Thursday, January 17, 2013

கண்ணா லட்டு திண்ண ஆசையா! - A POWER STAR SHOW !!!


Share/Bookmark
"Build up பண்றமோ பீலா விடுறோமோ.... நாம என்ன பண்ணாலும் இந்த உலகமே நம்மள உத்து பாக்கனும்" ங்கற ஒரே தாரக மந்திரத்தை மனசுல வச்சிகிட்டு திரையுலகத்துக்குள்ள நுழைஞ்ச பவர்ஸ்டார் ஓவர் நைட்டுல தமிழ்நாட்டோட வெரி பவர் ஃபுல் ஸ்டாரா  மாறிட்டாருன்னு சொன்னா அது மிகையாகாது. ஒரு ஹீரோ ஸ்கீரீன்ல வரும்போது ஆடியன்ஸ கத்த வைக்கனும்னா அவங்க எவ்வளவு கஷ்டப்படனும்? ரஜினி, கமலுக்கெல்லாம் ரசிகர்களை இந்த மாதிரி மாத்த எத்தனை நாளாச்சின்னு தெரியல.. ஆனா அடிச்சாரு பாருங்க பவரு  மிரட்டலடி... பவர் ஸ்டார் மொத மொதல்ல  ஸ்கிரீன்ல இண்ட்ரோவாகும் போது தியேட்டரே தெரிக்கிற அளவுக்கு சவுண்டு... ஸ்கிரீன் முன்னால போய் நின்னு ஒரு 50 பேர் ஆடிகிட்டு இருக்காய்ங்க..  ரஜினி, கமல் அஜித், விஜய் படங்களுக்கு மட்டுமே நடக்குற இந்த மாதிரி ரகளைங்க மூணாவது படத்துலயே கெடைக்குதுன்னா அது பவரோட பொறுமைக்கும், சகிப்பு தன்மைக்கும் கெடைச்ச  மிகப் பெரிய பரிசுதான்.

"அது இது எது"ல கூப்டு கலாய்ச்சாய்ங்க... நீயா நானாவுல கூப்டு உனக்கு ஏன் இந்த  வெட்டி பந்தாண்ணாய்ங்க...
இன்னும் பல  டி.வி ஷோவுல கூப்டு இவர வச்சி காமெடி ஷோ பண்ணாய்ங்க. அனைத்துக்கும் தன்னுடைய சிரிப்பு ஒன்றையே பதிளாக அளித்த பவர் ஸ்டார ஸ்கீரீன்ல பாக்கும்போது ரசிகர்கள் எழுப்புற சவுண்டு, அவர அசிங்கப்படுத்துனவிங்க எல்லாருக்கும் செருப்படியா இருக்கும். காமெடிதாங்க... எல்லாரும் அவர பாத்து காமெடியாதான் கத்துறாய்ங்க... கலாய்க்கிறாய்ங்க... அவரு ஆசப்பட்டதே அததாம்பா..

இந்த படத்துக்கு முழு விளம்பரமுமே பவர் ஸ்டார நம்பித்தான். உண்மையிலயே பவர் ஸ்டார் இல்லன்னா இந்த படம் டஸ் ஆயிருக்கும். படம் ரிலீஸ் ஆவுறதுக்கு முன்னால இந்த படம் பாக்யராஜோட இன்று போய் நாளைவா படத்த தழுவி எடுத்துருக்காங்கன்னு சொல்லிகிட்டாய்ங்க. படத்த பாத்தாதான் தெரியிது அது சுத்த பொய்... தழுவி இல்ல... வக்காளி அப்புடியே அந்த படத்த ரீமேக் பண்ணிருக்காய்ங்க. சேதுங்கற புதுமுகம் பாக்யராஜ் கேரக்டர்லயும், சந்தானம் அந்த ஹிந்தி கத்துக்கிற கேரக்டர்லயும், தலைவர்
பவர் ஸ்டார் கல்லா பட்டி சிங்காரத்துகிட்ட கராத்தா கத்துக்கிறவர் கேரக்டர்லயும் நடிச்சிருக்காங்க. ரீமேக் படம்ங்கறதால ஹிந்திக்கு பதிலா சங்கீதத்தையும், கராத்தேக்கு பதிலா பரதநாட்டியத்தையும் கலந்து விட்டுருக்காங்க.

