Tuesday, January 8, 2013

தமிழ்சினிமா இழந்த சில நட்சத்திரங்கள்!!!


Share/Bookmark
இந்த வருஷம் ரிலீஸான படங்களோட லிஸ்ட்ட நெட்ல தேடுப்பாத்துட்டு இருக்கும்போது ஒரு அதிர்ச்சியான தகவல விக்கிபீடியால பாத்தேன். இந்த வருஷம் மட்டும் 5 நகைச்சுவை நடிகர்கள் தவறியிருக்காங்க... அனைவரும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த மூத்த நடிகர்கள் என்பது வேதனையான விஷயம்.



சேதுராமன்கிட்ட ரகசியமா?



கவுண்டர் : டேய் உன் பொண்ணு செவிடுங்குறத நாம மறைக்க போறோம்

சேதுராமன் : என்னது கொறைக்க போறீங்களா?

கவுண்டர் : ஆமா... உன்ன ஒரு பக்கமா அப்புடியே கொறைக்க போறோம்...

சேதுராமன் :
நா கொஞ்சம் அதிகமா பேசுவேன்... உங்களுக்கு வேணுங்கறத எடுத்துகிட்டு வேணாங்கறத இந்த காதுல வாங்கி இந்த காதுல விட்டுருங்க,..

கவுண்டர் : ஏண்டா இந்த காதுல வாங்கி அந்த காதுல விட அது என்ன காச்சின கம்பியா...

கவுண்டர், க்ரேசி மோகன், கோவைசரளா மற்றும் இடிச்ச புளி செல்வராஜ் சேர்ந்து கலக்குன சின்ன  வாத்தியார் காமெடிய பார்க்காதவங்க இருக்க முடியாது.. அதுல கோவை சரளாவோட அப்பாவா வர்ற இடிச்ச புளி செல்வராஜ் இந்த அக்டோபர் மாதம் இறந்துட்டாரு. பி.பாண்டுவோன அண்ணனான  இவரு ரஜினி, கமல், ப்ரபு உட்பட பல முன்னணி ஹீரோக்களோட சேர்ந்து நூறுக்கும் அதிகமான படங்கள்ல நடிச்சவரு. அதவிட ஒரு முக்கியமான விஷயம் இதயக்கணி, உலகம் சுற்றும் வாலிபன் படங்கள்ல இவரு அசிஸ்டண்ட் டைரக்டரா வேலை செஞ்சவராம்.

விரு விருமாண்டி விருமாண்டி.... 






கரகாட்டக்காரன்ல தவில் காரர வந்து, இது நாள் வரைக்கும் பல படங்கள்ல குணச்சித்திர வேடங்கள்லயும் நகைச்சுவை வேடங்கள்லயும் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்து வந்த பெரிய கருப்பு தேவர் இந்த  வருஷம் இறந்துட்டாரு.  பெரும்பாலும் கோயில் பூசாரி வேடங்கள்ல நடிச்கிற பெரிய கருப்பு தேவர் ஒரு சிறந்த நாட்டுப்புற பாடகர். விருமாண்டில பூசாரிய வர்றதோடு மட்டும் இல்லாம அதுல வர்ற கருமாத்தூர் காட்டுக்குள்ளே ஒரு காலத்தில் ங்கற பாட்ட பாடுனவரு. ஸ்ரீகாந்த் நடிச்ச "பூ" படத்துல வர்றா "சிவகாசி ரசியே" பாட்ட எழுதி பாடி அசத்தியவர்.

"காணாம போன புள்ளைன்னா கெடைக்கிறதும் கழுதைன்னா ஒதைக்கிறதும் சகஜம் தானப்பா"
ன்னு தோரணை படத்துல காமெடிலயும் கலக்கியிருந்தவர் 75 வயதான பெரிய கருப்ப தேவர்.  

கலைமாமணி லூஸ் மோகன்: 



 சுமார் 60 வருஷமா 1000 படங்களுக்கு மேல நடித்திருக்கும் நகைச்சுவை நடிகர் லூஸ் மோகன் இந்த வருஷம் செப்டம்பர் மாதம் இறந்துட்டாரு. கடைசியாக விவேக் கூட அழகி படத்துல அரசியல் வாதியா வந்து காமெடி செஞ்ச லூஸ் மோகன், கடைசி வரைக்கும் அந்த உடம்ப அதே சைஸ்ல மெயிண்டெய்ன் பண்ணது பெரிய விஷயம்.. லூஸ் மோகன் அவருடைய சென்னை பாஷைக்கு பெயர் போனவர்... "இன்னா அண்ணாத்தை... " ன்னு பேச ஆரம்பிச்சி கடைசில கண்ண லைட்டாஅமூடிகிட்டு குடுக்குற அந்த "இக்க்குங்" ங்கற ஃபினிஷ் தான் இவரோட ப்ளஸ்ஸே.... 2000 மாவது வருஷத்துல தமிழக அரசால் கலைமாமணி விருதளிக்கப்பட்ட லுஸ் மோகன் 84 வயதில் இவ்வுலகதிலிந்து விடை பெற்றுக்கொண்டார்.

