)1        b) 2         c) 3          d) 4


14. "கா..கா" வென கத்தும் பறவையின் பெயர் என்ன?

      a) கிளி      b) தூக்கனாங் குருவி      c)வவ்வால்      d) காக்கா

14.  இவற்றுள் எது பவர்ஸ்டார் நடித்த திரைப்படம்?

         a) லத்திகா     b) ங்கொக்கா      b) ஆப்ரிக்கா   d) சொர்ணாக்கா


சரி அப்ப அந்த ஒரு கோடி வாங்குன அப்புறம் நம்மள மறந்துடாதீங்க...

அறிவு பசியை தூண்டும் கேள்விகள் உபயம்: நண்பர் கார்த்தி

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

14 comments:

இராஜராஜேஸ்வரி said...

பல மடங்கு அறிவுள்ள சிந்தனையை தூண்டும் கேள்வி பதில்களின் பிறப்பிடமாக இருப்பது இப்போ சூர்யா விஜய் டிவில நடத்திக்கிட்டு இருக்குற ப்ரோக்ராம்.

கிஷோகர் IN பக்கங்கள் said...

ரொம்ப சரியா சொன்ன அண்ணாத்த! இந்த சூர்யாவோட பொது அறிவுக்கு ஒரு எல்ல இல்லாம போயிடுது!

Muhammad Ashik said...

Thala.. namma ALS/akka mala/box allathu TR,powerstar ivangalla yarachum participate panra mari oru post ready pannunga thala...

மனசாட்சி said...

//தலைவரு பவர் ஸ்டார் MBBS படிச்சிட்டு நடிகரா இருக்காரு//

அ...தானே..

ராஜ் said...
This comment has been removed by the author.
HOTLINKSIN.COM திரட்டி said...

இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்றது கொஞ்சம் கஷ்டமான காரியம்தான்...

உங்கள் பிளாக் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.

ஹாலிவுட்ரசிகன் said...

உண்மையில் இப்படிப்பட்ட லேசான கேள்விகள் கேட்டால் தான், அட்லீஸ்ட் வர்றவங்க ஒரு 10000 ரூபா சரி எடுத்துகிட்டு போவாங்க. இந்தியாவை அண்மையில் தாக்கிய புயல் பெயர் சொல்லமுடியாதவங்களுக்கு இதுபோன்ற கேள்விகள் தான் சரி. இல்லாவிட்டால் ஆளாளுக்கு அவுட் ஆக, நிகழ்ச்சியும் போரடித்துவிடும்.

ஆனாலும் கேள்விகள் மரணமொக்கை. இன்னும் கொஞ்சம் அழகாக தலைநகரங்கள், முக்கிய தினங்கள் என பொது அறிவுக் கேள்விகள் கேட்கலாம்.

எழிலருவி said...

but Sun tv questions seems to be nice and good

Anonymous said...

//இய்ய்யாய்...எங்க தலைவரு பவர் ஸ்டார் MBBS படிச்சிட்டு நடிகரா இருக்காரு.. நீங்க ஏன் நடிகர்ங்குற ஆப்ஷன சேக்கல...//

அந்த ஆள் MBBS டாக்டர் இல்லை பாஸ், ஏதோ அக்குபஞ்சர் டாக்டராம், அந்த சங்கிமங்கியே விஜய் டிவி பேட்டில சொன்னது இது

-M. Suresh Raj

Jayadev Das said...

அதிரடிக்காரன்!! இந்தப் பெயருக்கு பொருத்தமா பதிவு- வெளுத்துக் கட்டியிருக்கீங்க. சூப்பர்!!

Jayadev Das said...

இந்த சன் டிவி மாதிரி வெக்கங் கெட்டவங்கள பாக்கவே முடியாது. -100% correct, thanks!!

kumar said...

சிரிக்க தெரியாதவனும் சிந்திக்காதவனும் மனித
இனத்தை சேர்ந்தவனே அல்ல என்பது என்
தனிப்பட்ட கருத்து.நல்லது உங்கள் எழுத்து
எனக்கு ரொம்பவும் பிடித்து விட்டது.
நன்றி பகிர்விற்கு.

Dr.Dolittle said...

பிச்சாதிபதியில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி ,
இந்தியாவின் முதல் பிரதமர் பெயர் என்ன ?
clue : முதல் எழுத்து நே , கடைசி எழுத்து ரூ , நடுவுல ஒன்னும் இல்ல

PREM.S said...

சன்னில் கேட்கப்படும் கேள்விகள் பரவாயில்லை அன்பரே விஜய் உடன் ஒப்பிடும் போது ..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...