மூணு ஹீரோக்களுக்கும் தனித்தனி இண்ட்ரோவோட கலக்கலா  படம் ஆரம்பிச்சாலும் போகப் போக அருக்க ஆரம்பிச்சிடுறாய்ங்க. பவர் ஸ்டார் வர்றா காட்சிகள தவற மத்தது எல்லாமே கடி. இருந்தாலும் அலெக்ஸ் பாண்டியன் அளவுக்கெல்லாம் இல்லைப்பா. சந்தானம் கூட பவர் ஸ்டாரோட வர்ற காட்சிகள்ல மட்டுமே சிரிக்க வைக்கிறாரு.
இந்த கோவை சரளா சனியன் ஏந்தான் இப்புடி கடுப்பேத்துன்னு தெரியல... கருமம் எதோ ஒரு படத்துல அந்த மாதிரி பேசிச்சி... ஓக்கே.. எல்லா படத்துலயும் இப்ப மூச்சி விடாம பேசி எரிச்சல ஏத்துது. அதோட படத்துல நிறைய காட்சிகள்ல மூணு நாலு பேர் ஒண்ணா பேசுற மாதிரி இருக்கது காதுல காச்சின எண்ணைய ஊத்துன எஃபெக்ட குடுக்குது.

ஹீரோயின் ஒரு சுமார் ஃபிகர். அதோட மொத படத்துல இருந்ததுக்கு இதுல பரவால்ல. பாக்குற மாதிரி இருக்கு. மொத ரெண்டு காட்சிகள்ல ஹீரோயின தாவணில தேவத மாதிரி காமிச்சிட்டு அடுத்த காட்சிலயே "அடியே என் அண்ணக்கிளியே" ன்னு அரை குறை ட்ரஸ்ஸூல ஐட்டம் சாங்குங்கு ஆடுற ஒரு பாட்டு ஹீரோயின் மாதிரி ஆக்கி விட்டுட்டாய்ங்க.

தமனோட மியூசிக்ல "கண்ணா லட்டு திங்க ஆசையா" பாட்டும் " அடியே என் அன்னக்கிளியே " பாட்டும் ஓக்கே...

"டேய் இந்த பல்ல வச்சிகிட்டு மலையவே கரண்டலாம்டா"

"நானாவது காமடியன்னு தெரிஞ்சி வாழ்ந்துகிட்டு இருக்கேன்.. நீ காமெடியன்னு தெரியாமயே வாழ்ந்துகிட்டு இருக்க"

"வெட்டி பந்தா வெட்டி பந்தா... "

"இவன் ஒருத்தண்டா சிரிப்பு காமிச்சிகிட்டு"
ன்னு பவர் ஸ்டார்கிட்ட நேர்ல என்னவெல்லாம் சொல்லனும்னு ஆசப்பட்டாரோ அதயெல்லாம் படத்துல காமெடிங்குற பேர்ல சொல்லிட்டாரு.

சுருக்கமா படத்த பத்தி சொல்லனும்னா நண்பர் டான் அசோக் சொன்ன மாதிரி

கண்ணா லட்டு திங்க ஆசையா + பவர் ஸ்டார்  = 50/100

கண்ணா லட்டு திங்க ஆசையா - பவர் ஸ்டார்  = 5/100


ஒரு பவர் ஸ்டார் ரசிகனின் கதை:



சுமார் ஒரு நாலு மாசத்துக்கு முன்னால, ஒரு சனிக்கிழமை மதுரவாயல்ல இருக்குற தலைவர் பவர் ஸ்டார் தலைமை ரசிகர் மன்றத்துல (நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஹானர்... தலைமை ரசிகர் மன்றம்) இணைஞ்சிரலாம்னு ஒரு முடிவெடுத்து நானும் என்னொட வேல பாக்குற ஒரு அண்ணனும் போணோம். எல்லாம் ஒரு ஜாலிக்கு தான்.

