Monday, April 15, 2013

குடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா ங்கொய்யால !!!


Share/Bookmark
ஏங்க ஏங்க... எங்க ஓடுறீங்க,... இது அலாவுதீன் பூதம் இல்லீங்க... நல்லா பாருங்க நம்ம பிரபு அண்ணேன் தான். வெறித்தனமா டயலாக் பேசுறதா நெனைச்சி மூஞ்ச அப்புடி  வச்சிருக்கதால உங்களுக்கு அடையாளம் தெரியல. ஆனா ப்ரபுன்னு தெரிஞ்சப்புறம்  தான் இன்னும் நாலுஅடி எக்ஸ்ட்ராவா இன்னும் ஜம்ப் பண்ணி ஓடுவீங்கன்னு தெரியும்.  இந்தாளூ டிவில வந்து கத்துன கத்துல எங்க பக்கத்துவீட்டு கெழவிக்கு தூக்கிவாரிப்போட்டு மாரடைப்புல மண்டைய போட்டுருச்சி. அவரு அப்பாவ நடிக்க வச்சிருந்தா கூட இப்புடி நடிச்சிருப்பாராண்ணு தெரியல. அன்னிக்கு ஓரு நாள் கல்யாண் போயிருந்தப்போ நகை எடுக்க வந்துருந்த ஒருத்தரு அங்க வேலை பாத்துகிட்டு இருந்தவர்கிட்ட "ஏங்க.. ப்ரபு என்ன உங்க கடையில பார்ட்னரா?" ன்னாரு. அதுக்கு கடையில இருந்தவரு "அதெல்லாம் ஒண்ணுமில்லையே!! சும்மா விளம்பரத்துக்கு மட்டும் தான்!! (அட அது வெறும் அள்ளக்கையிங்க ன்னு டீசன்ண்டா சொன்னாரு) ன்னு சொல்ல "அப்புறம் எதுக்குப்பா இந்த கத்து கத்துராரு... நெஞ்சுவலி எதுவும்  வந்துரப்போவுது... அவரு கத்துனதுல ஏன் ரெண்டு வயசு பேத்தி பயந்து சொகமில்லாம போச்சப்பா.." ன்னு அவரு கஷ்டத்த சொல்லி பொலம்பிகிட்டு  இருந்தாரு.

இந்த ஜூவல்லரி காரனுக ஆளுகல புடிக்கிறானுக பாருங்க.. ஜூவல்லரிக்குள்ள போட்டி இருக்குதோ இல்லயோ ஆனா நடிக்கிறவனுக வெளுத்து கட்டுறானுக. இந்த பக்கம் பாத்தா பிரபு ரோட்டு கடைகள்ல மூணு பத்துருவா முணு பத்துருவா ன்னு கத்துரவியிங்க மாதிரி அடித்தொண்டை கிழிய கத்திகிட்டு இருக்காரு. "நம்ம கடையில தான் ரேட் கார்டு இருக்கு.. இங்க வாங்க" வாங்கங்குறாரு. ஏண்டா அந்த ரேட் கார்ட நாங்க என்ன ஃப்ரேம் போட்டாடா வீட்டுல மாட்டிக்க போறோம்? சரி இவ்வளவு வந்து வக்கனையா பேசுறாங்களே...

ரேட் கார்டுன்னா எதாவது வெலை கொஞ்சம் கம்மியா போட்டுருப்பாய்ங்க போலருக்குன்னு பாத்தா சத்தியமா இல்லை. அன்னிக்கு பாக்குறேன்...  சும்மா மொழுக்கட்டீர்னு ஒரு மோதரம்... அதுக்கு செய்கூலி 17%... சேதாரம் 10%... ஏண்டா  டேய் எதாவது  செஞ்சாதானடா.. செய்கூலி வேணும்... எதாவது சேதாரம் ஆகும்... எதுமே இல்லாத மொழுக் மோதரத்துக்கும் 17% செய்கூலி, மோதரத்துல ரங்கோலி கோலம்மாதிரி எதாவது டிசைன் போட்டுருந்தாலும் அதுக்கும் 17 பர்சண்டேஜ் செய்கூலியா? நல்லா ஆட்டைய போடுறீங்கடா..

