Monday, June 10, 2013

AFTER EARTH - தமிழேண்டாஆஆஆ!!!


Share/Bookmark


நம்மூர்ல ஒரு படம் ரொம்ப நல்லா இருந்தா அத உடனே "ஹாலிவுட் தரத்தில்" ஒரு படைப்புன்னு சொல்லி பெருமைப்படுத்துவோம். வாழ்க்கை ஒரு வட்டம்டே... இப்போ அவங்க நம்மூர் படங்களோட ஒப்பிட்டு பேசுற காலம் வந்துருச்சி.. இதோ நம்மூர் படங்களின் தரத்தில் ஒரு ஹாலிவுட் படம். இந்த அற்புதமான படைப்ப கொடுத்தது வேற யாரும் இல்லை. நம்மூர்லருந்து போன அய்யா நைட் ஷாமலன் அவர்கள் தான்.

நமக்கு என்ன வருமோ... நம்ம body எவ்வளவு தாங்குமோ அத தான் நாம செய்யனும். நம்ம விகரமன் சார்கிட்ட ஒரு 200 கோடி பட்ஜெட்ல ஒரு படம் எடுத்து தாங்க சார் சொன்னா என்னாகும்? அதே கதை தான் இங்கயும். க்ராஃபிக்ஸ் கொஞ்சம் கூட இல்லாம ஸ்க்ரீன்ப்ளேவ வச்சே நம்மள மெரட்டுனவருதான் நம்ம ஷாமலன். Sixth sense லயோ, Signs லயோ  Unbreakable லயோ இல்லை The village லயோ கதையோ திரைக்கதையோ பேசுமே தவற க்ராஃபிக்ஸ் இல்ல. ஆங்கில படங்கள் பொதுவா நா இந்த டைரக்டர் படம் தான் பாக்கனும்ன்னு எதும் பாக்குறதில்ல. (ஏன்னா டைரக்டர் பேரு எதுவும் எனக்கு தெரியாது). ஆனா மொத மொதல்ல நைட் ஷாமலனுக்காகவே இந்த படத்த கண்டிப்பா பாக்கனும்னு பாத்தேன். அப்புறம் தான் இனிமே அந்த மாதிரி தப்பு எதும் பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சிகிட்டேன்.

ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னால Sixth sense பாத்துட்டு என் நண்பன் அசால்டு அசார் கிட்ட "மச்சி செமயா இருக்குடா இந்த படம் பாரு"ன்னு. அதுக்கு அவன் "நீ இப்ப தான் அங்கயே வர்றியா.. லேட் பிக்கப்புடா நீயி" ன்னு அசிங்கப்படுத்திட்டான். அடுத்த ஒரு வாரத்துலயே ஷாமலன் Sixth sense க்கு அப்புறம் எடுத்த எல்லா படத்தையும் பாத்துட்டேன், அவர் produce பண்ண DEVIL உட்பட. ஆனா எந்த படமும் இவ்ளோ ஏமாத்துனதில்ல. மரண அடி வாங்குன "The last Airbender" கூட எனக்கு ஓரளவு புடிச்சி தான் இருந்துச்சி.

நம்ம வில் ஸ்மித்து எதோ ஒரு புத்தகத்துல ஒரு ஒன்லைன படிச்சிட்டு, அத நைட் ஷாமலன்கிட்ட சொல்லி, அவரே தயாரிச்சி அடம் புடிச்சி இந்த படத்த எடுக்க வச்சிருக்காரு. நுனலும் தான் வாயாலயே தான் கெடும். கூடவே அவரோட பையன் ஜேடன் ஸ்மித்தும். சரி AFTER EARTH என்னதான் பண்றாய்ங்க.

பல நூறு வருஷங்களுக்கு முன்னாலயே பூமிலருந்து மனிதர்கள் வெளியேறி வேறு ஒரு கிரகத்துல வாழ்ந்துகிட்டு இருக்காங்க. இப்போ பூமி மனிதர்கள் வாழ ஏற்றதா இல்லை. URSA ங்குற ஒரு  கொடிய மிருகத்தோட அந்த கிரகத்துலருந்து கெளம்புற ஒரு விமானம் விண்கற்களோட மோதினதால தொடர்ந்து பறக்க முடியாம பூமியில விழுந்துடுது. ஜேடனும், வில் ஸ்மித்தையும் தவற மத்த எல்லாருமே இறந்துடுறாய்ங்க. வில் ஸ்மித்துக்கு தொடை எழும்மு ரெண்டா முறிஞ்சி நடக்க முடியில. இப்போ முழுசா இருக்கது ஜேடன் மட்டும் தான்.

விமானம் விழுந்தப்போ அதோட தலைப்பகுதி ஒரு பக்கமும் வால் பகுதி அங்கருந்து 100 கிலோமீட்டருக்கு முன்னாலும் தனித்தனியா விழுந்துடுது. விமானத்தோட தலைப்பகுதில மாட்டிக்கிட்டு இருக்க  ஸ்மித் ஃபேமிலி, வால் பகுதில இருக்க ஒரு சிஸ்டம் மூலமா தான் அவங்க கிரகத்துக்கு தகவல்  கொடுத்து அவங்கள இங்க வர வைக்க முடியும். so, அந்த வால் பகுதில இருக்க சிஸ்டத்த ரெக்கவர் பண்ண நடக்க முடியாத வில் ஸ்மித், அவரோட பையன் ஜேடன அனுப்பி வைக்கிறாரு. அந்த பையன் அந்த சிஸ்டத்த ரெக்கவர் பண்ணாரா... ரெண்டு பேரும் தப்பிச்சாங்களா இல்லையாங்குறது தான் கதை. ( சினிமா என்று வந்துவிட்டால் கண்டிப்பா தப்பிச்சி தானே ஆகனும்)