அப்ப பவரு பண மோசடில "உள்ள" இந்த நேரம்... ரசிகர் மன்றத்துக்கு போன மன்றம் பூட்டி இருந்துச்சி... சரி வந்தது வந்துடோமேன்னு அங்க பக்கத்துல இருந்த செக்யூரிட்டிகிட்ட நம்பர் வாங்கி மன்ற தலைவருக்கு போன் பண்ணி பேசுனாறு அந்த அண்ணன். அப்போது நடந்த கைபேசி உரையாடல் இதோ உங்களுக்காக.

மறு முனையில் ரிங் போனோன ஃபோன எடுத்து

"ஹலோ... யாருbaa?"

" அண்ணா நாங்க ரசிகர் மன்றத்துல சேர வந்துருக்கோம்"

"மன்றத்துல சேரனுமா? இன்னாத்துக்கு?"

"சும்மா தான் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் சேருறாங்க... அதான்"

"ஆமா நீ இன்னா பண்ற?"

"சாஃப்ட்வேர் கம்பெனில வேல பாக்குறேன்"

"உன் பேர் இன்னா? "

"முத்து "ண்ணா

"உன் வூடு எங்க கீது"

"இங்கதான் மதுரவாயலாண்ட... "

"எத்தினி பேரு வந்துகீரீங்கோ..."

"ஒரு ரெண்டு பேர் மட்டும்ணா... அடுத்த வாரம் இன்னும் நாலு பேரு வருவாங்க"

"தம்பி தலீவரு இப்ப ஊர்ல இல்ல... சவுதீ போய்கிறாரு... நீ இன்னா பண்ற பொய்ட்டு அடுத்த வாரம் சனிக்கிழமை மன்றத்தாண்ட வந்துடு... சேத்துக்கலாம்" (தலைவர் சவுதீ போய்க்கிறாரு- சவுதி... நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஹானர்).

ஃபோன கட் பண்ணிட்டு அந்த அண்ணன் "டேய் சிவா... பாத்தியா...உன் வூடு எங்க கீதுங்குறாரு,... தலீவருன்றாரு... இன்னாத்துக்குன்றாரு...பேச்சே ஒரு மார்கமா இருக்கு. நாம சேந்துட்டு எதாவது சில்மிஷம் பண்ணி மாட்டுனோம்... ரப்படியா அடிச்சி தொவைச்சிருவாய்ங்கடா... யோசிச்சிக்க"

ன்னு சொன்னதும் "இவரு ஒரு டேஞ்சரஸ் புளோ போலருக்கு... இவர கேர்ஃபுல்லாதான் கேண்டில் பண்ணனும்னு" ப்ளான ட்ராப் பண்ணிட்டேன். ஆனா எனக்குள்ள இன்னும் அந்த ரசிகன் தூங்கிட்டே இருக்கான். என்னிக்கு வேணாலும் திரும்ப முழிப்பான்.



நம்ம அடுத்த ஆப்ரேஷன்.... சம்ம சம்ம சமரண்!!!!

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

Prem S said...

//ஸ்கிரீன் முன்னால போய் நின்னு ஒரு 50 பேர் ஆடிகிட்டு இருக்காய்ங்க.. ரஜினி, கமல் அஜித், விஜய் படங்களுக்கு மட்டுமே நடக்குற இந்த மாதிரி ரகளைங்க//இது கூட அவரே துட்டு கொடுத்து பன்றதா சொல்றாங்களே ANYWAY பவர் பவர் தான்

முத்துசிவா said...

//அவரே துட்டு கொடுத்து பன்றதா சொல்றாங்களே ANYWAY பவர் பவர் தான் //அந்த அளவு பணம் இருந்தா அவரு இந்நேரம் அரசியல் கட்சி ஆரம்பிச்சிருப்பரு.. சினிமாவுக்கு வந்துருக்க மாட்டாரு :)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...