இவிங்க இப்புடின்னா விஜய் டிவி ப்ரோக்ராம பாத்து காப்பி அடிக்கிற சன் டிவி மாதிரி இன்னொரு குரூப் இருக்காய்ங்க.. ஜாய் ஆலுக்காஸ்... இவிங்க இன்னொரு காமெடி ப்ரபு குரூப் ரேட் கார்டுன்னு போட்டு காமெடி பண்ணிகிட்டு இருக்கதுக்கு இவுங்க போட்டியா ஒண்ணு பண்றானுகளாம்... அதான் கிளியர் பிரைஸ் டேக்...  ஆமா  அமெரிக்கா நிலாவுக்கு ராக்கெட் அனுப்பிட்டாங்கனு பதிலுக்கு ரஷ்யா இன்னொரு  ராக்கெட்ட லாஞ்ச் பண்ணிட்டீங்க... ஏண்டா எப்புடியும் எங்களுக்கு புரியாத மாதிரி எதோ ஒரு percentage ah போட்டு ஆட்டைய போட போறீங்க... அதுக்கு ரேட் கார்டு  போட்டா என்ன போடாட்டி என்ன? 

அதுக்கும் மேல ஒரு காமெடி இவனுக விளம்பரத்துக்கு ஒரு ஆள் புடிச்சிருக்கானுக பாருங்க... மாதவேன்... இவரு அந்த விளம்பரத்துல பேசுற ஒரே டயலாக்கு "இந்த வாரம் கோவைய ஜாய் ஆலுக்காஸ் புது ப்ராஞ்ச் ஓப்பன் பண்ராங்க.. நா வர்றேன்... நீங்களும் வந்துருங்க... " இதான்.. ஏண்டா டேய் நீ போனா உனக்கு  ஒரு ஜோடி செருப்ப கிஃப்ட் ராப் பண்ணி ஃப்ரீயா குடுப்பாய்ங்க...அதுக்காக பல்ல காட்டிகிட்டு கெளம்பிருவ.நாங்க எதுக்குடா வரணும். நாங்க வந்தா எங்களுக்கு ஒரு வெங்கல கிண்ணம் கூட கெடைக்காது...

அந்த பக்கம் அந்த அலாஉதீன் பூதம் கத்திகிட்டு இருக்குன்னா இந்த பக்கம் ஜோஸ் ஆலுக்காஸ் சூப்பரா ஒருத்தர புடிச்சிருக்காய்ங்க பாருங்க... ரோட்டுல போயிட்டு இருக்காரு... அங்க ஒரு பொண்ணு மொட்டை அடிச்சி காதெல்லாம் குத்துன அதோட 5 வயது புள்ளைக்கு, இவருகிட்ட பேரு வைக்க சொல்லுது...இவரு  ஒடனே யோசிச்சி அந்த உலக மாகா பேர வக்கிறாரு... "ஷோபா..." ன்ன்னு... ஏண்டா டேய்... யாரோ பெத்த புள்ளைக்கு இவரு வைக்கிற பேர பாருங்க...  இவ்வளவு பாசம் உள்ளவரு அவரு புள்ளைக்கு சந்திர சேகருன்னு தான பேரு வச்சிருக்கனும்.

 யாருய்யா இந்த மாதிரியெல்லாம் இவருக்கு எழுதி குடுக்குறது? படத்துல தான் கொண்ணு கொலையறுத்துகிட்டு இருக்காருன்னா விளம்பரத்துல கூடவா... ஆமா தெரியாமதான் கேக்குறேன்... இந்த விளம்பரத்துல நீங்க எடுத்ததுக்கும், ஜூவல்லரி விளம்பரத்துக்கும்  என்னடா சம்பந்தம்? கடைசில முடியும் போது தான் தெரியுது அது ஜூவல்லரி விளம்பரம்னு. இதுல ஒரு டயலாக் வேற... "சொந்தம்ங்குறது தங்கம் மாதிரி எவ்வளவு இருக்கோ..  அவ்வளவு நல்லது.." நல்லது தான்...யாரு இல்லைன்னா..ஆனா காசு யாரு உங்க அய்யாவா குடுப்பாரு?

