Saturday, June 29, 2013

BALUPU (2013) -அதே டெய்லர்! அதே வாடகை!!


Share/Bookmark

சென்ற வருடம் (2012) மட்டும் நான்கு படங்களை ரிலீஸ் செய்து நான்கு படங்களையுமே அட்டர் ஃப்ளாப்பாக கொடுத்தவர் மாஸ் மஹாராஜ் ரவிதேஜா. வழக்கமாக தெலுங்கில் ஒரு புது ஸ்டைல் படம் ரிலீஸ் ஆனா அத்தனை ஹீரோக்களும் அதே கதையில் அடுத்தடுத்து நடித்து ரப்படியடிச்சிட்டு தான் விடுவாங்க. ஆனால் ரவிதேஜா சற்று வித்யாசமானவர். அடுத்தவர் படங்களை அவர் நடிப்பதில்லை.  அவர் படங்களையே அவரே  திரும்ப திரும்ப நடித்து வெளியிட்டுக் கொள்பவர். மிரட்டல் அடி வாங்கியும் கொஞ்சம் கூட கொஞ்சம் கூட தன் பாதையிலிருந்து விலகாமல் அதே மாதிரி படங்களிலேயே நடித்துவருபவர். இவரின் படங்கள்ல முதல் பாதியில வர்ற காட்சிங்கள எந்த படத்துலருந்து எடுத்து வரோட எந்த படத்துல வேணாலும்  போட்டுக்கலாம். எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கும். முதல் பாதி முழுசும் ஒரு ஹீரோயின கரெக்ட் பண்றதும் காமெடியும் தான். இண்டர்வல்ல ஒரு சின்ன ட்விஸ்டு வரும். இரண்டாவது பாதியில ஒரு ஃப்ளாஷ்பேக்.  அம்புட்டுதேன்.

இப்ப பாருங்க. ரவி தேஜா ஒரு வீட்டுல ட்ரைவரா வேலைக்கு சேருறாரு. ரொம்ப சாஃப்டானவரு. அந்த வீட்டு கொழந்தைங்க மேல ரொம்ப பாசமா இருக்காரு. ஒரு புள்ளை அவர தொரத்தி தொரத்தி லவ் பண்ணுது. இந்த கேப்புல ஒரு வில்லன் ஒரு ஃபோட்டோவ வச்சி ஒருத்தர தேடிகிட்டு இருக்கான். இண்டர்வல்ல எதிர்பாராம வில்லனோட நேருக்கு நேர் சந்திக்க, ரவிதேஜா யார்ங்கற உண்மை தெரியிது. ஒரு செம ஃபைட்டுக்கு அப்புறம் ஒரு டெரரான ஃப்ளாஷ்பேக். கடைசில அந்த வில்லன வதம் பண்றாரு. ஹலோ ஹலோ இது பலுபு படத்தோட கதை இல்லை. போன வருஷம் வந்த "வீரா" படத்தோட கதை. அதுக்கு முன்னாடி வந்த துபாய் சீனுவோட கதையும் இது தான். 

ஒரு சோகமான விஷயம் என்னன்னா இப்ப வந்துருக்க பலுபு படத்தோட கதையும் இதே தான்.. கல்யானமே பண்ணிக்கமாட்டேன்னு சொல்லிகிட்டு இருக்க பையன் ரவிதேஜாவ கல்யாணம் பண்ண வைக்க அவரு அப்பா ப்ரகாஷ்ராஜ் வித்யாச வித்யாசமா முயற்சி பண்றாரு. ஒண்ணும் ப்ரயோஜனம் இல்லை. ஒவ்வொரு  பப்புலயும், ஹோட்டல்லயும் போயி ஃபுல்லா சாப்டுட்டு, சாப்ட பில்ல வித்யாசமான ஒரு ட்ரிக்க  யூஸ் பண்ணி அங்க இருக்க ஒரு இளிச்சவாயன் தலையில கட்டிட்டு வர்றவங்க ஸ்ருதியும் அவரோட மாமா (க்ரேசி மோகன்) ப்ரம்மானந்தத்தமும். ஒரு கட்டத்துல ஸ்ருதியால ரவிதேஜாவோட நண்பன் பாதிக்கப்பட ஸ்ருதிய கலாய்க்கிறதுக்காக நேரடியா களத்துல எறங்குறாரு ரவி தேஜா.