படத்தோட ட்ரெயிலர பாக்கும் போது கிட்டத்தட்ட இன்னொரு அவதார் மாதிரி தான் ப்ரம்மாண்டமா தெரிஞ்சிது. ஆனா படத்த பாத்தப்புறம் தான் தெரியிது ட்ரெயிலர மட்டுமே பாத்துக்கிட்டு இருந்துருக்கலாம்னு. விமானத்தோட வால் பகுதிய நோக்கி போற ஜேடனுக்கு வில் ஸ்மித் டெலிகான்லயே இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்துகிட்டு இருக்காரு. ஆரம்பத்துல இது நல்லா இருந்தாலும் முழு படமும் இதே போலவே போறது செம கடுப்பு. எப்பவெல்லாம் படம் ஓரளவு சூடு பிடிக்குதுன்னு நெனைக்கிறமோ அப்பவெல்லாம் ஒரு செண்டிமெண்ட் சீன சொருகி தூங்க வச்சிடுறாய்ங்க. வில் ஸ்மித் ஒரு சீன்ல ஜேடனுக்கு ஒரு கதை சொல்றாரு.. சொல்றாரு சொறாரு... சொல்லிகிட்டே இருக்காரு... அது முடியும் போது அந்த பயலும் தூங்கிருவான்.. பாக்குற நாமலும் தூங்கிடுறோம்.

ஜேடன் போற வழியில குரங்குங்க அட்டாக் பண்ணுதுங்க... LORD Of The Rings la வர்றது மாதிரி ஒரு ராட்சச பறவை நம்மாள கவ்விகிட்டு போயி அது கூண்டுல போடுது.. அப்போ அங்க வர்ற சிங்கம் மாதிரியான ஒரு விலங்குட்டருந்து அந்த பறவையோட முட்டைங்ளையும், குஞ்சுகளையும்  காப்பாத்துறாரு நம்ம ஜேடன். அதுக்கு பதிலா அந்த பறவை ஜேடன் பனில உறையும் போது அவர காப்பத்திட்டு அது செத்துப்போயிருது.. டேய் என்ண்டா செண்டிமெண்டா...

படத்துல வில் ஸ்மித் கிட்டத்தட்ட அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டர்தான். ஒரே இடத்துல உக்காந்துட்டு வாயால வடை சுடுறதோட சரி. ஆனா ஆளு செமயா இருக்காரு. ஜேடன் பக்கத்துல அவர் பாக்கும் போது அண்ணன் தம்பி மாதிரி தான் இருக்கு. 


URSA ங்குற ஒரு வினோதமான ஒரு விலங்கு.. பயத்த மட்டுமே வச்சி மனிதர்களை கண்டுபுடிச்சி கொல்ற ஒரு விலங்கு. ஏற்கனவே ஜேடனோட அக்காவ மர்கயா சாலா பண்ணது. இந்த விமானம் விழுந்து நொறுங்குனதுல அந்த URSA  எஸ்கேப் ஆயிடுது. ஒரு வழியா பல தடைகள தாண்டி விமானத்தோட வால் பகுதிய கண்டுபிடிச்சி ஊருக்கு சிக்னல் குடுக்க போகும் போது URSA உள்ள வந்து ஜேடன அட்டாக் பண்ணுது.

Alien  (1978) படத்துல நடிச்ச ஏலியன்கிட்ட ஒரு ரெண்டு நாள் கால்ஷீட் வாங்கி இந்த படத்துல நடிக்க வச்சிருக்காய்ங்க. அதே டெய்லர் அதே வாடகை.  உர்சா பாக்க செம காமெடியா இருக்கு. ஜேடன் ஸ்மித் பயந்து பயந்து உர்சாவோட மல்லுகட்டிக்கிட்டு இருக்க அது அவர தூக்கிபோட்டு மிதிக்குது. கடைசியா,  க்ளைம்மாக்ஸ்ல அடிவாங்கி எழுந்திரிக்கிற தமிழ் ஹீரோ மாதிரி பயமே இல்லாம ஜேடன் எழுந்திரிக்க, உர்சா ஜேடன் எங்க இருக்காருன்னு தெரியாம தள்ளாடுது. அந்த கேப்புல உர்சாவுக்கு ஜேடன் சங்கு ஊதிட்டு ஊருக்கு சிக்னல் குடுக்க அடுத்த சீன்லயே ரெக்கவரி டீம் வந்து இவங்க ரெண்டு பேரயும் அள்ளிக்கிட்டு போயிருது.


எந்த காட்சியுமே சுவாரஸ்யமாவோ அல்லது புதுசாவோ இல்லை. நைட் ஷாமலனோட மிக மட்டமான படைப்பு இந்த AFTER EARTH.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

கவியாழி said...

தமிழில் பகிர்ந்தமைக்கு நன்றி.ஆங்கிலப் படத்தைப் பற்றியும் அறிந்துகொள்ள முடிந்தது

Anonymous said...

Super review

Unknown said...

இந்த படத்த பார்த்து காண்டாகிட்டேன். படமா இது ஸ்மித் கதை சொல்லும் போது நானே தூங்கிட்டேன்.இது வரைக்கும் மரண மொக்கை படத்த கூட பார்த்து தூங்குனது இல்லை இந்த படம் அதை முறியடுச்சுருச்சு.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...