காக்கா ராதா கிருஷ்ணன்:



1949 லிருந்து சுமார் 60 வருடங்கள் திரையுலகிலிருந்த காக்கா ராதாகிருஷ்ணன் அடுத்து.. அவரோட முதல் படமான மங்கையர்கரசில  ஒரு காக்காவ புடிக்கிறதுக்காக ஒரு மரத்து மேல ஏறுற மாதிரி ஒரு சீன் வருமாம். அதனாலயே அன்று முதல் இன்று வரை இவருக்கு காக்கா ராதாகிருஷ்ணன்னு பேராகிப்போச்சு. நல்ல வேளை வெண்ணிற ஆடை மூர்த்தி மாதிரி முதல் படம்ங்கறதால மங்கையர்கரசி ராதாகிருஷ்ணன்னு வைக்காம  போனாங்களே...

கமல்ஹாசனோட தேவர்மகன் மற்றும் வசூல்ராஜாவுல இவரோட கேரக்டர மறக்க முடியாது.  தலைவர் சுந்தர்.சி யோட "உனக்காக எல்லாம் உனக்காக"வுல ஒரு சூப்பர் தாத்தாவாவும், "மாயி"ல வடிவேலுவையும் கோவைசரளாவையும் வடிவேலுவையும் சேர்த்து வைக்கிற குஜால்
தாத்தாவாவும் காமெடில பிண்ணியிருந்தாரு. இவரோட இன்னொரு முக்கியமான விஷயம்  என்னன்னா, தன்னுடைய சிறுவயது நண்பரான நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனை திரையுலகுக்கு  அறிமுகப்படுத்தி வைத்தவர் இவரே. 86 வயதான காக்கா ராதாகிருண்னன் கடந்த ஜூன் 12ல்
இயற்கை எய்தினார்.


அவ்வளவு சத்தமாவா கேக்குது?





இவர் ஆரம்ப காலங்கள்ல சினிமாவுலயோ இல்லை தமிழ்நாட்டுலயோ எவ்வளவு ஃபேமஸா இருந்தார்னு தெரியல. ஆனா அவர் இறக்கும் போது தமிழ்நாட்டுல ஒரு சின்ன குழந்தைக்கு கூட தெரியிற அளவு ஃபேமஸ் ஆயிட்டாரு...

தொட்டால் பூ மலரும் படத்துல "வரும் தம்பி... ஆனா வராதுன்னு..." ஆரம்பிச்சி "நீங்க நல்லா எம்.ஜி.ஆர் மாதிரி கலரு" ன்னு வடிவேலுவ உசுப்பேத்தி கடைசில கார கவுத்துட்டு  திரும்பவும் "தம்பி போவோமா?" ன்னு கேக்குற அந்த காமெடிய பிடிக்காதவங்க பார்க்காதவங்க யாரும் இருக்க முடியாது. இடையில கொஞ்ச நாள் பெரிய ஹிட் காமெடி இல்லாம இருந்த
இவருக்கு "வரும் வராது" செமயா செட் ஆயிருச்சி... அதுக்கப்புறம் அவரு நடிச்ச பல காமெடிங்க அந்த 'வரும் வராது " காமெடிய base பண்ணிதான் இருந்துச்சி

இவரும் இப்பவல்லாம் இல்லை... 1950 லிருந்து நடிப்பு துறையில இருந்தவரு. இவருக்கு எந்த படத்துலருந்து இந்த "என்னத்த" சேர்ந்துச்சின்னு தெரியல. ஆன தலைவரோட  மன்னன் படத்துல தலைவர் கூட வேலை செய்ரவரா வந்து "என்னத்த போட்டி என்னத்த  தேர்தல்" ன்னு பினாத்திட்டு இருப்பாரு. நாமக்கட்டிய போட்டுக்கிட்டு கவுண்டர் பக்கத்துல உக்கார்ந்துருக்கையில " 50 வயசுக்கு மேல உனக்கெல்லாம் வேலை வேணுமாடா... ஆளாலுக்கு அங்கனக்குள்ளயே ஐக்கியமாயிடுவோம்... அப்புறம் பாடிலருந்து லைட்டா ஸ்மெல் வரும்.. ஏற்கனவே ஒரு பாடிலருந்து லைட்டா வருது" ன்னு என்னத்த கன்னையாவதான் பாப்பாரு.. ஆனா இப்ப அவரே....... 

பல வருடங்கள் திரைத்துறையிலிருந்து நம் அனைவரையும் மகிழ்வித்த இவர்களுக்கு பற்பல நன்றிகளும் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய  ப்ராத்தனைகளும்......

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

Unknown said...

இவன்க எல்லாரையும் உங்க பதிவு வழிய நினைவு படுத்திடிங்க

Prem S said...

பாண்டு படம் ஏன் போட்டு இருக்கீங்க அவருமா ?

bond said...

NAM NADU ENNATHA KANNATA

காரிகன் said...

நான் என்கிற (ரவிச்சந்திரன் நடித்த படம்) படத்தில் இந்த கண்ணையா என்பவர் எதெற்கெடுத்தாலும் என்னத்த என்று சொல்வதால் இந்த பெயர் உண்டானது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...