இந்த கேப்புல அடிக்கடி ஒரு மீசைக்கார வில்லன் (வேட்டை படத்துல நடிச்ச வில்லன்) யாரோ ஒருத்தன தேடி அலையிறாரு. இப்டியே லைட் காமெடியா படம் போயிட்டு இருக்க, ஒரு கட்டத்துல ஸ்ருதி உண்மையிலயே ரவிதேஜாவ  லவ் பண்ண ஆரம்பிச்சி, கல்யாணம் வரைக்கும் போயிடுது. கரெக்டா கல்யாணத்துல வந்து அந்த வில்லன் ரவிதேஜாவ மடக்கிட, ஒரு செம ஃபைட் வித் செம ட்விஸ்ட். அப்டியே இண்டர்வல் விட்டு கட் பண்ணீ ஓப்பன் பண்ணா ஃப்ளாஷ்பேக். 

ரவிதேஜா Vizag லோ பெத்த டான். (இது மட்டும் இண்டவர்வல் ட்விஸ்ட் இல்லை இன்னொரு சூப்பர் ட்விஸ்டும் இருக்கு) சரி பாட்ஷா ரஜினி ரேஞ்சுக்கு பவர்ஃபுல்லான ஃப்ளாஷ்பேக் எதுவும் இருக்கும்னு பாத்தா அங்கயும் திரும்ப லேண்ட் டீலிங், 10% கமிஷன் 15% கமிஷன்னு ப்ரோக்கர் வேலையே தான் ஓடிகிட்டு இருக்கு. ஃப்ளாஷ்பேக்லோ அஞ்சலி.. டாக்டரா வருது. ரவிதேஜாவ கொஞ்ச நேரம் லவ்விட்டு மட்டை ஆயிடுது.  திரும்ப வழக்கமான க்ளைமாக்ஸ் ஃபைட்டோட படம் இனிதே நிறைவடைது.




ஒரு சந்தோஷமான விஷயம் என்னன்னா போன வருஷம் வந்த ரவிதேஜா படங்களோட கம்பேர் பண்ணும் போது இது எவ்வளவோ பெட்டர். ரவிதேஜாவோட வழக்கமான டைமிங் டைலாக் டெலிவரி &  காமெடி சூப்பர். காஸ்ட்யூம்சும் சூப்பர். முதல் பாதில பில்லா அஜித் மாதிரி ஒரே ஜிகு ஜிகு சட்டையிலயே ஜொலிக்கிறாரு. இரண்டாவது பாதில லைட்டா தாடி வச்சிட்டு 4 வருஷத்துக்கு முன்னாடி இருந்த கெட்டப்புக்கு போயிடுறாரு. ரவிதேஜாவோட intro சீனுக்காகவும் ஒரு பாட்டுக்காகவும் படத்துல சேர்க்கப்பட்டவர் லட்சுமி ராய். அந்த ஒரு பாட்டுலயே அவங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு "நடிச்சிட்டு" கெளம்பிடுறாங்க. (நோட் திஸ் பாய்ண்ட்- நடிச்சிட்டு. படம் பாக்குறவங்களுக்கு பவர் ஸ்டார் ரியாக்ஷன் தான்...  செம பீட்டிடா மச்சான்)