ஆனா இதுல நோட் பண்ண வேண்டிய ஒரு விஷயம் என்னனா இந்த போட்டி போட்டுகிட்டு  இருக்க மூணுமே கேரளா குரூப்பு.. எங்க நம்மூர் கடைங்கள ஓண்ணும் காணுமேன்னு  தானே பாக்குறீங்க... அதெல்லாம் லெமூரியா கண்டத்தோட வழக்கொழிஞ்சி போயிருச்சி... "லலிதாவின் பாட்டுக்கு பாட்டு" "புண்ணகை அதிபரின் பொன்நகைக்கூடம்... பாலு ஜுவல்லர்ஸ்" இந்த விளம்பரங்களையெல்லாம் பாத்தே வருசக்கணக்குல ஆயிருச்சி...  நம்மாளுக கஸ்டமருங்களை கவனிக்கிறதுக்கும் அவங்க கவனிக்கிறதுக்குமே எவ்வளவு வித்தியாசம்..



ஒரு மூணு மாசத்த்துக்கு முன்னால மதுரையில நண்பர் ஒருத்தருக்கு ரிங் வாங்குறதுக்காக கடைக்கி போயிருந்தோம்.. வரிசையா பல கடைங்க இருந்தாலும் கல்யாண் ஜூவல்லர்ஸ பாத்தோன்ன "அய்யயோ வேற எதாவது கடைக்கி பொய்ட்ட நைட்டுல ப்ரபு கனவுல வந்து காதுல கத்துனாலும் கத்துவாரேன்னு பயந்து சரி அங்கயே போவோம்னு  போணோம்.. உள்ள
போன உடனேயே மறுவீட்டுக்கு வந்த மருமகன பம்பிக்கிட்டு அழைச்சிட்டு போறமாதிரி உள்ள கூட்டிட்டு போயி உக்கார வச்சாய்ங்க..
. "டீ.. கோஃபி (coffee) எதாவது சாப்புடுறிங்களா"ன்னு எல்லாம் கேட்டு அங்க இருக்க அத்தனை ரிங்கையும் பொறுமையா எடுத்து காமிக்க, "This is rejected, this is unselected, u go" ன்னு கவுண்டர் ஸ்டைல்ல ஒண்ணு ஒண்ணா ரிஜெக் பண்ண "இதுக்கும் மேல நிங்கள் கேட்ட ரேட்டுக்கு இங்க மோதரம் எதும் இல்ல சாரே" ன்னு அவரு சொல்ல "ஓ... முடிஞ்சே  போச்சா சரி நெக்ஸ்ட் மீட் பண்றோம்"னு கெளம்பிட்டோம்.

உடனே அவரு "'சார்... நிங்கள் வேணா எப்புடி வேணுமோ அதுமாதிரி ஓடர் (order)குடுக்கும்... ஞான் ஒரு பதினைஞ்சி நாளில் ரெடி பண்ணி குடுக்கும்... " ன்னு அவரு சொல்ல... "சாரே ஞான் பின்னே காணா... ஞான் பின்னே கண்டூ" ன்னு சொல்லிகிட்டெ அடுத்த கடைக்கு போனோம்... என்னது கடை பேரா? தங்கமயில் ஜூவல்லரி.,.. அங்க ஒரு மரியாத குடுத்தானுக பாருங்க... மனதை திருடிவிட்டாய் படத்துல வடிவேலுக்கு விவேக் இட்லி வைக்கிறமாதிரி. "ஏய் மேன் சட்னிய எங்க வக்கிற...? இட்லிக்கு பக்கத்துல தான வைக்கனும்ன்னு இட்லிய விவேக்  தூக்கிவீசுறமாதிரி ஒரு நாலு மோதரத்த எடுத்து "இந்தா கவ்விக்க... இந்தா இத கவ்விக்க....டேக் இட் கேட்ச்  இட்.."ன்னு தூக்கி எறிஞ்ச்சாய்ங்க. "டேய் நாங்க மோதரம் காசு குடுத்துதானடா வாங்கவந்தோம்..  எதோ அவங்க பாட்டன் சொத்த எங்களுக்கு ஃப்ரீயா குடுக்குற மாதிரி அந்த மோதரத்த எடுத்து  காமிக்கிறதுல அவனுக்கு அப்புடி ஒரு சலிப்பு சலிச்சிக்கிட்டு நாயிக்கு பிஸ்கட்ட தூக்கி போடுற மாதிரி வீசிகிட்டு இருந்துச்சி.. ... அப்புடியே மயிண்டெய்ன் பண்ணுங்கடா... கடை நல்லா டெவலப் ஆவும்.