ஸ்ருதிய போஸ்டர்லயும் ஸ்டில்ஸ்லயும் பாத்துக்குறதே மேல். நடிக்க ஆரம்பிச்சா ரெம்ப குஸ்டம்.  பாடல்கள்லயும் அவ்வளவு சிறப்பா இல்லை. அஞ்சலிக்கு இந்த படத்துல 60 லட்சம் சம்பளமாம்பா... அது வாங்குன அதிக பட்ச சம்பளம் இந்த படத்துலதானாம். அரைமணி நேரம் வர்றதுக்கு 60 லட்சமா... ஆத்தாடி. ஆனா அவ்வளவு ஒண்ணும் சிறப்பா இல்லை. வழக்கமா  சுமார் ஃபிகர்களையே பல கோட்டிங் அடிச்சி பளிச்சின்னு காட்டுவாங்க தெலுகுல. ஆனா இந்த படத்துல ரெண்டு ஹீரோயினுமே பாக்குறதுக்கு ரொம்ப சுமார் தான்.

Gangnam style டான்ஸோட அதிரடி இண்ட்ரோ குடுக்குறாரு க்ரேசி மோனான தலைவர் ப்ரம்மானந்தம். ஆனா அடிக்கடி அதே டான்ஸ படம் முழுக்க ஆடிகிட்டு இருக்கது அருவை. அதோட ஒருசில காட்சிகள தவற பெரிய காமெடி இல்லை. ஆலேயும் லைட்டா சிரிப்பு காட்டுறாரு.ப்ரகாஷ்ராஜ் வழக்கம் போல அருமை. ஆனா அவர இன்னும் நல்லா யூஸ் பண்ணிருக்கலாம்.

தெலுங்கு படங்களுக்கு மிகப் பெரிய பலமே ஃபைட்டு தான். அந்த ஃபைட்டுக்கு வர்ற சவுண்டு தான் அந்த ஃபைட்டயே தூக்கி நிறுத்தும். ஆனா  தமன் டோட்டல் சொதப்பல். ஒவ்வொரு அடி அடிக்கும் போதும் சும்மா "சொத்" "சொத்" ன்னு சவுண்ட குடுத்து ஃபைட்ட டம்மி ஆக்கி விட்டுட்டாரு. ஒரு அடி அடிச்சாலும் தெறிக்கிற மாதிரி சும்மா டங்க்க்க்ன்னு சவுண்டு குடுக்க வேண்டாமா ... இதுக்கெல்லாம் கீரவணியும், மணிஷர்மாவும் தான் லாயக்கு.

பாட்டுங்க ஓக்கே தான். காஜலு ச்செல்லிவா பாட்டும், நினு சூசின ஷனம்லோ பாட்டும் சூப்பர். கடந்த  ஒரு மாசத்துல நா அதிகமா கேட்டது தலைவர் SPB பாடுன இந்த "நினு ச்சூசின ஷனம்லோ" பாட்டு தான்.ஃப்ளாஷ்பேக் முடிஞ்சி படம் முடியப்போற சமயத்துல, திடீர்னு ஆவின்னு ஒரு காமெடிய பண்ணி இன்னும் ஒரு அரைமணி நேரம் படத்த இழுத்துருக்காய்ங்க. க்ளைமாக்ஸ்ல ரவிதேஜா குரூப்பும், வில்லன் குருப்பும் மாறி மாறி IPL ஜம்பிங் ஜபாங்கு ஜம்பக்கு ஜம்பக்கு மியூசிக்கு ஆடுறது செம ரவுசு.


மொத்தத்துல இந்த படமும் அதே டெய்லர் அதே வாடகை தான். இருந்தாலும் ரொம்ப அருவை இல்லாம நகர்றதால ஒரு தடவ பாக்கலாம்.
  

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

அதிரடியா தெலுங்கு பட விமர்சனம்.... :)

தமிழ் சினிமாவே பார்க்க முடியல! இதுல தெலுங்கு சினிமா எங்க பார்க்க!

Unknown said...

முத்துசிவா நான் தெலுங்கு படம் பார்ப்பது இல்லை தமிழ்ல வந்தா பார்ப்பேன் ஆனா உங்க விமர்சனமே செம்ம காமெடியா இருக்கும் அதுக்காக தெலுங்க விமர்ச்சனகல படிக்கிறது ஹாஹா வழக்கமான கலாட்டா

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...