சரி அத விட்டுட்டு பக்கத்துல இருந்த இன்னும் ரெண்டு கடைங்களுக்கு போனாலும் அதே மரியாத தான் கெடைச்சிது... சரி என்ன பண்ணித் தொலைக்கிறது.."மச்சி நா அப்பவே சொல்லல... ப்ரபு சொன்னா கரெக்டா தாண்டா இருக்கும்... வா திரும்ப அங்கயே போவோம்.."ன்னு திரும்ப கல்யாணுக்கே போனோம். "நீ வரும் சாரே... நீ திரும்ப இங்கட வரும் சாரே... எனிக்கு அறியும்" ன்னு மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டே முன்னால மோதரம் காட்டுனவரு  திரும்ப உள்ள அழைச்சிட்டு போயி பாத்த படத்தையே திரும்ப காமிச்சாரு. வேற வழி இல்லாம அதுல ஒரு மொக்கைய செலக்ட் பண்ணி குடுத்தா "ஒண் பை டூ, டூ பை த்ரீ... டோட்டலா 3500 ரூவா செய்கூலி சேதாரம் வருதுன்னு அவனுக்கே புரியாத மாதிரி ஒரு கணக்கு போட்டு காமிக்க... "பழனிச்சாமி... நீ வேணா எட்டாவது பாஸ் பண்ணிருக்கலாம்... ஆனா இவ்வளவு அறிவு உதவாதுப்பா" ன்னு மனசுக்குள்ள நெனைச்சிட்டு காச குடுத்துட்டு வந்தோம்.



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

14 comments:

Unknown said...

Can`t control laughing.. good one Muthu :D

Unknown said...

Can`t control laughing.. good one Muthu :D

Unknown said...

"ஏய் மேன் சட்னிய எங்க வக்கிற...? இட்லிக்கு பக்கத்துல தான வைக்கனும்ன்னு இட்லிய விவேக் தூக்கிவீசுறமாதிரி ஒரு நாலு மோதரத்த எடுத்து "இந்தா கவ்விக்க... இந்தா இத கவ்விக்க....டேக் இட் கேட்ச் இட்.."ன்னு தூக்கி எறிஞ்ச்சாய்ங்க. "டேய் நாங்க மோதரம் காசு குடுத்துதானடா வாங்கவந்தோம்.. ???????

ஹாஹா செம்ம காமெடி ஆனாலும் நம்ம ஆளுங்க இதுனால தான் கடைய முடிட்டு போறாங்க

கத்தார் சீனு said...

Arumai...,,

சங்கர் ಶಿವಮೊಗ್ಗ said...

நன்றாக எழுதி உள்ளீர்கள் சிரித்து வயிறு வலி வந்துவிட்டது

abdul said...

Malabar Jewellery - சூர்யா வா மறந்துடிங்க! நல்ல காமெடி!

KaviIni Imaya said...

செம காமெடி.. very nice... Go on..

KaviIni Imaya said...

செம காமெடி.. Super..

Anonymous said...

sema comedy boss..keep it up..

Anonymous said...

Super Siva. I'm a big fan of your Blog.

Nanban said...

Good One

வெட்டிப்பயல் said...

Good one :)

Samuel Johnson said...

அருமை... நகைசுவையான நடை. ரொம்ப நாளுக்கப்புறம் ரசிச்சி படிச்ச பதிவு...

இன்னும் அதிகமா எதிர்பாக்குறோம்.. கலாய்க்க வேண்டிய விளம்பரங்கள் ஏகபட்டது இருக்கு... :-)

nathan said...

Super comedy

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...